04 05 2017 அன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?? : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16) • கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. காரணம் என்ன??• இப்ப பாக்கிற ஆக்கள் முகத்தை திருப்பிக் கொள்ளுகினம், அல்லது ஏளனமா சிரிக்கினம். ‘இதுகள் உயிரோட வந்ததுக்கு சயனைட்டைக் கடிச்சிருக்கலாம்’ எனக்குப் பின்னால் இப்பிடியான குரல்களும் கேட்டன.• இயக்கத்தில் ஆண் பெண் போராளிகளுக்கிடையே காதல், திருமணம் போன்ற உறவுகளுக்கும் அனுமதி இருந்தது.• வயது வந்த ஆண் போராளிகள் தம்மைவிட மிகவும் வயது குறைந்த பெண் போராளிகளைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டனர்ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்“இருபது வருசமா இயக்கத்தில இருந்தன். எத்தினையோ சண்டையில காயப்பட்டன்,…
29 04 2017 மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15) 1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.“ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை. அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் முழுச்சுமையையும் தாங்கி நிற்பவர்களாகவும் மக்கள் இருந்தனர்.அவர்களுக்காகப் போராடுகின்ற நாங்கள் மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் மனங்களில் திருப்தியேற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்ற மனப்பாங்கு…
22 04 2017 இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14) • தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது.• பூநகரி சமரில் வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுமிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக் கொண்ட தாக்குதலணிகள் இந்தச் சமரில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.• தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள் வீர மரணமடைந்திருந்தனர்.• இராணுவத்தினரதும் புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத் தண்ணீரில் ஊறிப்போய் ஆங்காங்கு விறைத்துக் கிடந்தன. மழையில் கரைந்து கரைந்து சிவப்புக் குருதி தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.• பூநகரி சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை…
15 04 2017 இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -13) • மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது.• கேள்விகள் எதுவும் கேட்காது ‘வீரமரணம்‘ அடையும் வரை இயக்கத்துக்கு விசுவாசமாக போராட வேண்டும் என்பதே இயக்கத்தின் கட்டுப்பாடு!!• மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்தொடர்ந்து…வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.இந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.பெண் போராளிகளுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் நிர்வாகப் பொறுப்பு மாற்றங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் அவருக்கிருந்தது. புன்னாலைக்கட்டுவன் பெண்கள் நன்னடத்தைப் பண்ணைக்கு வருகை தந்த அவர் மிகுந்த…
08 04 2016 நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! ( ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -12) எமது பொறுப்பாளர் ஒருநாள் என்னை அழைத்து “நான் உங்களை ஒரு கிராம வேலைத் திட்டத்திற்குப் பொறுப்பாக அனுப்பப் போகிறேன். அங்கு உங்களுடன் இன்னொரு உறுப்பினர் மட்டும் இருப்பார் என்று கூறி எனக்கு அந்த வேலையைப் பற்றி விளங்கப்படுத்தினார்.அன்றைய தினமே எனது உடைமைகளுடன் அந்தக் கிராமத்திற்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன்.குருவியின் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய் போல இயக்கத்தில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே எனக்குத் தரப்பட்ட வேலை காரணமாக, எனக்குள் பயமும் கலக்கமும் ஏற்பட்டது.அதனைச் சரியாகச் செய்து முடிப்பது பற்றிய தீவிர யோசனைகளும் ஏற்பட்டன. கிளாலி கடற்கரையில் மகளிர் முன்னணியால் மாவீரர் சந்திரநாயகியின் பெயருடன் ஒரு தும்புத்…