25 04 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 58) ஆயுதப் போராட்டமும் புதிய அரசியலமைப்பும் என்.கே.அஷோக்பரன் LLB (hons) ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள்“துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள், மிக இலகுவாக துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டதுடன், அவர்கள் உயிர் வாழத் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு, ஆயுதம் கொண்டு கொல்லப்பட்டதும் வரலாறு. அல்ப்றட் துரையப்பாவில் ஆரம்பித்த இந்த கொலைக் கலாசாரம் முடிவின்றி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. 1976-1977 காலப்பகுதியில் வடக்கு-கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் ஆயுதக் குழுக்களின் எழுச்சியை கட்டுப்படுத்துவதில் முன்னைய சிறிமாவோ அரசாங்கம் மட்டுமல்லாது, தொடர்ந்து வந்த ஜே.ஆர். அரசாங்கமும் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக வடக்கில் பொலிஸ் அணிகள் ஆயுதக் குழுக்களை சுற்றிவளைப்பதில் ஈவிரக்கமின்றி செயற்பட்டுக்கொண்டிருந்தன. இந்தத் தமிழ் இளைஞர்களின் ஆயுதக்…
15 04 2017 தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி -57) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியும் புதிய அரசியலமைப்பும் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 1978 பெப்ரவரி எட்டு முதல் 1979 ஒக்டோபர் 12 வரை இடம்பெற்ற சன்சொனி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்பதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் உள்ளிட்டதாக 952 பேர் சாட்சியமளித்தனர். 275 பேர் சத்தியக்கடதாசி ஊடாக சாட்சியமளித்தனர். சில நிறுவனங்கள் சட்டத்தரணிகளினூடாக தமது சாட்சியத்தைப் பதிவுசெய்தன. 277 பக்கங்களைக் கொண்டிருந்த சன்சொனி ஆணைக்குழுவின் அறிக்கையானது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். சன்சொனி ஆணைக்குழு அறிக்கை 1977 கலவரத்திற்கான அடிப்படைக்காரண கர்த்தாவாக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைக் குறிப்பிடும் வகையில் அமைந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மீது வளர்த்துவரும் வெறுப்புணர்வும் எதிர்ப்புணர்வும்தான் இந்தக் கலவரத்துக்கு அடிப்படை என்று சன்சொனி ஆணைக்குழு அறிக்கை…
05 04 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 56) 1977 இனக்கலவரத்தின் விளைவுகள் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) இலங்கை முழுவதும் தமிழ் மக்கள் பாதிப்பு 1958 இனக்கலவரத்துக்கு பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம் கிடைக்காதா என்று நினைத்தவர்களுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி கொடூரமான மாற்றத்தைத் தந்தது. 1977 ஓகஸ்ட் 15-16 ஆம் திகதிகளிலிருந்து இரண்டு வார காலங்களுக்கு நீண்ட இந்தக் கலவரத்தில் இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்த தமிழர்கள் உயிரிழப்புக்கள் உள்ளிட்ட பாரதூரமாக பாதிப்புக்களைச் சந்தித்தனர். இந்தக் கலவரம் எதிர்பார்க்கப்படாததல்ல என்று வோல்டர் ஷ்வார்ஸ் குறிப்பிடுகிறார்;. 'இலங்கையில் இனங்களுக்கிடையேயான உறவு கடும்சிக்கலான நிலையை அடைந்திருந்தது. அது எத்தகைய உரு எடுக்கும் என்பதுதான் கேள்வி' என்று அவர் எழுதினார். இனங்களுக்கிடையேயான முறுகல் நிலை இனக்கலவரம் என்ற…
25 03 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 55) 1977: மீண்டும் ஓர் இனக்கலவரம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தலைதூக்கிய வன்முறை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறையைப் பிரயோகித்தனர். இயற்கையாகவே இந்த வன்முறைத் தீயின் அடுத்த இலக்காக தமிழ் மக்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. இதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. வடக்கு - கிழக்கு தமிழர் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளெங்கும் ஜே.ஆரின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத வெற்றியையீட்டியிருந்தது. ஆனால் வடக்கு-கிழக்கு தமிழர் மண்ணில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி…
15 03 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 54) வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) தேர்தல் முடிவுகள் ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றி 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது மிகப்பெருங்கட்சியாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த 147 பேரில் வெறும் சிறிமாவோ பண்டாரநாயக்க, அநுர பண்டாரநாயக்க உட்பட எட்டுப் பேர் மட்டுமே வெற்றியீட்டியிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் மைத்திரிபால சேனநாயக்கவைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்விகண்டிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரத்ன, பதியுதீன் முஹம்மட் போன்றவர்களும் தோல்வி கண்டிருந்தனர். சிறிமாவின் ஆட்சியில்…