30 07 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 29) ஸ்ரீமாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது என்.கே.அஷோக்பரன் LLB (Hons) '1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்''டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் என்ன செய்வது என்ற நிலையறியாது நிற்கும் சூழல் காணப்பட்டது. 'கனவான்' அரசியல்வாதி என்று பரவலாக அறியப்பட்ட டட்லி சேனநாயக்கவே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்ட பின், இனி எந்த சிங்களத் தலைமையைத்தான் தமிழர்கள் நம்புவது என்ற நிர்க்கதி நிலையைத் தமிழ்த் தலைமைகள் எதிர்கொண்டன.1970ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மே 27ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என முடிவானது. அன்று, பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் 5,505,028பேர் இருந்தனர். 151 ஆசனங்களுக்காக 441 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலைப் பொறுத்தவரை, ஸ்ரீமாவோ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளான…
23 07 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 28)  தோல்வியடைந்தது 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) 'வெறுங்கனவாகிப் போன மாவட்ட சபைகள்' மாவட்ட சபைகள் பற்றிய வெள்ளை அறிக்கையும், அது பற்றிய சிங்களத் தலைமைகளின் அணுகுமுறையும் தமிழரசுக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது. மீண்டுமொருமுறை இந்த நாட்டின் அரசாங்கத்தினால் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணம் தமிழரசுக் கட்சியினரிடையே ஏற்பட்டது. தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எழுதரப்புக் கூட்டணியில் தொடர்வதற்கான எதிர்ப்பு தமிழரசுக் கட்சியினுள் உருவானது. தமிழரசுக் கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் இணைந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற அழுத்தம் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு வழங்கப்பட்டது.1968 ஜூலை 18ஆம் திகதி இடம்பெற்ற சிம்மாசன உரையில் 'மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்ட மாவட்ட…
16 07 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 27) மீண்டும் ஏமாற்றம் என்.கே.அஷோக்பரன் (LLB Hons) 'மாவட்ட சபைகள் வரைவு'மாவட்ட சபைகள் பற்றிய சட்ட வரைவு, அமைச்சர் திருச்செல்வத்தால் உருவாக்கப்பட்டிருப்பினும், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அல்லது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடியதொன்றாக அது இருக்கவில்லை. ஓர் உள்ளூராட்சி அமைப்பின் வடிவத்தை ஒத்ததாக அமைந்த அது, மத்திய அமைச்சர்களினால் கட்டுப்படுத்தக்கூடியதாக இருந்தது. இது நிச்சயம், தமிழ் மக்கள் எதிர்பார்த்த அதிகாரப்பகிர்வு அல்ல. அன்றைய தமிழ் ஊடகப்பரப்பில் இது 'மா-வட்ட-சபை' அதாவது பெரிய வட்டம், அதாவது சூனியம் - தமிழ் மக்களுக்கு ஒன்றுமே தராத சூனிய சபை என்று விமர்சிக்கப்பட்டது. இந்த வரைவுபற்றிய தகவல் வெளியே கசிந்தபோது, அது தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடம் கூட கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.இலங்கை தமிழரசுக் கட்சியானது, டட்லி சேனநாயக்க ஆட்சி…
09 07 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 26) கசக்கத் தொடங்கிய தேனிலவு 'டட்லிகே படே, மசாலா வடே''டட்லிகே படே, மசாலா வடே' ('டட்லியின் வயிற்றில், மாசாலா வடை') என்பது 1965 முதல் 1970 வரையாக டட்லி சேனநாயக்க தலைமையிலான ஏழுதரப்புக் கூட்டணியை விமர்சிக்க, எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய இனத்துவேசம் மிக்கதொரு சொற்றொடர். 'மசாலா வடை' என்பது தமிழர்களின் உணவுப் பண்டமாகவே பொதுவாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள், சட்ட ஒழுங்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த விமர்சனம் கடுமையாக முன்வைக்கப்பட்டது. இதில் உணவுப் பண்டமொன்று குறிப்பிடப்படுவதற்கு இன்னொரு சுவாரஷ்யமான காரணமும் உண்டு. அது டட்லி சேனநாயக்கவின் உணவுக்கான வேட்கை. டட்லி சேனநாயக்க பற்றி எழுதிய பலரும், அவரது போஜனப் பிரியம் பற்றியும் எழுதத் தவறவில்லை. பிரதமர் டட்லியின் உணவுப் பிரியத்தையும், இனத்துவேசத்தையும் ஒன்றுபடுத்தி உருவான…
02 07 2016 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி- 25) உட்பூசல்களும் முரண்பாடுகளும் பிளவுகளும் 1968 மாவிட்டபுரம் கோவில் நுழைவுப் போராட்டம்தமிழர்கள், பெரும்பான்மைச் சிங்களவர்களிடையே தமக்கான உரிமைக்காகப் போராடிய வேளையில், தமிழர்களுக்குள் காலங்காலமாகச் சாதிரீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள், சாதிரீதியில் உயர்ந்ததாகக் கருதிய மக்களிடம் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடினர். இந்தப் போராட்டத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள், காலப்போக்கிலே, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமாக மாறின. தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இது சார்ந்த வழக்குகளில் வாதாட பெரும்பாலும் உயர்குழாமைச் சேர்ந்தவர்களாக இருந்த தமிழ் வழக்கறிஞர்கள் தயாராக இல்லாத போது, தெற்கிலிருந்து சிங்கள வழக்கறிஞர்கள் வந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடிய நிலையும் இருந்தது. இது, தமிழ் இனத்தின் அசிங்கமானதொரு குறுக்குவெட்டு முகம். சாதிய ஏற்றத்தாழ்வுகளாலும், பாகுபாட்டினாலும் தமிழினம் இழந்தது…