08 06 2017 புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23) • தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு• பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.• பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.• தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியிருந்தார்.தொடர்ந்து… கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காகச் சமூகத்தில் இளவயது திருமணங்கள் வேகமாக நடைபெறத் தொடங்கின. திருமணமாகாமலே இளவயது ஆணும்…
01 06 2017 தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22) ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்வைத்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதை இயக்கம் தவிர்த்துக்கொண்டது.அதன்பின் 2006 ஒக்டோபர் 28, 29 திகதிகளுக்கு மீண்டும் பேச்சுக்கள் ஒத்திவைக்கப்பட்டன.இதற்கிடையில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் இடம்பெற்ற விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலும் புலிகளால் சிங்கள மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல் நடவடிக்கைகளுமெனப் போருக்கான சாத்தியங்கள் கூடிவரத் தொடங்கியிருந்தன. 2006 ஜுலை 21ஆம் திகதி திருகோணமலையில் மாவிலாற்றின் நீர் விநியோகக் கதவுகள் புலிகளின் கட்டளைத் தளபதி சொர்ணத்தின் உத்தரவுக்கமைய மூடப்பட்டன.பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள விவசாயிகளின்…
25 05 2017 மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21) இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி’ என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார்.அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கிவிட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக்…
18 05 2017 பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20) • தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர யுத்தம்’ முன்னெடுக்கப்பட்டது.• முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.…..முன்னயை தொடரின் தொடர்ச்சி… வன்னியில் சில வாரங்களாகத் தங்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் பல முக்கியச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்.அப்போது அவரை உலங்கு வானூர்தியில் வழியனுப்பி வைப்பதற்காகப் பல பொறுப்பாளர்களும் அவரது வீட்டிற்கு…
15 05 2017 “படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19) போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.“சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக் கருக்களின் தலைப்புகளைக் கேட்பதே புலிகளுக்குத் தாங்க முடியாத ஒவ்வாமையை ஏற்படுத்தியது.இதன் காரணமாகச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எதுவுமே நேரடியாக மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதைப் புலிகள் விரும்பவில்லை.கிளிநொச்சியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த திட்டமிடல் செயலகத்தின் வழிகாட்டுதலுக்கமையவே, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியும் என்று புலிகளின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின்…