Easy Facebook Share Button

01 03 2016

தூங்கும் முன் ஒரு கப் தண்ணீர் 

உடல் வறட்­சி­ய­டை­வதைத் தடுக்க சிறந்த வழி தண்ணீர் குடிப்­பது தான். அதிலும் தூங்கும் முன் தண்ணீர் குடிப்­பதால், உடலின் நீர்ச்­சத்து சீராகப் பரா­ம­ரிக்­கப்­படும். பகலில் தண்ணீர் குடிப்­பது போல, இரவில் நம்மால் தண்ணீர் குடிக்க முடி­யாது. இருந்­தாலும் இரவில் உட­லு­றுப்­பு­களின் செயல்­பாடு அதிகம் இருக்­காது என்­பதால், அதி­க­ளவு தண்ணீர் தேவைப்­ப­டாது. இருப்­பினும் தூங்­கு­வ­தற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்­பதால், மறுநாள் காலையில் எழும் போது நல்ல புத்­து­ணர்ச்­சியை உண­ரக்­கூடும். தினமும் குடிக்கும் நீரின் அளவை அதி­க­ரிப்­ப­துடன், இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடி­யுங்கள். இதனால் பகல் நேரத்தை விட, இரவில் உடல் சுத்­த­மா­வ­துடன் டாக்­ஸின்கள் வெளி­யேற்­றப்­பட்டு, உடல் வேக­மாக சுத்­த­மாகும்.

இரவில் குடிக்கும் தண்ணீர் உடலில் விற்­ற­மின்கள், கனி­மச்­சத்­துக்கள் மற்றும் இதர ஊட்­டச்­சத்­துக்­களை சம­நி­லை­யுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரவில் உடல் எந்த ஒரு செயல்­பாட்­டிலும் ஈடு­ப­டாமல் ஓய்வில் இருப்­பதால், தண்­ணீ­ரா­னது உட­லி­லுள்ள அனைத்து பாகங்­க­ளுக்கும் செல்லும். நல்ல நித்­தி­ரைக்கும் வழி­வ­குக்கும். தண்­ணீரில் கலோ­ரிகள் இல்லை, சுவை­யில்லை மற்றும் வேறு எதுவும் இல்லை. ஆனால், இது உடலை சீரான இயக்­கத்தில் செயல்­பட செய்யும். அதிலும் இரவில் குளிர்ந்த நீரைக் குடித்தால், கலோ­ரிகள் எரிக்­கப்­படும். இப்­படி கலோ­ரிகள் எரிக்­கப்­பட்டால், உடல் எடை தானாக குறையும்.

இரவில் படுக்கும் போது நிறைய பேர் தசைப்­பி­டிப்­பு­களால் அவஸ்­தைப்­ப­டு­வார்கள். உடலில் போதிய அளவில் நீர்ச்­சத்து இல்­லா­­மையே இதற்குக் காரணம். தினமும் தூங்கும்முன் தண்ணீர் அருந்தினால் உடலில் நீர்ச்சத்து சீராக பராமரிக்கப்பட்டு, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

virakesari.lk 28 01 2016