25 05 2017 மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21) இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டி’ என்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. ஒரு அரசியல் தீர்வைத் திணிப்பதன் மூலம் புலிகளின் ஆயுதங்களை அவர்களிடமிருந்து பிடுங்குவதற்குச் சர்வதேச சக்திகள் முனைவதாக அவர் குற்றம் சாட்டினார்.அவர்கள் விரித்த வலைக்குள் அன்ரன் பாலசிங்கமும் சிக்கிவிட்டதாக அவர் கருதினார். தமக்கு மரணம் ஏற்பட்டாலன்றி வேறு எந்தக் கட்டத்திலும் ஆயுதங்களைக்…
18 05 2017 பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20) • தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்’ என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான ‘சகோதர யுத்தம்’ முன்னெடுக்கப்பட்டது.• முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.…..முன்னயை தொடரின் தொடர்ச்சி… வன்னியில் சில வாரங்களாகத் தங்கியிருந்த அன்ரன் பாலசிங்கம் பல முக்கியச் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு லண்டன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தார்.அப்போது அவரை உலங்கு வானூர்தியில் வழியனுப்பி வைப்பதற்காகப் பல பொறுப்பாளர்களும் அவரது வீட்டிற்கு…
15 05 2017 “படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19) போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின.“சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை உருவாக்குதல்” என்ற அவர்களுடைய திட்ட எண்ணக் கருக்களின் தலைப்புகளைக் கேட்பதே புலிகளுக்குத் தாங்க முடியாத ஒவ்வாமையை ஏற்படுத்தியது.இதன் காரணமாகச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் எதுவுமே நேரடியாக மக்கள் மத்தியில் சென்று வேலை செய்வதைப் புலிகள் விரும்பவில்லை.கிளிநொச்சியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த திட்டமிடல் செயலகத்தின் வழிகாட்டுதலுக்கமையவே, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியும் என்று புலிகளின் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின்…
11 05 2017 “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18) வெருகலாற்றுக் கரையில் பெண் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். வன்னியிலிருந்து மாலதி படையணி பெண் போராளிகளும் தாக்குதலுக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.ஆயுதமேந்திய பெண்களின் வாழ்க்கையில் இது மோசமான கறை படிந்த நாட்களாயிருந்தன. கிழக்கு மாகாணப் பெண் போராளிகள் பாதுகாப்புத் தேடித் திக்குத்திசையற்று அலறியடித்தபடி வீதிகளில் ஓடியதும், அவர்களுடைய காயங்களுக்கு இலங்கை இராணுவத்தினர், முதலுதவியளித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்த கதைகளையும் நேரிலே கண்ட பொதுமக்கள் எம்மிடம் சொன்னபோது எதுவுமே பேசமுடியாமல் வாயடைத்து நின்றோம்.2009இல் முள்ளிவாய்க்காலில் அதே நிலைமை எமக்கும் வந்தபோதுதான் அந்த வலியின் கொடூரத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டுபோன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை…
08 05 2017 நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17) • ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது.• கடைசிக்கட்ட போரில் காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி மரணித்திருந்தனர்.• நாம் கிழக்கு மாகாணத்தில் மக்களைச் சந்தித்தபோது, அவர்கள் கொட்டிய பாச உணர்வுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.• “எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள். இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.தொடர்ந்து…… அதேவேளை சராசரி திருமண வயது கடந்த நிலையிலும், படுகாயமடைந்த நிலையிலும், அங்கவீனமுற்ற நிலையிலும் பல பெண் போராளிகள் திருமணமாகாமல் இருந்தனர்.இயக்கத்தின் இடைவிடாத வேலைப்பளுவில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த…