sep 2015

சிந்தனைத் துளிகள் பகுதி1

weduvaaikkal.wordpress.com /Pulendran

சிந்தனைத் துளி 1

தாயோடு அறுசுவை போம், தந்தையோடு கல்வி போம்
சேயோடு தான் பெற்ற செல்வம் போம், மாய வாழ்வு உற்றார் உடன் போம்,
உடன் பிறப்பால் தோல் வலி போம் கொற்றாளியோடு எவையும் போம்

**********************************************************

சிந்தனைத் துளி 2 எல்லாம் மகிழ்ச்சியே

நான் நல்லா இருக்கேன்
என் உடல், மனம், ஆன்மா நல்லா இருக்கு
என் குடும்பமும் நல்லா இருக்கு
என் தொழில் நல்லா இருக்கு
என் எதிர்காலம் நல்லா இருக்கு
எனக்கு மகிழ்ச்சிதான்
எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சிதான்

இந்த எண்ணங்களை முதலில் நம்பிக்கையுடன் மனதில் பதிய வையுங்க.அதெப்படி? எனக்கு எத்தனையோ பிரச்சனைகள், சிக்கல்கள் இருக்கும்போது எப்படி நம்ப முடியும்?
கேள்வி நியாயம்தான். அதற்காக பதில்களை பிறகு பார்க்கலாம்.இப்போ, நீங்க இந்த வாசகத்தை முழுமையா நம்பி மனதில் பதிய வையுங்க.
மகிழ்ச்சி நிச்சயம்.

டாக்டர். கோ. இராமநாதன்

**********************************************************

சிந்தனைத் துளி 3

எல்லோரையும் மதிக்க பழகுவோம்
கருத்தை கருத்தால் சந்திப்போம்
யார் யாரையும்துன்புறுத்தல் ஆகாது
மனித உயிர் மிக மிக உயர்வானது
அதை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை
உண்மை ஒரு நாளும் பொய் ஆகாது
பொய் சில நாட்கள் உண்மையாகும்
குற்ற வாளிகள் உறங்குவது இல்லை
உண்மை அவர்களை உறங்க விடாது

**********************************************************

சிந்தனைத் துளி 4

நாளைக்கு உங்களால்
நல்லதாகச் சிறப்பாகச் செய்ய முடியும்.
ஆனால் இன்று
கண் எதிரில் உள்ள கடமையையும்
சிறப்பாகச்செய்ய முடியுமே!

**********************************************************