19 05 2016

உடல் தேவைக்­கேற்ப தண்ணீர் பரு­கு­வது அவ­சியம்.!

கோடை காலம் வந்து விட்­டாலே வெயிலின் தாக்கம் அதி­க­ரித்து காற்றில் ஈரப்­பதம் குறைந்து சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்­படும். இதனால் உடல் ஆரோக்­கி­யத்தில் பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­படும். நம் உட­லுக்குத் தேவை­யா­ன­தை­விட தண்­ணீரை அதி­க­மாகக் குடிப்­ப­தாலும், குறை­வாகக் குடிப்­ப­தாலும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­களை விளக்கி, தேவை­யான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கிறார் உண­வியல் வல்­லுநர்.பொது­வாக, உணவில் உள்ள ஊட்டச் சத்­துக்கள் அனைத்தும் இரத்­தத்தில் கலந்­து­விடும். சோடியம் போன்ற உப்­புச்­சத்துப் பொருட்­களை அதிகம் சாப்­பி­டு­வதால், அவை ரத்­தத்தில் கலந்து சில நேரங்­களில் ஏதா­வது ஓரி­டத்தில் ரத்த நாளங்­களில் படிந்­து­வி­டக்­கூடும்.நாள­டைவில் அவை இரத்­தத்­தி­லேயே தங்கி, இரத்­தக்­கொ­திப்பு போன்ற பிரச்சினை வரக்­கூடும். சாப்­பிட்­டதும் ஒரு டம்­ள­ருக்குக் குறை­யாமல் தண்ணீர் குடிப்­பதால், உட­ன­டி­யாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழி­யாக வெளி­யே­றி­விடும்.

Read more...
04 05 2016

முறையான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் மனநோயாளிகளாக மாற வாய்ப்புள்ளது.!

தூக்கக் குறைபாடு பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது. 4 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும் குறட்டை, தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட தூக்கக் குறைபாடுகள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தூக்கத்தின் அவசியம்: உடலுக்கும், மனதுக்கும் ஓய்வை அளிப்பது தூக்கம் மட்டுமே. நன்கு ஆழ்ந்து தூங்கி விழித்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாகச் செயல்படுவார்கள். முறையான தூக்கம் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்துக்கு செலவழிக்கிறான். ஆனால் அந்த அவசரக் காலத்தில் தூக்கத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது.மூன்று நிலைகள்: தூக்க குறைபாட்டை ஆரம்ப நிலை, இடைநிலை, இறுதி நிலை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

Read more...
22 04 2016

கொலஸ்ட்ரோலுக்கு என்ன காரணம்?

நமது உடல் கொலஸ்ட்ரோலைத் தன்­னி­லி­ருந்தே உற்­பத்தி செய்து கொள்­கி­றது. நம் கல்­லீரல் நாளொன்­றுக்குச் சுமார் 1000 மில்­லி­கி­ராம்கள் வரை கொலஸ்ட்ரோலை உற்­பத்தி செய்­கி­றது.கல்­லீ­ரலும் மற்ற செல்­களும் சேர்ந்து இரத்­தத்தின் மொத்த கொலஸ்ட்ரோல் அளவில் 75% உற்­பத்தி செய்­கின்­றன.25% கொலஸ்ட்ரோல் நாம் உட்­கொள்ளும் உணவு வகை­க­ளான முட்டைக் கரு, மாமிசம், கோழி­யி­றைச்சி, பால் மற்றும் பால் தயா­ரிப்­பு­க­ளி­லிருந்து கிடைக்­கி­றது.
* அதிக அள­வி­லான கொழுப்­புகள் கலந்த உணவுப் பழக்கம்

Read more...

25 04 2016

தலைவலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.!

சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும்பொருட்களை கொண்டு தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.
10 அல்லது 15 பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
3 அல்லது 4 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை (ஆரஞ்சு, கரட், வெள்ளரி) மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.

virakesari.lk 30 03 2016
18 04 2016

சூலகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

பெண்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய புற்­று நோய்கள் பல உள்­ளன.அதில் மார்­பக புற்­றுநோய், கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய், சூல­கப்­புற்று நோய் என பல வகைகள் உள்­ளன. இதில் சூல­கப்­புற்று நோய் என்­பது கிட்­டத்­தட்ட நடுத்­த­ர­ வயதில் சூல­கங்­களில் ஏற்­ப­டக்­கூ­டியது. மற்­றைய உறுப்­புக்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய புற்று நோய்கள் போல் இல்­லாது சூல­கப்­புற்று நோய் எவ்­வித நோய் அறி­கு­றி­க­ளையும் காட்­டாது அமை­தி­யாக உரு­வெ­டுத்து வள­ரக்­கூடி­யது. ஆகையால், சூல­கப்­புற்று நோயை கண்­ட­றியும் போது சற்று தாம­த­மா­கிய பர­விய நிலை­யாக இருக்­கலாம். இதனால் இதற்கு சிகிச்­சைகள் வழங்கும் போது அதா­வது சத்­திர சிகிச்­சை­யாக இருந்­தாலும் சரி ஊசிகள் மூல­மான சிகிச்­சை­க­ளாக இருந்­தாலும் சரி எதிர்பார்த்த வெற்­றியை கொடுக்­காமல் விடலாம். சூல­கப்­புற்று நோய்களின் மிக ஆரம்ப நிலையை கண்­ட­றி­வது சிறந்த வெற்­றி­க­ர­மான சிகிச்­சையை வழங்க உதவும். இதன் மூலம் நோய் ஏற்­பட்ட பெண்­களும் நோயி­லி­ருந்து முற்­றாக விடு­ப­டக்­கூ­டி­ய­தாக உள்­ளது

Read more...

Page 5 of 15