Easy Facebook Share Button

08 04 216

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்

பலரும் வெந்­தயம் தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்டும் தான் பயன்­படும் என்று நினைக்­கின்­றனர். ஆனால், இந்த வெந்­தயம் சரு­மத்­திற்கும் பல நன்­மை­களைத் தரும் என்­பது தெரி­யுமா? ஆம், வெந்­த­யத்தைக் கொண்டு சரு­மத்தில் ஏற்­படும் பல பிரச்சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். வெந்­தயம் எளிதில் கிடைக்­கக்­கூ­டிய பொருள் என்­பதால், இதனைக் கொண்டு சரு­மத்தை எளிதில் பரா­ம­ரிக்­கலாம்.சரி, இப்­போது வெந்­தயம் எந்த சரும பிரச்சி­னை­க­ளுக்­கெல்லாம் தீர்­வ­ளிக்கும் என்­ப­தையும், அப்­பி­ரச்­சி­னை­களைப் போக்க வெந்­த­யத்தை எப்­படி பயன்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையும் பார்ப்போம்.

சிறந்த கிளின்சர்: வெந்­தயம் சிறந்த கிளின்­ச­ரா­கவும் செயற்­படும். இதனைக் கொண்டு சரு­மத்தைப் பரா­ம­ரித்தால், சரு­மத்­து­ளை­களில் ஏற்­பட்­டுள்ள அடைப்­புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்­த­மாக இருக்கும். அதற்கு வெந்­த­யத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்­மை­யாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். பொலி­வான முகம்: பொலி­வி­ழந்து காணப்­படும் முகத்தை பொலி­வாக்க நினைத்தால், வெந்­தய ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு வெந்­த­யத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10–15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சரு­மத்தை வெள்­ளை­யாக்கும்: வெந்­த­யத்தைக் கொண்டும் சரு­மத்தை வெள்­ளை­யாக்­கலாம். அதற்கு வெந்­தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்­படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதி­க­ரிக்கும். ஆனால், வெந்­தயம் குளிர்ச்­சி­மிக்­கது என்­பதால், சுவாச பிரச்சி­னைகள் இருப்­ப­வர்கள், இதனை வாரம் 1-–2 முறை போடு­வது நல்­லது.பருக்­களைத் தடுக்கும்: வெந்­தயம் சரு­மத்தில் உள்ள இறந்த செல்­களை நீக்கும். அதற்கு வெந்­த­யத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வரு­வது தடுக்­கப்­படும்.

அன்­டி-­ஏஜிங் பேக்: முது­மையைத் தள்ளிப் போட நினைப்­பவர்கள், வெந்­த­யத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்­துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சரு­மத்தில் தெரியும் முதுமை தோற்­றத்­திற்­கான அறி­கு­றிகள் அனைத்தும் தடுக்­கப்­படும். வெயிலால் ஏற்­பட்ட சரும நிற மாற்­றத்தை நீக்கும் வெயிலில் நீங்கள் அதிகம் சுற்றி, அதனால் உங்கள் சரு­மத்தின் நிறம் பழுப்பு நிறத்தில் மாற்­ற­ம­டைந்­தி­ருந்தால், அதனை வெந்­த­யத்தைக் கொண்டு எளிதில் நீக்­கலாம். அதற்கு 1/2 கப் வெந்­த­யத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்

virakesari.lk 06 03 2016