28 04 2017

தேசியவாத எழுச்சியின் பின்னாலுள்ள செய்தி

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

உலகம் முழுவதிலும், தேசியவாதத்தைக் கக்கும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, அச்சம் கொள்ள வைக்கிறது; இந்த அச்சத்தை, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான வாக்கியங்களை, அண்மைக்கால அரசியல் அலசல்களில் கண்டிருக்க முடியும்.இந்த அச்சமொன்றும், பொய்யானதோ அல்லது தவறானதோ கிடையாது. இது, தற்போது நடந்து கொண்டிருக்கும் யதார்த்தத்தையே வெளிக்காட்டுகிறது.

இந்த யதார்த்தத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த, பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்று வாக்களிப்பு அமைந்தது. இதில், கடும்போக்கு வலதுசாரித்துவத்தைக் கடைப்பிடிக்கும் மரின் லு பென், 21.3 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதன்மூலம், 24 சதவீதமான வாக்குகளைப் பெற்ற, மத்திமக் கொள்கைகளைக் கொண்ட இமானுவேல் மக்ரோனும் லு பென்னும், 2ஆவது சுற்று வாக்களிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர். லு பென் என்பவர், நவீனகால கடும்போக்கு வலதுசாரிகளைப் பிரதிபலிக்கும் ஒருவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும்; எல்லைகளைப் பலப்படுத்த வேண்டும்; அகதிகளின் வருகையைக் குறைக்க வேண்டும் (2 இலட்சத்திலிருந்து 10,000); பாதுகாப்பை அதிகரித்தல் போன்றன தான், அவரை அடையாளப்படுத்தும் அவரது கொள்கைள். கருத்துக் கணிப்புகளின்படி, அவர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புகள், மிகக்குறைவாகவே உள்ளன. மக்ரோன் வெற்றிபெறுவது, ஓரளவு உறுதியாக உள்ளது என்பது, ஓரளவு ஆறுதல் தரக்கூடிய செய்தி தான். ஆனால், ஹிலாரி கிளின்டனும் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, ட்ரம்ப்பின் வெற்றிவாய்ப்புகளும் இல்லை என்றே கருதப்பட்டது. பின்னர் நடந்ததை, வரலாறு சொல்கிறது. எனவே, இவ்விடயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவும் முடியாது.

இந்த வாக்களிப்பு முடிவுகளில், முக்கியமான ஒன்றை அவதானிக்க முடிந்தது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில், லு பென் பெற்றுக் கொண்ட வாக்குகள், வெறுமனே 4.99 சதவீதம். பரிஸுக்கு அருகிலுள்ள நகரங்களிலும் இந்நிலை தான். லு பென்னின் பலம், கிராமப்புற வாக்குகள் தான். இந்த நிலைமையை, “கிராமப்புற மக்களுக்கு ஒன்றும் தெரியாது. ஒப்பீட்டளவில் படிப்பறிவு குறைவான மக்கள், இனவாதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சொல்விளையாட்டுகளுக்கு மயங்குகிறார்கள்” என்று கூற முடியும். ஆனால் உண்மை, அதையும் தாண்டி இருக்கிறது என்பது தான் உண்மை. அதற்கு, இதற்கு முன்னர் இடம்பெற்ற, இரண்டு பிரதான நிகழ்வுகளைப் பற்றியும் ஆராய்வது அவசியமானது. முதலாவது, கடந்தாண்டு இடம்பெற்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல். யாரும் எதிர்பார்க்காத விதமாக, டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.

இதுவரை காலமும் இல்லாததைப் போன்று, பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்த ட்ரம்ப், கடும்போக்கு வலதுசாரிகளின் பலத்த ஆதரவுடனேயே, தனது பிரசாரத்தை மேற்கொண்டார். மெக்ஸிக்கோவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையில் சுவர்; எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு; அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்துதல்; முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதைத் தடை செய்தல்; வசதி படைத்தோருக்கான வரிக் குறைப்பு என, அவரின் கொள்கைகள், கடும்போக்கு வலதுசாரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக இருந்தது. “ஐ.அமெரிக்க மக்கள், ட்ரம்ப்பைத் தெரிவுசெய்ய மாட்டார்கள். அந்தளவுக்கு அறிவில்லாதவர்கள் கிடையாது” என்று, பலரும் நம்பினர். ஆனால் இறுதியில், அவர் வென்றார். டொனால்ட் ட்ரம்ப்புக்கு, மிகவும் வளர்ச்சியடைந்த பாரிய நகரங்களில் அனேகமானவை, தோல்வியையே வழங்கின. கிராமப்புறங்கள், அவரின் கோட்டைகளாக அமைந்தன. கிராமப்புற வாக்குகளில் 62 சதவீதமானவை, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. வெறுமனே 34 சதவீதமானவை மாத்திரமே, ஹிலாரிக்குக் கிடைத்தன. நகரப் புறங்களில் வெறுமனே 35 சதவீத வாக்குகள் மாத்திரமே, ட்ரம்ப்புக்குக் கிடைத்தன. ஹிலாரிக்கு, 59 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

இவ்விடயம் இவ்வாறிருக்க, முக்கியமான அடுத்த சம்பவமாக, ‘பிரெக்சிற்’ என அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகும் சர்வஜன வாக்கெடுப்பு அமைந்தது. ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே, இதுவும், நடக்க முடியாத ஒன்று எனக் கருதப்பட்டது. கருத்துக்கணிப்புகளும் அவ்வாறு கூறின. ஆனால் இறுதியில், வெளியேற வேண்டுமென, வாக்களிப்பு முடிவுகள் வெளியாகின. ஆனால், அந்த வாக்களிப்பில், வெளியேற வேண்டாமென, இலண்டன் வாக்களித்தது. ஒட்டுமொத்தமாக, வெளியேற வேண்டுமென்பதற்கு 51.9 சதவீத ஆதரவு கிடைக்க, இலண்டனோ, வெளியேற வேண்டாமென 59.9 வாக்குகளால் வாக்களித்தது. பிரதான நகரங்களிலும் இதே நிலைமை தான் காணப்பட்டது.

மேலே கூறப்பட்ட 3 சம்பவங்களும், உலகில் கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் எழுச்சிக்கான உதாரணங்களாகக் கருதப்படுகின்றன. அவை மூன்றுமே, ஒரே மாதிரியான அடிப்படையைக் கொண்டிருக்கின்றன: மாபெரும் நகரங்களில், அந்தக் கடும்போக்கு வலதுசாரித்துவம் நிராகரிக்கப்படுகிறது என்பது தான் அது. இது, சிந்திக்க வைக்கிறது. இதற்குப் பின்னால், நகரங்களில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படும் கல்வியறிவு தான் காரணமா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்பதே, தற்போதுள்ள கேள்வி. கல்வியறிவு என்பது குறிப்பிடத்தக்க ஒரு காரணமாக இருந்தாலும், அதைவிட முக்கியமானதொரு காரணமாக, வளப்பங்கீடு, அபிவிருத்தியில் காணப்படும் பாகுபாட்டைக் குறிப்பிட முடியும்.

சிவாஜி திரைப்படத்தில், சுஜாதா எழுதிய வசனமொன்று, “பணக்காரன், மேலும் பணக்காரன் ஆகிக் கொண்டிருக்கிறான். ஏழை, இன்னும் ஏழையாகிக் கொண்டிருக்கிறான்” என்ற அர்த்தத்தில் அமையும். அதைப் போன்று தான், மாபெரும் நகரங்களும், மேலும் நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நகரங்களைத் தாண்டியிருக்கிற சில கிராமப்புற மக்கள், தாங்கள் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள். கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, தாங்கள் ஒதுக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்ற உறுதியளிக்கும் ஒருவருக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைகளைப் பற்றிய கேள்விகள் பல இருக்கும் போது, அவர்கள் வாக்களிக்க எண்ணும் நபர், கடும்போக்கு வலதுசாரியா, பெண்களைக் கீழ்த்தரமாகக் கருதுபவரா, சிறுபான்மையினரை ஒடுக்கக்கூடியவரா என்பதெல்லாம், இரண்டாம் பட்சமாக மாறிவிடுகின்றன.

இதில், கிராமப்புறங்களில் கல்வியறிவு, அனேகமாகக் குறைவாக இருப்பதால், அவர்களை இலகுவாக ஏமாற்றுவது இலகுவாகிவிடுகிறது. உதாரணமாக, டொனால்ட் ட்ரம்ப்பின் அனேகமான தேர்தல் வாக்குறுதிகள், உயர் 1 சதவீதம் என அழைக்கப்படும் செல்வந்தர்களை இலக்கு வைத்தே காணப்பட்டன. சாதாரண மக்கள், அவரது தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அந்த மக்களைச் சென்று பார்க்கும் போது, அந்த மக்களின் இரட்சகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். அந்த மக்களும் நம்பினர். இலங்கையிலும் கூட, இந்த நிலைமையை அவதானிக்க முடியும். தற்போதைய நிலையில் தேர்தலொன்று நடைபெற்றால், தற்போதைய அரசாங்கம், அனேகமாக வெற்றிபெறும். அந்த நம்பிக்கை காணப்படுகிறது. ஆனால், கிராமப்புற மக்கள், ஒன்றிணைந்த எதிரணி என்று அழைக்கப்படுகின்ற, கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்ற அந்தக் குழுவுக்கு வாக்களிப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கிராமப்புற மக்களைப் பொறுத்தவரை, பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள் எல்லாம், தமது வாழ்வாதாரத்துக்குப் பின்னர் தான். வாழ்வாதாரத்தைப் பற்றியே, அவர்களது பிரதான கவனம் காணப்படும். இவற்றுக்கெல்லாம் இருக்கும் முக்கியமான காரணம், கிராமப்புறங்கள், அரசியல்ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படாமையும் அமைகிறது. நகரங்கள் என்ன தான், தாராளவாதக் கொள்கைகளையும் பல்கலாசார வாழ்க்கையையும் கொண்டு மிளிர்கின்ற போதிலும், கிராமப்புற மக்களோ, அவற்றைத் தமது எதிரிகளாக எண்ணுகின்றனர். இலங்கையிலும், அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து, அதன் செயற்பாடுகள் குறித்து, நகர மக்களுக்கு இருக்கும் எதிர்ப்பை விட, கிராமப்புற மக்களுக்கான எதிர்ப்பு அதிகமாக உள்ளது.

நவீன அரசியலென்பது, விழுமியங்களைக் காப்பதற்காக, விட்டுக்கொடுப்புகளுக்குப் பெயர்போன அரசியலாகும். இந்த வகையான அரசியலை, ஐ.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் காணலாம். அவர்களைப் பொறுத்தவரை, அரசியலில் ஒருமித்த கருத்துகளைப் பெறுவது கடினமென்ற யதார்த்தத்தை அறிவர். அதன் காரணமாக, ஒரு விடயம் வெற்றிபெற வேண்டுமாயின், விட்டுக்கொடுப்புகள் அவசியமென்பதை அவர்கள் அறிவர். மறுபக்கமாக, கிராமப்புற மக்கள் விரும்பும் அரசியலென்பது, எதையும் நேரடியாக, வெளிப்படையாக எதிர்கொள்ளும் அரசியல். விட்டுக்கொடுப்புகளை விட, உறுதியாக நின்று, ஒரு காரியத்தைச் சாதிப்பர் என்ற எண்ணம். ஏனென்றால், மேலே கூறப்பட்ட விட்டுக்கொடுப்பு அரசியலில், கிராமப்புறங்கள் கோரிநிற்கும் பாரிய மாற்றமென்பது சாத்தியப்படாது. எனவே தான், டொனால்ட் ட்ரம்ப், மஹிந்த ராஜபக்‌ஷ, பொரிஸ் ஜோன்சனும் நைஜல் பராஜும் (இங்கிலாந்தில், பிரெக்சிற்-இன் நாயகர்கள்) போன்றோரை, கிராமப்புற மக்கள், அதிகமாக நம்புகிறார்கள்.

இவ்வாறு, கடும்போக்கு வலதுசாரிகளின் (இதில் இலங்கையின் ஒன்றிணைந்த எதிரணி, கடும்போக்கு வலதுசாரித்துவத்தின் பண்புகளைக் கொண்ட, இடதுசாரிகளையே கொண்டது) எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், அபிவிருத்தியும் அரசியலும் மாற்றங்களும், கிராமப்புற மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், டொனால்ட் ட்ரம்ப், மரின் லு பென் போன்றோரைப் போன்று, வெற்றிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதே யதார்த்தம் -

tamilmiirror'lk  27 04 2017
Published in Tamil
18 04 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (06, 07)
( ஆர். ராம்)

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரனின் பதிவைத் தொடர்ந்து ஜே.வி.பி.தலைவர் அனு­ர­கு­மார திஸா­நாயக்­கவின் பதிவு வரு­மாறு,

கேள்வி:- தேசிய அர­சாங்கம் உரு­வான பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தற்­போது எந்த மட்­டத்தில் உள்­ளது?
பதில்:- பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக்­கப்­பட்­டுள்­ளது. அர­சிய­ல­மைப்பு தொடர்பில் அர­சி­யல­மைப்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட குழுக்கள் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டங்கும் பரந்­து­பட்ட பல கார­ணிகள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்­றன. முக்­கிய அம்­சங்­க­ளாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டுதல் உள்­ளிட்ட கார­ணிகள் குறித்து இறுதி தீர்­மா­னங்கள் எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான வழி­ந­டத்தல் குழு­வினால் நிய­மிக்­கப்­பட்ட ஆறு உப குழுக்­களும் அறிக்­கை­களை வழங்­கி­யுள்­ளன. அவற்றின் பிர­காரம் நீங்கள் மேற்­கொண்­டுள்ள தீர்­மா­னங்கள் என்ன?
பதில்:- அறிக்கை வழங்­கிய உப குழுக்கள் ஆறுக்கும் தனிப்­பட்ட பகு­திகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. அது குறித்து அவர்கள் தந்த அறிக்­கை­யினை இறுதி தீர்­மா­ன­மா­கவும் கொள்ள முடி­யாது. ஒவ்­வொரு கார­ணங்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய மாற்று நட­வ­டிக்கைகள் குறித்தே அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் பாரா­ளு­மன்ற விவாதம் ஒன்றை நடத்­திய பின்பே இறுதி தீர்­மா­னத்­தினை எடுக்­க­வுள்ளோம்.

கேள்வி:- தற்­போது தந்­துள்ள அறிக்­கையில் குறை­பா­டுகள் உள்­ளதா? அது குறித்து மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பரிந்­து­ரை­களைக் கொண்­டி­ருக்­கின்­றதா?
பதில்:- உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் இறுதி தீர்­மானம் அல்ல. சில விட­யங்கள் குறித்து பல்­வேறு மாறு­பட்ட வடி­வங்­களில் விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதால் இது விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­பட வேண்­டிய அறிக்­கை­க­ளாக உள்­ளன.

கேள்வி:- அனைத்­துக்­கட்­சி­களும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­தற்­கான பணியில் பங்­கெ­டுத்­துள்ள நிலையில் பிர­தான செயற்­பா­டு­களை கொண்­டுள்ள வழி­ந­டத்தல் குழவில் அங்கம் வகிக்கும் சிலர் புதிய அர­சி­ய­ல­மைப்பு வேண்டாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். மறு­பு­றத்தில் 19திருத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் மேலும் திருத்­தங்­களைச் செய்து அதனை அமுல்­ப­டுத்­தலாம் என்றும் பரிந்­து­ரை­களை கூறு­கின்ற நிலையில் உங்கள் கட்சி என்ன நிலைப்­பாட்டில் உள்­ளது?
பதில்:- அர­சி­ய­ல­மைப்பு என்­பது ஒரு நாட்டின் சமூக, பொரு­ளா­தார நடை­மு­றை­க­ளுக்கு பாது­காப்­ப­ளிக்கும் மூல சாச­ன­மாகும். அதனால் தான் சமூக, பொரு­ளா­தார செயற்­பா­டுகள் மாற்றம் பெறும் போதுதான் அதற்­க­மை­வாக அர­சி­ய­ல­மைப்பும் மாற்றம் செய்­யப்­படும். 1949 சீன புரட்சியின் பின்னர் 1950 ஆம் ஆண்டில் புதிய கொள்­கை­களின் பிர­காரம் புதிய யாப்­பொன்று வகுக்­கப்­பட்­டது.
1917 ரஷ்ய பொரு­ளா­தா­ரத்­திற்கு பொருத்­த­மான அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­பட்­டது. 1959ஆம் ஆண்டில் கியூப புரட்­சியின் பின்பும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் செய்­யப்­பட்­டது. ஆகவே சமூக பொரு­ளா­தார மாற்­றங்­களின் சட்­ட­ரீ­தி­யி­லான பாது­காப்பு என்றே அர­சி­ய­ல­மைப்­பினைக் கரு­த­வேண்டும்.
எமது நாட்டில் உரு­வாகும் அர­சி­ய­ல­மைப்பும் செல்­வந்த பொரு­ளா­தார கொள்­கைக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். இலங்கை நாட்டின் அர­சிய­ல­மைப்பு செல்­வந்த வகுப்­புக்­களை பாது­காப்­ப­தாக இருக்­கின்­ற­போதும் அதில் சில மாற்­றங்­களை செய்­ய­வேண்டும் என்­பதை மையப்­ப­டுத்­தியே நாம் போராட்­டங்கள் செய்­து­வ­ரு­கின்றோம்.
அர­சி­யல­மைப்பு மாற்றம் குறித்து பார்க்­கின்ற போது 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு தற்­போது 28 வரு­டங்­கள பழ­மை­யா­ன­தா­கி­யுள்­ளது. இது­வ­ரையில் இந்த அர­சி­ய­ல­மைப்பு 19 முறை திருத்­தப்­பட்­டுள்­ளது.
அதில் 17 திருத்­தங்கள் அதி­கா­ரங்­களை தக்க வைத்­துக்­கொள்ளும் நோக்கில் செய்­யப்­பட்ட திருத்­தங்­க­ளா­கின்­றன. இரு தட­வைகள் மாத்­தி­ரமே ஜன­நா­ய­கத்­தினை தக்க வைத்­துக்­கொள்ளும் வகையில் திருத்­தங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 17,19 ஆவது திருத்­தங்­களே ஜன­நா­ய­கத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக செய்­ய­ப்பட்­ட­வை­யா­கின்­றன.
இவ்­வா­றான திருத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பா­னது திரிபு படுத்­தப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பா­கவே உள்­ளது. எனவே தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் சமூக, பொரு­ளா­தார கார­ணிகள் உள்­ள­டங்­க­ளான மாற்­றங்கள் அவ­சி­ய­மா­கின்­றன.

கேள்வி:- தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களின் பிர­காரம் உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் சமஷ்டி என்ற வார்த்தை பிர­யோ­கத்தை பயன்­ப­டுத்தி கட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்­கு­வதா? அல்­லது ஒற்­றை­யாட்சி என்ற வார்த்­தையை மாற்­றாது அதனை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கு­வதா என்­பது பாரிய பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அதி­காரப் பகிர்­வுக்­கட்­ட­மைப்பு, அதற்­கான வார்த்தைப் பிர­யோகம் தொடர்பில் ஜே.வி.பி எவ்­வா­றான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது ?
பதில்:- ஒற்­றை­யாட்சி முறைமை, சமஷ்டி முறைமை என்­பன ஒரு நாட்டின் தன்­மையை பொறுத்தே அமையும். அவ்­வா­றான எந்த முறை­யிலும் எமது நாட்டு மக்­களின் பிரச்­சினை தீர்ந்­து­வி­டாது. வடக்கில் வாழும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்­பினால் மாத்­திரம் தீர்வு கண்­டு­விட முடி­யாது. பொது­வாக எமது நாட்டில் சாதா­ரண மட்ட மக்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தீர்வு கிடைக்­காது.
உதா­ர­ண­மாக கூறு­வ­தாயின் சாதா­ரண மக்­க­ளுக்கு காணப்­படும் சுகா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு இல்லை. தமிழ்,சிங்­கள, முஸ்லிம் பேதங்கள் இன்றி வாழும் மீனவ குடும்­பங்­களின் வாழ்­வா­தார பிரச்­சி­னைக்கு அர­சி­ய­ல­மைப்­பினால் தீர்வு காண முடி­யாது.
எனவே அடி­மட்ட பொரு­ளா­தார நிலையில் வாழும் மக்­களை மேம்­ப­டுத்த சமூக, பொரு­ளா­தார மாற்று திட்­டங்கள் வேண்டும். ஆனால் சிங்­கள, முஸ்லிம் மக்கள் முகம்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள் போன்­றல்­லாது தமிழ் மக்கள் மாத்­திரம் முகம்­கொ­டுக்கும் நெருக்­க­டிகள் உள்­ளன.
அதில் முக்­கி­ய­மா­னது மொழிப்­பி­ரச்­சி­னை­யாகும். அதேபோல் கலா­சார சிக்­கல்­களும் உள்­ளன. ஆகவே அர­சி­ய­ல­மைப்பு எந்த இனத்­த­வ­ருக்கும் பாத­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­யக்­கூ­டாது. அதனால் மக்­களின் பொது பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் தீர்வு கிட்டும் என்று நாம் நினைக்­க­வில்லை.

கேள்வி:- தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் தமிழ் மக்கள் ஏழு தசாப்­தங்­க­ளாக முகங்­கொ­டுக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாயின் புதிய அர­சி­ய­லமைப்பின் ஊடா­கவே முடியும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ள­னரே?
பதில்:- வடக்கு மாகாண சபை உரு­வா­னது. அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் போது­மா­ன­தல்ல என்று அவர்கள் தர்க்­கிக்­கலாம். ஆனால் மத்­திய அர­சாங்­கத்தில் உள்ள அதி­கா­ரங்­களில் சில பகு­திகள் மாகாண சபை­க­ளுக்கு பகி­ரப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில், மாகாண சபை அமைக்­கப்­பட முன்­னரும் தமிழ் மக்கள் பிரச்­சினை தீர்ந்­து­வி­ட­வில்லை. அமைக்­கப்­பட்ட பின்­னரும் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்டு விடவில்லை என்பதே உண்­மை­யான நிலைப்­பா­டாகும்.
அதி­கா­ரத்­தினை தந்தால் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்று தர்க்­கிக்­கவும் முடியும். இருப்­பினும் அதி­கா­ரத்தை பகிர்­வ­தல்ல முக்­கிய பிரச்­சினை.
சமூக பொரு­ளா­தார சிக்­க­லுக்குள் அடி மட்­டத்தில் வாழும் தமிழ், சிங்கள், முஸ்லிம் மக்கள் உள்­ளனர். செல்­வந்­த­ர்களாக வாழும் தமிழ், சிங்கள் குழுக்­களும் உள்­ளன. அந்­தக்­கு­ழுக்­களே பிரச்­சி­னை­களை சிக்­கல்­களை உரு­வாக்­கி­யுள்­ளன.
இந்த விட­யத்தை சற்றே விரி­வாக கூறு­வ­தாயின், வடக்கு, கிழக்கில் தற்­போது யுத்தம் இல்லை. தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் பிரச்­சி­னைகள் இல்லை.
ஆனால் தமிழ், சிங்­கள, முஸ்லிம் மேல் வகுப்­பி­ன­ருக்கும் கீழ் வகுப்­பி­ன­ருக்கும் இடையில் பிரச்­சி­னைகள் உள்­ளன என்­பதே நிதர்­ச­ன­மாகும். ஆகவே, மேல் வகுப்­பி­ன­ரி­டத்­தி­லி­ருந்து கீழ் வகுப்­பி­ன­ருக்கு அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுக்கும் போராட்­டத்­தி­லேயே நாம் உள்ளோம்.
அவ்­வா­றி­ருக்­கையில் இந்த வகுப்­பு­வா­தத்தை தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கா­கவே மக்­களை தொடர்ந்தும் பிளவுபடுத்­து­வ­தற்கு வெகு­வான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. அதற்கு சில உதா­ர­ணங்­களை என்னால் கூற­மு­டியும்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அமைச்­ச­ரவையில் பார்க்­கின்ற போது சம்­பிக்க ரண­வக்க, விமல் வீர­வன்ச, தொண்­டமான், ரிஷாட், ஹக்கீம், டக்ளஸ் இருந்­தனர். இவர்கள் சக­லரும் ஒரு வகுப்­பாக இருந்து கடந்த அர­சாங்­கத்தின் மோச­டி­க­ளுக்கு துணை போனார்கள். 18ஆவது திருத்தத்­திற்கு கையு­யர்த்­தி­னார்கள். அவ்­வா­றா­ன­வர்­களே தற்­போது மக்­களை முரண்­படச் செய்­கின்­றனர்.
மற்­று­மொரு உதா­ர­ணத்தை பார்க்­கலாம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஜன­வரி 8ஆம் திகதி மாலை அதி­கார மாற்­றத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திக்க பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க அல­ரி­மா­ளி­கைக்க்கு சென்றார். அவர்­க­ளுக்கு இடையில் தரகர் வேலை பார்ப்­பவர் யாரென்று பார்த்தால் திரு­குமார் நடேசன். அவ்­வா­றாயின் அவர்­க­ளி­டையில் பிரி­வி­னைகள் இல்லை
மேல் வகுப்­பி­ன­ரி­டையே பிரி­வி­னைகள் இல்லை. ஆகவே தான் கீழ் வகுப்­பினர் அவர்­களின் வலைக்குள் சிக்­காது அனைத்­தினருக்கும் பிரி­வி­னைகள் அவ­சியம் இல்லை அனை­வரும் ஒன்­று­பட்டு வாழுங்கள் என்று அனைத்­தின மக்கள் மத்­தி­யிலும் நாம் கூறு­கின்றோம்.
தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் இந்த நாட்டின் இரண்டாம் தரப்பு என்று சிந்­திக்க இட­மில்­லாத வகையில் அவர்­களின் உரி­மைகள் பேணப்­பட வேண்டும். சக­லரும் இலங்­கையர் என்று பார்க்­கின்ற ஒரு அர­சி­யல­மைப்பு மாற்­றத்­திற்கு நாம் இணங்­கு­கின்றோம்.
அதனை விடுத்து அடி­மட்ட தமிழ்,சிங்­கள, முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­ளுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தீர்­வாக அமையும் என்ற நிலைப்­பாட்டில் நாம் இல்லை.

கேள்வி:- உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை ஒழித்து பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்­து­வதை ஆத­ரிக்­கின்­றீர்­களா?
பதில்:- உலகில் மக்கள், சமூ­க­மாக வாழ்­வ­தற்கு எத்­த­னித்த காலத்­தி­லி­ருந்து தனிப்­பட்ட தலைவர் ஒருவர் இருந்தார். அவரால் மக்­க­ளுக்­கு­ரிய பூமி, திரு­மணம் உள்­ளிட்ட முக்­கிய விட­யங்கள் குறித்தும் அவரே தீர்­மா­னிப்­ப­வ­ரா­கவும் இருந்தார்.
அவ்­வாறு இருந்த சமூகம் தான் தனிப்­பட்ட ஒரு­வ­ருக்கு இருந்த அதி­கா­ரத்­தினை மக்கள் பிர­தி­நி­திகள் பல­ருக்கும் பகிர்ந்து கொடுக்கும் ஒரு கட்­ட­மைப்­பினை உரு­வாக்கும் அள­வுக்கு பரி­ணாம வளர்ச்சி கண்­டி­ருக்­கின்­றது. அது சமூக வளர்ச்­சியில் ஒரு சிறப்­பாகும்.
அவ்­வா­றான முறை­மையை மாற்றி 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் மக்கள் பிர­தி­நி­தி­களின் சபை­யினை முழு­மை­யாக கைய­கப்­ப­டுத்­திக்­கொள்ளும் வகையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை கொண்­டு­வ­ரப்­பட்­டது.
சமூக பய­ணித்­த­மைக்கு முர­ணான ஒரு விட­ய­மா­கவே அச்­செ­யற்­பாடு அமைந்­தது. அவ்­வா­றில்­லாது பொதுக் கலந்­து­ரை­யா­டலின் பிர­காரம் சட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­மாயின் அது மிகவும் சிறந்­த­தொரு செயற்­பா­டாகும்.
அத­ன­டிப்­ப­டையில் நிறை­வேற்று அதி­கார முறை­மையை தவிர்த்து பாரா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரத்­தினை வழங்­கு­வது சிறந்த­தென நாம் கரு­து­கின்றோம்.

கேள்வி:- பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் போதும் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள பிர­த­மரை உரு­வாக்­குவ­தாக அமைந்­து­வி­டு­மல்­லவா?
பதில்:- எமது நாட்டின் ஆட்­சி­யா­ளர்கள் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் அதி­கா­ரங்­களை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொள்­ளவே முயற்­சிக்­கின்­றனர். அதனால் தான் தற்­போது உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் பிர­தமர் அதிக அதி­கா­ரங்­களை தமக்கு கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்கு மறை­மு­க­மாக முயற்­சிக்­கின்றார். மீண்டும் ஒரு­முறை பிர­த­ம­ராக வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அவர் உள்ளார். பிர­த­மரின் அந்த முயற்­சியை தோற்­க­டிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். அர­சி­ய­லமைப்பு சபையில் முன்­னெ­டுக்­கப்­படும் பேச்­சு­வார்த்­தை­களின் போது எமது நோக்­கத்­தினை மையப்­ப­டுத்­திய தலை­யீ­டு­களை செய்வோம்.

கேள்வி:- அவ்­வா­றாயின் மத்­தியில் குவிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்கள் அடி­மட்டம் வரையில் அல்­லது உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் வரையில் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­கின்ற போது எவ்­வாறு பகி­ரப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் மக்கள் விடு­தலை முன்­னணி உள்­ளது?
பதில்:- எமது கொள்­கையின் பிரகாரம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நாம் முன்­மொ­ழிந்த திட்­டத்தில் மக்கள் சபை ஒன்­றினை பரிந்­து­ரைத்­தி­ருந்தோம். அந்த மக்­கள் சபை இனம், மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அமை­யாது.
அந்த சபை­யா­னது தனி மனிதன் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகை­யி­லான ஒரு சபை­யாக அமைய வேண்டும். உதா­ர­ண­மாக மகா­வலி திட்டம் அமைக்­கப்­பட்ட போது மகா­வலி அதி­கார சபைக்கு சகல அதி­கா­ரங்­க­ளும் வழங்­கப்­பட்­டன. அது­போன்று யுத்­தத்தினால் பாதிக்­கப்­பட வடக்கு பகு­தி­க­ளுக்கும் முழு­மை­யான அவ­தானம் செலுத்தி அப்­ப­கு­தி­களை ஏனைய பகு­தி­க­ளுக்கு நிக­ரான பொரு­ளா­தார மட்­டத்திற்கு மேலு­யர்த்த வேண்டும். மலை­ய­கத்­திற்கும் இந்த விடயம் பொருந்தும்.
அவற்றை விசேட வல­யங்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்தி அதி­கார சபைகள் ஊடாக அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள வேண்டும். என்­பதே எமது கொள்­கையா­க­வுள்­ளது. ஆனால் இந்த தலை­வர்­க­ளி­டத்தில் அதனை எதிர்­பார்க்க முடி­யாது. இவர்கள் அதி­கா­ரங்­களை பகிர்ந்து மாகாண சபை­களை வலு­வாக்­கு­வதால் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும் என்று மட்­டுமே சிந்­திக்­கின்­றனர். அந்த நிலைப்­பாட்­டினை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள தயா­ரில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்­பில் ­மா­காண ஆளு­நர்­களின் அதி­கா­ரங்­களை குறைத்து அவர்­களை மத்­திய அர­சாங்­கத்தின் கௌரவ பிர­தி­நி­தி­க­ளாக மாத்­திரம் அமர்த்த வேண்டும் என்ற யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தல்­லவா?
பதில்:- இந்த விடயம் இன்­னமும் உத்­தேச மட்­டத்­தி­லேயே உள்­ளது. ஆனால் மாகாண சபை­க­ளுக்கு மேல­திக அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தாயின் ஆளு­நரின் தன்மை எவ்­வா­றா­னது, மாகாண சபைகள் இணை­வ­தற்கு இடம்­கொ­டுக்க வேண்­டுமா, அதிக அதி­கா­ரங்கள் நிறைந்த மாகாண சபைக்கும் மத்­திய அர­சுக்கும் உள்ள தொடர்­புகள் எவை என்ற விட­யங்கள் குறித்து தீர்க்­க­மாக ஆரா­யப்பட வேண்டும். இவை பார­தூ­ர­மான கார­ணிகள் என்றே நாம் கரு­து­கின்றோம். ஆகவே அர­சி­ய­ல­மைப்பின் மற்­றைய முக்­கிய விட­யங்­க­ளுடன் சேர்த்து இவற்­றையும் ஆராய வேண்டும்.

கேள்வி:- வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதி­ராக ஜே.வி.பியே வழக்கு தாக்கல் செயது அதனை தனித்­தனி மாகா­ணங்­க­ளாக மாற்­றி­யது. அவ்­வா­றி­ருக்­கையில் தமிழ் மக்­களின் அதி­க­ள­வான ஆணை பெற்ற கூட்­ட­மைப்பு தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வில் வடக்கு கிழக்கு இணைப்பு முக்­கி­ய­மென வலி­யு­றுத்தி வரு­கின்ற நலையில் அதற்கு நேர்­மா­றான நிலைப்­பாட்­டி­னை­யல்­லவா நீங்கள் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?
பதில்:- வடக்கு, கிழக்கு இணை­விற்கு என்ன காரணம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது என்று பார்க்­கையில் அந்த மாகாண சபைகள் இரண்டும் அருகில் அமைந்­தி­ருப்­பதா அல்­லது அபி­வி­ருத்தி மட்­டத்தில் வேறு­பாடு உள்­ள­மையா? இவை எதுமே அல்ல.
உண்­மை­யி­லேயே இன­வாதத்­தினை மையப்­ப­டுத்­திய கோரிக்கை என்றே கூற வேண்டும். மக்கள் பிரச்­சினைக்கு தீர்வு காண வேண்­டு­மாயின் அல­குகள் சிறி­தாக வேண்டும். அப்­போ­துதான் மக்­க­ளுடன் நெருக்­க­மாக இருந்து பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க முடியும். வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு தமிழ் மக்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர் என்று காரணம் கூறப்­ப­டு­கின்­றது.
அது உண்­மை­யல்ல. வடக்கு, கிழக்­கிற்கு வெளியி­லேயே தான் 51.8 வீத­மான தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். அதனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. ஏனைய மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு பிரச்­சினை இல்­லை­யெனக் கரு­த­மு­டி­யாது. அம்­மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து என்ன நிலைப்­பாடு என்­பது தொடர்­பா­கவும் கவனம் செலுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதை விடவும் கூட்­ட­மைப்பின் உள்ளே காலம் கால­மாக முன்­நி­றுத்­தப்­பட்டு வந்த எண்­ணக்­க­ரு­வே­யாகும். அவர்கள் அந்த எண்­ணக்­க­ரு­விற்குள் சிறை­பி­டிக்­கப்­பட்­டுள்­ளனர்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் மக்கள் விடு­தலை முன்­னணி தொடர்ந்தும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதி­ராக போர்க்­கொடி பிடித்­துக்­கொண்­டேதான் இருக்­குமா?
பதில்:- அர­சி­ய­ல­மைப்பு பாரா­ளு­மன்­றத்­திற்கு வரு­கின்ற போது தான் அது குறித்து தீர்­மா­னிக்க முடியும். ஆனால் புதிய அர­சி­ய­லமைப்பு மீதான வாக்­கெ­டுப்பின் வெற்றி ஜனா­தி­பதி தேர்­தலில் கிடைத்த வெற்றி போன்று அமைய வேண்டும் என்­ப­தில்லை.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­படும் என்ற நம்­பிக்­கையை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டி­ருக்­கின்­றதா?
பதில்:- நாட்டில் பரந்து வாழும் மக்­களின் அங்­கீ­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு கிடைக்­கப்­பெற வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் ஒரு புதிய குழப்பம் ஏற்­படும். மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு போன்ற கட்­சி­க­ளுக்கு அர­சி­ய­லமை­ப்பு குறித்து பேச முடி­யாது போய்­விடும். அதனால் அர­சி­ய­லமைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வது குறித்து ஆழ­மாக சிந்­திக்க வேண்டும்
1972 ஆம் ஆண்டு அர­சி­யல­மைப்பு மூன்­றி­லி­ரண்­டு பாரா­ளு­மன்ற பெரு­ம்பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­பட்­டது. 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு ஆறில் ஐந்து என்ற பாரா­ளுமன்ற பெரும்­பான்­மையை கொண்டு நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட்­டது.
வர்த்­த­மானி அறிவித்தல் ஒன்றை நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாத ஒப்­பந்தம் ஒன்றை முறை­யாக கைச்சாத்­திட முடி­யாத அர­சாங்­கத்­திடம் மக்கள் அர­சி­ய­லமைப்­பொன்­றினை எதிர்­பார்ப்­பது சற்று கடி­ன­மா­ன­தாகும்.

கேள்வி:- தேசிய அர­சாங்­கத்தின் வாக்­கு­று­தியின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் நிக­ழாது போவ­தற்கு சந்­தர்ப்­பங்கள் உள்­ள­னவா?
பதில்:- அர­சி­ய­ல­மைப்­பினை பார்க்­கிலும் பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதே எமது மிகப்­பெ­ரிய இலக்­காகும். அதற்கு தீர்வு காண முடி­யாத ஒரு அர­சாங்கம் எவ்­வாறு அர­சி­ய­லமைப்பு போன்ற கடி­ன­மான விட­யத்தில் தீர்வு காணும்.
தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை இந்த அர­சாங்கம் வழங்க முடியும் என நம்ப முடி­யுமா? இந்த எல்லா ஆட்­சி­யா­ளர்­களும் தமது பத­வியை பாது­காப்­ப­தற்கு இன­வாதத்­தினை தூண்­டி­யுள்­ளனர்.
யாழ்ப்­பாணம் நூல­கத்­தினை இவர்­களே தீயிட்டு கொளுத்­தி­னார்கள். 1983 ஆம் ஆண்டில் தமது அதி­கா­ரத்­திற்­காகவே கருப்பு ஜூலையை ஏற்­ப­டுத்­தி­னார்கள். தமது அதி­கா­ரத்­திற்­கான அடி­மட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த தலை­வர்­க­ளி­டத்தில் எவ்­வாறு நாம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை எதிர்­பார்ப்­பது.
1948 சுதந்­தி­ரத்தின் பின் பிர­தான கட்­சிகள் இரண்­டும் வீதி­ய­மைப்பு உள்­ளிட்ட விட­யங்­களில் திருத்தம் செய்­தாலும் நீதிக் கட்­டமைப்பு, பாது­காப்பு உள்­ளிட்ட விட­யங்­களில் சிறந்த மாற்­றங்கள் எவையும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அதற்கு பிர­தான கட்­சிகள் இரண்டின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கு முடி­யாது போனது. அவர்­களின் யுகம் முடிந்­து­விட்­டது. உலகில் ஒரு யுகம் முடி­கின்ற போது இவ்­வா­றுதான் திருட்­டுக்­களும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களும் இடம்­பெறும்.
ஆகவே பணிகள் கடி­ன­மாக இருப்­பினும் மக்­க­ளுக்­கான தீர்வு பெற்­று­கொள்­ளப்­ப­டத்தான் வேண்டும். எனவே தமிழ் மக்­க­ளுக்கும் இதற்­காக எம்­முடன் இணைந்து போரா­டு­வ­தற்கு முன்­வா­ருங்கள் என்று அழைப்பு விடுக்­கின்றோம்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வே­று­வது குறித்து நீங்கள் சந்தேகத்­துடன் இருக்­கின்­றீர்கள். அவ்­வா­றானால் வழி­ந­டத்தல் குழு, உப குழுக்கள் உள்­ளிட்டவற்றில் அங்­கத்­துவம் பெற்­றுள்ள உங்­க­ளுக்கும் கட்­சிக்கும் பொறுப்புக் கூறு­த­லிலி­ருந்து விலகி நிற்க முடி­யா­தல்­லவா?
பதில்:- நாம் முழு­மூச்­சுடன் முயற்­சிப்போம் எமது எல்­லைக்கு உட்­பட்டு தமிழ்,சிங்­கள, முஸ்லிம் மக்­களின் உரி­மை­களை பாது­காப்­பதற்­காக அழுத்தம் கொடுப்போம். அதில் மாற்­ற­மில்லை. எவ்­வா­றா­யினும் சிறந்த ஒரு மாற்­றத்­திற்கு வித்­திட வேண்டும் என்­பதே எமது இலக்­காகும். அதனை அடை­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.

கேள்வி:- புதிய அர­சி­ய­லமைப்பு அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா அமுல்­ப­டுத்­த­ப்ப­டாதா என்ற இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டுள்ள நிலையில் மக்கள் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு மக்கள் விடு­தலை முன்­னணி எவ்­வா­றான திட்­டத்­தினை கொண்­டுள்­ளது?
பதில்:- மக்கள் பிரச்­சினையை இன பாகு­பாட்டின் பிர­காரம் பார்க்­க­வில்லை பொது­வாக சமூக பொரு­ளா­தார கொள்­கையில் ஒரு சிறந்த மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அவ்வாறு இல்லாவிட்டாலும் யாராலும் தொழில் வாய்ப்புக்களை அடைய முடியாது.
கடந்த ஆட்சியில் அரசாங்க அலுவலகங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் அடைந்த பயன் எதுவும் இல்லை. நாடு கடனில் இறுகியுள்ளது. கடன் என்பது நாடு என்றும் நாட்டின் மீதுள்ள சுமையாகவே இருக்கும். தற்போது நாட்டில் மேல் வகுப்பு மக்களுக்கும் கீழ்வகுப்பு மக்களுக்கும் இடையில் நாட்டின வருமானம் பிரிந்து செல்வதில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை சரிபடுத்துவதே எமது நோக்கமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது. அதனால் ஆட்சி மாற்றம் மட்டுமின்றி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவுள்ள திட்டங்கள் முழுவதையும் மாற்றியமைக்க வேண்டும்.
அரசாங்கத்தில் உள்ள எந்த இனவாத கட்சிகளுக்கும் இடமளிக்காது மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை கையிலெடுத்தாலே பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எமக்கு வாக்களிப்பவர்கள் இனவாதிகள் அல்ல என்றால் ஆட்சியும் இனவாதம் களைந்ததாக இருக்கும். அதற்கு முன்னதாக நாட்டில் உள்ள சிக்கல்கள் அனைத்தையும் களைவதற்கு நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

virakesari.lk  17 01 2017

Published in Tamil
08 04 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)

( ஆர். ராம்)

தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்­ப­டு­கின்­றது. அதன் பிர­காரம் அதி­கா­ரங்கள் அனைத்தும் ஒரு இடத்­திலே குவிக்­கப்­பட்­டி­ருப்பவை அதா­வது ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) என்ற சொற்­பி­ர­யோ­கத்­திற்கு ஒவ்­வான சொல்­லா­கவே காணப்­ப­டு­கின்­றது.ஏக்­கிய ரஜய என்­பதன் அர்த்­தத்தின் பிர­காரம் அதனை பயன்­ப­டுத்­து­வதில் எமக்கு எதிர்ப்­பி­ருக்­க­மு­டி­யாது. ஆனால் தமிழில் ஒற்­றை­யாட்சி எனவும்இ ஆங்­கி­லத்தில் யுனிற்­றரி (unitary) எனவும் பயன்­ப­டுத்த முடி­யாது என்­பதே எமது நிலைப்­பாடு.இருப்­பினும் ஏக்­கிய ரஜய என்­பதன் உண்­மை­யான அர்த்­தத்­திற்கு அப்பால் 1972ஆம் ஆண்­டி­லி­ருந்து தற்­போது வரைக்கும் ரnவையசல ளவயவந என்­ப­தற்கு இணை­யாக அச்­சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதன் கார­ணத்தால் அச்­சொற்­ப­தத்தின் வரை­வி­லக்­க­ணமும் அதற்­க­ரு­கி­லேயே சொல்­லப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு.

அதா­வது ஏகிய ரஜய என்ற சொற்­பதத்தை பயன்­ப­டுத்­து­வ­தால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடி­யாத நாட்டை குறிப்­பதாக இருக்கும் என்­பது உறுப்­பு­ரையில் கூறப்­பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறு­வ­தாக அச்­சொற்­பதம் இருக்கக்கூடாது. ஆட்­சி­முறை என்­பது ஒற்­றை­யாட்சி என வரக்­கூ­டாது என்­பதே என்­பதே எமது நிலைப்­பாடு.ஆனால் சொற்­பி­ர­யோ­கத்தால் மட்டும் அதனை அடைந்­து­வி­ட­மு­டி­யாது. ஓஸ்­ரியா நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி என கூறப்­பட்­டி­ருந்­தாலும் அங்கு சமஷ்டி ஆட்­சியே நடை­பெ­று­கின்­றது. ஸ்பெயினில் ஒற்­றை­யாட்சி என எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் சமஷ்டி ஆட்­சி­மு­றையே நடை­பெ­று­கின்­றது.ஆகவே வெறு­மனே பெயர்ப் பல­கை­யைப்­போட்­டு­விட்டு திருப்தி அடைய முடி­யாது. உள்­ள­டக்கம் சரி­யாக அமை­ய­வேண்டும். அதற்­காக உப­யோ­கிக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்­களில் நாம் கவனம் செலுத்­தா­ம­லில்லை. விசே­ட­மாக உள்­ள­டக்­கப்­படும் சொற்­பி­ர­யோ­கங்கள் குறித்து நீதி­மன்­றங்கள் பொருள்­கோடல் செய்­யும்­போது ஒற்­றை­யாட்சி முறை என நியா­யா­திக்கம் செய்­யாத வகை­யி­லேயே அமை­ய­வேண்டும் என்­ப­திலும் கவனம் செலுத்­து­கின்றோம்.

கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்­வைத்து ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அச்­சொற்­ப­தத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் நேர­டி­யாக பயன்­ப­டுத்­து­மாறு அழுத்­த­ம­ளிக்­கின்­றதா?
பதில்:- சமஷ்டி என்ற சொற்­ப­தத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்­த­ம­ளிக்­க­வில்லை. நாம் தற்­போது எடுத்­துக்­கொண்டது திடீர் நிலைப்­பாடு அல்ல. பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவே நான் பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்­தி­ருக்­கின்றேன். யாழ்ப்­பா­ணத்தில் கஜேந்­தி­ர­கு­மா­ருடன் நடை­பெற்ற விவா­த­மொன்­றிலும் பெயர்ப்­ப­ல­கை­களால் மட்டும் நம்­பிக்கை வைக்­க­வில்லை. உள்­ள­டக்கம் சரி­யாக இருக்க வேண்டும் எனக் கூறி­யி­ருக்­கின்றேன்.
சமஷ்டி என்­ப­தில் இரண்டு முக்­கி­ய­மான அம்­சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்­பந்­த­மாக மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டால் அந்த விடயம் சம்­பந்­த­மாக மத்தி அதற்கு பின்னர் தலை­யி­டக்­கூ­டாது. அவ்­வாறு கொடுக்­கப்­பட்ட மாகா­ணத்­திற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மத்­தி தானா­கவே திரும்பி பெற்­றுக்­கொள்­ள­ாதவாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்­சங்­களும் காணப்­ப­டு­மாயின் அது சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்­கிய அம்­சங்­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­டு­வதுதான் எமது பிர­தான நோக்­க­மா­க­வுள்­ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையை மட்டும் எழுதி ஒட்­டப்­ப­ட­வேண் டும் என்­பது நோக்­க­மல்ல.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப்படும் பய­ணத்தில் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­குமா?
பதில்:- இந்தப் பய­ணத்தில் சாத்­தி­ய­மாகும். ஆனால் உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­காது. இந்த வரு­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் உட­ன­டி­யாக வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மா­காது. அதற்­கான சாத்­தியக் கூறு­களும் அரி­தா­கவே உள்­ளது என்­பது தான் உண்­மை­யான எனது பதி­லாகும்.
அதற்கு காரணம் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு அதற்கு எதி­ராக இருக்­கின்­றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்­பாடு தொடர்பில் நாம் சரி­யாக அணு­க­வேண்டும். அவ்­வாறு சரி­யாக அணுகும் பட்­சத்­தி­லேயே தான் சிறிது காலம் தள்­ளி­யே­னும் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மாகும்.
ஆகவே நாம் முஸ்­லிம்­களின் கருத்தை நிரா­க­ரித்து வடக்குஇ கிழக்கு இணைக்­கப்­ப­ட­வேண்டும் என முரண்டு பிடிப்­போ­மா­க­வி­ருந்தால் தமிழ்இ முஸ்லிம் உறவு மேலும் விரி­ச­ல­டைந்து விடும்.
போர்க்­கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்­கப்­பட்­ட­மையால் தான் தற்­போது வடக்குஇ கிழக்கு இணைப்பு உட­ன­டி­யாக சாத்­தி­ய­மா­கா­துள்­ளது. ஆகை­யி­னால் யாரையும் குறை கூறிக்­கொண்­டி­ருக்­காது அடுத்து எவ்­வாறு நக­ர­மு­டியும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும்.
வடக்குஇ கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். அவர்­க­ளு­டைய உத்­தி­யோகபூர்வ நிலைப்­பாடு என்­பதுஇ இணைப்­புக்கு எதி­ரா­னது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்­க­ளுக்கு காணப்­படும் பல­வி­த­மான பயங்கள்இ சந்­தே­கங்­களின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக இணங்க மறுக்­கின்­றார்கள்.
ஆகவே குறைந்த காலத்­தி­னுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான பொறி­மு­றையை வைத்­துக்­கொண்டு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். தமிழ்இ முஸ்லிம் உறவு பாதிக்­கப்­ப­டாத நிலை­யி­ருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது கூட ஒரு வரு­டத்­தினுள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே முஸ்­லிம்­களின் அங்­கீ­காரம் இல்­லாது அதனை சாத்­தி­யப்­ப­டுத்த முடி­யாது.
தமிழ்இ முஸ்லிம் உறவை சீர்­செய்யும் நோக்­கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதி­னொரு உறுப்­பி­னர்கள் இருந்­த­போதும் முத­ல­மைச்சர் பத­வியை விட்­டுக்­கொ­டுத்து ஒரு கூட்­டாட்­சியை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்­பிக்­கையை மீளப்­பெ­று­வ­தற்­கான சில வழி­மு­றைகள். ஆகவே இந்த அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டதும் வடக்குஇ கிழக்கு உட­ன­டி­யாக வந்­து­விடும் என்று பொய்­கூ­று­வ­தற்கு நான் விரும்­ப­வில்லை.


கேள்வி:- வடக்குஇ கிழக்கு இணைந்­தி­ருக்­கின்ற பட்­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு கரை­யோர நிர்­வாக அல­கொன்று உரு­வாக்­கப்­பட்டு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை தந்தை செல்வா உட்­பட அனைத்து தமிழ்த் தலை­வர்­க­ளும் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தார்கள். அந்த நிலைப்­பாட்­டி­லிந்து நீங்கள் விலகி நிற்­கின்­றீர்­களா?
பதில்:- நாங்கள் அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாற­வில்லை. முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளும் மாற­வில்லை. தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் உடன்­பா­டுகள் எட்­டப்­பட்­டன. அந்த உடன்­பா­டு­களை நாம் தற்­போதும் ஏற்­றுக்­கொள்­கின்­ற­தாக காணப்­ப­டு­கின்­றது.
இருப்­பினும் சிலர் தற்­போது இணைப்பு இல்­லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேச­வேண்டும் எனக் கரு­து­கின்­றார்கள். எவ்­வா­றா­யினும் வடக்குஇ கிழக்கு இணைக்­கப்­ப­டு­கின்­ற­போது தனி­யான முஸ்லிம் அலகு வழங்­கப்­ப­டு­வதை எதிர்க்­க­வில்லை. அதற்கு முழ­ுமை­யான இணக்கம் தெரி­விப்போம். இருப்­பினும் அதற்­கான உட­னடிச் சூழல் இல்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்­காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் ஒன்று காணப்­பட்­டது. தற்­போது உள்­ளகஇ சர்­வ­தேச அர­சி­யலில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அர­சாங்­கத்­துக்கும்இ கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டிப்­பேச்­சு­வார்­த­்தையில் மூன்றாம் தரப்பு மத்­தி­யஸ்தம் அவ­சி­யமா? தற்­போது பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதா?
பதில்:- தற்­போது அனைத்துக் கட்­சி­யி­னரும் ஒன்­றாக அமர்ந்து பேச்­சு­வார்த்­தை­களை வழி­ந­டத்தல் குழுவில் நடத்­து­கின்றோம். இந்த பேச்சுவார்த்­தைகள் மிகவும் பகி­ரங்­க­மாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.
சில சம­யங்­களில் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னர்­க­ளுடன் நாங்கள் பேச்சு நடத்­தி­யுள்ளோம். அவ்­வா­றான பேச்­சுக்கள் தான் இடம்­பெ­று­கின்­றன. அத­னை­வி­டுத்து அர­சாங்­கத்­துக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான நேர­டி­யான பேச்­சொன்று ஆரம்­பிக்­க­ப்ப­ட­வில்லை.
தற்­போ­தைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் அர­சாங்­கத்­திற்கும் பேச்­சு­வார்த்தை நடக்­கி­றது. அதில் மூன்­றா­வது தரப்பு இருக்­கின்­றது என்ற தேவை இல்­லாத நிலையில் தான் இருக்­கின்றோம். ஏனென்றால் நேர­டி­யா­கவே நாம் ஒரு­வ­ரோடு ஒருவர் பகி­ரங்­க­மாக பேசக்­கூ­டிய சூழல் இருக்­கின்­றது.
சர்­வ­தேச சமூ­கத்­திற்கு தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வா­றான விட­யங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்­பது நன்கு தெரிந்­த­வி­டயம். அதே­நேரம் நாம் சர்வ­தேச சமூகத்­துடன் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் அர­சாங்­கத்­து­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­திக்­கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.
ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர
சாங்கஇ கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு
இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.
(முற்றும்) virakesari'lk 09 01 2017

Published in Tamil