11 08 2016

மூக்கடைப்பிற்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமா..?

மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் பல்கலைகழக மருத்துவ விஞ்ஞானிகள் நாள்பட்ட மூக்கடைப்பிற்கு ஆவி பிடிக்கும் சிகிச்சை மட்டுமே தொடர்வது முழு பலனைத்தராது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
மேலும் நாள்பட்ட மூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையுடன் வேறுசில சிகிச்சைகளையும் இணைத்து கூட்டு சிகிச்சையாக அளிக்கும் போது தான் பலன் கிடைக்கும் என்றும், ஆவி பிடிக்கும் சிகிச்சையை மட்டும் தொடர்ந்தால் மூக்கடைப்பு குணம் ஆகாதது மட்டுமில்லாமல் வேறு சில பக்க விளைவுகளையும் ஒரு சிலருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதையும் கண்டறிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

Read more ...
04 08 2016

மூளை புற்றுநோயை குணப்படுத்தும் நவீன லேசர் சிகிச்சை

மூளை புற்றுநோய், எதிர்பாராத விதமாக மூளையில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்துதல் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவற்றை குணப்படுத்துவதற்காகவும், மூளையில் லேசர் சிகிச்சையை மேற்கொள்வதை எளிதாக்கவும் தற்போது மூளைக்கு வெளிப்புறத்தில் அதாவது மண்டையோட்டின் உட்புறத்தில் பொருத்தக்கூடிய வெளிப்படைத்தன்மையான மருத்துவ கருவியொன்றும், இதனூடாக செலுத்தப்படும் நவீன லேசர் சிகிச்சையொன்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

Read more ...
28 07 2016

வறண்ட கண்களை குணப்படுத்தும் நவீன மருந்து.!

 இன்றைய திகதிகளில் அலுவலகம், வீடு, பயணம் என அனைத்து நேரங்களிலும் ஆண்களோ பெண்களோ கணினி, தொலைபேசி, தொலைகாட்சி என பலவற்றை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் அவர்களுடைய கண்கள் வறண்டு விடுகின்றன. கண்கள் இமைப்பதன் மூலமே கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை பராமரித்து வருகின்றன. இந்நிலையில் கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கண்களை இமைக்காமல் பார்த்து வருகிறோம். அத்துடன் இரவிலும் போதிய வெளிச்சமில்லாமலும் இதனை உற்று கவனித்து வருகிறோம். இதனால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு இது வரை மருந்து அதாவது ட்ராப்ஸ் வடிவில் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இதற்கான மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை அங்குள்ள சுகாதர அமைப்பும் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த மருந்து விரைவில் தெற்காசியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.

Read more ...
21 07 2016

மூக்கடைப்பை குணப்படுத்தும் பொலிபெக்டமி

கோடைக்காலம், வசந்த காலம், பனி காலம், மழைக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும், எல்லா வயதினருக்கும் ஒவ்வாமை மற்றும் ஜலதோஷம் போன்ற காரணங்களால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அவர்கள் பணியாற்றும் குளிர்சாதன வசதிப் பொருத்தப்பட்ட அறை கூட மூக்கடைப்பிற்கு காரணமாக இருக்கிறது. சாதாரண மூக்கடைப்பு என்றால் ஒரு சிலருக்கு உடனடியாகவும், ஒரு சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு பிறகும் குணமாகிவிடும். அப்படி குணமாகவில்லையென்றால் அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திக்கவேண்டும்.

Read more ...
14 07 2016

பற்களை பாதுகாப்பது எப்படி

உலகில் பற் சிகிச்­சைக்­காக உப­யோ­கிக்கும் நவீன முன்­னணி கரு­விகள் தற்­போது எமது நாட்­டிலும் இருக்­கின்­றன. பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை முதல் எந்­த­வொரு பல் நோய்க்கும் சிகிச்­சை­ய­ளிக்க முடி­யு­மாக இருக்­கின்­றது
எமது நாட்டில் 18க்கும் 26வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கே அதி­க­மாக பற்­களில் பிரச்­சினை ஏற்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆகை­யினால் சகல வய­தி­னரும் 6மாதங்­க­ளுக்கு ஒரு முறை பற் சிகிச்சை வைத்­தியர் ஒரு­வரை அணுகி பற்­களை பரீட்­சித்­துக் ­கொள்ள வேண்டும் என்­கிறார் கொட்­டாஞ்­சேனை பல் சிகிச்சை நிலை­யத்தின் ஸ்தாப­கரும் இலங்கை பல் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் இலங்கை தனியார் வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­வ­ரு­மான வைத்­திய நிபுணர் மீராஸ் முக்தார்.பல் சுகா­தாரம் தொடர்­பாக அவ­ருடன் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் போது அவர் தெரி­வித்த கருத்­துக்கள் பின்­வ­ரு­மாறு

Read more ...
07 07 2016

மூக்கில் சளி ஒழுகுதலால் வரும் பிரச்சினை

மூக்கு ஒழுகுதல், சளி, இரத்தம் ஆகியவை பொதுவாக 100-க்கு 50 பிள்ளைகளுக்கே இருக்கும். இது ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. சிறு குழந்தைகளுக்கு பொதுவாகவே காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் குழந்தை அழும் அல்லது காய்ச்சல் வரும். சில நேரத்தில் குழந்தை அமைதியாக இருக்கும்.மூக்கு ஒழுகுதல் கசிவு நீராகவோ, இரத்தமாகவோ, சளியாகவோ இருக்கலாம். இரத்தப் போக்கு மூக்கில் இருந்தால் வேறு ஏதாவது இடத்தில் இரத்தம் வருகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். கோடையில் வறண்ட காற்று அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் மூக்கில் தொற்று ஏற்படும். இந்தத் தொற்று காரணமாக புண் உண்டாகும்.

Read more ...
30 06 2016

எச்சரிக்கை !! அடிக்கடி செல்பி எடுப்பவர்களா நீங்கள் ?

ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் அறிமுகத்தின் பின்பு நின்னா செல்பி, நடந்தா செல்பி, சாப்பிட்டா செல்பி என ஒரே செல்பி மயமாகியுள்ளது. மிக அபாயமான இடங்களில் செல்பி எடுக்கும் ஆர்வமும் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. செல்பி மோகம் எந்த வயதினரையும் விட்டு வைக்கவில்லை. அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் விழுந்து சீக்கிரமே முதியவர் தோற்றத்தை ஏற்படுத்தி விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கையடக்கத்தொலைபேசியில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

Read more ...
23 06 2016

சளி தொல்லை நீங்க‌ : பாட்டி வைத்தியம்

அலர்­ஜியால் திடீ­ரென சளி பிடிக்கும். நாள்­பட்ட சளி­யா­னது காச­நோ­யாக மாறும். காய்ச்­சலை உண்­டாக்கும். அதிக சளியால் மூச்சு திணறல் உள்­ளிட்ட பிரச்சி­னைகள் ஏற்­படும். தூது­வ­ளையை பயன்­ப­டுத்தி சளி பிரச்சி­னையை தீர்க்கும் மருந்து தயா­ரிக்­கலாம். 10 தூது­வளை இலை­களை எடுக்­கவும். இத­னுடன், சிறிது முசு­மு­சுக்கை இலை, பனங்­கற்­கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்­விட்டு கொதிக்க வைக்­கவும். இதை வடி­கட்டி குடித்­து­வர சளி, இருமல் இல்­லாமல் போகும்.
சளி பிரச்சி­னைக்கு தூது­வளை மருந்­தா­கி­றது. இது, உஷ்­ணத்தை கொடுக்க கூடி­யது. உட­லுக்கு பலத்தை தரு­கி­றது. முசு­மு­சுக்கை சளியை போக்­கு­கி­றது. ஆயுளை அதி­க­ரிக்கும் தன்மை கொண்­டது. தூது­வளை, முசு­மு­சுக்கை பொடி நாட்டு மருந்து கடை­களில் கிடைக்கும். வெள்­ளெ­ருக்கம் பூவை பயன்­ப­டுத்தி ஆஸ்­துமா பிரச்சினை உள்­ள­வர்கள் எடுத்­துக்­கொள்ளும் மருந்து தயா­ரிக்­கலாம்.

Read more ...
16 06 2016

விற்றமின் மாத்திரைகளை தினசரி உபயோகிப்பதால் புற்றுநோய், சிறுநீரக நோய், ஈரல் பாதிப்பு அபாயம்.!

பிரபலம் பெற்று விளங்கும் விற்றமின் மற்றும் ஏனைய போஷணை சார்ந்த மாத்திரைகளை தினசரி உள் எடுப்பது அந்தப் போஷணைகள் உடலில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர வழிவகை செய்து உடல் நலத்துக்கு நன்மையை விடவும் அதிகளவு தீங்கை ஏற்படுத்தக் கூடியது விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கிய நிலை கருதி விற்றமின் ஈ, சி மற்றும் டி மாத்திரைகளை தினசரி உபயோகிப்பது விதைப்பை புற்றுநோய், இருதய நோய் உள்ளடங்கலான உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பான அறிக்கை நேற்று இரவு அவுஸ்திரேலிய ஏ.பி.சி. ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விற்றமின் மாத்திரைகள் மட்டுமல்லாது மீன் எண்ணெய் வில்லைகள் உள்ளடங்கலான ஏனைய போஷணை வில்லைகளும் மனித உடல் நலத்துக்கு பாதிப்பை கூடியவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விற்றமின் டி மாத்திரையின் ஒரு வகையானது சட்ட ரீதியான அனுமதிக்கப்பட்ட அளவிலும் 213 மடங்கு போஷணை உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்க பிலெடெல்பியா சிறுவர் மருத்துவமனையைச் நெர்ந்த மருந்தக மருத்துவ முகாமையாளர் சாரா ஏரஷ் குறிப்பிட்டுள்ளார்.

Read more ...
09 06 2016

காலை வேளையில் சிறந்த ஜூஸ்.!

காலையில் எழுந்­ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் இது உங்­களின் செரி­மான திர­வத்தின் அளவை அதி­க­ரித்து, பசி­யின்­மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்­சி­க­ளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்­கரை அள­வையும் கட்­டுப்­பாட்­டுடன் வைத்­தி­ருக்கும்.ஆனால் பாகற்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்­கரை அளவை சீராகப் பரா­ம­ரிக்­கலாம். முக்­கி­ய­மாக இது சர்க்­கரை நோய் உள்­ள­வர்­க­ளுக்கு ஏற்ற ஜூஸ்.

கரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள விற்­றமின் 'ஏ' கண் பார்­வையை மேம்­ப­டுத்­து­வ­தோடு, கரட் ஜூஸில் உள்ள அதி­கப்­ப­டி­யான பீட்­டா-­க­ரோட்டீன் முது­மையைத் தடுக்கும்.உங்­க­ளுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்­தொற்­றுகள் இருக்­கி­றதா? அப்­ப­டி­யெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயா­ரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதி­கப்­ப­டி­யான அமிலம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு சிறுநீர்ப் பெருக்­கி­யா­கவும் செயல்­படும்.

Read more ...
02 06 2016

இதய அடைப்பை அகற்ற வந்துவிட்டது புதிய ட்ரான்ஸ்கீட்டர்.!

புத்தகம் படிக்கும் போது மனமானது அமைதியாக இருக்கும். ஆனால் இதயமோ புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்குமோ என்றும், அடுத்து என்ன நடக் குமோ? என்றும் பதைபதைக்கும் இப்படி செய்தாவது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து இதயத்தைக் காத்திடலாம். அல்லது தேநீரில் உள்ள ப்ளேவோனாய்ட்டுகள் இரத்தக் குழாய்களை மேம்படுத்தி அதனை ஓய்வெடுக்க வைக்கும். இதன் மூலமாகவும் இதயத்தைக் காத்திடலாம்.

எனவே தினமும் இரண்டு கோப்பை தேநீரைப் பருகலாம். ஒரு சிலருக்கு தேநீர் பருக பிடிக்காது என்றால் டார்க் சொக்லேட்டை சாப்பிடுங்கள். ஏனெனில் டார்க் சொக்லேட்டில் கொக்கோ உள்ளது. அந்த கொக்கோவிலும் ப்ளேவோனாய்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இரத்தம் உறைதல் தடுக்கப்படுகிறது. இந்த வழிகளை பின்பற்ற கடினமாக இருக்கிறதா? தியானத்தை பழகுங்கள். அதுவும் பிடிக்கவில்லையா உங்கள் திறன் மற்றும் எரிச்சலை ஒன்று சேர்த்து ஒரு பஞ்ச்சிங் பேக்கில் காட்டுங்கள் இதனாலும் உங்கள் இதயம் திடமாகப் பாதுக்காக்கப்படும். இவை எவற்றையும் செய்ய இயலாது என்றால் ஒரே வழி தினமும் ஏதேனும் உடற்பயிற்சியையோ அல்லது நீச்சலையோ தொடருங்கள் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் காக்கப்படும்’ என்று இதயத்தின் ஆரோக்கியத்திற்கு ஏராளமான வழிமுறைகளை சொல்லிக் கொண்டே செல்கிறார் டொக் டர் சி. கோகுலகிருஷ்ணா. இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதய சிகிச்சை நிபுணராக சென்னையில் பணியாற்றி வரு கிறார். அவரிடம் மேலும் இதயம் தொடர்பான பல வினாக்களை முன் வைத்தோம்.

Read more ...