08 02 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…: “புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு.. (பாகம்-1) தமிழினி (23.04.1972-18.10.2015) தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தவர்.தாய் சின்னம்மா. தந்தை சுப்பிரமணியம். பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த (1991) வேளையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, போராளியானார். இளவயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும் மக்களிடத் திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கினார். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்பு களிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள்…