05 03 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 53) 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்: 5/6 பெரும்பான்மை பெற்ற ஜே.ஆரும் அமிர்தலிங்கமும் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான மக்களாணை ஐக்கிய தேசியக் கட்சி தனது 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'ஒரு சோசலிஸ ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் இலக்கின் நிமித்தமாக புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கவும் ஏற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும்' மக்களாணையை வேண்டியது. மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையானது அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் அமைப்புமுறை பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. அத்தோடு புதிய அரசியலமைப்பின் ஊடாக அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் எனவும், ஒவ்வொரு குடிமகனினதும், அவர் சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, எந்த மதத்தை, இனத்தை, சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும், அவரது அடிப்படை மனித உரிமைகள்…
25 02 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 52) 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலும் தமிழ் மக்களும் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த வேளையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலாசார, சமூக, பொருளாதார, தேசிய ரீதியிலான அமைப்புசார் சீர்திருத்தங்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் சகல மொழிப்பிரச்சினைகள் உள்ளிட்ட அமைப்புசார் சீர்திருத்தங்கள் பற்றி அரசாங்கத்துக்கு அறிவுறுத்தவும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் அவை பற்றிய நடவடிக்கைகள் எடுப்பதற்குமான சகல தேசியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரச ஆலோசனைச் சபை அமைக்கப்படும் என்று கூறியது. அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ்…
15 02 2017 தமிழ் மக்களின்அபிலாஷைகள் என்ன? பகுதி - 51 - 1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: வெற்றியை நோக்கி ஜே.ஆர் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தோல்விகளின் காரணம் என்ன என்று தேடிய ஜே.ஆர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டட்லி சேனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த படுதோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு ஜே.ஆரிடமிருந்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வி வெட்கக்கேடானதொரு தோல்வியாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அரசியலில்…
05 02 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 50) தமிழ்த் தலைவர்கள் மூவரின் மறைவு என்.கே.அஷோக்பரன் LLB (Hons)முருகேசன் திருச்செல்வம் மறைவு அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான 'ட்ரயல்-அட்-பார்' வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார் நாயகம் (சொலிஸிட்டர் ஜென்ரல்) முருகேசன் திருச்செல்வம் 1976 நவம்பர் 23 அன்று தனது 69 ஆவது வயதிலே காலமானார். சுதந்திர இலங்கையில் அமைச்சுப் பதவி வகித்த முதலாவது தமிழரான இவர், தனது மிதவாதப் போக்கினால் குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தில் பெரும் அபிமானம் பெற்றவராக விளங்கினார். அவருடைய அரசியல் நிலைப்பாடுகளோடு முரண்படுபவர்கள் கூட, அவருடைய சட்டத் திறன் பற்றி மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கையின் சட்ட வரலாற்றில் பெயர் குறிப்பிடத்தக்க தமிழ் வழக்கறிஞர்களுள் முருகேசன் திருச்செல்வமும் ஒருவர். இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டத்துறையில் முருகேசன்…
25 01 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-49) தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க 'ட்ரையல்-அட்-பார்' வழக்கு என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ்த் தலைவர்கள் கைதுதமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF) மாநாட்டில், 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்ட பின்னர், அதனை மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மும்முரமாக இருந்தார்கள். தமிழர்களுக்கு தனியரசு கோரும் 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' பிரதிகள் துண்டுப்பிரசுரமாக மக்களுக்கு வழங்கப்பட்டன.இந்நிலையில் 1976 மே 21 ஆம் திகதி தேசத்துரோகத் துண்டுப்பிரசுரங்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் விநியோகித்தமை என்ற குற்றங்களின் பேரில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அதன் பொதுச் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், சாவகச்சேரித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம், ஊர்காவற்றுறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ரட்ணம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச்…