22 09 2016

கொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்

மார­டைப்பு ஸ்ரோக் முத­லான உயிர்க்­கொல்லி நோய்கள் பற்றி உரை­யா­டும்­போ­தெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்­றிய அச்சம் இன்­று­ ப­ல­ரிடம் பர­வ­லாக இருப்­பதை காண்­கிறோம்.இதனால் கொழுப்பு உண­வுகள் எல்­லா­வற்­றையும் கட்­டுப்­ப­டுத்த ஆரம்­பிக்­கிறோம். முட்டை, பால் ,இறைச்சி உள்­ளிட்ட பல உண­வு­களை தவிர்க்­கின்றோம்.இதனால் எமக்கு அத்­தி­யா­வ­சி­ய­மாக தேவைப்­படும் புரதம் மற்றும் நுண்­போ­ச­னை­களை இழந்­து­வி­டு­கிறோம் என்­பதை பற்றி சிந்­திக்க மறந்து விடு­கிறோம்.உல­க­ம­ய­மா­த­லுடன் ஏற்­பட்ட சில தப்­பான புரி­தல்­களே இதற்கு கார­ண­மாக இருக்­கி­றது.சுகா­தார கல்வி அறி­வூட்­டலின் தவ­றான விளை­வு­களும் கூட இதற்­கான காரணம் எனலாம்

நாம் உண்ணும் கொழுப்பு உண­வுக்கும் கொலஸ்ட்­ரோலின் அளவு அதி­க­ரிப்­புக்­கு­மி­டையே நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தாக சொல்­லப்­ப­டு­கின்ற போதிலும் இது எவ்­வாறு ஏற்­ப­டு­கின்­றது என்­பது பற்­றிய தெளிவு இல்லை.உடற்­கொ­ழுப்பை கொழுப்பு உணவு அதி­க­ரிப்­ப­தனால் நீரி­ழிவு, உயர்­கு­ருதி அழுத்தம் என்­பன ஏற்­ப­டு­வ­தனால் இதன் விளை­வாக மார­டைப்பு ஏற்­படும் சாத்­தியம் உண்டு.எனினும் குருதி கொலஸ்ட்­ரோலின் அளவை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கொழுப்பு உண­வுகள் சில­வற்றை தவிர்ப்­பதில் பய­னுள்­ளதா என்­பது கேள்­விக்­கு­றியே .மொத்த உணவில் கொழுப்பின் அளவை பதி­னைந்து வீதத்­திற்கு அதி­க­ரிக்­கா­மலும் காபோ­வை­தரேட் உணவை 65வீதத்­திற்கு மேற்­ப­டா­மலும் பார்த்துக் கொள்­வது அவ­சியம்.எனினும் கொழுப்பு உண­வு­கள் சில­வற்றை தவிர்த்­தலோ அள­வுக்கு அதி­க­மாக கட்­டுப்­ப­டுத்­து­வதோ அவ­சி­ய­மில்லை.

அள­வாக உட்­கொள்­ளலாம்.

எமக்கு தேவை­யான கொலஸ்ட்­ரோலின் பெரும்­ப­குதி எமது உட­லி­லுள்ள ஈர­லி­லேயே தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.சில மாமிச உண­வு­க­ளி­லேயே நேர­டி­யான கொலஸ்ட்ரோல் உடலில் சேர்­கின்­றது.நாம் உண்ணும் கொழுப்பு வகைகள் அனைத்தும் குடலில் ஜீர­ண­ம­டைந்து கொழுப்பு அமி­லங்­க­ளாக உறிஞ்­சப்­படும். அதே­வேளை எஞ்­சிய கொழுப்பு சமி­பா­ட­டை­யாமல் மலத்­துடன் வெளி­யே­று­கின்­றது.உற்­பத்­தி­யாக்­கப்­ப­டு­கின்ற கொலஸ்ட்­ரோ­லுக்கும் கழிவ­கற்­றப்­ப­டு­கின்ற கொலஸ்ட்­ரோ­லுக்கும் இடை­யான அளவே குருதி கொலஸ்ட்­ரோலின் அளவை தீர்­மா­னிக்­கின்­றது.குருதி கொலஸ்ட்­ரோலின் அதி­க­ரிப்பே தீமை­யா­னது.

ஈரலில் கொழுப்பு அமி­லங்­க­ளி­லி­ருந்து தினமும் ஒரு­வ­ருக்கு தேவை­யான கொலஸ்ட்ரோல் ஈரலில் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.இதை மூளையும் ஜீன்­களும் நிர்­வ­கிக்­கின்­றன.கொழுப்பு உணவை அதிகம் உட்­கொள்­ளா­த­வர்­களில் கூட காபோ­வை­தரேட் உண­வுகள் கொழுப்­பாக மாற்­றப்­பட்டு தேவை­யான கொழுப்பு கூறு­களும் கொலஸ்ட்­ரோலும் ஈர­லினால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.
கொலஸ்ட்ரோல் என்­றதும் எல்­லோரும் ஏதோ வேண்­டாத பொரு­ளாக நினைக்­கின்­றார்கள் கொலஸ்ட்ரோல் எமக்கு மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஓர் உணவுக் கூறுதான்.எமது மூளையின் பெரும்­ப­குதி கொலஸ்ட்­ரோலால் உள்­ளிட்ட கொழுப்­பு­க­ளி­னா­லேயே ஆக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறே உட­லி­லுள்ள கலச்­சு­வர்­க­ளிலும் கொலஸ்ட்ரோல் இன்­றி­ய­மை­யா­தது. கோடான கோடி கலங்கள் எமது உடலில் உள்­ளன.அப்­ப­டி­யாயின் அவற்றின் சுவர்­க­ளி­லுள்ள கொலஸ்ட்­ரோலின் அளவை கணித்துப் பாருங்கள்.கொலஸ்ட்ரோல் LDL HDL TRIGLXEERIDESஎன பல­கூ­றுகள் இருக்­கின்­றது. இதில் HDL (High Density Lipoprotein) கொலஸ்ட்ரோல் தேவைக்கு அதி­க­மாக குரு­தியில் சேரு­கின்ற ஏனைய கொலஸ்ட்­ரோலின் கூறு­களை வெளி­யேற்ற உத­வு­கின்­ற­மையால் இதை நல்ல கொலஸ்ட்ரோல் என்று அழைப்­பார்கள்.இந்த பணியில் ஈர­லி­லுள்ள இரண்­டு­வகை Receptors தொழில்­ப­டு­கின்­றன.ஒரு­வரின் வயது அதி­க­ரிக்­கும்­போது இவற்றின் எண்­ணிக்­கையும் தொழிற்­பாடும் குறை­வ­டை­வ­தாக தெரி­கின்­றது.இந்த நிலையில் தான் கொலஸ்ட்­ரோலின் அளவு குரு­தியில் அதி­க­ரிக்­கின்­றது.இதனால் குருதிக் கலங்­களில் இவ­வற்றின் படிவும் அதி­க­ரிக்­கின்­றது.இதனால் அடைப்­பு­களும் குருதிக் கட்­டி­களும் ஏற்­படும் சாத்­தியம் அதி­க­ரிக்­கின்­றது. பரம்­ப­ரை­யாக சிலரில் ஏற்­படும் கொலஸ்ட்­ரோலை அதி­க­ரிக்கச் செய்யும் நோய்­களும் அபூர்­வ­மாக மிக இள­மையில் ஏற்­ப­டு­கின்ற புற­சே­ரியா (Progeria) முத­லான நோய்­களும் கூட கொலஸ்ட்­ரோலின் அளவை அதி­க­ரிக்கச் செய்­கின்­றன.இதய நோயா­ளர்­களில் கணி­ச­மானோர் பரம்­பரை தொடர்பு உள்­ள­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.

virakesari.lk 05 09 2016