Easy Facebook Share Button

22 02 2016

இப்படி உண்டால் ஆபத்து 

நாம் உண்ணும் தவறான உணவு சேர்க்கையால் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு மரவள்ளிக்கிழங்கு உடன் இஞ்சி சாப்பிடக்கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் உணவு நஞ்சாகிவிடும். தர்பூசணி சாப்பிட்ட பின்னர் பால் குடிப்பதால் அசௌகரியத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும்.

மேலும், பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். 
முட்டை மற்றும் பால் இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொள்வதால் செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் வாந்தியை உண்டாக்கும். வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கைகளாகும். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால் சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.

virakesari.lk 18 01 2016