23 08 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -31) வெலிக்கடை சிறைச்சாலையில்.. “சராசரி எட்டு அடி அகலம் கொண்ட அறையில் ஆறு பெண்களுடன் தள்ளப்படடேன்: இரவுகள் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தின… • புகையிலை மணமும் கஞ்சா வெறியுமாகக் கண்கள் சொருகிய நிலையிலிருந்த ஆண்கள் ஒவ்வொருவருக்கும் விலங்குபோட்டுப் பெரிய இரும்புச் சங்கிலியில் பிணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.• போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?• விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.தொடர்ந்து…. கொழும்பு சி.ஐ.டி.இல் 20.05.2009 தொடக்கம் 29.09.2009வரை நான் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பல்வேறுபட்ட விசாரணைகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தவர்களோடும் தங்கியிருந்தேன். போலி வெளிநாட்டு முகவர்கள், பணமோசடி…
10 08 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30 -நாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன். எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப சாதாரண உடையணிந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் குழுமியிருந்த ஒரு பெரிய அலுவலக அறையொன்றினுள் அழைக்கப்பட்டேன். பெரிய சுவரொட்டி போன்ற பேப்பர் ஒன்றை அதிகாரி ஒருவர் என்னிடம் காண்பித்தார்.அதில் இயக்கத் தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகள், துறைசார்ப் பொறுப்பாளர்களின் புகைப்படங்களும் அச்சுப் பதிக்கப்பட்டிருந்தன.அவற்றின் மீது பல அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. அதிலே இருந்த எனது புகைப்படத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.வரிச் சீருடையும் தொப்பியும் அணிந்திருந்த என் புகைப்படத்தின் மீது கேள்விக்குறி போடப்பட்டிருந்தது. அதிகாரிகள் பலர் என்னிடம் தமிழிலும் சிங்களத்திலும் பல கேள்விகளைக் கேட்டனர்.எனக்குச் சிங்கள மொழி கொஞ்சமும் புரியவில்லை. நான் எதுவும் பேசாமல் நின்றேன். அதன்பின்பு தமிழ்த் தெரிந்த ஒரு அதிகாரி என்னிடம் கதைத்தார்.“உங்கட…
27 07 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -29 சரணடைவும் சிறைச்சாலையும்: “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என கேலியாக அழுது காட்டிய இராணுவத்தினா்கள்!! • “இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது.• 18.05.2009 நள்ளிரவு ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்தைச் சென்றடைந்தோம். வாகனத்திலிருந்து இறக்கப்பட்டபின் அனைவரையும் ஒரு இடத்தில் அமர்ந்துகொள்ளும்படி கூறப்பட்டது.• தலைவர் கொல்லப்பட்ட காட்சிகள் அந்தப் புகைப்படங்களில் வெளியிடப்பட்டிருந்தது. “உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” எனக் கூறியதுடன் கேலியாக அழுதும் காட்டினார். மண்டபத்திலிருந்த அனைவரிடமும் சட்டென ஒரு சிறிய ஒலியெழுந்து அக்கணமே அடங்கிப்போனது.எனி…..தொடர்ந்து…. முள்ளிவாய்க்கால் வீதியுடாக வட்டுவாகல்பாலம் கடந்து முல்லைத்தீவின் மையப்பகுதியை நோக்கி மக்கள் வெள்ளம் போல் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த பாதையைத் தவிர்த்து வீதியின்…
16 07 2017 ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -(பாகம் -28) சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. • இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?• உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.• வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.கடற்புலிகளின்…
08 07 2017 (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27) மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! • கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.• இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.• “ஆமிக்காரனிட்டதான் போகப் போறம், என்ன செய்யப் போறீயள்? உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டம். இனி எங்கே போகச் சொல்லுறிங்கள், இனியும் என்னவாம் செய்யப் போறார் உங்கட தலைவர்?”• இப்போது இயக்கத் தலைமை காண்பித்த…