10 05 2014

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம் 

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம். எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.

Read more...
07 05 2014

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும். மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம் அகன்று விடும். வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல் நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும்.

Read more...
25 04 2014

இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச் சுவையும் உண்டு. நன்கு சமிபாடடையக் கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப் படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகின்றது்காய்

அண்மைய ஆய்வுகள் வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளன. பல்வேறு வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க உணவு என்று நிரூபித்துள்ளார்கள். பொதுவாகவே காரம் மிகுந்த உணவை உட்கொண்டால் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிக நல்லது.

Read more...

 28 04 2014

வெந்நீரின் மகிமை

தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெந்நீரில் உள்ள பயன்கனை அறிந்திருக்கின்றோமா?

1. அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.

2. காலையிலேயே வெந்நீர் அருந்தினால் மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.

Read more...

Page 15 of 15