Easy Facebook Share Button

நீரிழிவும் பார்வைக் குறைபாடும்

26 02 2016 

நீரிழிவும் பார்வைக் குறைபாடும்

நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தெற்காசியாவில் மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் பார்வைக் குறைபாடு தொடர்பான சிக்கல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. பார்வைக் குறைபாடுகளில் டயாபடீக் ரெட்டினோபதி எனப்படும், நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வைக் குறைபாடு, மூன்றாம் இடத்தில் உள்ளது. பொதுவாக பார்வைக் குறைபாட்டைப் பொறுத்தவரை கண்புரை நோயால் பாதிக்கப்படுவோர் அதிகம். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது க்ளூக்கோமா எனப்படும் கண் நீர் அழுத்தத்தால் ஏற்படும் பார்வைக் குறைபாடு. இதற்கடுத்து வருவது டயபடீக் ரெட்டினோபதி. மேற்கூறிய மூன்று வித பார்வைக் குறைபாடுகளும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிப்பட்டால் பார்வையிழப்பிலிருந்து பாதுகாக்க இயலும். அதற்கான அனைத்து நவீன வசதிகளும் தற்போது வந்துவிட்டன. கண்ணைப் பரிசோதிக்கும்போதே, கண்ணின் பார்வைத் திறன் கணக்கிடப்படுகிறது.

 பார்வைக் குறைபாட்டை என்.பி.டி.ஆர். என்ற அளவீடுகளாலும், பி.டி.ஆர். என்ற அளவீடுகளாலும் குறிப்பிடுவார்கள். இதில் என்.பி.டி.ஆர். என்ற அளவீடுகளுக்குள் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டால், கண்ணாடி, கண்டெக்ட் லென்ஸ், சத்திர சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பார்வைக் குறைபாட்டை நிவர்த்தி செய்து, அவர்களை பார்வையிழப்பிலிருந்து பாதுகாக்க இயலும். எனவே, நீரிழிவு நோய் இருக்கிறது என்று சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் கண் மருத்து வரை அணுகி, ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம்.

கண் சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் அமர் அகர்வால்

தொலைபேசி எண் 00 91 94444 48616

மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தகவல் : சென்னை அலுவலகம்

virakesari.lk 18 01 2016