16 03 2017 பிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள்!! (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8) • இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.• 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது.• பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.• யாழ்பாணத்தையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பூநகரி சங்குப்பிட்டிப் பாதையூடாக ஒரு பெரும் நகர்வு மேற்கொள்ளப்பட்டது.• இயக்கம் எதிர்பார்த்த வகையில் யாழ்ப்பாணத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாதிருந்த காரணத்தால் படையணிகள் மீண்டும் வன்னிக்குப் பின் நகர்த்தப்பட்டன………
11 03 2016 தமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு!!: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7) கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இயக்கம் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிக் காத்து வந்தது.1998இன் இறுதிப் பகுதியில் சுதந்திரப் பறவைகள்’ பத்திரிகையை வெளியிடும் பொறுப்பு தலைவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.முன்னர் பல தடவைகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பேசிய சந்தர்ப்பம் சுதந்திரப் பறவைகள் தொடர் பான சந்திப்பாகத்தான் அமைந்தது. பத்திரிகையில் புதிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு…
06 03 2016 ‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6) தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது. அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. அரசியல்துறையினால் மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.அரசியல்துறையின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி தாய், சேய் போசாஷாக்கு நிலையங்களும் மாணவர் விடுதிகளும் முன்பள்ளிகளும் குழந்தைகளுக்கான பகல் பராமரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டன. இவற்றை விடவும் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தப் பட்டன.வன்னியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமே ஒரு வழிகாட்டும் அமைப்பாகச் செயற்படவேண்டும்…
28 02 2017 தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5) ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன். தொடர்ந்து …………………. • ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்’ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது.• கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது!• பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.• ‘இது புளியங்குளம் அல்ல, புரட்சிக்குளம்’ நித்தியா…
23 02 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4 ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! 1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது.எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள் தரப்பட்டன. அப்பாடசாலையின் சூழல் எனது பள்ளிப் பருவத்தின் பல நினைவுகளைக் கிளறச் செய்தது.பல போட்டி நிகழ்வுகளுக்காக எனது பாடசாலையிலிருந்து இந்துக் கல்லூரிக்குப் போயிருக்கிறேன். அந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.பெரிய மண்டபத்துடன் கூடிய அந்த மேடையில் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்,…