Easy Facebook Share Button

25 04 2016

தலைவலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.!

சின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும்பொருட்களை கொண்டு தடுக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
எலுமிச்சைத் தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடுவது நல்ல பலனைத் தரும்.குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும், கழுத்திலும் கட்டவும். பின் கைகளையும், கால்களையும் சுடுநீரில் விடவும். இந்த முறை, ஒற்றைத் தலைவலிக்கு நல்ல பலனைத் தரும்.அரைத் தேக்கரண்டி கடுகுப் பொடியை, மூன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்தக் கரைசலை மூக்கில் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.
10 அல்லது 15 பாதாம்பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.
3 அல்லது 4 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை (ஆரஞ்சு, கரட், வெள்ளரி) மட்டும் பருகலாம். நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் தலையில் ஒத்தடம் தரலாம்.

virakesari.lk 30 03 2016