28 02 2016

சீதை புலம்பல்! காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு!.- ராம்

ஹே ராமா! உப்பரிகையில் நின்ற என்னை நீ நோக்க, நானும் நோக்கிய போது நம்பினேன், சிவதனுசை நீ உடைத்து என்னை மணம் முடித்து, அயோத்திக்கு அழைத்து சென்று என்னை, பட்டத்து அரசியாய் வாழ வைப்பாய் என்று. ஆனால் நடந்தது என்ன?

நால்வகை படைகண்டு, பாரெல்லாம் புகழ்பரப்பி, தமிழ் ஈழம் மலரும் நாள் நெருங்குவதால்? தேவை எமக்கு ஆளணி என கூறி, பெற்றோர் சம்மதம் இன்றியே பலவந்தமாய் பிள்ளைகளை பிடித்து சென்று, மாவிலாறில் உணவுப்பயிர் நிலங்களுக்கான நீரை தடுத்து, சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்க்க மறுத்து, மோதலை தொடங்கி நந்திக்கடல் கடந்த ஈழத் தமிழரை, முள்வேலிக்குள் சிக்கவைத்த பிரபாகரன் போலவே, நீயும் என்னை மரவுரி தரித்து கானகம் ஏகச்செய்தாய்.

அவதார புருசனே! பேதை நான் ஆசைப்பட்டதும் மாயமானை துரத்தினாய். அதனால் தான் ராவணன் என்னை கவர்ந்து சென்றான்.அசோகவனத்தில் நான் இருப்பதை அனுமன் கண்டுவந்து சொல்ல, சேதுவை அமைத்து என்னை மீட்டுச் சென்ற நீ, உனக்கு ஏற்ப்பட்ட மனக்கிலேசத்தை தீர்க்க, என் கற்பை காரணம் காட்டி தீயில் இறங்கச் செய்தாய்.இதுவும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை நெருங்க, நோர்வே செய்த ஏற்பாட்டை குழப்பி, தன் மண்டைக்கனத்தில் எதிரி கொட்டிக்கொடுத்த கோடிகளுக்காக, வடக்கு மக்களை வாக்களிக்காது தடுத்து, மகிந்த ராஜபக்சவை வெல்ல வைத்து, பல்லாயிரம் தமிழரை முள்ளிவாய்காலில் கந்தக நெருப்பில், வெந்து சாகவைத்த பிரபாகரன் செயல் போன்றதே.உன் தந்தைக்கும் அவரின் இரண்டாம் தாரத்துக்கும் ஏற்பட்ட முரண்பாட்டுக்காக, என்னை ஏன் கஸ்டத்துக்கு உட்படுத்தினாய்.

உன்னை நம்பி வாழவந்த என்னை நீ கானகம் தானே கூட்டி சென்றாய். இராவணன் கவர்ந்த என்னை மீட்டு வந்தும், உன் சுயமிழந்து கர்ப்பிணியான என்னை ஏன் மீண்டும் கானகம் அனுப்பி, நான் பூமி பிளந்து அகிலம் விட்டு அகலும்படி செய்தாய். வடக்கில் இருந்து கிழக்கு போராளிகளை கருணா தன்னுடன் அழைத்து சென்றபின், வாகரையில் வைத்து பிரபாகரன் படை அணி, தம்மோடு முன்பு இருந்தவர் என்று கூடப் பாராமல் சரணடைந்தவரை அதுவும், அண்மையில் திருமணம பந்தத்தில் இணைந்தவரை கூட, பிரிந்து சென்றவர் என துப்பாக்கி நெருப்பில் அவர்களை சுட்டு பொசுக்கியது போன்றதல்லவா உன் செயலும்.

 நீ நிதானமாய் இருந்திருந்தால் நாங்கள் கானக வாழ்வு முடித்து அயோத்தி மீண்டிருக்கலாம்.

பொன்மான் புவியில் இல்லை என்ற யதார்த்தம், ”ஐயோ ராமா” ”ஐயோ லக்ஸ்மணா” என மாய மான் கத்திய போது தான் உனக்கு புரிந்திருக்கும். அதற்குள் இராவணன் என்னை தூக்கி சென்றுவிட்டான்.
இது கூட இந்தியா ஆரம்பித்துவைக்க, அமெரிக்கா இங்கிலாந்து என தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும், பயங்கரவாதிகள் என தடை செய்த போதும், அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரம்பித்த போதும், உலக ஒழுங்கை புரிந்து கொள்ளாத பிரபாகரன், பின்பு யதார்த்தத்தை புரிந்தகொண்ட போது, தமிழ் மக்களை நந்தி கடலும் முள்வேலிகளும் உள்வாங்கி கொண்ட வரலாற்றை போன்றதே.
தலைவன் என்பவன் தன்னை மட்டுமல்ல தன்னை சார்ந்தவரையும், துன்பத்தின் நிழல் அணுகாமல் பார்க்கவேண்டும்.

உன் பிரிவால் உன் தந்தை இறந்தார். நீ கொள்ளி கூட போடவில்லை. உன் தாய் கணவனையும் மகனையும் இழந்த துன்பத்தில், பிரிவு வேதனையில் தானே வாடினாள்.உன் கொள்கை கோட்பாடு உன்னை காவிய நாயகன் ஆக்கினாலும்.. “வாலி வதம் தொடங்கி என்னை தீயில் இறக்கியது வரை, உன்மீது வசவுகள் உள்ளது போலவே.

பிரபாகரனை தேசிய தலைவன் என சிலர் போற்றினாலும், தீராப் பழிகள் பல செய்து தனது தந்தை தாய்க்கு மட்டுமல்ல, அவரை நம்பியவரின் ஆறாத் துன்பத்துக்கும், காரணமானவர் என திட்டுவேரும் உண்டல்லவா? சிலர் தலைவர் வருவார் என்கிறார்களே?. மீண்டும் அது நடந்தால்?… ராமா!? ராமா!?.
[ ”மீண்டும் மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த போகிறது தமிழ் மக்கள் பேரவை” என்ற செய்திக்கான பதிவு]
-ராம்- ilakkiyainfo.com 25 02 2017

Published in Tamil
18 02 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (02)

அதேநேரம் அடிப்படை உரிமைகள், நீதித்துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மற்றும் மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு ஆகிய விடயங்களுக்காக வழிநடத்தல் குழுவால் தனித்தனியாக ஆறு உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வழிநடத்தல் குழுவின் நிர்வாகம்

பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியுமான நீல் இத்தவல அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் செயலாளராக விளங்கி அதற்கான சேவையை ஆற்றுவதோடு, நடைபெறும் வழிப்படுத்தும் குழுவின் கூட்டங்களில் பேச்சாளராகவும் உள்ளார். வழிநடத்தும் குழுவின் பணிகளை விரிவாக்கவும், ஒழுங்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அவற்றினை முகாமை செய்யும் வகையில் முகாமைத்துவ குழுவொன்று வழிநடத்தும் குழுவின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற போது நியமனம் செய்யப்பட்டது. இந்த முகாமைத்துவ குழுவானது வழிப்படுத்தும் குழு, உப குழுக்கள், மற்றும் அலுவலகர்கள் தேவைகள் உட்பட்ட பணிகளையும் கவனத்தில் கொண்டு சேவையாற்ற வேண்டியுள்ளது. குறித்த முகாமைத்துவ குழுவுக்கான அங்கத்தவர்களில் இணைத்தலைவர்களாக டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன (இணைத் தலைமை) எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.தலைமை அலுவலராக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் வழிநடத்தும் குழுவின் செயலாளருமான நீல் இத்தவல, பாராளுமன்ற சபைத் தலைவரின் செயலாளர் அப்துல் நௌபர் ரஹ்மான், பிரதமரின் மேலதிக செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திருமதி பிம்பா திலகரத்ன ஆகியோர் காணப்படுகின்றனர். 

அரசியலமைப்புச் சபையின் செயலகம்

அரசியலமைப்புச் செயற்பாட்டுக்கென வழிநடத்தல் குழுவினரால் உருவாக்கப்பட்ட நிர்வாக அலகாக அரசியலமைப்புச் சபையின் செயலகம் விளங்குகின்றது. அரசியலமைப்பு செயலகமானது பாராளுமன்ற செயலகத்தினுள் செயற்பட்டு வருவதுடன் பாராளுமன்ற செயலாளர் நாயகமாக தம்மிக்க தஸநாயக்க விளங்குவதுடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாக நீல் இத்தவல விளங்குகின்றார்.அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அமர்வின் போது கடந்த மே மாதம் 5ஆம் திகதி அரசியலமைப்புச் சபைச் செயலகத்துக்கான மேலதிக செயலாளராக திருமதி யுரேஷா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். வழிநடத்தும் குழுவின் ஒழுங்கான அமர்வுகளை திட்டமிடுதல், ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், குறிப்பிட்ட குழுக்களுக்கு தேவையான வளபொருட்களை வழங்குதல், நிபுணர்களின் பங்களிப்புக்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஆய்வுகளுக்கு தேவையான அனுசரணைகளை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை செயலகம் மேற்கொள்கின்றது.

அத்தோடு வழிநடத்தல் குழுவுக்கு நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஆய்வுகள் மற்றும் நிபுணர்களது வாய்மூலமான கருத்துக்கள் உள்ளிட்ட உள்ளீட்டு மூலவளங்களை வழங்குவதும் ஒழுங்குபடுத்துவதும் அரசியலமைப்புச் செயலகத்தின் பணியாகின்றது. மேலும் வழிநடத்தும் குழுவுக்கும் உப குழுக்களுக்கும் இடையிலான பாலமாகவும் அரசியலமைப்புச்சபை செயலகம் செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சபை மற்றும் வழிநடத்தல் குழுவால் பேராசிரியர் சுரி ரத்னபால, பேராசிரியர் ஒஸ்டின் புள்ளே, பேராசிரியர் ஏ.ம்.நவரத்ன பண்டார, என்.செல்வக்குமாரன், கலாநிதி கமேனா குணரத்ன கலாநிதி.கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அன்கிற்றெல், அசோக குணவர்த்தன ஆகியோரடங்கிய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு மேலதிக சந்தர்ப்பம்

நாட்டு மக்களின் தற்போதைய அபிலாஷைகள் மற்றும் எதிர்கால விருப்பங்களையும் உள்ளடக்கியதாக புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக வழிநடத்தும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினைத் தொடர்ந்து, பொது பிரதிநிதித்துவ குழுவிற்கு பிரதிநிதித்துவம் செய்யாத பொதுமக்களுக்கு, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய தங்களது கருத்துக்களை எழுத்து மூலம் நேரடியாக வழிப்படுத்தும் குழுவினருக்கு சமர்ப்பிப்பதற்கு மேலதிகமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குறிப்பாக வழிநடத்தும் குழுவின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்காக பத்திரிகை விளம்பரமொன்று கடந்த மே மாதம் 10 ஆம் திகதி எழுத்துமூல பிரதிநிதித்துவங்கள், வழிப்படுத்தும் குழு உப குழுக்களினால் தீர்மானிக்கப்பட்ட தலைப்புக்களின் கீழ் அனுப்பப்படல் வேண்டும் என்ற வகையில் விபரங்கள் அடங்கலாக பிரசுரிக்கப்பட்டது. அவ்வகையில் எழுத்துமூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிக்கும் கால எல்லை கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

பலதரப்பினருக்கும் வழங்கப்பட்ட சந்தர்ப்பம்

அனைத்து அரசியல் கட்சிகள், தொழில் ரீதியான நிறுவனங்கள், அனைத்துக்கும் தத்தமது எழுத்து மூல பிரதிநிதித்துவங்களை சமர்ப்பிக்கும் படி வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கையையும் வழிநடத்தல் குழு செய்திருந்தது. அதுமட்டுமன்றி வழிநடத்தும் குழு ஆரம்ப ஆய்வுகளின் போது, அரசியல் கட்சி மற்றும் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள் குழுவின் முன்னிலையாகி தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி அந்தந்த துறைகளின் உப குழுக்களுக்கு முன்னிலையில் தமது வாய்மூல சமர்ப்பிப்புக்களை வழங்கும் வகையில் அவர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்குமான வாய்மூல மற்றும் எழுத்து மூல சமர்ப்பிப்புக்களை வழங்குவதற்கான கால எல்லை வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கான தேவைகளின் பொருட்டு கால எல்லை நீடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை ரீதியிலும் அரசியல் கட்சி பிரதிநிதித்துவங்கள் தமது சமர்ப்பிப்புக்களை அரசியலமைப்பு சபை செயலகத்திடம் சமர்ப்பித்தனர்.

உபகுழுக்கள் விபரம்

ஆறு உப குழுக்களும் அக்குழுவின் தலைவர்களை உள்ளடக்கிய வகையில் 11 அங்கத்தவர்களைக் கொண்ட வகையில், அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினரால் நியமிக்கப்பட்டன.அரசியலமைப்புச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழிநடத்தும் குழுவினரால் பாராளுமன்றத்தினுள் காணப்படும் கட்சி பிரதிநிதித்துவங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவமான முறையில் இவ் உப குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம் அமைந்திருந்தது.ஆறு உப குழுக்களுக்குமான ஆறு தலைவர்களும் உப குழுவின் அங்கத்தவர்களிலிருந்து பதவியின் சிரேஷ்ட பரிசீலனையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அத்துடன் உப குழுக்களுக்கான நிர்வாக ஆதரவுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரிகள் சிலரும் உப குழுக்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

'அடிப்படை உரிமைகள்' தொடர்பான உபகுழுவில் அடிப்படை உரிமைகள், மொழி உரிமைகள், அரச கொள்கையின் வழிகாட்டும் நெறிகள், குடியுரிமை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க(தலைவர்), அநுராத ஜயரத்ன திருமதி பவித்ராதேவி வன்னியாரச்சி, விஜித ஹேரத், வாசுதேவ நாணயக்கார வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், எஸ்.ஸ்ரீதரன், அ.அரவிந்த் குமார் டாக்டர் ஜயம்பதி விக்கிரமரத்ன, டாக்டர் திருமதி துஷித விஜேமன்ன, எம்.எச்.எம்.சல்மான் உள்ளனர்.

'நீதித்துறை' தொடர்பான உபகுழுவில் நீதித்துறை, நீதிமன்றங்களின் அமைப்பு, நீதிமன்ற பரிசீலனை, அடிப்படை உரிமைகள் சட்ட அதிகாரம் உள்ளடங்கலாக நீதித்துறையின் செயலாட்சி, அரசியலமைப்பு, நீதிமன்றம் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ரவூப் ஹக்கீம் (தலைவர்) அநுர பிரியதர்ஷன யாப்பா, நவீன் திஸாநாயக்க, திருமதி தலதா அதுகோரள, சந்திம வீரக்கொடி, சுஜீவ சேனசிங்க, திருமதி ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, எம்.ஏ.சுமந்திரன், உதய பிரபாத் கம்மன்பில, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் உள்ளனர். 'சட்டம் மற்றும் ஒழுங்கு' தொடர்பான உபகுழுவில் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, அவசர தேவை மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். இக்குழுவின் உறுப்பினர்களாக சாகல ரத்நாயக்க (தலைவர்) டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, பழனி திகாம்பரம், அமீர் அலி சிஹாப்தீன், அஜித் பி.பெரேரா, டக்ளஸ் தேவானந்தா, அநுர திஸாநாயக்க, எம்.எஸ். தௌபீக், மாவை எஸ்.சேனாதிராஜா, நாமல் ராஜபக் ஷ, செஹான் சேமசிங்க ஆகியோர் உள்ளனர்.

'பொது நிதி' தொடர்பான உபகுழுவில் பொதுநிதி, மாகாண மட்டத்திலான நிதி, பொது நிறுவனங்கள், மத்திய வங்கி மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக பந்துல குணவர்த்தன (தலைவர்), டாக்டர் சரத் அமுனுகம, வி.எஸ். இராதாகிருஷ்ணன், டாக்டர் திருமதி அனோமா கமகே, டாக்டர் ஹர்ஷ த சில்வா, இரான் விக்கிரமரத்ன, முத்து சிவலிங்கம், கெஹெலிய ரம்புக்வெல்ல, சுனில் ஹந்துன்னெத்தி, ஈ.சரவணபவன், தாரக்க பாலசூரிய ஆகியோர் உள்ளனர். 'பொதுச் சேவை' தொடர்பான உபகுழுவில் பொதுச் சேவை, பொதுச் சேவை ஆணைக்குழு, மாகாண அரச சேவை, உள்ளூராட்சி சேவை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளடங்கலாக சுதந்திர ஆணைக்குழுக்கள், குறைகேள் அலுவல் மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இக்குழுவின் உறுப்பினர்களாக ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த (தலைவர்), கருணாரத்ன பரணவிதான, சந்திரசிறி கஜதீர, நிஹால் கலப்பத்தி, ஜே.சீ. அலவத்துவல, அப்துல்லா மஹ்ரூப், டாக்டர் ரமேஷ் பதிரண, வேலுகுமார், ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் உள்ளனர்.

'மத்திய அரசாங்கம் - மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு' குறித்த உபகுழுவில் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண சபை ஆணைக்குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு, உள்ளூர் அதிகார சபைகள், மாகாணசபை நிறைவேற்று அதிகார சபை, மத்திய நிலையங்களுக்கான தகுதிகள், மாகாணங்கள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள், நிர்வாக அமைப்பு (மாவட்ட செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள்) மற்றும் பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன இக்குழுவில் தர்மலிங்கம் சித்தார்த்தன் (தலைவர்), டிலான் பெரேரா, எச்.எம்.எம். ஹரீஸ், டலஸ் அழகப்பெரும, பிமல் ரத்னாயக்க, விதுர விக்கிரமநாயக்க, மயில்வாகனம் திலகராஜா, சனத் நிஷாந்த பெரேரா, எஸ்.எம்.மரிக்கார், திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன, விஜேபால ஹெட்டியாராய்ச்சி ஆகியோர் உள்ளனர்.

வழிப்படுத்தும் குழுவினரால் நேரத்துக்கு நேரம் வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள் அனைத்தும் ஆழ்ந்த அவதானிப்பின் பொருட்டு உப குழுக்களுக்கு முன்னிலையாக சமர்ப்பிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் உப குழுக்களின் தலைவர்களுக்கு உரிய முறையில் பரிமாறப்பட்டு ஆராயப்பட்டன. அவ்வகையில் பரிமாறப்பட்ட அனைத்து அறிக்கைகளும் உப குழுக்களின் தலைவர்களால் ஆழ்ந்து ஆராயப்பட்டன.

இந்த உபகுழுக்கள் பல்வேறு கலந்தாய்வுகளை மேற்கொண்டு தமது இறுதி அறிக்கைகளை வழிநடத்தும் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. வழிநடத்தல் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அந்த அறிக்கைகள் ஆறும் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9,10,11ஆம் திகதிகளில் அவ்வறிக்கைகள் மீதான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.இவ்வாறான நிலையில் அரசிய லமைப்பை உருவாக்கும் கடினமான பயணத்தில் பங்கேற்றுள்ள வழிநடத்தல் குழுவின் பிரதிநிதிகளின் கருத்து பதிவுகள் அடுத்து...

virakesari'lk 25 12 2016.

Published in Tamil
08 02 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 1

16 ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து போர்த்­துக்­கேயர், ஒல்­லாந்தர், பிரித்­தா­னியர் போன்ற அந்­நியர் ஆட்­சிக்கு இலங்­கைத்­தீவு உட்­பட்­டி­ருந்­தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்­கு­ரிய ஒரு குடி­யேற்ற நாடாக மாறி­யது. இதி­லி­ருந்து இலங்­கையின் கரை­யோரப் பிர­தே­சங்­களின் சிவில் நிர்­வாகம், நீதிப்­ப­ரி­பா­லனம், நிர்­வாக விட­யங்கள் பிரித்­தா­னிய அர­சினால் இலங்­கையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த தேசா­தி­ப­தியால் நிறை­வேற்­றப்­பட்­டன.

அத­னைத்­தொ­டர்ந்து 1833இல் பிரித்­தா­னி­யரால் கோல்­புறுக் கமரன் சீர்­தி­ருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு துறையில் அடித்­த­ளத்­தினை வேரூன்ற ஏது­வாக அமைந்­தது. அத­னை­ய­டுத்து 1912இல் குறு மக்­கலம் சீர்­தி­ருத்­தங்கள் 1922இல் மனிங் சீர்­தி­ருத்­தங்கள், 1924இல் மனிங் டிவன்­சயர் சீர்­தி­ருத்­தங்கள் இடம்­பெற்­றன. தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் அர­சி­ய­ல­மைப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதற்­குப்­பின்­ன­ரான கால­கட்­டத்தில் இரண்டாம் உலக யுத்­தத்தின் முடிவில் 1944 இல் பிரித்­தா­னிய அர­சாங்கம் சோல்­பரி பிர­புவின் தலை­மையில் ஆணைக்­கு­ழுவொன்றை இலங்­கைக்கு அனுப்­பி­யது. இலங்கை அமைச்­சர்­களால் வரை­யப்­பட்ட யாப்பில் காணப்­பட்ட சிபா­ரி­சு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்­பரி யாப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. சோல்­பரி அர­சியல் யாப்­பின்­படி இலங்­கையில் பாரா­ளு­மன்ற ஜன­நா­யக முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

பிரித்­தா­னிய கால­னித்­துவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தாகக் கொண்டு முத­லா­வது குடி­ய­ரசு யாப்­பொன்று 1972ஆம் ஆண்டு இயற்­றப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஆட்சி மாற்­றத்­தினைத் தொடர்ந்து அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தங்கள் பற்றி கலந்­து­ரை­யாடும் தீர்­மானம் அனைத்து அர­சியல் தலை­வர்­க­ளி­னாலும் முன்­வைக்­கப்­பட்­டது. முத­லா­வது குடி­ய­ரசு யாப்பின் திருத்­த­மாக அர­சாங்கம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை அறி­மு­கத்­தோடு 1978ஆம் ஆண்டு இரண்­டா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு முறை கொண்டு வரப்­பட்டு அதுவே இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்­பாக கொள்­ளப்­பட்­டது.

அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை எனப் பல­வற்றை உள்­ள­டக்­கிய விரி­வான முறையில் இவ்­வ­ர­சியல் யாப்பு தற்­போது வரையில் 19 தட­வைகள் திருத்­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஆறா­வது, பதின்­மூன்­றா­வது, பதி­னே­ழா­வது, பதி­னெட்­டா­வது மற்றும் பத்­தொன்­ப­தா­வது திருத்­தங்கள் அர­சியல் முக்­கி­யத்­து­வத்­தினை பெற்று நிற்­கின்­றன.

2000 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு திருத்த யோசனை பாரா­ளு­மன்றில் வரை­பாக முன்­வைக்­கப்­பட்ட போதும் பாரா­ளு­மன்றில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை பெற முடி­யாது தோல்­வியைக் கண்­டது. இந்­நி­லையில் 1972, 1978ஆகிய குடி­ய­ரசு யாப்­புக்­களில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் சிறு­பான்மை தேசிய இனங்கள் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன.

2015 ஜன­வரி 08ஆம் திகதி நடை­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பிர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி ஆகி­யன ஒன்­றி­ணைந்து அமைத்த தேசிய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் இலங்கை புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்­றினை இயற்றும் பணிகள் அனைத்து தரப்­பி­னரின் பங்­கேற்­புடன் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

ஏக­ம­ன­தாக நிறை­வே­றிய பிரே­ரணை

அர­சி­ய­லமைப்புச் சபையை நிய­மிப்­ப­தற்­கான பிரே­ர­ணை­யொன்று ஜன­வரி ஒன்­பதாம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. குறித்த பிரே­ர­ணை­யில் இலங்­கைக்கு அர­சி­ய­ல­மைப்­பொன்றை வகுத்தல் அவ­சி­யமென இலங்கை மக்கள் மத்­தியில் பரந்­த­ளவில் இணக்­கப்­பாடு காணப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டப்­பட்டு 23வாச­கங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. முதலாம், இரண்டாம் வாசகங்களில், இலங்­கையின் அர­சி­ய­லமைப்பு பற்­றிய மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை ­க­ளையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்­தா­ராய்ந்து அர­சி­ய­லமைப்பின் 75ஆவது உறுப்­பு­ரையின் கீழ் பாரா­ளுமன்­றத்தின் தத்­து­வங்­களைப் பிரயோ­கிப்­பதில் அதன் பரிசீலனைக்­காக அர­சி­ய­ல­மைப்பு சட்­ட­மூ­லத்தின் வரைபைத் தயா­ரிக்கும் நோக்­கத்­துக்­காக இதன் பின்னர் அர­சி­ய­ல­மைப்புச் சபை என அழைக்­கப்படும். எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்றக் குழு ஒன்று தாபிக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென இந்தச் சபை தீர்­மா­னிக்­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­யகர் அர­சி­ய­லமைப்பு சபையின் தவி­சா­ள­ராக இருப்பார். அர­சி­ய­லமைப்பு சபை ஏழு பிரதித் தவி­சா­ளர்­களைக் கொண்­ட­தாக இருக்கும் என்­ப­துடன் அவர்கள் அர­சி­ய­லமைப்பு சபை­யினால் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். சபா­நா­யகர் இல்­லாத சந்­தர்ப்­பங்­களில், சபைக்­கூட்­டங்­களின் அமர்­வுக்குத் தலைமை வகிப்­ப­தற்கு அர­சி­ய­லமைப்பு சபையின் பிரதித் தவி­சா­ளர்­க­ளுக்­கி­டையே ஒரு­வரைத் தெரிவு செய்தல் வேண்டும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.மிக முக்­கி­ய­மாக 5ஆவது வாச­கத்தில், அர­சி­ய­லமைப்பு சபை பின்­வரும் உப குழுக்­களைக் கொண்­டி­ருத்தல் வேண்டும்.

(அ) அர­சி­யலமைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற இரு­பத்­தொரு பேரை விஞ்­சாத எண்­ணிக்­கையாகக் கொண்­டதும் அவர்­களில் ஒருவர் தவி­சா­ள­ரா­கவும் கொண்­ட­தொரு வழிப்­ப­டுத்தும் குழு.வழிப்­ப­டுத்தும் குழு அர­சி­யலமைப்பு சபையின் அலு­வல்கள் மற்றும் இலங்­கையின் அர­சி­ய­லமைப்பை வரையும் பணி ஆகி­ய­வற்­றுக்­கான பொறுப்­புக்­களை கொண்­டி­ருத்தல் வேண்டும்.

(ஆ) அர­சி­ய­லமைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டிய அர­சி­ய­லமைப்பு சபையின் உறுப்­பி­னர்களைக் கொண்ட அத்தகைய ஏனைய உப­கு­ழுக்கள்.ஆயின், ஒவ்­வொரு உப குழுவும் பதி­னொரு பேரை விஞ்­சா­த­வாறு உறுப்­பி­னர்கள் இருத்தல் வேண்டும். ஒவ்­வொரு உப குழு­வி­னதும் தவி­சாளர் வழிப்­ப­டுத்தும் குழு­வினால் நிய­மிக்­கப்­ப­டுதல் வேண்டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.அதே­நேரம் குறித்த தீர்­மா­னத்தில் அர­சி­ய­ல­மைப்பு வரைபு நிறை­வேற்­றப்­படும் முறைமை மற்றும் உரு­வாக்­கப்­பட்ட குழுக்கள் கலைக்­கப்­ப­டுதல் தொடர்­பிலும் 20ஆம் 21ஆம் 22ஆம் 23ஆம் வாச­க­ங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

20 ஆவது வாச­கத்தில், அர­சி­ய­லமைப்பு சபை­யினால் சாதா­ரண பெரும்­பான்­மை­யினால் மாத்­திரம் அர­சி­ய­லமைப்பு சட்­ட­மூ­லத்தில் உள்ள பிரே­ர­ணைகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து.பிரே­ர­ணைகள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படல் வேண்­டு­மென்­ப­துடன் அறிக்­கை­யையும் அர­சி­யலமைப்பு சட்­ட­மூ­லத்­தையும் ஒரு மாதத்­திற்குள் சமுக­ம­ளிக்­காத உறுப்­பி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக முழுப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து. அர­சி­ய­லமைப்பு சட்­ட­மூலம் அமை­ச்சரவைக்கு சமர்ப்­பிக்­கப்­படல் வேண்­டு­மென்­ப­துடன் இதற்குப் பின்னர் இதன் 21 ஆவது பிரிவின் ஏற்­பா­டுகள் ஏற்­பு­டை­ய­தாகும் என்­ப­துடன் அர­சி­யலமைப்பு சபை மற்றும் பிரே­ர ணையை முன்­வைத்த குழு கலைந்­த­தாக கரு­துதல் வேண்டும்.

21 ஆவது வாச­கத்தில், அர­சி­ய­ல­மைப்புச் சபை அர­சி­ய­ல­மைப்பு வரைபு பற்­றிய தீர்­மா­னத்தை மூன்­றில்­இ­ரண்டு பெரும்­பான்­மை­யினால் அங்­கீ­க­ரிக்­கு­மி­டத்து அறிக்­கை மற்­றும்­அ­ர­சி­ய­ல­மைப்பு வரைவும் வழிப்­ப­டுத்தும் குழு­வினால் அமைச்­ச­ரவைக்குச் சமர்ப்­பிக்­கப்­ப­டுதல் வேண்டும் என்­ப­துடன் இந்த தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அர­சி­ய­லமைப்பு சபையும் உப குழுக்­களும் கலைக்­கப்­பட்­ட­தாகக் கரு­தப்­படல் வேண்டும்.

22ஆவது வாச­கத்தில், அர­சி­ய­ல­மைப்புச் சபை மற்றும் 5ஆம் வாச­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உப­கு­ழுக்கள் மற்றும் இந்த தீர்­மா­னத்­துக்கு அமை­வாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பணி­யாளர் மற்றும் ஆலோ­ச­கர்­க­ளுக்­கான செல­வி­னங்கள் திரட்டு நிதி­யத்தில் இருந்து மேற்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும் என்­ப­துடன் அர­சி­ய­லமைப்பி 150ஆவது உறுப்­பு­ரையின் பிர­காரம் அவ்­வி­டயம் தொடர்பில் பொருத்­த­மான நட­வ­டிக்­கைகளைப் பாரா­ளு­மன்றம் மேற்­கொள்ளுதல் வேண்டும்.

இறு­தி­யாக 23ஆவது வாச­கத்தில், சந்­தே­கங்­களைத் தவிர்ப்­ப­தற்­காக, சமூ­க­ம­ளிக்­காத உறுப்­பி­னர்கள் உட்­பட பாரா­ளு­மன்­றத்தின் மொத்த உறுப்­பி­னர்­களின் மூன்றிரண்டு பெரும்­பான்­மை­யினால் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட, பின்னர் அர­சி­ய­லமை­ப்பின் 83ஆவது உறுப்­பு­ரையில் தேவை­ப­டுத்­தப்­பட்­ட­வாறு மக்கள் தீர்ப்­பொன்றின் போது மக்­க­ளினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­மி­டத்து மாத்­திரம் அர­சி­ய­ல­மைப்பு சட்ட மூலம் சட்­ட­மாக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இப்­பி­ரே­ர­ணை­யா­னது மார்ச் மாதம் 09ஆம் திகதி வாக்­கெ­டுப்­பின்றி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

வழி­ந­டத்தும் குழு

அத­னை­ய­டுத்து அர­சி­ய­ல­மைப்பு சபையை நிய­மிப்­ப­தற்­கான கட்­ட­மைப்பு தீர்­மா­னத்தின் 05 (அ) பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு அர­சி­ய­ல­மைப்பு சபையின் முத­லா­வது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடை­பெற்­ற­போது அர­சி­ய­ல­மைப்புச் சபையின் வழிப்­ப­டுத்தும் குழு­வுக்­கான 21 அங்­கத்­த­வர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர். வழிப்­ப­டுத்தும் குழு­வுக்கு தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மிக்­கப்­பட்டார். அமைச்­சர்­க­ளான லக் ஷ்மன் கிரி­யெல்ல, நிமல் சிறி­பால டி சில்வா, ரவூப் ஹக்கீம்,கலா­நிதி.விஜே­தாஸ ராஜ­பக் ஷ, ஏ.டீ.சுசில் பிரே­ம­ஜ­யந்த, ரிஷாட் பதி­யுதீன், பாட்­டலி சம்­பிக ரண­வக்க, டி.எம். சுவா­மி­நாதன், மனோ கணேசன், மலிக் சம­ர­விக்­ரம, இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, ஆகி­யோரும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா­ஜ­வ­ரோ­தயம் சம்­பந்தன், ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸா­நா­யக்க, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன, எம்.ஏ. சுமந்­திரன், டாக்டர் திரு­மதி துஸிதா விஜே­மான்ன, பிமல் ரத்­நா­யக்க, பிர­சன்ன ரண­துங்க, டக்ளஸ் தேவா­னந்தா ஆகி­யோரும் நிய­மிக்­கப்­பட்­டனர்.

வழி­ந­டத்தல் குழுவின் அடிப்­படை குறிப்­புக்கள்

சிலோன் அர­சி­ய­ல­மைப்பு ஆணைக்­குழு ஆணை (1946 சோல்­பரி அர­சி­யல்­யாப்பு), 1972 இல் இயற்­றப்­பட்ட முத­லா­வது குடி­ய­ரசு யாப்பு, 1978ஆம் ஆண்டில் இயற்­றப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்பு வரைபு, புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அடிப்­படை ரீதியில் வடி­வ­மைக்க அனைத்து கட்சி பிர­தி­நி­தித்­துவ குழுவின் பிரே­ர­ணைகள் ஆகி­ய­வற்றை அடிப்­படை குறிப்பு பொரு­ளாக வழி­ந­டத்தல் குழு எடுத்­துள்­ள­தோடு அடிப்­படை உரி­மைகள் மீதான புதிய அத்­தி­யா­யங்கள் தொடர்­பான குழு அறிக்கை, மற்றும் மக்கள் கருத்­துக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொது பிர­தி­நி­தித்­துவ குழு அறிக்கை ஆகி­யவை தொடர்­பா­கவும் ஆழ­மான கவனம் செலுத்­து­கின்­றது.

நேர­டி­யாக கையாளப்படும் விட­யங்கள்

புதிய அர­சி­ய­ல­மைப்பின் கணி­ச­மான பல்­வேறு அம்­சங்­களில், சிறந்த ஆய்­வு­களை மேற்­கொள்ளல், திருத்­தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்­றினை பரி­சீ­லித்து திருத்­தி­ய­மைத்தல், அர­சி­ய­ல­மைப்பு பிரே­ரணை வரைபு செய்தல் ஆகிய பணி­களை வழி­ந­டத்தும் குழு மேற்­கொள்­கின்­றது. தற்­போ­தய அர­சியல் யாப்பின் முத­லா­வது மற்றும் இரண்­டா­வது அத்­தி­யாயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடல், நாட்டின் தன்மை, இறை­யாண்மை, மதம், அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்பு, தேர்தல் சீர்­தி­ருத்­தங்கள், அதி­காரப் பகிர்­வுக்­கான கோட்­பா­டுகள், காணி ஆகிய தலைப்­புக்­களின் கீழான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு தீர்­மானம் மேற்­கொள்­வ­தென வழிப்­ப­டுத்தல் குழு­வி­னரால் தன்­ன­கத்தே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
தொடரும்... virakesari 23 12 2016

Published in Tamil