30 11 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 43) தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கதாக அமைந்த காங்கேசன்துறை இடைத்தேர்தல் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) யாழ். பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்து வைத்த சிறிமாவோஅரசாங்கத்தின், தமக்கெதிரான திட்டமிட்ட தொடர் அநீதிகளாலும் ஓரவஞ்சனையினாலும் கொதித்தெழுந்த தமிழர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம், பிரதமர் சிறிமாவுக்கு ஏற்பட்டிருந்தது. தெற்கிலும் சிறிமாவோ அரசாங்கத்தின் பிரபல்யம் குறைவடைந்து கொண்டே வந்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, டட்லி சேனநாயக்கவின் மரணத்தின் பின்னர் அதன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கீழ் மிகச் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.  இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகமொன்றை உருவாக்குவது தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் என, சிறிமாவோ அரசாங்கம் எண்ணியிருக்கலாம். அதிரடி வேகத்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அமைத்த பரமேஸ்வராக் கல்லூரி, யாழ். பல்கலைக்கழக வளாகமாக மாற்றியமைக்கப்பட்டு, 1974 ஓகஸ்ட் 1ஆம்…
20 11 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 42) தமிழாராய்ச்சி மாநாட்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் படலம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் ஆயுதக் குழுக்களின் வரலாறு, தனித்து ஆராயப்பட வேண்டிய ஒரு பரப்பு. இதுபற்றிக் குறிப்பிடத்தக்க சுதந்திர ஆய்வுகள் ஏதும் இல்லை. ஒரு புறத்தில், ஆயுதக்குழுவுக்குச் சார்பான பிரசாரங்களும், மறுபுறத்தில் ஆயுதக்குழுக்களுக்கு எதிரான பிரசாரங்களுமே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் ஆயுதக் குழுக்களின் உருவாக்கம், டட்லி-செல்வாவின் தோல்வியின் பின்னரான காலப்பகுதியிலேயே இடம்பெற்றது. சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் அவரது 'தோழர்களின்' அரசாங்கம், தமிழர்கள் மீது காட்டிய மெத்தனப்போக்கு, இந்தத் தமிழ் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்கு உரமிட்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சிறு குழுக்கள், சிறியளவிலான வன்முறைச் சம்பவங்கள் மூலம் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்தன. பஸ்களை எரித்தல், வங்கிக்கொள்ளை, நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தல்…
10 11 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 41) இளைஞர்களும் ஆயுதக்குழுக்களும் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 1969ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே, இளைஞர்களைக் கொண்ட சிறு சிறு விடுதலைக் குழுக்கள் ஆங்காங்கே உருவாகியிருந்தன. சிறிமாவோவின் ஆட்சியின் கீழ் முதலாவது குடியரசு யாப்பு, தரப்படுத்தல் என்பவற்றின் பின், தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட எழுச்சியும், எதிர்ப்புணர்வும் இந்த விடுதலைக் குழுக்களுக்கு வலுச் சேர்த்தன. 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்புக்கு, சில தமிழ்த் தலைவர்கள் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அந்தத் தலைவர்களின் சிலரைக் கொல்லும் முயற்சிகள் சில ஆயுதக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வி கண்டதாக சில பதிவுகள் உண்டு. தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய, இந்த விடுதலை வேண்டும் ஆயுதக் குழுக்கள், ஒரு திட்டமிட்ட வகையில் உருவாகியிருக்கவில்லை. ஆங்காங்கே வேறுபட்ட குழுக்கள் வௌ;வேறு காலகட்டங்களில் தோன்றியிருந்தன. இந்த கட்டுரைத்…
31 10 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 40) பிரிவினைக்கு வித்திட்ட 'தரப்படுத்தல்'' என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது, தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். தொடக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். தொழில்நுட்பக் கல்வியும் உயர் தொழிற்கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது, யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்' - சரத்து 26 (1) - மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்.பல்கலைக்கழக அனுமதி தொடர்பில், சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 'தரப்படுத்தல்' கொள்கை, தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர்களைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே மொழியுரிமை பறிக்கப்பட்ட நிலையில், தமக்கான அரசாங்க வேலைவாய்ப்பு கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையில், விரக்தியடைந்திருந்த தமிழ் இளைஞர்களுக்கு, இந்தத் 'தரப்படுத்தல்' நடவடிக்கையானது கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. தமிழ் இளைஞர்கள்…
17 10 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 39) தரப்படுத்தல்' எனும் ஓரவஞ்சனை என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் நிலை1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி, சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம் அமைத்த அரசியலமைப்புப் பேரவையினால் உயிர்கொடுக்கப்பட்டு, முதலாவது குடியரசு யாப்பு அமுலுக்கு வந்தது. தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகிய இந்தப் புதிய அரசியலமைப்பு, அதன் சட்டவாக்கத்துறையிடம் அதிகாரங்களைக் குவித்தது. முதலாவது குடியரசு யாப்பின் கீழான சட்டவாக்க சபையான 'தேசிய அரசு சபைக்கு' எத்தகைய சட்டத்தையும் உருவாக்கத்தக்க வலு இருந்ததுடன், நீதித்துறையின் நீதி மறு ஆய்வு அதிகாரமும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள், அரசியலமைப்புப் பேரவையைப் புறக்கணித்திருந்தனர், இந்திய வம்சாவளி மக்களுக்கு அரசியலமைப்புப் பேரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டேயிருக்கவில்லை. ஆகவே, தமிழர்களைப் புறக்கணித்த, தமிழர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியலமைப்பாகவும், சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும்…