18 02 2016 ‘ஓயாத அலைகள்-1′ நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது: (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-3) பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார். இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் போரில் தென்மராட்சிப் பகுதியில் தன்னுடனிருந்த சிறிய அணியுடன் சிறப்பாகச் செயற்பட்டு, தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இதன் பின்னர் 1993இல் அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்படும்வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக தினேஷ் என்ற பெயருடன் செயற்பட்டிருந்தார். இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் காரணமாக உணர்வு ரீதியாக மிகவும் பாதிப்படைந்திருந்தார்.போராளிகள் மற்றும் தளபதிகள் மத்தியில் நடந்த ஒரு ஒன்றுகூடலில் அவர் உரையாற்றியபோது, இயக்கத்தின் நிதிநெருக்கடி பற்றி விளக்கமளித்தார். போராளி களுக்கான நாளாந்த உணவுத் தேவைகள், உடைகள், பாவனைப் பொருட்கள், மருத்துவச் செலவு…
13 02 2017 “யுத்த நிறுத்தம் – பாதை திறந்தது”: ஓமந்தைப் காவலரணில் தமிழினி!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-2) இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டின் பெப்ரவரி மாதம். மழைக்காலம் முடிந்து பனித்தூறல் குறைந்து வசந்தகாலம் அரும்பத் தொடங்கியிருந்தது. வன்னிப் பெருநிலப் பரப்புக் காடுகளின் செழுமை மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.பெருமரங் களைத் தழுவிப் படர்ந்திருந்த கொடிகளில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களின் வாசனை காற்றிலே கலந்து எங்கும் பரவியிருந்தது.உளுவிந்தம் மரக் கொப்புகளில் தொங்குமான்கள் அச்சமின்றி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தன. உடும்புக் குட்டிகள் தமது வளைகளை விட்டு வெளியேறி உலவப் போய்க்கொண்டிருந்தன, புற்படுக்கைகளில் தெறித்துக் கிடக்கும் பனித்துளிகளில் தாகம் தீர்த்துக்கொண்டிருந்தன காட்டு முயல்கள்.காலை இளவெயிலில் தமது தோகையை விரித்துச் சிலுப்பிச் சிலுப்பிக் காயவைத்துக்கொண்டிருந்த கான மயில்களும் இரை தேடிப் புறப்பட்டிருந்த கானாங் கோழிகளும் புளுனிக் க கிடைத்த பேரமைதியின் சூழலில்…
08 02 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார். இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள்…
23 02 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4 ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! 1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது.எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள் தரப்பட்டன. அப்பாடசாலையின் சூழல் எனது பள்ளிப் பருவத்தின் பல நினைவுகளைக் கிளறச் செய்தது.பல போட்டி நிகழ்வுகளுக்காக எனது பாடசாலையிலிருந்து இந்துக் கல்லூரிக்குப் போயிருக்கிறேன். அந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.பெரிய மண்டபத்துடன் கூடிய அந்த மேடையில் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்,…