25 09 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 77) நாடாளுமன்றத் தேர்தலா? ஜனாதிபதித் தேர்தலா? என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக இனப்பிரச்சினை தொடர்பில் சாதகமான தீர்வொன்றினைக் கண்டுவிட முடியும் என அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முழுமையான நம்பிக்கையோடு செயற்பட்டது.அதனால், ஜே.ஆர் அரசாங்கத்துக்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதையும் முடிந்தவரை தவிர்க்க நினைத்தது. கிருஷ்ணா வைகுந்தவாசனின் தமிழீழப் பிரகடன விடயத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டதும் உமா மகேஸ்வரன் - பிரபாகரன் நாடு கடத்தல் விவகாரத்தில் அமைதி காத்ததும் தனிநாட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் இளைஞர் சக்திகளின் அழுத்தத்தை இலாவகமாகத் தவிர்த்து வந்ததும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைமை, ஜே.ஆர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மூலமாக இணக்கப்பாடான தீர்வொன்றை எட்டிவிட…
17 09 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 76) இணக்க வழியா, தனி வழியா? என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ஜே.ஆர் எனும் மாக்கியாவலியின் ‘இளவரசன்’ ஜே.ஆரின் தந்திரோபாயங்களும் இராஜதந்திரங்களும் அவரது அரசியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் சிக்கலைத் தரக்கூடியதாக இருந்தது. ஒரு விடயம் தொடர்பில் அவரது உண்மையான நிலைப்பாடு எது என்பதைத் தெரிந்துகொள்வது மிகக் கடினமானதொன்றாகவே இருக்கிறது. 1981ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்காது, இனவெறியைக் கக்கிக்கொண்டிருந்த அமைச்சர் சிறில் மத்யூ உள்ளிட்டவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது, அவர்களைத் தொடர்ந்து அந்த இனவாதக் கைங்கரியத்தைச் செய்ய அனுமதித்துக்கொண்டு, அதேவேளை வன்முறையில் ஈடுபட்டவர்களை “இவர்கள் என்ன வகையான மிருகங்கள்?” எனப் பகிரங்கமாக ஒரு மேடையில் பேசக் கூடிய ஒன்றுக்கொன்று முரணான நடவடிக்கைகளைச் செய்தவர் ஜே.ஆர். 1981 செப்டெம்பர் நான்காம்…
10 09 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 75) பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம் என்.கே. அஷோக்பரன் LLB (Hons) யாழ்ப்பாணத்தில் 1981 மே 31 இல் தொடங்கிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், ஆகஸ்ட் மாதத்தில் நாடெங்கிலும் பரவலடைந்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றியதோடு, நாட்டிலே பேரினவாத வெறியைக் கட்டவிழ்த்து விட்டிருந்த ஜே.ஆர் அரசாங்கத்துக்கு ஒரு சங்கட நிலை உருவாகிக்கொண்டிருந்தது. அந்நிலை, ஜே.ஆர் அரசாங்கம் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு தற்காலிகமாகவேனும் சமரசமொன்றைச் செய்துகொள்ள வேண்டிய ஒரு சூழலை உருவாக்கியது. இலங்கையில் பொதுவாக்குரிமை (வயது வந்த சகலருக்கும் இன, மத, மொழி, சாதி, கல்வித்தகைமை, தொழில், பால் என எவ்வேறுபாடுமின்றி வாக்குரிமை) டொனமூர் அரசியலமைப்பின் படி 1931 இல் இலங்கையின் அன்றைய…
03 09 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 74) பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம்என்.கே. அஷோக்பரன் LLB (Hons) களநிலவரஆய்வுயாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின.குறிப்பாக, ஆசியாவின் பெரும் நூலகங்களில் ஒன்றாகத் திகழ்ந்த யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டமையானது, உலகளவில் பரபரப்பான விடயமாகப் பார்க்கப்பட்டது. அதுவரை இலங்கை இனப்பிரச்சினை பற்றி, உலகின் கவனம் பெரிதாக ஈர்க்கப்படவில்லை, ஆனால், யாழ். நூலக எரிப்பு உட்பட யாழில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்கள், உலகின் பல முக்கிய ஊடகவியலாளர்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் கல்வியியலாளர்களையும் அரசியல் பிரமுகர்களையும் யாழுக்கு அழைத்து வந்தன.அவர்கள், கலவர பூமியின் களநிலவரத்தைக் காண வந்தார்கள். இலண்டன் ‘நியு ஸ் ரேற்ஸ்மன்’…
27 08 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 73) அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) யாழ். வன்முறைகள் நாடாளுமன்றில் எதிரொலித்தது 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை யாழில் நடந்தேறிய கொடும் வன்முறைகளின் எதிரொலி நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது நாடாளுமன்றில் ஒலித்தது. குறித்த கலவரத்தில் தீவைத்து அழிக்கப்பட்ட தனது வீட்டிலிருந்து தனது குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்தப்பியிருந்த யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்தான் சந்தித்த பெரும் கொடூரத்தையும் தான் மயிரிழையில் உயிர் தப்பியமையையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார். தன்னுடைய வீடும், வீட்டிலிருந்த சகல பொருட்களும் உடமைகளும் முற்றாக தீக்கிரையாகி விட்டிருந்ததாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், அமைதியான வேளையில், எந்த நாகரீகமடைந்த நாடும் செய்யாத வகையில் வன்முறைத் தீயை அப்பாவி மக்கள் மீது நீங்கள்…