16 10 2017 அறிந்தும் அறியாமலும்…(19) மை கொண்டு எழுத இயலாது சுப.வீரபாண்டியன் எல்லா மதங்களும் இரண்டு தளங்களில் இயங்குகின்றன. ஒன்று, கோட்பாடு (concept), இன்னொன்று நிறுவனம் (Institution). கோட்பாடுகளில் வேறுபட்ட தன்மைகளும், ஏற்கவியலாத போக்குகளும் காணப்பட்டாலும், பொதுவாக எல்லா மதங்களும் அறநெறிகளையே (Ethics) போதிக்கின்றன. அன்பு, அருள், ஒப்புரவு, ஒழுக்கம் ஆகியன அனைத்து மதங்களும் அறிவுரைக்கும் பொதுக்கோட்பாடுகள் என்று கொள்ளலாம். ஆனால், அன்பைப் பறைசாற்றும் மதங்கள், ஏன் ஆயுதங்கள் ஏந்திப் போராடுகின்றன? அங்குதான் நிறுவனங்களின் பெரும்பங்கு உள்ளது.மதங்கள் நிறுவனமயமாகும்போது, அதற்கேயுரிய வலிமையும், பலவீனமும் வந்து சேருகின்றன. நிறுவனங்கள் இன்றிக் கோட்பாடுகளைக் காப்பாற்ற முடியாது. ஆனால் நிறுவனங்களே கோட்பாடுகளைக் கொன்று, நீர்த்துப் போகவும் செய்கின்றன. இந்நிலையை, மதங்களோடு மட்டுமின்றி, இன்றையக் கட்சிகளோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பிட்ட சில கொள்கைகளுக்காகக் கட்சி தொடங்கி, பிற்காலத்தில் கட்சியைக் காப்பாற்றுவதற்காகக்…
09 10 2017 அறிந்தும் அறியாமலும்…(18) ‘மதம்’ கொண்ட மனிதர்கள்!  சுப. வீரபாண்டியன் ‘புற்று நோயை விட, லஞ்சத்தை விட, சாதி கொடியது என்று எழுதுகின்றீர்களே, மதம் பற்றிய உங்கள் பார்வை என்ன?’ என்று ஒரு நண்பர் வினா எழுப்பினார்.நான் கடவுள் நம்பிக்கையற்றவன் என்னும் பொழுதே, மத நம்பிக்கையும் அற்றவன் என்பது தெளிவாகி விடுகின்றது. கடவுளும், மதமும் பிரிக்க இயலாவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளதென்பதை நாம் அறிவோம்.எனினும், சாதியையும், மதத்தையும் ஒரே தட்டில் வைத்து நாம் பார்க்க முடியாது. இரண்டிற்குமிடையில் குறிப்பிடத்தக்க சில வேறுபாடுகள் உள்ளன. மதம் என்பது, அவரவர் நம்பிக்கையையும், சொந்த அனுபவத்தையும் சார்ந்தது. சில குறிப்பிட்ட வழிமுறைகளே தம்மைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் மதங்களைத் தழுவுகின்றனர். சில வேளைகளில், அந்த நம்பிக்கை பொய்த்துப் போகுமாயின், வேறு மதத்திற்கு மாறிவிடுகின்றனர். ஆதலால்தான் மதம் தங்களின்…
01 10 2017 அறிந்தும் அறியாமலும் - 17: கொடிதினும் கொடிதாய்...! -சுப. வீரபாண்டியன் எத்தனை அபிமன்யுக்கள் தொடர்ந்து வந்தாலும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் இருப்பையும், செல்வாக்கையும் இல்லாமல் செய்துவிட முடியவில்லையே, என்ன காரணம்? எந்தத் தேவைக்காக, எந்த நோக்கத்திற்காகத் திராவிட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தத் தேவையும், நோக்கமும் இன்றுவரை நிறைவு செய்யப்படவில்லை என்பதே காரணம். இனமானம், மொழிஉணர்ச்சி, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு போன்ற பல கூறுகள் அவ்வியக்கத்துள் பொதிந்து கிடந்தாலும், சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு என்னும் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, மற்ற அனைத்துச் சிந்தனைகளும் அங்கு சுழல்கின்றன என்பது மெய். மேலும் சுருங்கக் கூறின், ‘சமத்துவம்' அல்லது ‘சமூகநீதி' என்னும் இலக்கை நோக்கியே, அதற்காக மட்டுமே, தொடங்கப்பட்ட இயக்கம் அது! அந்தச் சமத்துவமும், சமூகநீதியும் இன்னும் இங்கே எட்டாக் கனிகளாகவே உள்ளன. பகுத்தறிவின் அடிப்படையில்…
22 09 2017 அறிந்தும் அறியாமலும் - 16: தொடரும் அபிமன்யுக்கள் சுப. வீரபாண்டியன் இத்தொடரில், பெரியாரைப் பற்றி ஓர் இயலில் மட்டுமே எழுத எண்ணியிருந்தேன். ஆனால், சென்ற இயலுக்கு வந்துள்ள பின்னூட்டங்களும், என் மின் அஞ்சலுக்கு வந்துள்ள மடல்களும், மீண்டும் இந்த இயலிலும், பெரியாரைப் பற்றியே எழுத வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. பெரியாரின் சமூகத் தொண்டினை மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியில் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் அந்த நண்பர்களுக்கு முதலில் என் நன்றி! பெரியார் என்ற பெயரைப் பார்த்ததுமே, சிலருக்குக் கடுமையான எரிச்சலும், சினமும் வந்து விடுகின்றன. கட்டுரையில் காணப்படும் மற்ற அனைத்துச் செய்திகளையும் புறந்தள்ளிவிட்டுப் பெரியாரைத் தாக்குவதில் முனைப்புக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். அதுபோன்ற கடிதங்களில், நிலவன்பறை என்பவரிடமிருந்து வந்துள்ள மடலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகின்றேன் : "ஆந்திராவில் கேரளாவில்,…
14 09 2017 அறிந்தும் அறியாமலும் - 15: சாதி காப்பாற்றும் கடவுள் சுப வீரபாண்டியன் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வள்ளலாருக்குப் பிறகு, மனோன்மணீயம் சுந்தரனார், நல்லுசாமிப் பிள்ளை, அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோர் வைதீக எதிர்ப்பில் முனைப்புக் காட்டியவர்கள் என்று கூறலாம். அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் நின்றவர்கள் இல்லை. வெவ்வேறு போக்குகளின் அடிப்படையில் அவர்கள் வைதீக எதிர்ப்பாளர்களாகத் திகழ்ந்தனர். சுந்தரனார், ஒரு தத்துவப் பேராசிரியர். வேதாந்தம், சித்தாந்தம் போன்றவைகளைப் பற்றித் தன் நாடக நூலான மனோன்மணீயத்தில் அவர் விரிவாகப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாட்டை அவர் கடுமையாகச் சாடினார். ‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து' போகாத மொழி தமிழ் என்றார். ‘உங்களின் கோத்திரம் என்ன?' என்று விவேகானந்தர் கேட்டபோது, ‘திராவிடக் கோத்திரம்' என்று விடையளித்தார். நல்லுசாமிப் பிள்ளையோ, ஆரியத்தை…