22 01 2016

ஆஸ்துமாவை அழிக்கும் வைன் : மருத்துவ ஆய்வு

ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. 12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர்.

வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு. ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐரோப்பிய மூச்சுக்குழல் நோய் அமைப்பில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

virakesari.lk  19 11 2015