14 07 2016

பற்களை பாதுகாப்பது எப்படி

உலகில் பற் சிகிச்­சைக்­காக உப­யோ­கிக்கும் நவீன முன்­னணி கரு­விகள் தற்­போது எமது நாட்­டிலும் இருக்­கின்­றன. பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை முதல் எந்­த­வொரு பல் நோய்க்கும் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யு­மாக இருக்­கின்­றது
எமது நாட்டில் 18க்கும் 26வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கே அதி­க­மாக பற்­களில் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகை­யினால் சகல வய­தி­னரும் 6மாதங்­க­ளுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்­தியர் ஒரு­வரை அணுகி பற்­களை பரீட்­சித்­துக் ­கொள்ள வேண்டும் என்­கிறார் கொட்­டாஞ்­சேனை பல் சிகிச்சை நிலை­யத்தின் ஸ்தாப­கரும் இலங்கை பல் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் இலங்கை தனியார் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­வ­ரு­மான வைத்­திய நிபுணர் மீராஸ் முக்தார்.பல் சுகா­தாரம் தொடர்­பாக அவ­ருடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் போது அவர் தெரி­வித்த கருத்­துக்கள் பின்­வ­ரு­மாறு

 கேள்­வி: இலங்­கையில் பல் சுகா­தாரம் எந்த நிலை­மையில் இருக்­கின்­றது?

பதில்: கடந்த காலத்­தை­யும்­விட நாட்டில் தற்­போது பெரும்­பான்­மை­யான மக்கள் பல் சுகா­தாரம் தொடர்­பாக கவனம் செலுத்­தி­ வ­ரு­கின்­றனர். அத்­துடன் ஊட­கங்கள் இது­தொ­டர்­பாக அதிகம் விழிப்­பு­ணர்­வூட்­டு­வதும் இதற்கு கார­ண­மாக இருக்­கலாம். முன்னர் பற்களில் ஏதேனும் பிரச்­சினை ஏற்­பட்டால் அதனை கழற்­றி­ விடும் எண்­ணத்­து­டனே பல் சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு வரு­வார்கள். ஆனால் இப்­போது அந்த முறை மாறி­யுள்­ளது. பல் சிகிச்சை நிலை­யங்­க­ளுக்கு வரு­ப­வர்கள் பல்லை பிடுங்­காமல் அதனை பாது­காக்க முடி­யுமா என்றே கேட்­கின்­றனர்.

கேள்­வி: எமது நாட்டில் பற்கள் தொடர்பான எவ்­வா­றான நோய்கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன?

பதில்: முரசு நோய், சூத்தை பல் மற்றும் பல் இத்­துப்­போதல் நோய்­களே அதி­க­மாக இருக்­கின்­றன. விசே­ட­மாக இந்த நோய்க்கு ஆளா­வ­தற்கு பிர­தான காரணம் மக்கள் இது தொடர்­பாக அறி­யாமல் இருப்­ப­தாகும். என்­றாலும் தற்­போது பற்­களை எவ்­வாறு பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது என்பது தொடர்­பான அறி­வு­றுத்­தல்கள் பாட­சாலை மட்­டத்தில் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் பெற்­றோ­ருக்கும் தெளி­வூட்­டல்கள் இடம்­பெ­று­கின்­றன.சிறு­வ­ய­தி­லி­ருந்தே பற்­களை ஆரோக்­கி­ய­மாக வைப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். பற்களில் பாதிப்பு ஏற்­படும் முன்­னரே வைத்­தி­யரை நாடி பற்­களை பரி­சோ­தித்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: பல்­நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்கு போது­மான வச­திகள் நாட்டில் இருக்­கின்­றதா?

பதில்: ஆம், நாட்டில் இருக்கும் சகல பிர­தான வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் பல் சிகிச்சை பிரிவு இயங்­கு­கின்­றது. இதற்­கப்பால் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் கீழ் வைத்­திய பிரி­வுகள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.அத்­துடன் உலகில் பற் சிகிச்­சைக்­காக உப­யோ­கிக்கப்படும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கரு­விகள் தற்­போது எமது நாட்­டிலும் இருக்­கின்­றன. பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை முதல் எந்­த­வொரு பல் நோய்க்கும் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யு­மாக இருக்­கின்­றது.
முன்னர் பல் ஒன்று உடைந்தால் அல்­லது பழுதடைந்தால் அதனை பிடுங்கி விடு­கின் றோம். ஆனால் இப்­போது பல் பிடுங்­கு­வ­தில்லை. செய­லி­ழந்த பல்­லையும் சிகிச்­சையின் மூலம் தொடர்ந்து வைத்­தி­ருக்க முடியும். அதே­போன்று முர­சு­களை 'டிரில்' பண்­ணியும் பற்­களை பொருத்த முடியும். 75வய­தை­யு­டைய ஒரு­வ­ருக்கு கூட முரசை டிரில் பண்ணி பற்கள் பொருத்­தப்­பட்­டன. ஆனால் 3வரு­டங்கள் கடந்தும் அந்த பற்­களால் எந்த பிரச்­சி­னையும் ஏற்­ப­ட­வில்லை

கேள்வி: வாய் நோய்­களை தடுப்­ப­தற்­கான வழி­வ­கைகள் எவை?

பதில்: புகைப்­பி­டித்தல், வெற்­றிலை போடு தல் நிறுத்­தப்­பட வேண்டும். பற் தூரி­கையின் மூலம் காலை­யிலும் இர­விலும் பல் துலக்க வேண்டும். ஏனென்றால் இர­வில்தான் பக்­ரீ­றி­யாக்கள் செயற்­ப­டு­கின்­றன.எமது நாட்டில் 18க்கும் 26வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கே அதி­க­மாக பற்­களில் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகை­யினால் சகல வய­தி­னரும் 6மாதங்­க­ளுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்­தியர் ஒரு­வரை அணுகி பற்­களை பரீட்­சித்­துக் ­கொள்ள வேண்டும். அத்­துடன் சூத்தைப் பற்கள் இருப்­ப­வர்கள் அதனை அடைத்­துக்­கொள்ள வேண்டும்.

கேள்வி: வாய் நோயில் இருந்து பாது­காப்பு பெற­ மு­டி­யு­மான பற் பசை­களை எவ்­வாறு அறிந்து கொள்­வது?

பதில்: ப்லோரய்ட் அடங்­கிய பற் பசை பாவிப்­ப­தென்றால் மிகவும் நல்­லது. என்­றாலும் மத்­திய, அனு­ராத­புரம், அம்­பாறை, கதிர்­காமம் மற்றும் லுனு­கம்­வெ­கர உட்­பட உவர் நீர் தன்மை அதிகம் இருக்கும் பிர­தே­சங்­க­ளைச்­ சேர்ந்­த­வர்கள் ப்லோரய்ட் குறைந்த பற் பசை பாவிப்­பதே நல்­லது. ஏனென்றால் அந்த பிர­தேச மக்­களின் பற்­களில் நிற­மாற்றம் அதி­க­மாக ஏற்­ப­டு­கின்­றது. என்­றாலும் தற்­போது அந்த நிலை­மையை தடுப்­ப­தற்­கான முறைகள் இருக்­கின்­றன.

கேள்வி: குழந்­தை­க­ளுக்கு பூச்­சிப்பல் ஏற்­ப­டாமல் எவ்­வாறு பாது­காப்­பது?

பதில்: குழந்­தை­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் பால் தான் பிர­தான உண­வாக இருக்­கின்­றது. காபோஹைதரேட் இதில் அதி­க­மாக இருக்­கின்­றது. பாலில் அதிக சத்து இருப்­ப­து­போ­லவே பல்­லுக்கு அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது. உண­வுகள் பற்­களில் தேங்கி நிற்­ப­தாலும் பூச்­சிப்பல் ஏற்­ப­டு­கின்­றது.

அத்­துடன் குழந்­தை­களை பரா­ம­ரிப்­பதில் தாய்­மார்தான் அதிகம் கவனம் செலுத்­து­கின்­றனர். எனவே தாய்மார் குழந்­தை­க­ளுக்கு கொடுக்கும் பால் சூடாக இருக்­கும்­போது அதனை வாயால் ஊது­வதால் தாய்­மா­ருக்கு பூச்­சுப்பல் இருந்தால் அது குழந்­தை­க­ளுக்கும் வரு­வ­தற்கு வாய்ப்­புள்­ளது. சிறு­வ­யதில் இருந்தே குழந்­தை­க­ளுக்கு பல்லை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­வது பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்­டாயம் பல் துலக்க வேண்டும். பல் இடுக்­கு­களில் உண­வுப்­பொ­ருட்கள் சேராமல் பாது­காக்க வேண்டும். குளிர்ச்­சி­யான பதார்த்­தங்­களை அடிக்­கடி சாப்­பி­டு­வதை தவிர்க்க வேண்டும்.

அத்­துடன் குழந்­தைகள் பால்­புட்­டியில் பால் குடித்­த­வுடன் அப்­ப­டியே உறங்­கி­வி­டு­வார்கள். இதனால் காலப் போக்கில் பால் பற்கள் பாதிக்­கப்­படும். எனவே குழந்­தைகள் பால் குடித்த பிறகு சிறிது தண்­ணீரை குடிக்கச் செய்ய வேண்டும். இன்று அதிக உணவு வகைகள் இனிப்பு வகை­க­ளா­கவே இருக்­கின்­றன. அவற்றை உண்­பதால், ஒரு மணி­நே­ரத்­துக்கு மேல் உணவு வகைகள் தங்கி இருப்­பதால் பூச்­சுப்பல் ஏற்­பட கார­ண­மா­கின்­றது.

கேள்வி: பற்­களின் அமைப்பு ஒழுங்­கற்­ற­தாக இருப்­ப­வர்கள் கிளிப் பாவிப்­பதால் பற்­களை சரி செய்­து­கொள்­ள­லாமா?

பதில்: ஆம், பற்கள் முன்­பக்கம் நீண்டு இருப்­ப­வர்கள் கிளிப் போடு­வதால் அதனை சரி செய்து கொள்­ளலாம். கிளிப் பொருத்­தும்­போது பற்­களில் இட­வ­சதி இல்­லாமல் இருந்தால் முன்­பக்­கத்தில் கடவாய் பற்கள் இரண்டை நீக்கி விட்டு பொருத்­து­வதால் பற்கள் சரி­வர வாய்ப்­புள்­ளது.
இந்த கிளிப்­களில் நிரந்­த­ர­மா­னது. தற்­கா­லி­க­மா­னது என இரண்டு வகைகள் உள்­ளன. அதா­வது, உணவு உண்­ணும்­போது நீக்கி பின்னர் பொருத்­துதல் ஒன்று. மற்றையது நிரந்­த­ர­மான பல் கிளிப். குறிப்­பிட்­ட­காலம் வரை நீக்­காமல் பற்கள் உள்ளே சென்­றதன் பின்னர் நீக்­கக்­கூ­டி­ய­வ­கையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.இதில் வயது எல்லை முக்­கி­ய­மா­ன­தாகும். உதா­ர­ண­மாக 13வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு இல­குவில் பற்கள் சீராக அமையும். அதே­வேளை 25வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளு­க்கு பொருத்­தினால் கால­தா­ம­த­மா­கவே பற்கள் சீராக அமையும்.

கேள்வி: பல் பிடுங்­கு­வதால் பாதிப்­புக்கள் ஏற்­ப­டுமா?

பதில்:பற்­களை பிடுங்­கினால் ஒரு மாதத்தில் இருந்து 6மாதத்­துக்குள் செயற்கை பற்­களை பொருத்­திக்­கொள்ள வேண்டும். இல்­லை­யெனில் மேற்­பற்கள் கீழே இறங்­கவோ கீழ் பற்கள் மேலே ஏறவோ அல்­லது பக்­க­வாட்டு பற்கள் சரிய வாய்ப்­புள்­ளது. இதனை தவிர்த்து எஞ்­சிய பற்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கு பொய்ப் பற்கள் பொருத்­திக்­கொள்­வ­துதான் சிறந்­தது.

கேள்வி: இறுதியாக வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: பற்களை பாதுகாப்பதற்கும் அதனை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கும் சிறுவயது முதல் நாம் பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரின் முக அழகு அவரின் பற்களிலேயே தங்கியுள்ளது. சிறு வயதில் பல் பாதிக்கப்பட்டால் முக அழகு பாதிக்கப்படும். உண்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் பல் சொத்தையை கண்டு கொள்ளாவிட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்கச்செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளிவிடும். சொத்தை பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல்லை பாதுகாக்க முடியும்.

எனவே பல் சம்பந்தமாக 6மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் வைத்தியர் ஒருவரை அணுகி பற்களை பரிசோதித்துக் கொள்வதன் மூலம் இறுதிவரைக்கும் பற்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

virakesari'lk 29 06 2016