27 08 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 73) அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) யாழ். வன்முறைகள் நாடாளுமன்றில் எதிரொலித்தது 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை யாழில் நடந்தேறிய கொடும் வன்முறைகளின் எதிரொலி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது நாடாளுமன்றில் ஒலித்தது. குறித்த கலவரத்தில் தீவைத்து அழிக்கப்பட்ட தனது வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியிருந்த யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்தான் சந்தித்த பெரும் கொடூரத்தையும் தான் மயிரிழையில் உயிர் தப்பியமையையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். தன்னுடைய வீடும், வீட்டிலிருந்த சகல பொருட்களும் உடமைகளும் முற்றாக தீக்கிரையாகி விட்டிருந்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், அமைதியான வேளையில், எந்த நாகரீகமடைந்த நாடும் செய்யாத வகையில் வன்முறைத் தீயை அப்பாவி மக்கள் மீது நீங்கள்…
17 08 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 72) யாழ். நூலக எரிப்பும் எதிரொலியும் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் ‘க்ரன்ஸ்டட்’யாழ். பொது நூலக எரிப்பு பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் நடேசன் சத்தியேந்திரா, யாழ். நூலக எரிப்பை இலங்கை மக்களின் ‘க்ரன்ஸ்டட்’ (Kronstadt) என்று குறிப்பிடுகிறார். லூயிஸ் ஃபிஷர் தன்னுடைய ‘The God that Failed’ என்ற நூலில் ‘க்ரன்ஸ்டட்’ என்பது ஒரு திருப்புமுனை. கம்யூனிஸ்ட்கள், கம்யூனிஸத்தின் அடக்குமுறையை, வல்லாதிக்கப் போக்கின் கொடூரத்தை உணர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியதுடன், கம்யூனிஸ எதிர்ப்பாளர்களாகியதன் ஆரம்பப்புள்ளி என சுருக்கமாக விவரிக்கிறார். அதுபோலவே இலங்கைத் தமிழ் மக்களுடைய ‘க்ரன்ஸ்டட்’ திருப்புமுனையாக யாழ். நூலக எரிப்பு அமைந்தது. அதுவரைகாலமும் இருந்த எல்லாப்பிரச்சினைகளைத் தாண்டியும் நாடாளுமன்ற ஜனநாயக அரசியலினூடாக இனமுரண்பாட்டுக்குத் தீர்வு காணப்பட்டு, தாம் தமது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும்…
06 08 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 71) இலங்கை வரலாற்றின் மிகப்பெரும் இனரீதியான புத்தக அழிப்பு- என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தியாகராஜா சுடப்பட்டார் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தைப் பொறுத்த வரையில் விமர்சனங்களும் விசனங்களும் இருந்தாலுங்கூட, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், குமார் பொன்னம்பலம் கேட்டிருந்த தன்னுடைய தந்தையாரான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தொகுதியான யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைமை மறுத்துவிட்டது. இதன் காரணத்தினால், 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். அந்தத் தேர்தலின் பின் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி, 1978 ஆம் ஆண்டு அகில இலங்கைத்…
24 07 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 70) மாவட்ட அபிவிருத்தி சபைகளும் அரசியல் தீர்வும் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) நல்லெண்ணமா, சாணக்கியமா? 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்தின் மூலம், இலங்கை முழுவதுக்கும் மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் நிலவிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வொன்றைக் கோரிநின்ற தமிழ் மக்களுக்கு, தீர்வு வழங்கும் பொருட்டே ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் பொருளாதார அபிவிருத்தி மைய நோக்குடையதான உள்ளூராட்சி மன்றுகளின் வடிவிலேதான் இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகள் காணப்பட்டன. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவின் காலத்திலிருந்து அதிகாரப் பகிர்வுக்கான குரல் சிறுபான்மை இனங்களிடையே இருந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், அதனால் விளைந்த பயன் ஏதுமிருக்கவில்லை. மாவட்ட சபைகள் என்ற திட்டத்தைப்பற்றி…
14 07 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 69)- மாவட்ட அபிவிருத்தி சபைகள் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இராணுவக் கெடுபிடியும் அரசியல் தீர்வும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினதும் அவசரகாலச் சட்டத்தினதும் கோரத்தன்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இது தமிழ் மக்களின் வாழ்வைப் பெரும் அவலமாக மாற்றியது என்று சொன்னால் அது மிகைப்படுத்தலல்ல. பாதுகாப்பு அமைச்சானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கையிலே இருந்தபோதும் 1983 இலே ‘தேசிய பாதுகாப்பு அமைச்சு’ என்று தனி அமைச்சொன்றை உருவாக்கி, அதற்கு லலித் அதுலத்முதலியை அமைச்சராக நியமித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பான அதிகாரங்களை அந்த அமைச்சுக்கு வழங்கியதன் மூலம், தமிழ் மக்களை அடக்கியொடுக்கும் செயற்பாட்டை ஜே.ஆர் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் நடத்திக் காட்டியது. இந்த வரலாற்றை நாம் எதிர்வரும் அத்தியாயங்களில் விவரமாகக் காண்போம்.…