26 06 2017

மீண்டும் சர்வதேசத்தை நோக்கி....

கே. சஞ்சயன்

தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர்.ஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவுக்குப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது. போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், சுவீடனுக்கும் இலங்கைக்குமான இடைவெளி அதிகரித்தது. இப்போதைய நிலையில், இலங்கைக்கு பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில் சுவீடன் இல்லை என்பதே உண்மை.

கடந்த மாத இறுதியில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சுவீடன் தூதுவர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போதுதான், “தமிழ் மக்கள் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள் இனிமேலும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது” என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார். “வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; மீள்குடியமர்வு பூர்த்தியடையவில்லை; அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; இராணுவப் பிரசன்னம் குறையவில்லை; காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை; மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம், பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சுவீடன் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் பொறுமை தொடர்பாக இரா.சம்பந்தன், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வெளிப்படுத்திய மிகக் கடுமையான ஒரு கருத்தாக இதனைக் குறிப்பிடலாம்.இதற்கு முன்னர் வேறெந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை. சுவீடன் தூதுவருடனான சந்திப்பு நடந்த அன்று, அரசியலமைப்புத் திருத்தத்துக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்திலும், இரா.சம்பந்தன் காரசாரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஒற்றையாட்சி, கூட்டாட்சி போன்ற பதங்கள் தொடர்பாகவே அந்தக் கூட்டத்தில் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தீவிர கவனம் செலுத்தினாலும், அத்தகைய பதம் சேர்க்கப்படுவதை இரா.சம்பந்தன் எதிர்த்திருப்பதாகத் தெரிகிறது.

இதன்போது, இரா.சம்பந்தன் சூடாக வெளிப்படுத்திய கருத்துகளால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் பதில் கூற முடியாமல் திணறி நின்றதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அரசியலமைப்பு மாற்றம் இரா.சம்பந்தனுக்கு கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த ஆண்டு இறுதியிலேயே அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார். அதனால்தான் அவர், 2016 டிசெம்பருக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தார். அதற்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான, இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் கூட இன்னமும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை. தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கா சென்று விட்டதால், அவர் திரும்பும் வரையில், எந்த நகர்வும் இடம்பெறப் போவதில்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பது இழுபறிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

இது, இரா.சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்பது போன்று, கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றன.
இது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு சவாலாகவும் மாறியிருக்கிறது. இவையெல்லாம் இரா.சம்பந்தனுக்கான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடந்த மாதம், ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.
அப்போதும் கூட, “எதிர்பார்த்ததுபோல, அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவில்லை; அதற்கான பணிகள் இழுத்தடிக்கப்படுகின்றன” என்று இரா.சம்பந்தன் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு இந்தியப் பிரதமரும், “இலங்கை அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகிறது என்பதை இந்தியாவும் கவனித்து வருகிறது” என்று கூறியிருக்கிறார். அரசியலமைப்பு மாற்ற விடயத்திலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீளுகின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது கவனத்தைச் சர்வதேச சமூகத்தை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளது.

இந்தியப் பிரதமர் மற்றும் சுவீடன் தூதுவர் ஆகியோரிடம் இரா.சம்பந்தன் வெளிப்படுத்திய கருத்துகளின் உள்ளடக்கமானது, ‘அரசாங்கம் இழுத்தடிக்கிறது; தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்’ என்பதாகவே உள்ளது. அதனால்தான், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் எவ்வாறு அழுத்தம் கொடுக்கப் போகிறது- எதை வைத்து அதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, போர்க்குற்ற விவகாரங்களைப் பயன்படுத்தி ஜெனிவாவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஜிஎஸ்பி பிளஸ் போன்ற தடைகளைப் பயன்படுத்தியும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தமது இலக்குவரை, பணிய வைக்க சர்வதேச சமூகத்தினால் முடியவில்லை. அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக சர்வதேசம் திட்டமிட்டது. இப்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சமூகம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டது.

இப்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் கிடையாது, பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், இராஜதந்திர நெருக்கடிகள் இல்லை என்றே கூறலாம். பொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் மாத்திரமே, சர்வதேச சமூகத்தினால் காத்திரமான பங்காற்ற முடியும். அத்தகையதொரு சூழல் தற்போது இலங்கையில், இருப்பதாகத் தெரியவில்லை.
சர்வதேச சமூகத்துக்கு தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் பெரியது அல்ல. விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும்தான், சர்வதேசத்தினால் உற்று நோக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இல்லாத சூழலில், இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே சர்வதேச சமூகம் முடிவுகளை எடுக்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சினை, அதற்கான தீர்வு எல்லாமே சர்வதேசத்துக்கு இரண்டாம் பட்சம்தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து, தீர்வு ஒன்றை எட்டலாம் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை உடையத் தொடங்கியிருக்கிறது என்பதையே சம்பந்தனின் அண்மைய கருத்துகள் உணர்த்தியிருக்கின்றன. ஒரு வகையில் இது அவருக்கான நிர்ப்பந்தமும் கூட. காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் கூட்டமைப்புக்கான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டுமானால், அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி வருகிறது. தமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவு செய்யும் ஓர் அரசாங்கத்துக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்கலாம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் அரசாங்கத்துடன் அண்டியிருப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பு இப்போது உணரத் தவறினால், அது அவர்களின் அரசியல் தற்கொலையாகவே அமைந்து விடலாம்.அதனால்தான், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார் இரா.சம்பந்தன்.

இந்த விடயத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர நெருக்கடிகள் அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பி்ரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெளியிட்ட கருத்து அதைத்தான் வெளிப்படுத்துகிறது. ஆனாலும், அரசியல், பொருளாதார, இராஜதந்திர மட்டங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படாமல், கொழும்பின் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்வரும் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது.
tamilmirror.lk 04 06 2017

Published in Tamil
24 06 2017

அறிந்தும் அறியாமலும் - 6: ஓதுவது ஒழியேல்! 

சுப வீரபாண்டியன் 

உலகில் உள்ள எல்லாத் துறைகளையும், சென்ற பகுதியில் கூறப்பட்டுள்ள ஏழு தலைப்புகளின் கீழ் அடக்கிவிட இயலுமா என்று சிலர் கேட்டுள்ளனர். இயலும் என்றுதான் கருதுகின்றேன். விளையாட்டு, சமயம் ஆகியனவற்றிற்கு இடமில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். கண்டிப்பாக இடம் உண்டு. விளையாட்டுத் துறை, பண்பாடு என்னும் தலைப்பின் கீழும், சமயத் துறை, பண்பாடு, தத்துவம் ஆகிய தலைப்புகளின் கீழும் இடம்பெறக்கூடியன. அடங்காத துறைகள் இருப்பின், எட்டாவது பிரிவை நாம் உருவாக்கிக் கொள்ளலாம். அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், தொழில், பொருளாதாரம், சட்டம் ஆகியன அன்றாடத் தேவைகளாக இருப்பதால், எவரும் அவற்றை விலக்குவதில்லை. பாட நூல்களிலும் அவற்றுக்கு இடமுண்டு. வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நாம் அவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவம் ஆகியன இன்று மிகுதியாகப் படிக்கப் படுவதில்லை. ‘கலை, அறிவியல் கல்லூரி' என்று பெயர்ப்பலகை தொங்கும் பல தனியார், சுயநிதிக் கல்லூரிகளில், பெயர்ப்பலகைகளில் மட்டுமே ‘கலை' உள்ளது. உள்ளே இலக்கியம், வரலாறு, தத்துவம் முதலான பாடப்பிரிவுகள் இல்லவே இல்லை. அரசுக் கல்லூரிகளில்தாம் அவை காணப்படுகின்றன.

மாணவர்கள் கலை, இலக்கியப் பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகின்றது. அரசுக் கல்லூரிகளிலும் கூட, வேறு எந்தப் பிரிவிலும் இடம் கிடைக்காத மாணவர்களே வரலாறு, இலக்கியப் பிரிவுகளில் சேர்கின்றனர் என்பதும் உண்மைதான்.

ஏன் இந்த நிலை?

கல்விக்குரிய இரண்டு நோக்கங்களில், ஒன்று முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டதே இதற்கான காரணம். அறிவு வளர்ச்சி, தொழில் கற்றல் என இரு நோக்கங்கள் கல்விக்கு உண்டு. ஆனால், தொழில் படிப்பும், தொழில் (வேலை) பெறுவதற்கான படிப்பும் மட்டுமே கல்வி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அறிவு வளர்ச்சி என்னும் நோக்கம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. வரும் காலங்களில் அதற்கு இடமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான், "இலக்கியம் கற்பது பயனற்றது, அது புலவர்களின் வேலை, வேறு வேலை ஏதும் இல்லாதவர்கள் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கலாம்" என்பன போன்ற எண்ணங்கள் எழுந்து, வலுப்பெற்று, இளைஞர்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் படிந்து விட்டன. இந்நிலையில்

இது குறித்து இரண்டு கோணங்களில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. படித்து முடித்த பின்னும், அந்தப் படிப்புக்கு வேலை கிடைக்காது என்றால், அதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற வினாவில் உள்ள நியாயத்தை உணர வேண்டும். கலை சார்ந்த படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், அவ்வேலைகளுக்கு நல்ல ஊதியம் வழங்குவதும் அரசின் கடமைகளில் ஒன்றே ஆகும். ஆனால் அது உடனடியாக நடைபெறக்கூடியது அன்று. எனவே கல்லூரிகளில் கலைப்பிரிவுப் பாடங்களுக்கு மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் வரவில்லையே என்று கவலைப்பட்டுப் பயனில்லை.

எனினும் இது குறித்து ஆராயப்பட வேண்டிய இன்னொரு கோணம் உள்ளது. கல்வியின் முதல் நோக்கமாகிய அறிவு வளர்ச்சி குறித்து நாம் கவலைப்படவே வேண்டாமா என்பதுதான் இரண்டாவது கோணம். வாழ்க்கைக்குத் தொழிலும், வேலை வாய்ப்பும், பணம், பதவிகளும் கண்டிப்பான தேவைகளே. எனினும் இவை வாழ்க்கை வட்டத்திற்குள் அடங்கக்கூடிய ஒரு பகுதியே அல்லாமல், இவை மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது. இன்னும் பல முகங்களையும், பகுதிகளையும் கொண்டது வாழ்க்கை. அவை குறித்தெல்லாம் இலக்கிய நூல்கள் எடுத்துச் சொல்கின்றன. இலக்கியம் என்பது மன மகிழ்ச்சிக்காகவோ, தன் மொழித் திறனைக் காட்டுவதற்காகவோ புனையப்படும் சொற்கோலங்கள் இல்லை. அவை வாழ்வின் அனுபவப் பதிவுகள். நம் எதிர்காலத்திற்கான வழிகாட்டிகள். உலகில் மனிதர்கள் மட்டும் வாழவில்லை. செடி, கொடிகள், பறவைகள், விலங்கினங்கள் என எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றன. அவை அனைத்தும் கல்வி கற்காத காரணத்தால், அறிவற்றவை என்று நாம் அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவைகளுள், நம்மைப் போன்ற அறிவுடையனவும், நம்மை விஞ்சிய அறிவுடையனவும் உள்ளன.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி, வேடந்தாங்கல் வந்து சேரும் பறவைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியுமா? மிக நெடுந்தூரம் கடற்பரப்பின் மீதே அவை பறந்து வருகின்றன. ஓய்வெடுக்க இடையில் மரங்களோ, கட்டிடங்களோ இல்லை. இரவு பகலாய்ப் பறந்து வருகின்றன. அந்தத் துன்பத்தை முன்னுணர்ந்து, கடல்கடந்து பறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு தொடங்கி, கொழுப்புச் சத்துள்ள, புரதம் மிகுந்த உணவுகளை அவை உண்ணத் தொடங்கிவிடுமாம். பகலில் கதிர் ஒளியாலும், இரவில் நிலவொளியாலும் அவை வழிநடத்தப்படுகின்றன. சில வேளைகளில், மின்காந்தக் கோடுகளால் திசை உணர்ந்தும் அவை பறக்கும் தகையன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மிகச்சிறிய உருவம் கொண்ட எறும்புக்கும், மிகப்பெரிய உருவம் கொண்ட யானைக்கும், நாம் வியக்கத்தக்க அளவிலான மோப்பசக்தி உண்டு.

இவைகளையெல்லாம் அறிவுக்குறைவானவை என்று ஒதுக்கிவிட முடியுமா? ஆனாலும், மனிதர்களுக்கும், விலங்குகள், பறவைகளுக்கும் இடையில் ஒரு பெரிய வேற்றுமை உள்ளது. அந்த வேற்றுமையே அவற்றிலிருந்து நம்மை வேறுபடுத்தி உயர்த்தி வைத்துள்ளது. ‘வரலாற்றிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளல்' என்பதே அந்த மாபெரும் வேறுபாடு! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குருவி எப்படிக் கூடு கட்டியதோ, அப்படித்தான் இன்றும் கட்டுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புலி எப்படி உணவுண்டதோ, எதனை உணவாக உண்டதோ அதனைத்தான், அப்படித்தான் இன்றும் உண்ணுகின்றது.

ஆனால் மானுட வாழ்க்கையில்தான் எவ்வளவு மாற்றங்கள்! உணவில், உடையில், போக்குவரத்தில், தொலைத் தொடர்பில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்! அனைத்தும் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகத்தானே வந்தன, இங்கே இலக்கியத்திற்கு ஏது இடம் என்று கேட்டு, மனித குல வளர்ச்சியை மிக எளிமைப்படுத்திவிட முடியாது. ஒரு தலைமுறையின் அறிவையும், அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் இலக்கியத்திற்கும், மொழிக்கும் ஏராளமான பங்கு உண்டு. ஓர் இனம் தன் புன்னகை, கண்ணீர் எல்லாவற்றையும் எழுதப்படாத கதைப்பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, கூத்து என்ற பல்வகைகளில் பதிவு செய்யும். செவி வழிச் செய்தியாக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த வாய்மொழி இலக்கியங்கள் பரவும். தன் முன்னோர்கள் வென்றதும், வீழ்ந்ததும் எங்கே என்பதையும், எப்படி என்பதையும் அவைதாம் உணர்த்தும். காலஓட்டத்தில், ஓவியங்கள் பிறந்தன. அவையே எழுத்துகளாக உருமாறின. பதிவு என்பது மேலும் எளிதாயிற்று. அந்தப் பதிவுகள் மூலம், மனித இனம் தொடர்ந்து கற்றுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக வளர்ச்சியை நோக்கிய மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

எனவே எல்லாத் துறை அறிவும், ஓரளவிற்கேனும் நமக்குத் தேவை என்பது உறுதியாகின்றது. அதனைப் பெறுவதற்கு அகன்று செல்லும் படிப்பு நமக்குத் தேவையாகின்றது. மனித வாழ்வின் எல்லாப் பருவங்களிலும் படிப்பு தேவையாக உள்ளது. அது ஒரு தொடர் முயற்சி. பிறப்பில் தொடங்கி, இறப்பு வரை தொடரும் ஒரு தொடர் நிகழ்வு. ‘இளமையில் கல்' என்பதற்கு முதுமையில் கற்க வேண்டாம் என்று பொருளாகாது. கல்வியை இளமையில் தொடங்கு என்பதே அதன் உண்மைப் பொருள். தொடர்ந்தும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான்,
"ஓதுவது ஒழியேல்" "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா" -

ஆகிய தொடர்கள் நமக்கு உணர்த்துகின்றன. நேற்று உண்டோம் என்பதற்காக, இன்று உண்ணாமல் இருப்பதில்லை. சென்ற வாரம் முழுவதும் குளித்தோம் என்பதால், இந்தவாரம் முழுவதும் குளிக்க வேண்டாம் என்று பொருள் ஆகாது. உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்று கற்றல் என்பதும் வாழ்வின் ஒரு பகுதி! பிரிக்க முடியாத ஒரு பகுதி!

(மீண்டும் சந்திப்போம)  tamiloneindia.com 05 06 2014

Published in Tamil
19 06 2017

ஈழத் தமிழராக இனம் மாறிய யாழ்பாணத் தெலுங்கு, கன்னட குடியேறிகள்

யாழ்ப்பாண‌த்தில் குடியேறி, ஈழ‌த் த‌மிழ‌ராக‌ ஒன்று க‌ல‌ந்த‌ தெலுங்க‌ர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் ப‌ற்றிய‌ விப‌ர‌ம். ஈழ‌த்த‌மிழ் ச‌மூக‌ம் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இன‌த்தூய்மை பேணி வ‌ருவ‌தாக‌ நினைப்ப‌து அறியாமை.யாழ்பாணத்தில் தெலுங்கர்க‌ள், க‌ன்ன‌ட‌ர்க‌ள் குடியேறிய‌ இடங்க‌ளின் பெயர்கள், ஆந்திரா, க‌ர்நாட‌காவில் உள்ள‌ ஊர்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் ஒத்துப் போவ‌தை க‌வ‌னிக்க‌வும்.யாழ்ப்பாணத்தில் குடியேறிய‌ தெலுங்க‌ர்க‌ள், (க‌ன்ன‌ட‌ர்க‌ளும்) வேளாளர் பட்டத்தை ஏற்றன‌ர். ஆகையினால் இன்றைய‌ வெள்ளாள‌ சாதியின‌ர் “தூய‌ த‌மிழ‌ர்க‌ள் அல்ல‌” என்ப‌து குறிப்பிட‌த் த‌க்க‌து! (அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தீவிர‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளாக‌ இருப்ப‌தில் ஆச்ச‌ரிய‌ம் இல்லை.)

ஆந்திர தேசம்: 
1. கஞ்சாம் – கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
2. கதிரி – கதிரிப்பாய்.
3. நக்கன் தொட்டி – நக்கட்டி உடையாபிட்டி
4. வடுகு – வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
5. அந்திரன் – அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை)
6. வேங்கடம் – வேங்கடன் (சங்கானை).

கன்னட தேசம்: 
1. கன்னடி – மாவிட்டபுரம்
2. குலபாளையம் – குலனை (அராலி)
3. சாமண்டிமலை – சாமாண்டி (மாவிட்டபுரம்)
4. மாலூர் – மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்).
5. பச்சூர் – பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்).
6. மூடோடி – முட்டோடி (ஏழாலை).

துளுவம் (க‌ர்நாட‌கா மாநில‌ம்): 
1. துளு – அத்துளு (கரவெட்டி).
2. துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)

தமிழர் குடியேற்றம் தொண்டைமண்டலம், வட தமிழகம். தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்:

1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்).
2. கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்).
3. ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிலிப்பாய்)
4. காரைக்கால் – காரைதீவு. குதரைக்காடு (இணுவில்).
5. உடுப்பூர் – உடுப்பிட்டி
6. காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்).
7. சோழிங்கள் – சோழங்கள் (கரணவாய்)
8. தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை),
9. மயிலம் – மயிலங்காடு (ஏழாலை.)

(ஆதார‌ம்: யாழ்ப்பாணக் குடியேற்றம்) ilakkiyainfo.com 26 05 2017

Published in Tamil
17 06 2017

அறிந்தும் அறியாமலும் - 5: ஆழ்ந்தும் அகன்றும்...

- சுப வீரபாண்டியன்

1976 ஆம் ஆண்டில்தான், தமிழகத்திற்குள் முதன்முதலாகத் தொலைக்காட்சி வந்தது. அப்போது அரசின் தொலைக்காட்சி மட்டுமே ‘தூரதர்ஷன்' என்னும் சமற்கிருதப் பெயருடன் வந்து சேர்ந்தது. தனியார் தொலைக்காட்சிகள் வரிசையில், 1990களில் முதலில் அறிமுகமானது ‘சன் தொலைக்காட்சி'. கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஏராளமான தனியார் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. அன்றைக்குத் தொலைக்காட்சியை நாங்களெல்லாம், ஓர் அறிவியல் கருவியாய்ப் பார்க்கவில்லை. ஒரு பெரிய அதிசயமாகவே பார்த்தோம். வீட்டுக்குள்ளேயே திரைப்படமும், பாடல்காட்சிகளும் வரும் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. 1980 வரையில், ஒரு வீதிக்கு ஒன்று அல்லது இரண்டு வீடுகளில்தான் தொலைக்காட்சி இருக்கும். அந்த வீட்டின் வாசல், சன்னல் ஓரங்களில் வெள்ளி மற்றும் ஞாயிறு மாலைகளில் பெரும் கூட்டமே நிற்கும். வெள்ளி இரவு, ‘ஒலியும் ஒளியும்' என்ற பெயரில் அரை மணி நேரம், திரைப்படப் பாடல் காட்சிகள் இடம் பெறும். ஒவ்வொரு ஞாயிறு மாலையும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஒளிபரப்புவார்கள். இரண்டு நிகழ்வுகளையும் காணப் பேராவல் கொண்டவர்களாக அன்று மக்கள் இருந்தனர்.

அந்தச் சூழலில் அனைவரும் எண்ணியதெல்லாம், இனிமேல் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான். வீட்டிற்குள்ளேயே திரைப்படங்கள் வந்தபின், திரையரங்குகளுக்கு இனி யார் செல்வார்கள் என்றுதான் அன்று கருதப்பட்டது. ஆனால், தொலைக்காட்சி, திரையரங்குகளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக, வேறு இரண்டு தளங்களில் குறிக்கத்தக்க பாதிப்புகளை உருவாக்கிவிட்டது. ஒரு புறம், நாவல், கவிதை போன்ற இலக்கியப் படிப்புகளைத் தொலைக்காட்சி தகர்த்தது. மறுபுறம், அது மாலை நேர விளையாட்டைத் திருடிக் கொண்டது. வியர்க்க விறுவிறுக்க விளையாடி மகிழ்ந்து, பிறகு அன்று ஆடிய ஆட்டம் பற்றியே நண்பர்களுடன் பேசிச் சிரித்துக் களித்த பொழுதுகள் காணாமல் போயின. தொலைக்காட்சிகள் நல்லன பலவற்றையும் கொண்டு வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. உடனுக்குடன் உள்ளூர் முதல் உலகம் வரையிலான செய்திகள், விண்வெளியில், காடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள், அரசியல் விவாதங்கள், மகிழ்வில் ஆழ்த்தும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று நமக்குப் பல புதிய வரவுகள் கிடைக்கவே செய்தன. எனினும் பொது நூல்களைப் படிக்கும் பழக்கம் குறைந்ததற்கு அது ஒரு காரணமாயிற்று. அவ்வாறே, விளையாடிக் கொண்டிருந்தவர்களை, விளையாட்டுப் பார்க்கின்றவர்களாக ஆக்கிவிட்டது.

1995ஆம் ஆண்டிற்குப் பிறகு, மெல்ல மெல்லத் தலைகாட்டத் தொடங்கி, 2000, 2001க்குப் பிறகு எங்கும் விரிந்தது இன்னொரு திரை. அது நம் கைபேசியின் திரை. அப்போது அது எண்களைக் காட்டும் திரையாக மட்டுமே இருந்தது. இன்றோ, அனைத்தையும் உள்ளடக்கிய திரையாக மாறிவிட்டது. நம் வாழ்வின் போக்கில் இன்னொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரை கணிப்பொறித் திரை. இதுவே இன்று உலகை ஆள்கிறது என்று கூறலாம். வெள்ளித்திரை, சின்னத்திரை, கைபேசித் திரை என எல்லாத் திரைகளும், கணிப்பொறித் திரைக்குள் இன்று அடக்கம். இந்த நான்கு திரைகளுக்குள் இன்றைய உலகே அடக்கம் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது.

தொலைக்காட்சி என்பது, ஒரு கட்டம் வரையில், வெறும் பொழுது போக்குக் கருவியாக இருந்தது. பிறகு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்றாகிவிட்டது. அதற்கடுத்துப் பல வீடுகளில், குடும்பத் தலைவராகவே இடம்பிடித்துவிட்டது. ஆம், என்ன உண்ண வேண்டும், எப்படி உடுத்த வேண்டும், எந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என எல்லா அறிவுரைகளையும் வழங்குகின்ற நெறியாளராக, குடும்பத் தலைவராகவே பல வீடுகளில் ஆட்சி செலுத்துகிறது. இனிமேல் இத்திரைகளை விட்டு நம்மால் விலக முடியாது. இவை உலகின் ஒழுங்கையே மாற்றிப் போட்டு விட்டன. அரசியல், இலக்கியம், கலை, அறிவியல் அனைத்தும் இவற்றின் கட்டுப்பாட்டில்தான் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு விதிவிலக்கே இல்லை. விதிவிலக்காக வாழ நினைக்கின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை.

சரி, இதற்கும், படிப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றும். இருக்கிறது. படிப்பதை விட, பார்ப்பது எளிது. இந்தத் திரைகள், பார்க்கும் பழக்கத்தை மிகுதியாக்கிவிட்டமையால், படிக்கும் பழக்கம் தானாகக் குறைந்து போகின்றது. மூளை எப்போதும் செய்வதற்கு எளிமையான செயல்களையே விரும்பும் என்பதை மறந்துவிடக் கூடாது. ‘படிப்பதைக் குறை, பார்ப்பதை கூட்டு' என்கிறது மூளை. நாம் அதன் வயப்பட்டு விடாமல், அதனை நம் வயப்படுத்த வேண்டிய தேவையை உணர வேண்டும். குறைந்தது, திரைகளிலாவது நாம் படிக்க வேண்டும். அப்பழக்கம் எளிதாக உள்ளது என்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். புத்தகங்களையோ, செய்தித் தாள்களையோ விரித்துப் படிப்பதை விட, கணிப்பொறித் திரையில் படிப்பது எளிதாக உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆனால் 60 வயதைக் கடந்த என் தலைமுறையினருக்கு, அச்சு ஊடகத்திற்கு (Print media) இணையாக, மின்னணு ஊடகத்தைக் (Electronic media) கருத முடியவில்லை. திரைக்கு முன்னால் அமர்ந்து மணிக்கணக்காகப் படிக்க முடியவில்லை. அதிலும், கனமான நூல்களைப் படிப்பதற்கு & நெடுநேரம் படிப்பதற்கு & திரை வசதியானதாகப் படவில்லை. இவையெல்லாம் பழக்கம் காரணமாக ஏற்படும் இயல்புகளே என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். எனவே, எந்த வழியில் படிப்பது என்பதில், நாம் கூடுதல் விவாதம் செய்ய வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. படிக்கும் முறையையும், படிக்கும் நேரத்தையும் காட்டிலும், படிப்பில் பதியும் நம் கவனமே இன்றியமையாதது. எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள ஒரு நண்பர், எழுதுவதைவிட, தட்டச்சு செய்வதுதான் எளிதாக உள்ளது என்றும், படைப்பிலக்கியங்களைக் கூட, மனமொன்றி நேர்த்தியாகத் தட்டச்சு செய்ய முடியும் என்றும் எழுதியுள்ளார். அவருடைய அனுபவத்தையும், கூற்றையும் மதித்து ஏற்றுக்கொள்வதுதான் சரி என்று நினைக்கிறேன். இங்கும் கூட, எந்த முறையில் எழுதுவது என்பதைவிட, எழுதுவது என்பதே முக்கியமானதாக உள்ளது.

அடுத்த கட்டமாக, பொதுவான நூல்களைப் படி, படி என்கிறீர்களே, எந்தத் துறையில், எந்த நூலைப் படிப்பது என்று இனைஞர்கள் சிலர் வினா எழுப்பி உள்ளனர். கடல்போல் விரிந்திருக்கும் உலக அறிவில் எதனைக் கொள்வது, எதனை விடுவது என்ற வினா சரியானதுதான்! உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவரே, ‘கடற்கரையில் வெறும் சிப்பிகளைத்தான் நான் சேகரித்துக் கொண்டுள்ளேன். எதிரில் ஒரு கடலே உள்ளது' என்று சொன்னபிறகு, நாமெல்லாம் எம்மாத்திரம்? உலக அறிவு அனைத்தையும் எவராலும் பெற்றுவிட முடியாது. ஒரு துளி அறிவைப் பெறவே, நம் வாழ்நாள் போதுமானதாக இல்லை. அதிலும் அந்தத் துளி எது என்று கண்டுகொள்வதற்கே நமக்குப் பலகாலம் ஆகிவிடுகின்றது. எவ்வாறாயினும் ஏதேனும் ஒரு துறையில், ஒரு துளியை அறிந்துகொள்ள நாம் முயல்கிறோம். அந்தத் துறையில் ஆழ்ந்தும், பிற துறைகளில் அகன்றும் படிப்பதே பொதுவான கல்வி முறை. அகன்ற படிப்புக்கு உரிய பல்வேறு துறைகளை, கீழ்வரும் ஏழு பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறேன்.

  • 1. வரலாறு, அரசியல்               2. கலை, இலக்கியம், பண்பாடு 
  • 3. அறிவியல், தொழில்நுட்பம் 4. தத்துவம்
  • 5. தொழில், வணிகம்               6. பொருளாதாரம்
  • 7. சட்டம் மேற்காணும்

ஏழு துறைகளுள், கண்டிப்பாக ஒன்று நமக்குரியதாக அல்லது நாம் ஈடுபட்டுள்ளதாக இருக்கும். அத்துறையில், ஆழ்ந்து கற்க வேண்டிய தேவை உள்ளது. அதனை இன்றைய இளைஞர்கள் செம்மையாகவே செய்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். தனக்கு நேரடியாகத் தொடர்பில்லாத, ஏனைய 6 துறைகளிலும் கூட நமக்குக் குறைந்தபட்ச அறிவு இருந்தாக வேண்டும். அதனை எப்படிப் பெறுவது? 

( மீண்டும் சந்திப்போம்) tamiloneindia.com 29 05 2014

Published in Tamil
12 06 2017

யாழ்ப்பாணக் குடியேற்றம் 1

யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது
யாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது

 6. மலையாள அரசு

மலையாளக் குடியேற்றத்தின் முன்னோடிகளாக விளங்கிய முக்குவர்கள் நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, வட்டுக்கோட்டை, பொன்னாலை, கீரிமலை, மயிலிட்டி முதலிய இடங்கனளிற் குடியேறித் தமது திறமையாலும், விடாமுயற்சியாலும் முன்னேறி நெடுந்தீவில் ( யாழ் - வை- மாலை, பக் 10) வெடியரசன் தலைமையில் ஒரு அரசியற் பீடத்தை அமைத்தனர், வெடியரசன் குறகிய காலத்திற்குள் தரைப்படை, கடற்படை முதலிய படைகளுடன் சிறந்த அரசனாக விளங்கினான். சேரி அரசன் அவன் வலிமையைக் கண்டு பொறாமை அடைந்து அவனை அடக்கக் கருதி மீகாமன் தலைமையில் ஓர் கடற்படையை அனுப்பி அவனோடு போர்புரிந்து அவனைத் தோல்வியுறச் செய்தனன். தோல்வியுற்ற முக்குவர்களில் அநேனர் மட்டக்களப்புக்குச் சென்று பாணகை, வலையிறவு முதலிய இடங்களிற் குடியேறினர். இச்சரிதத்தைக் கடலோட்டு, வெடியரசன் சரித்திரம் முதவலிய நூல்களால் அறியலாம். “மண்டு மண்டடா மட்டக்களப்படா” என்ற பாரம்பரியக் கூற்றும் இவ்வுண்மையை நன்கு புலப்படுத்தும். தேசாதிபதி றிக் லொப்வான் கூன்ஸ் யாழ்ப்பாண முக்குவருக்கும், மட்டக்களப்பு முக்குவருக்குமிடையிலுள்ள ஒற்றுமையை எடுத்துக் கூறியுள்ளார்.

7. மலபார் மொழியும் மக்களும்
மலபார் என்னும் சொல்லை முதலில் உபயோகித்தவர் அப்பரணி (யுனனநசயni) என்னும் அரேபியராவர். (2) பின்னர் போத்துக்கேயரும் அச்சொல்லை உபயோகித்தனர். அம்பலக் காட்ழல் முதல்முதல் கி. புp. 1577இல் அச்சிட்ட தமிழ்ப் நூல் மலவார் என்று கூறப்பட்டது. மலையாளம் ஒரு தனிமொழியாக கி.பி. 11ம் நூற்றாண்டில் மாறியபோது மலவார் என்பது மலையாளமாக மாறியது. இலங்கையை ஆங்கிலஅரசுக்குக்கீழ் கொண்டுவந்த கீளெக்கோன் (1), இலங்கைத் தேசாதிபதி சேர் றொஙேபற் பிறவுணிங் (2) சேர் எமேசன் ரெனென்ற் (3) என்போரும் யாழ்ப்பாணத் தமிழர்களை “மலபார்கள்” என்று கூறியிருக்கின்றனர்.

மலையாளம் தனிமொழியாக வருதற்குரிய காரணத்தை டாக்டர் இராசாணிக்கனார் பின்வருமாறு கூறுகின்றார். “தமிழ்ப்மொழி” கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துக்களின் வன்மையாலும், நம் பூதிரிகளின் செல்வாக்காலும், பௌத்த சமணப் பிரசாரம் வடமொழி கலந்த மொழியிற் செய்யப்பட்ழடமையாலும் கொடுந்தமிழாக மாறிப் பிற்காலத்தில் தனிமொழி மாறியது”

மக்களுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சைஸ் கிவித் என்பவர் பின்வருமாறு விளக்கியுள்ளார். “ கிறீஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீரியர், அபிசீனியர், பபிலோனியர், பாரசீகர் முதலிய மேனாட்டவர் வந்து மக்களிடையே கலந்துகொண்டதனால் சேரநாட்டவர்கள் மொழியும், நடையும், உடற்கூறும் திரிந்து தமிழ்ப் நாட்டின் கூறு என்ற குறிப்பே இல்லாதவாறு தோன்றிவிட்டது. இவ்வித மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் தமிழ்ப் மக்கள் ஒல்லாந்த தேசாதிபதி கோணிலிஸ் யோன் சிம்மன்ஸ் என்பவது தேசவழமைச் சட்டங்களைத் தொகுத்து “மலபார் தேசவழமைச் சட்டம் “ என்னும்; பெயரோடு கி.பி. 1707இல் வெளியிட்டபோது மலபார் என்று கூறப்பட்டதை, அச்சட்டத்தைச் சரிபார்த்துக் கைச்சாத்திட்ட பன்னிரண்டு முதலிமார் தானும் மறுக்கவில்லை, “மலபார்” என்று தமிழ் மக்களை அழைப்பதை முதல் முதல் மறுத்தவர் சேர். பொன். இராமனாதனவர்கள். ஆவர் சட்ட அதிகாரியாய் இருந்தபோது “மலபார்’ என்ற சொல்லை அச்சட்ட முகவரியிலிருந்து நீக்கிவிட்டார்;. (1) . டாக்டர் சிவரத்தினம் என்பவர் தமது இலங்கைச் சரித்திரத்தில் “மலபார்” என்னும் சொல் தமிழ்ப்நாட்டின் சகல பகுதிகளில் வசிக்கும் மக்களைக் குறிக்கும் என்று கூறியது பொருத்தமற்றது.

8. தமிழர் குடியேற்றம்
யாழ்ப்பாணம் இந்தியாவிலிருந்து 36 மைல் தூரத்திலிருந்தும் தமிழ் மக்கள் இங்கு முறையாகக் குடியேறவில்லை. இதற்குக் காரணம் ஆரியர் இலங்கையை இராக்கதபூமி என்று இடைவிடாது செய்த தீவிர பிரசாரமாகும். அவர்கள் இலங்கையின் வடபகுதியில் வசிக்கும் நாகர்களளைப் பாம்புகள் என்றும், தென்னிலங்கையில் வசிக்கும் இயக்கர்களை முனிவர்களை விழுங்கும் பேய்கள் என்றும் வருணித்தனர். கி.பி. 5ம் நூற்றாண்டில் இங்குவந்த சீன யாத்திரிகனாகிய பாகியன். (குயர்யைn) என்பவனும் அவ்வாறே கூறினான். யோன் றெசில்டாரும் அதே கருத்தை வெளியிட்டனர். (1). சிங்கள சரித்திர நூலாகிய தீபவம்சமும் அதே கருத்தை வெளியிட்டது. (2). வுpஜயன் காலத்தில் இந்திய மக்களை இங்கு குடியேற வரும்படி கேட்டகொழுது “கன்னியாகுமரி தொடக்கம் இமயம் பரியந்தம் இருந்த அனைவரும் இராக்கத நாடாகிய இலங்கைக்கு வரமுடியாது” என்று கூறி மறுத்தனர்;. இக்காலத்திலும் இலங்கைக்கு வரப்பயப்படுகிறவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

துமிழ்ப் மக்கள் மலையாள மக்களைப்போற் சங்கடப்படவில்லை. சோழ பாண்டிய அரசர்கள் செங்கோல் செலுத்தித் தமது நாடுகளைச் சிறப்புற ஆண்டனர். தொண்டைநாடு சான்றோருடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டிநாடு முத்துடைத்து என்னும் வாக்கியங்களால் அவற்றின் சிறப்பு நன்கு புலனாகும். முத்துக்கள் நிறைய இருந்தாலும் உலகத்தினராற் போற்றப்படும் இரத்தினம் இல்லாதகுறை தமிழ்ப் நாட்டிற்கு உண்டு. இரத்தினங்கள் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடம் இரத்தினதீபம் என்றழைக்கப்படும் இலங்கையே. ஊலக வியாபாரப் பொருள்களாகிய கறுவா, இஞ்சி, மிளகு முதலிய பொருள்களும் பெருமளவிற் கிடைக்கக்கூடிய இடமும் இவ்விலங்கையே. இத்தகைய பெருமை வாய்ந்த தீவை, எவ்விதத்திலும் கைப்பற்ற வேண்டும் என்னும் பேராசையால் தூண்டப்பெற்ற சோழபாண்டிய மன்னரும் பிறரும் கி.மு. 117 தொடக்கம் கி.பி. 1256ஆம் ஆண்டு வரையும் இடைவிடாது பலமுறை படையெடுத்தனர். அப்படையெடுப்புக்களில் அடைந்த வெற்றிகளும், தோல்விகனும் பலவாகும். தோல்வியடைந்தபோது தப்பி ஓடினவர்களும், சம்பளம் கொடுபட்hததனால் படையைவிட்டு விலகினவருமாகிய பல்லாயிரம் படைவீரர் அமைதியான சுதந்திர வாழ்வுக்கு உகந்த இடமாகிய யாழ்ப்பாணம் வந்து குடியேறினர்.

தமிழ்ப்நாட்டுச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
தமிழ் நாட்டிலுள்ள முக்கியம் வாய்ந்த நாற்பத்தெட்டுச் சாதிகளுள் முப்பத்து நான்கு சாதிகளைச் சார்ந்த படைவீரர்கள் யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் குடியயேறினார்கள் என்று தோம்புகளைக் கொண்டு ஊகித்து அறியக்கூடியதாயிருக்கிறது.
சாதிகளும் குடியேறிய இடங்களும்
அம்பட்டன் வளவு (மல்லாகம்) (2) ஆண்டி – ஆண்டி சீமா (ஆவாரங்கால்) (3) இடையன் - இடையன் சீமா (சிறுப்பிட்டி) (4) ராயார்- சேனாதிராயர் வளவு (சுழிபுரம்), (5) கரையான் - கரையான் தோட்டம் (நவாலி), (6)கணக்கன் புலம் (மானிப்பாய்). (7) ஒட்டன்கட்டு (கந்தரோடை). (8) கள்ளன் புலம் (இணுவில்). (9) கம்பன் சீமா – (சிறுப்பிட்டி, தொல்புரம்), (10) சுன்னான் பிட்டி (அராலி), (11) குசவன் கிளனை (கோப்பாய்), (12) குறவன் சுலட்டி (சுன்னாகம்), (13) கைக்கோளன் - கைக்குளப்பை (தெல்லிப்பழை),(14). ஊடையான் - வயல் (மண்டைதீவு), (15) சக்கிலியன் - சக்கிலியாவத்தை (சிறுப்பிட்டி). (16) சாலியன் கொட்டி (இருபாலை). (17) சிவியான் பிட்டி (வரணி, சிலியாதெரு). (18) சாண்டான்காடு (சரவணை, சண்டிருப்பாய்). (19) செட்டியா தோட்டம் (புங்குடு தீவு) (20) நாடார் – தில்லைநாடார் வளவு (நாவற்குழி). (21) படையாச்சி – படையாச்சி தேனி (சண்ழருப்பாய்). 22)பள்ளன் - பள்ளன் சீமா (பெரியவிளான்). (23) பறையன் - பறையன் தாழ்வு (தங்கோடை). (24) மாப்பாணன் தூ (புலொலி). (25) பிராமணன் சீமா (இருபாலை). (26) வேடுவன் குளம் (நவாலி. (27) வன்னியன் ஒல்லை (அளவெட்டி). (28) மறவன் புலம் (29) வண்ணான் தோட்டம் (நாவற்குழி). (30) செம்மான் கண்டு (தொல்புரம்). (31) திமிலன் காடு (அராலி). (32) துரம்பன் - துரம்பிச்சி ஒல்லை (சரவணை) (33) தச்சன் தோப்பு (கரவெட்டி). (34) கொல்லன்கலட்டி (தெல்லிப்பழை).

தொண்டநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்.
1. கச்சி – கச்சினாவடலி (சுன்னாகம்). (2) கம்பாநதி –கம்பாமூலை, கம்பாக்கடவை (மல்லாகம்). (3) ஆலங்காடு – ஆலங்குழாய் (சண்டிருப்பாய்) (4) காரைக்கால் - காரைதீவு. குதரைக்காடு (இணுவில்). (5) உடுப்பூர் – உடுப்பிட்டி (6) காஞ்சி – காஞ்சிக்கோட்டம் (மானிப்பாய்). (7) சோழிங்கள் - சோழங்கள் (கரணவாய்) (8) தொண்டை – தொண்டைமானாறு, தொண்டைமான் தோட்டம் (வட்டுக்கோட்டை), (9) மயிலம் - மயிலங்காடு (ஏழாலை.)

சோழநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றம்.
1. கண்டி – பொலிகண்டி (2) ஆவடையார் கோயில் - ஆவடையார் பொக்கட்டி (3) கோட்டை நகர் – கோட்டைக்காடு (4) குடந்தை – குடந்தனை (5) குமாரபுரம் - குமாரசிட்டி (தம்பாலை) (6) கோயில் - கோயிலாக் கண்டி, கோயிற்கடலை. (7) தாழையூத்து – தாழையடி (8) தில்லை – தில்லையிட்டி (சுன்னாகம்) (9) துவ்வூர் – தூ (வடமராட்சி). (10) தோப்பூர் (அச்சுவெலி, தோப்புவளவு (சுன்னாகம்), (11) நயினாகரம் - நயினாதீவு. (12) நார்த்தாமலை – நார்த்தாவளை (13) நாவல் - நாவற்குழி (14) நல்லூர் – நல்லூர் (15) வயலூர் _ வலலூர் (அரியாலை, கோப்பாய்). (16) கோம்பை – கோம்பையன்திடல் (வண்ணார்பண்ணை)

பாண்டிநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. கோம்பி – கோம்பிசிட்டி (வேலணை). (2) சாத்தான் - சாத்தான்குளம் (தங்கோடை) , சாத்தனாவத்தை (தெல்லிப்பழை). (3) சுழியல் - சுழிபுரம் (4) தம்பன் வயல். (5) நீராவி – நீராவியடி (வண்ணார்பண்ணை. (6) நெல்வேலி – கொக்குவில். துpரு நெல்வேலி.

கொங்குநாட்டு ஊர்ப்பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. உடுமலைப்பேட்டை – உடுமலாவத்தை (2) காரமடை – காரமட்டை (நெடுந்தீவு) (3) கல்லார் (நீலகிரி) – கல்லாரை (மல்லாகம்). (4) கொங்குநாடு –கொங்காலோடை (ஆவரங்கால்) (5) சிங்க நல்லூர் – சிங்காவத்தை (தெல்லிப்பழை). (7) மானா – மானாவத்தை (மானாமுதலி).

9 பிறநாட்டுக் குடியேற்றம்
ஆந்திர தேசம் : கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்). (2) கதிரி – கதிரிப்பாய். (3) நக்கன் தொட்டி – நக்கட்டி உடையாபிட்டி (4) வடுகு – வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை) (5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் - வேங்கடன் (சங்கானை).
கன்னடதேசம் : (1)கன்னடி – மாவிட்டபுரம் (2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை – சாமாண்டி (மாவிட்டபுரம்) (4) மாலூர் – மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் – பச்சந்தை (கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி – முட்டோடி (ஏழாலை).
துளுவம் : (1) துளு – அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)
கலிங்கம் : (1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.)
ஒரியா : ஒரியாத்திடல் வேலணை).
சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்).
முகமதியர்: (1) உசன் (தென்மராட்சி.) (2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி – அல்லைப்பிட்டி
புத்தர் : புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் (துணவில்)
குளப்பிரர்: களப்பிராவத்தை (புலொலி).
இயக்கர் : இயக்குவளை (கொக்குவில்)
யாவகர்: சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி).

யாழ்ப்பாணத்திற் குடியேறியவர்களின் தொகை 40000 வரையிலிருக்கலாம் என்று தோம்புகளின் அடிப்படையில் ஊகிக்க இடமுண்டு . குடியேறியவர்களின் வீதம் வருமாறு:
நேரநாட்டுத் தமிழர் 48%
தமிழ் நாட்டவர் 30%
பிறநாட்டினர் 22% 

9 தமிழர் ஆதிக்கம்
யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்த நாகர், லம்பகர்னர் என்போருடைய ஆட்சிகள் முறையே கி.பி. 303 கி.பி, 556. என்னும் ஆண்டுகளோடு முடிவடைந்தது. இதன் பின்னர் குடியேறிய படைவீரர்களுஐடய ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மறலர்பன் வட கிழக்கிலும், தென்கிழக்கிலும்பாணர்கள் தென்மேற்குப் பகுதிகளிலும் ஆட்சிப் பீடங்கள் அமைத்தனர்;. அவை வடமறாச்சி (வடமறவர் ஆட்சி, தென்மறாட்சி (தென்மறவர் ஆட்சி) என்னும் பெயர்களைப் பெற்றன. பாணர்கள் அமைத்த ஆட்சிப்பீடம் யாழ்ப்பாணம் என்று அழைக்கப்பட்டது. கிபி. 6ம், 7ம், 8ம் நூற்றபண்டுகளில் சிங்கள அரச குடம்பங்களுக்குள் ஏற்பட்ட கலகங்கள் காரணமாக அநேக அரசர்களும், பிரமுகர்களும் கொல்லப்பட்டனர் இது காரணமாக யாழ்ப்பாணத்திற் சிங்களவருடைய ஆதிக்கம் நிலைகுலைந்தது. இதைக்கண்ட மறவர், பாணர் முதலிய தமிழ்ப்ப்பிரமுகர்கள் சிங்கள அரசுக்கு மாறக வரிகொடா இயக்கத்தையும்,நிலச் சுவீகரிப்பு இயக்கத்தையும் தொடங்கிப் பூரணவெற்றி பெற்றனர். இவ்வெற்றி சிங்களவரை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறச் செய்தது. சகல வாய்ப்புகளும் நிரம்பிய இந்த நேரத்தில் தமிழ்ப்ப் பிரமுகர் ஒன்றுகூடி யாழ்ப்பாணத்தில் ஓர் தமிழரசைத் தாபிக்க முடிவுசெய்து தங்கள் தலைவனாகிய பாண்டி மழவனை மதுரைக்குப்போய் ஒரு இராசகுமாரனை அழைத்து வருமாறு அனுப்பினர். 

10. தமிழரசு கி.பி. 795
பாண்டியமழவன் மதுரைக்குப் போய், இராமபிரானாற் சேதுஐவ காவல் செய்யுமாறு நியமிக்கப்பட்ட இருவரின் வipத்தோன்றலும், சேதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், Nசுதுபதி அரசர்களின் வம்சத்தொடர்பு உடையவனும், பாண்டிய மன்னனின் சேனைத் தலைவனுமாக விளங்கிய சிங்கையாரியனை (கூழங்கையனை) அழைத்துவந்து முடிசூட்டி யாழ்ப்பாணத்துக்கு அரசனாக்கினான். ஆரியன் என்னும்அ சொல் ஓர் உபசாரப் பட்டமேயன்றி பிராமணத் தொடர்பைக் குறிக்காதென்பது “ஆரியன் என்னும் சொல் ஓர் உபசாரப் பட்டடேனற்நி பிராமணத் தொடபைக் குறிக்காதென்பது “ஆரியவேந்தனென்றணிமணிப் பட்டமும் நல்கி” என்றும் செகராச சேகரமாலைப்பாட்டால் விளங்கும். ஆரசர்கள் தங்கள் உயர்பதவிக்கேற்ப உயர்குலப் பட்டங்களைத் தங்கள் பெயரோடு சேர்த்து எழுதுதல் மரபு. கலிங்க அரசர்கள் தங்களளைக் கறகா குலத்தவரென்றும் சேர அரசர்கள் தங்களை அக்கினி குலத்தவரென்றும், பாண்டிய அரசர்கள் தங்களைச் சந்திர குலத்தவர் என்றும் கூறுவது அக்கால வழக்கமாக இருந்த. கலப்பு விவாகம் பிராமணருக்கும், மறவருக்கும் இடையில் நடக்கும் வழக்கம் இல்லை. நடந்தாலும் கலப்பு விவாகத்தாற் பிறந்த பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. ஆரியன் என்ற சொல்லில் மயங்கி டாக்டர் லிவறா, கீயுறோஸ் (ஞரநசைழண) காசிச்செட்டி முதலியோர் சிங்கையாரியனுக்குப் பிராமணத் தொடர்பு கற்பித்தனர்.

ஆரியர் சக்கரவர்த்திகள் செந்தமிழ் பேசுந் தமிழரே அன்றி தெலுங்கு பேசும் கலிங்க நாட்டவர் அல்லர். ஆரசகுமாரர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது பாண்டி மழவன் அவர்களைத் தேடி ஆயிரம் மைலுக்கப்பாலுள்ள கலிங்க நாட்டிற்குப் போவவேண்டிய அவசியமே இல்லை. இராசநாயக முதலியார் சிங்கையாரியனை கலிங்கதேசத்தவனாக்கினது சிறிதும் பொருந்தாது. ஆரியச் சக்கரவர்த்திகள் எல்லாரும் தமிழ்ப்மொழி பேசினரேயன்றித் தெலுங்கு முதலிய பிறமொழிகளைப் பேசினார் என்பதற்கு ஒரு வகையான ஆதாரமும் கிடையாது. அவர்கள் தமிழமொழி பேசினர் என்பது “கூயுறொஸ்’ என்பது கூற்றினால் அறியலாம். (1) யாழ்ப்பாணத் தமிழரசர்கள் இராமேஸ்வரத்தை ஆண்ட சேதுபதி அரசர்களுக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது, அவர்களது நாணயங்களின் சேது என்னுஞ் சொல் பொறிக்கப்பட்டிருப்பதாரும் அறியலாம்.

11 தமிழரசும் குடியேற்றக்காரரும்
தமிழரசு கி.பி. 795இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கியபோது குடியேற்றக்காரருக்கு நல்லகாலம் பிறந்தது. துமிழரசின் கீழ் உயர்ந்த உத்தியோகம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர்களுக்கு இரண்டு குறைகள் அவ்வுத்தியோகங்களைப் பெறத்தடையாயிருந்தன. அவை படைகளை விட்டு விலகி மறைமுகமாகக் குடியேறினது, உயர்குடிப்பிறப்பின்னை என்னும் இரண்டுமாகும். அவற்றை நீக்கி மதிப்புடன் அரசியலில் உயர்ந்த பதவிகளில் அமரவேண்டும் என்னும் பேரவாவினால் தூண்டப்பெற்ற மழவர், பாணர் முதலியோர் பல வழியிலும் அக்குறைகளை நீக்க முயற்சி செய்தனர். இதே சமத்தில் இடைச்சாதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் சாதிப் பட்டங்களை மறைத்து வேளாளருக்குரிய பிள்ளை, முதலி என்னும் பட்டங்களைத் தமது பெயரோடு வைத்து வேளாளராக முயன்றனர் என்பதைப் பின்வரும் நாட்டுப் பாடலால் அறியலாம்.
“கள்ளர் மறவர் களத்ததோர் அகம்படியர்ஸ மௌ;ள மௌ;ள வெள்ளாள ராயினர்”

வையா பாடலின் குடியேற்றத்தைப் பற்றி :
இங்கு குடியேறியவர்கள் சோழபாண்டியர்களின் படைவீரர்களுள் தமது நாட்டுக்குத் திரும்பிப் போகாது அங்கே தங்கியவர்களும், கி.பி. 34க்கும், கி.பி. 809க்கும் இடையில் நடந்த சிங்கள அரசரின் குடும்பக் கலகங்களில் ஈடுபட்ட இந்தியக் கூலிப்படை வீரருமாவர். படைகளோடு வந்த வன்னியர் பெரும்பாலும் வன்னி நாட்டிற் குடியேறினர் என்பது சீ.எ!;. நவரத்தினம் என்பவது கருத்தாகும்.

இதே கருத்தைச் சுவாமி ஞானப்பிரகாசரும் தாம் எபுதிய யாழ்ப்பாணக வைபவமாலை விமர்சனத்திற் கூறியுள்ளார். அது வருமாறு:-
“இலங்கை மேற்படையெடுத்து வந்த வெற்றியாளரைத் தொடர்ந்து தமிழ்வீரர்களின் குடும்பங்களாலும், அன்னொருடன் குடியேறிய பரிசனங்களாலும் மட்டுடன்றி, இளநாகன் கி.பி. (31-41).………. ஆதியாம் சிங்கள அரசர்கள் தத்தம் உள்ளர்ச் சமர்களுக்கு உட் பலமாகச் சோழ பாண்டிய நாடுகளினின்றும் அவ்வக்காலம் வரித்த தமிழ்ச் சேனைகளில் எஞ்சி நின்றோராலும் ராஜரட்டம் மலிந்து பொலிந்தது

இராசநாயக முதலியாரும் இது விஷயமாகப் பின்வருமாறு கூறுயள்ளார்:-
“ பிற்காலத்தில் சோழ பாண்டியர்களுடன் வந்த போர் வீரராகிய வன்னியர் சிலர் இலங்கையில் தங்கிக் கோயில் அதிகாரத்தைக் கைப்பற்றினதுமன்றி, மன்னார் முதல் திருக்கோணமலை வரையும், யானையிறவு முதல் காட்டுத் தம்பளை வரையும் உள்ள பரந்த பிரதேசத்தின் அதிகாரிகளாகவும், சிற்றரசர்களாகவும் இருந்தார்கள்.
தமிழரசர் ஆட்சி கி.பி. 1620 இல் முடிவடைந்து போகப் போத்துக்கேயர் ஆட்சி கி.பி. 1621இல் தொடங்கியது

Published in Tamil
10 06 2017

அறிந்தும் அறியாமலும் - 4: ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர்..

-சுப வீரபாண்டியன்

ஒரு நாட்டின் மேம்பாடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் பிணைந்து கிடக்கின்றது என்று கண்டோம்.சமூக முன்னேற்றம் குறித்து மட்டுமே இத்தொடர் பேசுகிறது.
ஒரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் இடையிலான வேறுபாடு நாம் அறிந்ததே. உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும், ஓர் அரசினால் (State)ஆளப்படுகின்றது. அவ்வாறு ஆட்சிக்கு உட்படும்போதே, சமூகம் என்பதனை நாடு (Nation) என்று அழைக்கின்றோம்.ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகமும் இருக்கலாம். பல்வகைச் சமூகங்களும் இருக்கலாம். (இப்போதெல்லாம் சமூகம் என்பதைச் சாதிக்கான மாற்றுச் சொல்லாக ஆள்கின்றனர். நாம் இங்கே தேசிய இனத்தையே சமூகம் என்று குறிக்கின்றோம்).

ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகம் மிகப்பெரும்பான்மையாக இருக்குமானால், அதனைத் தேசிய அரசு (Nation State) என்றும், பல்வகைச் சமூகங்கள் இருக்குமானால், பல்தேசிய அரசு (Multinational State) என்றும் அரசறிவியல் (Political Science) கூறுகின்றது. எந்த ஐயத்திற்கும் இடமின்றி, இந்தியா ஒரு பல்தேசிய அரசு. சரியான வரையறையின்படி, இந்தியா ஒரு துணைக்கண்டம். எனவே, இங்கு ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு' என்னும் முழக்கம் ஏற்புடையதாகாது. பல்வேறு பண்பாடுகளைப் பெற்றிருக்கும் பல்தேசிய அரசே இந்தியா என்பதால், ஒவ்வொரு சமூகம் குறித்தும் தனித்தனியாகத்தான் நம் ஆய்வினைக் கொண்டு செல்ல முடியும். இங்கு தமிழ்ச் சமூகத்தின் மீது மட்டுமே நம் பார்வை படர்கிறது. ஒரு சமூகம் முன்னேறிய சமூகம் என்று கொள்வதற்கு, இரண்டு நிலைகளை அச்சமூகம் எட்டியிருக்க வேண்டும். (1) அறிவார்ந்த சமூகம் (2) பண்பார்ந்த சமூகம் ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சி, அதனுடைய படிப்பு, சிந்தனை, நுண்ணறிவு, பட்டறிவு (அனுபவம்) ஆகிய நான்கு தளங்களில் இயங்குகின்றது. ஆதலால், அறிவு வளர்ச்சியின் முதல்படி படிப்பு & அதாவது கல்வியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கல்விக் கூடங்களின் மூலம் நாம் பெறும் முறைசார் கல்வி, கல்வி நிலையங்களுக்கு வெளியே நூலகம், ஊடகம் முதலானவற்றின் மூலம் நாம் பெறக்கூடிய பொதுக்கல்வி என இருவகைகளில் கல்வியறிவை நாம் பெறுகின்றோம். ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை, முறைசார் கல்வி கூட நமக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் நம்முடையது. பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர்கள் காலத்தில் பெருவளர்ச்சி கண்டு, நாயக்கர்கள் காலத்தில் கொடிகட்டிப் பறந்த கல்வி முறை, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையை வழங்கியது. 1835ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் கொண்டுவந்த பொதுக் கல்வித் திட்டமே அனைவருக்குமான கல்வி என்னும் நிலைக்கு அடித்தளமிட்டது. இதனைத்தான் மெக்காலே கொண்டுவந்த கல்வி என்று இப்போதும் கூறுகிறோம். மெக்காலேயை மிகக் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் உண்டு. நம்மை எல்லாம் அறிவாளிகள் ஆக்குவதற்காக அவர் கல்விக் கதவுகளைத் திறக்கவில்லை, குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காகவே அவ்வாறு செய்தார் என்பது ஒரு பார்வை. அப்படியே வைத்துக் கொண்டாலும், கல்வி அற்று அடிமைகளாக இருந்த சமூகத்தை, குறைந்தபட்சம் குமாஸ்தாக்களாகவாவது ஆக்க முயன்றது ஒரு வகையில் முன்னேற்றம்தானே! அந்தச் சூழலிலும் கூட, சமூகத்தின் மேல்தட்டில் இருந்தவர்கள்தான் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட (1911) மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பார்ப்பனர் அல்லாத மக்களில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்களே கல்வி அறிவு பெற்றிருந்தனர்.

1901ஆம் ஆண்டு, இந்தியா முழுமைக்கும் ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இந்தியா என்றால், இன்றைய இந்தியாவை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. இன்றைய பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா, நேபாளம், இலங்கை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதே அன்றைய இந்தியா. அவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. மெக்காலேயைப் போலவே, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் இன்னொரு ஆங்கிலேய ஆளுநர் கர்சான் பிரபு. இவர்தான் வங்காளத்தைத் துண்டாடியவர். ஆதலால் அவரை நம் வரலாற்றுப் புத்தகங்கள் கண்டித்துப் பேசும். ஆனால், அதே கர்சான்தான், இந்தியாவில் கல்வி பரவலாவதற்குப் பெரிய காரணமாக இருந்தார் என்பதை நாம் அழுத்திச் சொல்வதில்லை.

1902ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கல்வி அதிகாரிகள் அனைவரையும் அழைத்து சிம்லாவில் ஒரு மாநாடு கூட்டியவர் கர்சான். அந்த மாநாட்டில்தான், நாடு முழுவதும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேறிற்று. இந்த இடத்தில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. யாரெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனரோ, அவர்கள் எல்லோரும் இன்னொரு விதத்தில், கல்வியின் அடிப்படையில் நமக்கு உதவியவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் மீது பார்ப்பனர்கள் கோபம் கொள்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மகாத்மா ஜோதிராவ் புலே, ‘அடிமைத்தனம்' என்னும் தன் நூலில் எழுதியிருப்பதை இங்கே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. "இந்தியாவின் மேல்சாதியினர் ஆங்கிலேயர் மீது கோபம் கொண்டதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அவர்கள் நமக்குப் பொன்னையோ, பொருளையோ தந்திருந்தால் கூட, இங்கே உள்ளவர்கள் அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கூறி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை அல்லவா அவர்கள் கொடுத்துவிட்டார்கள்!" என்பார் புலே.

அரசுத்தடை நீக்கப்பட்டபின்பும், காலகாலமாக இருந்துவந்த நம்முடைய மனத்தடையை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் பல ஆண்டுகள் ஆயின. 1920களுக்குப் பிறகுதான், வசதியான குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர். நடுத்தட்டுப் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு மேலும் இரு பத்தாண்டுகள் ஆயின. 1950க்குப் பின்பே பெண் கல்வி தொடங்கிற்று. இவ்வாறாகப் படிப்படியாகத்தான் கல்வி வளர்ச்சியை நாம் கண்டோம். அதிலும் ஒரு பெரும் வேறுபாடு இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே நிலையில் நம் நாட்டில் கல்வி வளர்ச்சி அமையவில்லை. நாம் மணலில் ‘அரி, ஓம்' என்று எழுதப்பழகியபோது, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சிலேட்டுக் குச்சிக்கு வந்துவிட்டார்கள். நாம் சிலேட்டுப் பலகையைத் தொட்டபோது, அவர்கள் கைகளில் பென்சில் இருந்தது. பென்சிலை நாம் எட்டிப் பிடித்தபோது, அவர்கள் பேனாவிற்குத் தாவிவிட்டார்கள். பேனா நம் வசப்பட்ட நேரத்தில், அவர்கள் தட்டச்சு இயந்திரத்தில் கைபழகிக் கொண்டிருந்தார்கள். நம்மில் பலர் தட்டச்சர்களானோம், ஆனால் அவர்களுக்கோ அப்போது கணிப்பொறி கிடைத்துவிட்டது. கணிப்பொறியைக் கண்டு நாம் மலைத்துத் திகைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் அவர்கள் நம்மைவிட்டு, வெளிநாடுகளுக்கே சென்று விட்டார்கள். இப்போதுதான் வெளிநாட்டு விமானங்கள் நம் பிள்ளைகளையும் ஏற்றிச் செல்கின்றன.

இன்றைக்கும் கூட, பூரண ஞானம் பொலிந்துவிடவில்லை என்றாலும், கல்வி கற்றோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை அடைந்துள்ளது. ஆணோ, பெண்ணோ, கல்வி என்பது அடிப்படைத் தேவை என்னும் புரிதல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. 14 வயது வரையில், அனைவருக்குமான கட்டாயக் கல்வி என்னும் சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றாலும், சமூகம் அத்தேவையைப் புரிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் முறைசார் கல்வி இன்றைக்குப் பெரும்பான்மையானவர்களுக்குக் கிடைத்துள்ளது-. என்றைக்குமே எந்த ஒரு நல்ல செயலுக்கும் கூட, வேறுவிதமான பக்க விளைவுகள் இருந்தே தீரும். கல்வி தொடர்பாகவும் அப்படி ஒரு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

முறைசார் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தக் கல்வியே வாழ்வில் எல்லாம் என்று கருதிவிடக் கூடாது. அது வாழ்வின் ஒரு பகுதிதான். பிற வழிகளிலும்கூட கல்வியையும், அறிவையும் நம்மால் பெற முடியும் என்னும் நம்பிக்கையை முற்றுமாக இழந்து, சமூகம் இந்தக் கல்வி முறையின் மீது அளவிலாக் காதல் கொண்டது. அதன் விளைவாகத் தேர்வில் தோல்வி காணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கே சென்றனர், செல்கின்றனர். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை விரட்டும் நிலைமை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. சிறந்த மதிப்பெண் ஒன்றே பிறவிப் பயன் என்பதான எண்ணம் உருவாகியுள்ளது. 10ஆம் வகுப்புப் பாடத்தைச் சில பள்ளிகள் 9ஆம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகின்றன. படிப்படியாக அறிவு பெறுதல் என்னும் நிலையைத் தவிர்த்துத் தாவிப் பிடிக்கும் ஆர்வம் மேலிடுகிறது. பார்வை இல்லாதவன் ஒளிபெற்ற பிறகு அடையும் மகிழ்ச்சியினைப் போல, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி பெறத் தொடங்கிய சமூகம், மற்ற எல்லாவற்றிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, கல்வி ஒன்றே போதும் என்னும் முடிவுக்கு வந்துள்ளது. வீடுகளில் தொலைக்காட்சிகள் நிறுத்தப்படுகின்றன. படிப்பைத் தவிர மற்ற அனைத்துச் சிந்தனைகளுக்கும் இரண்டாம் இடமே கொடுக்கப்படுகிறது. கவிதை, ஓவியம், இசை போன்றனவெல்லாம் வாழ்விற்கு உதவாதவை, பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படும், கல்வி ஒன்றே காலத்திற்கும் நமக்குக் கைகொடுக்கும் என்பன போன்ற எண்ணங்கள் தலைதூக்கி நிற்கின்றன. இதுபோன்ற பக்க விளைவினைச் சரி செய்து கொள்ளவேண்டும் என்று கூறுவது, கல்வியைக் கைவிட்டுவிட வேண்டும் என்னும் நோக்கில் அன்று. கல்வியும் வேண்டும், கல்விக்கு அப்பாலும் வேண்டும் என்ற சிந்தனையே இங்கு முன்வைக்கப்படுகிறது. கல்விக்கு அப்பால் கதைகளை, காப்பியங்களை, கலைகளைத் தேடிய காலம் இங்கே இருந்தது. ஆனால் 1980களுக்குப் பிறகு அதில் ஒரு சரிவை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு என்ன காரணம்? ஒரு பெரிய காரணம் 1976ஆம் ஆண்டில் தொடங்கிற்று..
(மீண்டும் சந்திப்போம்) tamiloneindia.com 23 05 2014

Published in Tamil
05 06 2017

யாழ்ப்பாணக் குடியேற்றம் 1

யாழ்ப்பாணக் குடியேற்றம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது
யாழ்ப்பாணக் குடியேற்றம் : முன்னைநாட் சென்னை லொயலாக் கல்லூரித்  தலைமைத் தமிழ்ப் விரிவுரையாளர்  இளைப்பாறிய அராலி இந்துக்கல்லூரி அதிபர் கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, டீ.யு இயற்றியது

1. நாகர்கள்
இலங்கையின் ஆதிவாசிகளாகிய நாகர்கள் அத்தீவின் வடபகுதியிலும் மேற்கிலும் வசித்தனர். அவர் வசித்த இடம் நாகதீவம் என்று அழைக்கப்படும். நூகதீவம் நாக அரசர்களால் ஆளப்பட்டது. சிங்கள சரித்திர நூலாகிய மகாவம்சம் கி.மு. 6ம் நூற்றாண்டில் நாகதீவம் மகோதரன் என்னும் அரசனால் ஆளப்பட்டது என்று கூறுகின்றது. (1). நூகர்கள் மலையாளத்திலிருந்து இங்குவந்து குடியேறிய நாயர்கள் என்று நீலகண்ட சாஸ்திரியார்;, உவூட்கொக் (றுழழனநழஉம), காக்கர் (Pயசமநச) முதலியோர் கருதுகின்றனர். அது பொருந்தாது. நூகர்கள் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்திற் குடியேறிய நாயர்களோடு கலந்து கொண்டனர் என்று கருதுதல் பொருந்தும். நூகர்கள் திராவிடரைச் சார்ந்தவர்கள் என்பது வி. ரங்காச்சாரியார் கருத்தாகும் (2) . பி.சி. முசம்தாரும் (3), ஆ. கனகசபைப்பிள்ளையும் (4) நாகர்கள் இமயமலைக்கப்பா லிருந்து வந்து இந்தியாவுக்குள் குடியேறினர் என்று கூறும் கொள்கைக்கூற்று ஏற்புடையதன்று. பழக்கவழக்கங்களில் நாகர்கள் தமிழரை ஒத்திருத்தலாலும், அவர்களுட் சிலர் மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவராக விளங்கினமையாலும் நாகர்கள் தமிழினத்தைத் சார்ந்தவர்கள் என்று பலர் கருதுகின்றனர்.

முற்காலத்தில் நாகர்கள் இந்தியா முழவதிலும் அரசியல் ஆதிக்கம் பெற்றிருந்தனர். (5), ஆரியர்கள். இந்தியாவுக்குள் கி.மு. 1500 இல் நுழைந்தபோது நாகரோடு கடும்போர் புரிந்து அவர்களை வென்று தெற்குப் பக்கமாகப் பின்வாங்கச் டிசய்தனர் அவர்கள் பிற்காலத்தில் வலியற்று நாகதீபத்தில் வசித்தனர். கடைசியாக ஏற்பட்ட கடல்கோளினால் அவர்கள் நாடும், செல்வாக்கும், மக்கள் தொகையும் குறைந்தன. இந்நிலையில் அவர்கள் கடற்கொள்ளையினால் வியாபாரம் தடைபடுதை உத்தேசித்துச் சேரமன்னன் அவர்களைத் தண்டித்து அடக்கினான். நாகர்கள் வீழ்ச்சி அடைந்த பின்னர் லம்பகர்னர் என்னும் சாதியார் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் பெற்றனர்.

2.லம்பகர்னர்
விஜயன் பிறக்குமுன் இலங்கை ஒரு சிறந்த குடியேற்ற நாடாக விளங்கியது. என்று போல் பீறிஸ் கூறியுள்ளார். (1). “ இந்தியா கிட்ட இருப்பதாலும் வாடைக் காற்றுக் காலத்திலும், சோழகக்காற்றுக் காலத்திலும் கடற்பிரயாணஞ் செய்யக்கூடிய வசதி இருத்தலாலும் அங்கிருந்து மக்கள் வந்து குடியேறியிருக்க வேண்டும்.” என்று று.யு.ளு. போக் என்பவர் கூறியுள்ளார் (2). இதே கருத்தை சேர். உவில்லியம் யோன்ஸ் (3), லூயிஸ் நெல், ஊ.ளு. நவரத்தினம் (1) என்போரும் வெளியிட்டிருக்கின்றனர். விஜயன் நகுலேஸ்வர ஆலயத்தைப் புதுப்பித்தான் என்று கூறப்பட்டிருத்தலாலும், திருமூலர் இலங்கையைச் சிவபூமி என்று கூறியிருத்தலாலும் (2) மிகப்பழைய காலத்தில் தமிழர்கள் இங்கே குடியேறினர் என்று கருத இடமுண்டு. அப்படியானால் அவர்கள் யார்? என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் தென்னிந்திய கீழைக்கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய கள்ளர் என்னும் சாதியார் என்று கூறலாம். கள்ளருடைய காதுகள் பாரமான காதணி;களுடன் தூங்கியிருப்பதைக்கண்ட சிங்களவர் பரிகாசமாக அவர்களை லம்பகர்னர் என்று அழைத்தனர். லம்பம் - தூங்குகின்ற, கர்னர் – காதுடைவர் என்பது அதன் பொருள் (3), கள்ளர் மறவரைச் சார்ந்த “சாதியார். ஆவர்கள் கொள்ளை, கொலை , களவு முதலிய மறத்தொழிலைச் செய்யும் இயல்புடையவர். போர் புரிதலிலும் வல்லவர்கள் என்று “சேர் வால்றார் எலியெற்’ கூறியுள்ளார். (4). ஆவர்கள் இலங்கையின் வடபகுதியை 200 வருடங்கள் ஆட்சி செய்தனர்.

3. வடஇந்தியப் படையெடுப்புக்கள்
ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது (கி.மு. 1500) அவர்களை எதிர்த்துப் போர் புரிந்த நாகர்களையும், இயக்கர்களையும், திராவிடர்களையும் அவர் கள் முறையே பாம்புகள் என்றும் கூறினார். தமது பகைவர்களைக் கொல்லுமாறு இந்திரன், அக்கினி முதலிய தெய்வங்களை வேண்டினர் என்பது இருக்கு, சாமம் முதலிய வேதங்களால் அறியலாம் (1). திராவிடர் ஒருபோதும் அசுரராகார் என்பது ரா. இராகவையங்களாரது உறுதியான கருத்தாகும் (2). திராவிடர்களைத்தாசர் என்று கூறுவதும் பொருந்தாது என்பது பேராசிரியர் றாப்சன் கருத்தாகும் 

தென்னாட்டில் வசிக்கும் பகைவர்களை அழிப்பதற்கு அவர்கள் ஐந்து படையெடுப்புக்களில் ஈடுபட்டனர்(4).அவை, கந்தன் தலைமையில் ஒரு தெய்வீகப் படையெடுப்பு, அகத்தியர் தலைமையில் ஒரு முனிவர் படையெடுப்பு(5), இராமன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு, புத்தன் தலைமையில் ஓர் அரசர் படையெடுப்பு (6), விஜயன் தலைமையில் ஓர் மக்கட் படையெடுப்பு என்பன. இப்படையெடுப்புக்களால் அதிகம் குடியேற்றம் நடைபெறவில்லை. அகத்தியரோடுவந்த பிராமணர் தென்னிந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் குடியேறினர்.

4 வியாபாரமும் குடியேற்றதும்
மேலே கூறப்பட்ட படையெடுப்புக்களினால் இராக்கதபயம் ஓரளவு நீங்கியது. சகலதேச மக்களும் வியாபார நோக்கத்தோடு இங்கு வரத்தொடங்கினர். இங்குள்ள துறைமுகங்களும் முக்கியத்துவம் அடைந்தன. “உறற்றேபற்றா” (ஊர்காவற்றுறை), சம்புகோவளம் என்னும் இரண்டும் பிறநாட்டுக் கப்பல்கள் ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களாயின. ஊர்காவற்றுறை கலிங்கமாகனால் அரண் செய்யப்பட்ட துறைமுகமாக விளங்கினதென்பது பூசாவளி என்னும் நுலினால் அறியக்கிடக்கிறது. (1). வட இந்திய வியாபாரங்கள் இங்குவற்து வியாபார!; செய்ததாகச் சாதகங்கள் கூறுகின்றன. (2). குந்தரோடையில் எடுக்கப்பட்ட 2 நாணயங்களும் இவ்வுண்மையை வற்புநத்துகின்றன. சேரநாட்டு வியாபாரிகள் பாலைக்காடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, புகார் முதலிய இடங்களுக்கூடாக உள்ள வியாபாரப்பாதை வழியாக வந்து தென்னிலங்கையிலிருந்து பொதிமாடுகள் மூலம் கொண்டுவரப்பட்ட வியாபாரப் பொருள்களை வாங்கிச் சென்றதனால் சேரநாட்டிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு சேரநாட்ழனர் இங்கு வந்து குடியேறச் சாதகமாக இருந்தது. 

5.சேரநாட்டுக் குடியேற்றம்
முதலில் யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்கள் சேரநாட்டினராகிய மலையாளிகள் என்பது நீலகண்ட சாஸ்திரியார் கருத்து (3), கிறீஸ்த சகாப்தத்திற்கு முன் மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்னும் பாரம்பரியச் கூற்றுத் தமிழ்மக்களுள் இருந்து வருகிறதாகச் சேர். எமேசன் ரெனென்ற் (ளுசை நுஅநசளழn வுநnநெவெ) கூறுகிறார். மலையாளத்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்று லிபிறோஸ் (டுiடிநலசழள) என்னும் சரித்திராசிரியர் கூறுகிறார் (1). மலையாளத்திற் பரசுலராமராற் குடியேற்றப்பட்ட நம்பூதிரிப் பிராமணர்கள் மலையாளிகளை நாட்டைவிட்டு வெளியேற்றினர் என்று மலையாள சரித்திர நூலாசிரிய கேரளோற்பத்தி என்றும் நூல் கூறுகின்றது. இதெ கருத்தைப் பேராசிரியர் வி. ரங்காசாரியரும் கூறியிருக்கிறார் (2). நாட்டை விட்டு வெளியேறிய மலையாளிகளுட் சிலர் இருபது மைல் அகலமுள்ள பாலைக்காட்டுக் கணவாய்க்குள்ளால் வந்து வியாபாரப்பாதை வழியாகச் சென்று யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். அதே கணவாயாற் சென்று கொல்லிமலை, பச்சைமலை, சவ்வாது மலைகளில் மறைமுகமாகக் குடியேறி வாழ்கின்றனர். வேறு சிலர் கடல்மார்க்க்மாகக் கன்னியாகுமரி, காயல்பட்ழனம் இராமேஸ்வரம், மரந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும். தேன்னிலங்கையிலும் குடியேறினர்.

மளையாள நாடு களப்பியர் (கி.பி. 3-9, சாளுக்கியர் (கி.பி. 6). பாண்டியர், மகமதியர் (கி.பி. 1768-1793), விக்கிரமாதித்தன் முதலிய வேற்றரசர் ஆளகைக்குட்பட்டபொம், மலையாளிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். சிங்கள அரசர் வைத்திருந்த மலையாளக் கூலிப்படையைச் சேர்ந்த பலர் சம்பளம் ஒழுங்காகக் கொடுபடாமையாலும், வேறு காரணங்களாலும் படையைவிட்டு விலகி யாழ்ப்பாணம் வந்து குடியேறினர். அநேக மலையாளிகள் இங்கு வந்து குடியேறினர் என்பதை ஆ.னு. இராகவன் தமது நாகர்கோயில் வரலாற்றாய்வில் விளக்கியுள்ளார் (1). முலையாளத்தில் வேலைவாய்ப்பின்மையும் மலையாளக் குடியேற்றத்திற்குக் காரணமாகும்.

மலையாளத்திலுள்ள முக்கிய சாதிகள் இருபத்தேளுள் பதினான்கு சாதிகள் யாழ்ப்பாணத்திற் குடியேறியிருக்கின்றன என்பது போத்துக்கேயர் எழுதிவைத்த தோம்புகளால் அறியக் கிடக்கின்றது. (2). தோம்புகளின் அடிப்படையில் இங்குவந்து குடியேறியுள்ளார்கள் என்று ஊகிக்கலாம். மலையாளிகள் வந்து குடியேறிய இடங்களுக்குத் தங்கள் ஊரின் பெயரையோ, தங்கள் நாட்டின் பெயரையோ அல்லது அரசன் பெயரையா ஏதாவதொன்றை வைத்துள்ளனர்.
{2. தோம்பு என்பது ஊhகளிலுள்ள காணிகளின் பெயரும், பரப்பும், உடையவன் பெயரும் சாதியும், அரசிறை வரியும், கடமைகளும், ஊழியமும் குறிக்கப்பட்ட ஏட்டின் பெயராகும். இது கி.பி. 1623 இல் எழுதப்பட்டது. }

மலையாளச் சாதிகளும் குடியேறிய இடங்களும்
(1) குறும்பர் – குறும்பாவத்தை (சுதமலை), குரம்பசிட்ழ (ஏழாலை.
(2) முக்குவன் - முக்குவிச்சி ஒல்லை (இணுவில்).
(3) நாயர் – பத்திநாயன் வயல் (மல்லாகம்).
(4) புலையன்- மூப்பன்புலம் (ஏழாலை).
(5) மலையன் - மலையன் சீமா (சிறுப்பிட்டி).
(6) பணிக்கன் - பணிக்கன் சாட்டி (வேலணை).
(7) தீயன் - தீயா வத்தை (கோப்பாய்.)
(8) பட்டன் - பட்டன் வளவு (வரணி).
(9) வாரியார் – வாரிக்காவற்கட்டு (புங்குடு தீவு).
(10) வேடுவன் - வேடுவன் கண்டி (மூளாய், நவாலி).
(11) பாணன் - மாப்பணன் வயல் (நாவற்குழி).
(12) பிராமணன் வயல் (நாவற்குழி).
(13) வேளான் - வேளான் பொக்கட்டி (கச்சாய்).
(14) நம்பி – நம்பிராயன் தோட்டம் (சுதமலை).

மலையாளம் எ;னனும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. மலையாளன் காடு – அராலி, கோப்பாய்,
(2) மலையாளன் ஒல்லை – உடுவில்.
(4) மலையாளன் பிட்டி – கள பூமி.
(5) மலையாளன் தோட்டம் - சங்காணை , சுழிபுரம், சுமலை,
(6) மலையாளன் வளவு – அத்தியடி, அச்செழு.
(7) மலையாளன் புரியல் – களபூமி.

சேரன் என்னும் பெயரோடு கூடிய குடியேற்றங்கள்
1. சேரன் – சேரதீபம் (இலங்கை) .
(2) சேரன் கலட்டி – வரணி.
(3) சேரன் எழு – நவுண்டில்.
(4)சேரன் தம்பை – தனக்காரக்குறிச்சி.
(5) சோபாலன் சீமா – மாவிட்டபுரம். நவிண்டில்.
(6) வில்லவன் தோட்டம் – சங்கானை, சில்லாலை.

சிறிய மாற்றத்தோடு கூடிய சேரநாட்டுப் பெயர்கள்
1. கோட்டையம் - கோட்டைக்காடு. (2) சாத்தகிரி – சாத்தான் ஒல்லை (சுழிபுரம்). (3) பட்டாம்பி – பட்டாவளை (கொக்குவில்). (4) புன்னாடு – புன்னாலை, (5) முள்ளுர் – முள்ளானை (விளான்), முள்ளியான் (பச்சிலைப்பள்ளி) (6) வைக்கம் - வைக்கறப்பளை (புலொலி). (7) பைபோலை – பையோலை (கட்டுவன்). (8) மருதூர் – மருதம்பத்தை. (9) மல்லியம் - மல்லியோன் (வல்லுவெட்டித்துறை). (10) மாயனூர் – மாயனை (11) மாரி_ மாரியவளை (தெல்லிப்பழை). (12) மீசலூர் – மீசாலை. (13) எடக்காட்- இடைக்காடு (14) கச்சினாவளை – கச்சினாவடலி (சுன்னாகம்). (15) கள்ளிக்கோடு – கள்ளியங்காடு. (16) குட்டுவன் - கட்டுவன். குட்டன் வளவு (இயற்றாலை, தொல்புரம்);: (17) உரிகாட் - ஊரிக்காடு, (18) குலபாளையம் - குலனை (அராலி). (19) கொத்தலா – கொத்தியவத்தை (சுன்னாகம். (20) அலைப்பை – மலைப்பை (21) ஒட்டபாலம் - ஒட்டகப்புலம். (22) ஒல்லூர் – ஒல்லை. (23) களநாடு – களப+மி, களனை, (சங்கானை, புத்தூர், புலொலி, மாகியப்பிட்டி).

யாழ்ப்பாணத்தில் வழங்கும் சேரநாட்டு ஊhப்பெயர்கள்
(1)அச்செழு, (2) இடைக்காடு., (3) கரம்பன், (4) கிழாலி, (5) குதிரைமலை, (6) கொல்லம், (7) நாகர்கோவில், (8) கோவளம், (9) மாந்தை, (10) பாலைக்காடு முதலியன.

மலையாளத்திலும் யாழ்ப்பாணத்திலும் வழங்கும் பொதுச் சொற்கள்
1. துரம்பு, (2) வண்ணான், (3) பணம், (4) தம்பி, (5) அப்பச்சி, (6) பறைதல், (7) குட்டி முதலியன.

யாழ்ப்பாணத்திற் காணப்படும் மலையாள வழக்கங்கள்
1. பெண் வழிச் சொத்துரிமை, (2) பெண் வீட்டில் மாப்பிள்ளை வசித்தல், (3) பெண்கள் மார்புக்குக் குறுக்கே சேலையைக் கட்டுதல், (4) பெண்கள் காதோட்டையை ஓலைச்சுரள் வைத்துப் பெருப்பித்தல், (5) பெண்கள் மாதத்துடக்குக் காலத்தில் வண்ணானுடைய மாற்றுடை அணிதல், (6) சம்மந்தக் கலியாணம், (7) கட்டுக் கலியாணம், (8) குரு வில்லாக் கலியாணம், (9) ஆண்கள் வேட்டி கட்டும் முறை, (10 ஆண்கள் கன்னைக்குடுமி முடிதல், (11) கஞ்சி வடித்துச் சோறு சமைத்தல், (12) நாற்சார் வீடு கட்டுதல், (13) சங்கடம் படலை அமைத்தல், (14) வீட்டைச்சுற்றி வேலி அடைத்தல், (15) ஒழுங்கை அமைத்தல் முதலியன.

 தொடரும்

Published in Tamil
03 06 2017

அறிந்தும் அறியாமலும் - 3: வாழ்வின் இரு முகங்கள்

சுப வீரபாண்டியன்

"ஏன் எங்களையே (IT பிரிவினர் ) எப்போதும் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதுகின்றார்களா?" என்று கேட்டுச் சில மடல்கள் வந்துள்ளன. "உங்கள் தலைமுறை 40 ஆண்டுகளில் ஈட்ட முடியாத தொகையை, நான்கைந்து ஆண்டுகளில் கணிப்பொறித்துறையில் உள்ள நாங்கள் ஈட்டி விடுகிறோம் என்னும் பொறாமையில் நீங்கள் எல்லோரும் புழுங்குகின்றீர்கள்" எனச் சிலர் குற்றம் சாற்றியுள்ளனர்.

"எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் உங்களின் கோட்பாடு, மருத்துவர்களுக்குப் பொருந்துமா, தீயணைப்புத் துறை ஊழியர்களுக்குப் பொருந்துமா?" என்னும் விவாதங்களும் எழுந்துள்ளன. எப்படியோ, தங்கள் நேரத்தைச் செலவழித்து, என்னோடும், நம்மோடும் உரையாட முன் வந்துள்ள இளைஞர்களுக்கு முதலில் என் நன்றி! நாகரிகக் குறைவான சொற்களால் எழுதப்பெற்றுள்ள சில கடிதங்களையும் கருத்துகளையும் புறக்கணித்துவிட்டு, மேற்காணும் கருத்துகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறி வைத்துத் தாக்குவது நம் நோக்கமில்லை என்றாலும், சென்ற என் கட்டுரையில், கணிப்பொறித் துறை இளைஞர்கள் மீதும், அத்துறையின்

இன்றைய நிலை மீதும் சில விமர்சனங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் கொண்ட சினத்திலும் நியாயம் உள்ளது. கணிப்பொறித்துறையில் உள்ள இளைஞர்கள் மட்டுமில்லை, அத்துறையினால் நம் நாடும், பெரும் வருமானத்தை ஈட்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அத்துறையினால் இந்தியா வருமானம் பெறுகின்றது என்று கூறுகின்றனர். நாடும், நம் பிள்ளைகளும் பெறும் வருமானம் கண்டு நாம் பொறாமைப் படுவோமா? சொந்தப் பிள்ளைகளின் மீது பொறாமை கொள்ளும் பெற்றோர்கள் உலகில் எங்கும் இருக்க முடியாது. எனினும் இன்றைய நிலை குறித்து நமக்குள்ள இரண்டு கருத்தோட்டங்களை மறைக்க வேண்டியதில்லை. ஒன்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே சமூகத்தில் வாழும் ஒத்த வயதுடைய இளைஞர்களிடையே, பாரதூரமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதன்று. பிற துறைகளில் பணியாற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்திட அரசுகள் திட்டமிட வேண்டும். உடனடியாகச் ‘சமத்துவ சமுதாயத்தை' அமைத்துவிட வேண்டும் என்பது இதன் பொருளன்று. மிகப்பெரிய ‘வர்க்க வேறுபாடுகள்' ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை. இரண்டாவது, நாட்டின் முன்னேற்றம் பற்றியது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில், பொருளாதாரத்தின் பங்கு மிக இன்றியமையாதது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அம் முன்னேற்றம், சமூகப் பண்பாட்டு முன்னேற்றத்தோடு பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான முன்னேற்றமாக இருக்கும். அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசம், தன் அரசியல் விடுதலைக்காகப் போராடுவது நியாயமானதும், இயற்கையானதும் ஆகும். ஆனால் அவ்வரசியல் விடுதலை பண்பாட்டு விடுதலையை நோக்கி நகர்வதற்கான முதல்படி என்னும் புரிதல், மிகச் தேவையான ஒன்றில்லையா? பண்பாட்டிலேயே மிக உயர்ந்தது சமத்துவப் பண்பாடுதானே? சமத்துவத்திற்கு எதிரான வர்க்கம், சாதி உள்ளிட்ட பல கூறுகறை எதிர்த்துப் போராடுவதில் ஓர் ஒருங்கிணைவு நம்மிடம் ஏற்பட வேண்டாமா? காலப்போக்கில் பல புதிய விழிப்புணர்வுகளும், சில போர்க்குணங்களும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஆனால் அந்த விழிப்புணர்வு, சமத்துவம் மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்டிருக்கவில்லையே என்பது நம் ஆதங்கம்.

பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஜோன் டிரீஸ் ((Amartya sen & Jean Dreeze)) இருவரும் இணைந்து எழுதியுள்ள ‘‘An Uncertain Glory''(First Edition 2013) என்னும் நூல் தரும் செய்திகள் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம். "2012 டிசம்பரில், ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி, டெல்லியில், பாலியல் வன்முறைக்கு உள்ளான போது, பொதுமக்கள் கிளர்ந்து எழுந்தனர். இந்தியாவில் அரசியல் சிக்கலாகவே அது உருப்பெற்றது. மக்களின் இந்த அறச்சினம் (KAPP) வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மாணவியை, நடுத்தட்டு மக்கள் தங்களில் ஒருவராக மிக எளிதில் அடையாளப்படுத்திக் கொண்டனர். அதனால் அது பெரும் போராட்டமாக உருப்பெற்றது. ஆனால் இதனைப் போன்ற காட்டுவிலங்காண்டித் தனங்கள், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை. பொதுமக்களின் கோபத்தைக் கிளறவும் இல்லை.." -இவ்வாறு அந்த நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள வரிகளை அப்படியே சொல்லுக்குச் சொல் நான் மொழி பெயர்க்கவில்லை என்றாலும், அவர்களின் கருத்தைச் சிறிதும் மாற்றாமல் மேலே தந்துள்ளேன். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை நம்மால் உணர முடிகின்றது. தனிப்பட்ட மனிதர்களின் பாலியல் வன்முறைகள், வரம்பு மீறல்கள் ஆகியனவற்றைத் தாண்டி, வடநாட்டில் ‘காப்' (KAPP) பஞ்சாயத்துகளும், தென்னாட்டில் ‘சாதிப்' பஞ்சாயத்துகளும் எத்தனை கொடூரமான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. பெண்களை - குறிப்பாகத் தலித் பெண்களை - அடிப்பதும், உதைப்பதும், பொது இடத்தில் நிர்வாணப் படுத்துவதும், ‘கௌரவக் கொலை' செய்வதும் இன்றும் நடந்து கொண்டுதானே உள்ளன. அவை குறித்தெல்லாம், பொதுமக்களின் சினம், தீயாக மூண்டு எழவில்லையே ஏன்? ஏனெனில், அவையெல்லாம், வருண - சாதித் ‘தருமங்களாக' இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அமர்த்தியா சென்னின் நூல், வர்க்க அடிப்படையிலும் இன்னொரு வினாவை முன் வைக்கின்றது.

"2002 ஜுலை 30 - 31 ஆம் நாள்களில் நாட்டில் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டு. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள், அந்த நாள்களில், மின்சாரம் இன்றித் தவித்தனர். அப்போது நாடே கொந்தளித்தது. அந்தக் கோபத்தில் நியாயம் உள்ளது. ஆனால் அவர்களுள் 200 மில்லியன் மக்கள், நிரந்தரமாகவே, மின்சார இணைப்பு இல்லாமல், காலகாலமாக வாழ்ந்து வருகின்றனரே, அவர்களைப் பற்றி இங்கு ஒன்றுமே பேசப்படுவதில்லையே, ஏன்?" முதலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, வருணம் சார்ந்தது என்றால், இரண்டாவதாக உள்ள செய்தி, வர்க்கம் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், பல நேரங்களில், வருணமும், வர்க்கமும் பின்னிக்கிடக்கின்றன என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்றாசிரியர் டாயன்பீ கூறுவதுபோல, "உருவத்தில் சாதியாகவும், உள்ளடக்கத்தில் வர்க்கமாகவும்" (‘caste in form and class in content') இந்திய சமூக அமைப்பு உள்ளது. எனவே, ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும் (economic growth and social progress)என அவற்றைக் குறிப்பிடலாம்.

சமூக முன்னேற்றம் என்பது முழுக்க முழுக்க சமூக நீதியை (social justice) அடிப்படையாகக் கொண்டது. சமூக நீதிக் கோட்பாடு என்பதை, வெறுமனே இடஒதுக்கீடு (Reservation) என்று குறுக்கிப் பார்க்கும் போக்கு இங்கு உள்ளது. சமூக நீதி என்பது, வர்க்கம், சாதி, பால் முதலான பல்வேறு அடிப்படைகளில், மக்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு எதிரானது, சமத்துவத்தைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டது. ஆனால், இவை குறித்தெல்லாம் நம் பாடப்புத்தகங்களும், பாடத்திட்டங்களும் வாய் திறப்பதில்லை. சமூகநீதி தொடர்பான நீண்ட வரலாறு, தமிழகத்திற்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், தமிழ்நாட்டுக் கல்வி அதனை எடுத்துரைப்பதே இல்லை. இளைஞர்களும், பாடத்திட்டத்திற்கு வெளியே நூல்களைத் தேடிப் படிப்பதில்லை. படிப்பு முடிந்து, பணிகளுக்குச் சென்ற பின்னும், சமூக வரலாற்று நூல்களிலிருந்து விலகியும், அந்நியப்பட்டுமே நிற்கின்றனர்.

நாளேடுகள் தொடங்கி, கனமான நூல்கள் வரை, படிக்கும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. "எங்க சார் படிக்க நேரமிருக்கு. காலையில் வேலக்கிப் போனா, ராத்திரிதான் திரும்பி வரோம். ‘நெட்'டுல கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறோம். சனி, ஞாயிறு ரிலாக்ஸ் பண்ணவே சரியா இருக்கு" என்ற வெளிப்படையாகக் கூறும் இளைஞர்களும் உள்ளனர். அவர்கள் கூறும் அந்த நேரமின்மையைக் கருத்தில் கொண்டே, எட்டு மணி நேரம் மட்டும் வேலை என்கின்றோம். அதற்கும் கூட நம் இளைஞர்கள் சிலர் சினம் கொள்கின்றனர்.

இக்கட்டுரையின் முன்பகுதியில் குறித்துள்ளபடி, மருத்துவர்கள் உள்பட, உலகில் உள்ள அனைவருக்கும் எட்டுமணி நேர வேலையை வலியுறுத்துவீர்களா என்று கேட்கின்றனர். கண்டிப்பாக...யாராக இருந்தால் என்ன? எல்லோருக்கும் விதி பொதுவாகத்தானே இருக்க வேண்டும். விதிவிலக்காகச் சில நாள்களில், சில வேளைகளில் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி வரலாம். அதில் பிழையில்லை. ஆனால் அந்த விதிவிலக்கே, விதியாக ஆகிவிடக் கூடாது. உழைக்கவும், உறங்கவுமான நேரம் போக, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது ஓய்வு இருந்தால்தான்-, படிக்கவும், சிந்திக்கவும், பழகவும், உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். அப்போதுதான் மனித வாழ்க்கை பொருளுடையதாக ஆகும். மெதுவாக நம்மை இறுக்கிக் கொண்டிருக்கும் இயந்திரத் தன்மையிலிருந்து விடுபட்டு, மனிதத் தன்மையை நாம் தழுவிக் கொள்ள முடியும். கற்பது, பட்டம் பெறுவது, வேலையில் அமர்வது, பொருள் ஈட்டுவது, பொருளாதார நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது போன்றவையெல்லாம், வாழ்வின் ஒரு பகுதி என்றால், பொது அறிவை நோக்கிப் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, விளையாடுவது, இசையில், இலக்கியத்தில் தோய்வது, பிறருக்கு உதவுவது போன்றவைகள் இன்னொரு பகுதி இல்லையா! இரண்டில் ஒன்று போதும் என்று எவரும் முடிவெடுக்க முடியாது. இரண்டும் தேவை. முதல் பகுதியை நோக்கி எவரையும் நாம் தள்ள வேண்டியதில்லை. இயல்பாகவே எல்லோரும் அதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இரண்டாவது பகுதியும் வாழ்வில் இன்றியமையாதது என்பதைச் சிறிது சிறிதாக இன்றைய உலகமும், இளைஞர்களும் மறந்து கொண்டிருக்கின்றனர். மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்துவதற்காகவே, இப்போது இதுபோன்ற தொடர்கள் தேவையாக உள்ளன.

(மீண்டும் சந்திப்போம்) tamiloneindia.com 29 05 2014

Published in Tamil