15 01 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 48) வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) திருப்புமுனைஇலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றின் 1976 மே 14 ஆம் திகதி முக்கியமான நாள். யாழ். வட்டுக்கோட்டை, பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் ஐக்கிய முன்னணியின் தேசிய மாநாட்டில் தமிழ் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக (TULF) பெயர் மாற்றம் பெற்றதோடு, தனிநாட்டுக்கான 'வட்டுக்கோட்டைத் தீர்மானமும்' இங்குதான் நிறைவேற்றப்பட்டது. இது நடந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதன் வழியில் அமைந்த தமிழர் அரசியலையும் திரும்பிப் பார்க்கையிலே தமிழர்களின் அரசியலில் 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' என்பது பெரும் திருப்பு முனையாக அமைந்தது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. சில விமர்சகர்கள் இது திருப்புமுனையல்ல‚ மாறாக தமிழ் அரசியல் தலைமைகளின்…
05 01 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-47) இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் என். கே. அஷோக்பரன் LLB (Hons) லங்கா சமசமாஜக் கட்சியின் பதிலடிலங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான கலாநிதி என்.எம்.பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, லெஸ்லி குணவர்த்தன ஆகியோர் பிரதமர் சிறிமாவோவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டனர். ஆரம்ப காலங்களிலிருந்தே இடதுசாரிகள் இருபெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கையற்றே இருந்தனர்.1962 இல் நாடாளுமன்ற உரையொன்றில் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியையும் பற்றிக் குறிப்பிட்ட கலாநிதி கொல்வின் ஆர். டீ. சில்வா, 'அழுக்குகளில் தரம் கூடிய அழுக்கு, தரம் குறைந்த அழுக்கு என பிரித்துப் பார்க்கும் வல்லமை எனக்கில்லை' என இருபெரும் கட்சிகளையும் „அழுக்குகள்... எனச் சாடிப்…
30 12 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 46) வெற்றிக்காக காய் நகர்த்த தொடங்கிய ஜே.ஆர் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பதவி விலகிய ஜே.ஆர்ஜே.ஆர் என்று பிரசித்தமாக விளிக்கப்படும் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு வந்ததிலிருந்து, சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கடும் சவாலைக் கொடுக்கத் தொடங்கியது. 1977இல் ஆட்சியைப் பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் புரிந்துகொண்டிருந்த ஜே.ஆர், 1975ஆம் ஆண்டு மே மாதம் தேசிய அரசுப் பேரவையிலிருந்து (சட்டவாக்கசபை) பதவி விலகினார். கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியிலிருந்து தேசிய அரசுக் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே.ஆர் பதவி விலகியதன் காரணமாக, இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை உண்டானது. அன்றிருந்த சூழலில் இடைத்தேர்தல்கள், அரசாங்கத்துக்குச் சாதகமாக இருக்கவில்லை. இடைத்தேர்தல் தோல்விகள் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள்…
20 12 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 45) கச்சதீவு': சிறிமாவோவின் இராஜதந்திர வெற்றி என்.கே.அஷோக்பரன் LLB (Hons) உணர்ச்சி அரசியல் அல்ஃப்றட் துரையப்பாவின் படுகொலைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழரசுக் கட்சித் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்ததாகவே பலரும் கருதினர். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் 'தளபதி' என்றறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இந்த ஆயுதக் குழு இளைஞர்களோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார் என்று, அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், எந்த ஆயுதக்குழுவோடு அவர் தொடர்புபட்டார் எனப் பேசப்பட்டதோ, அதே குழுவினரால் 1989ஆம் ஆண்டு அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதுதான் வரலாறு. அல்ஃப்றட் துரையப்பாவில் தொடங்கிய தமிழர் அரசியல் படுகொலை வரலாறு, பின்னர் நீண்டு விரிந்தது. இந்த அனைத்துப் படுகொலைகளுக்குப் பின்னும் சில பல நியாயங்கள் சொல்லப்பட்டன. இவற்றை ஏற்போரும் உள்ளனர், மறுப்போரும் உள்ளனர்.…
10 12 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 44) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை என்.கே.அஷோக்பரன் LLB (Hons) காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள்சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில் கடுமையாக உழைத்தனர். இந்த இளைஞர்கள், தமது சுதந்திர தமிழீழக் கனவை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க அருமையாக சந்தர்ப்பமாக இதைக்கருதினர். மறுபுறத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் சார்பில் களமிறங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பொன்னம்பலம், பிராந்திய தன்னாட்சி என்ற விடயத்தைப் பற்றிப் பேசினார். ஆனால், அரசாங்கம் இதனை ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. 1975ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி, காங்கேசன்துறை இடைத் தேர்தல் நடந்தது. பதிவு செய்யப்பட்ட 41,227 வாக்காளர்களில் 35,737 வாக்காளர்கள், தமது வாக்கினை அளித்திருந்தார்கள். அதாவது…