அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பதால் மார்பு புற்றுநோய் அபாயம்
அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை சிறிது அதிகரிப் பதாக அமெரிக்க ஆய்வொன்று கூறுகிறது. இளம் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு சிவப்பு இறைச்சிக்கு பதிலாக பட்டாணிகள், அவரை வகைகள், முட்டைகள், கடலை, மீன் என்பவற்றை உண்பதன் மூலம் குறைக்க முடியும் என போஸ்டன் நகரிலுள்ள ஹவார்ட் பொது சுகாதார பாடசாலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது வயிற்று புற்றுநோயை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 89,000 பெண்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு சிவப்பு இறைச்சியானது மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை சிறிது அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் மார்புப் புற்றுநோய்க்கும் சிவப்பு இறைச்சியை உண்பதற்குமிடையிலான தொடர்பு தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக பிரித்தானிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
virakesari.lk 06 12 2014