15 04 2016

அல்சர் குணமடைய எளிய தீர்வுகள்

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகுதல்.
மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணல்.
அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்துதல்.
பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணல்.

Read more ...
08 04 216

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வெந்தயம்

பலரும் வெந்­தயம் தலை­மு­டியின் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்த மட்டும் தான் பயன்­படும் என்று நினைக்­கின்­றனர். ஆனால், இந்த வெந்­தயம் சரு­மத்­திற்கும் பல நன்­மை­களைத் தரும் என்­பது தெரி­யுமா? ஆம், வெந்­த­யத்தைக் கொண்டு சரு­மத்தில் ஏற்­படும் பல பிரச்சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும். வெந்­தயம் எளிதில் கிடைக்­கக்­கூ­டிய பொருள் என்­பதால், இதனைக் கொண்டு சரு­மத்தை எளிதில் பரா­ம­ரிக்­கலாம்.சரி, இப்­போது வெந்­தயம் எந்த சரும பிரச்சி­னை­க­ளுக்­கெல்லாம் தீர்­வ­ளிக்கும் என்­ப­தையும், அப்­பி­ரச்­சி­னை­களைப் போக்க வெந்­த­யத்தை எப்­படி பயன்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையும் பார்ப்போம்.

Read more ...
04 04 2016

தலைச்சுற்றலா.. அலட்சியப்படுத்தாதீர்

ஒரு சிலருக்கு தலைச்சுற்றல் ஏற்படும். அதையே வேறு சிலர் தலை கிறுகிறுத்தது என்பர். உடனே எம்மை அணுகி இரண்டும் ஒன்றா? என கேட்பர். இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றால், இரண்டு வேறு வேறு. அதாவது தலைச்சுற்றல் என்பது வேறு. தலை கிறுகிறுப்பது என்பது வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு சிலருக்கு உட்கார்ந்திருப்பார்கள். எழுந்திருக்கும் போது அரை நொடிக்கு குறைவான கால அவகாசத்தில் சர்ரென்று தலை சுற்றியடிக்கும். அதன் பின் அவை சரியாகிவிடும். எந்த விளைவோ தொடர் பாதிப்போ இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு அடிக்கடி தலைச் சுற்றல் வரும். சில சமயத்தில் இது தொடர்ந்து வரக்கூடும். இப்படி ஏற்பட்டால், முதுகு தண்டுவடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்பு பகுதி பாதிக்கப்படும் அள விற்கு ஒரு எரிச்சலும் ஏற்படும். இதனை தலைச்சுற்றல் என்று எண்ணி அலட்சியமாக இருந்துவிடாதீர். ஏனெனில் இவை தான் வெர்டிகோ பிரச்சினை.

Read more ...
31 03 2016

எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இயற்கை மருத்துவத்தில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எலுமிச்சை நீரில் உப்பு கலந்து குடிப்பது. தினமும் இதை காலை வேளையில் தவறாமல் பின்பற்றி வந்தால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. தேவையான பொருட்கள்: நீர், எலுமிச்சை சாறு, இரண்டு டீ ஸ்பூன் உப்பு 

Read more ...
27 03 2016 

அதிகளவான சீனியால் மூளைக்குப் பாதிப்பு

அதிகளவில் சீனியை உபயோகிப்பது மனஅழுத்தம் மற்றும் துஷ்பிரயோகங்களால் ஏற்படுவதையொத்த பாதிப்பை மூளைக்கு ஏற்படுத்துவதாக அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சீனி மனிதர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதியை பாதிப்பதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. 

Read more ...
21 03 2016

நினைவுத்திறன் மேம்பட என்ன செய்வது?

கடந்த தேர்வு வரை அனைத்து பாடங் களிலும் முதன்மையான மாணவனாக வந்தான், ஆனால் தற்போது ஞாபக மறதியால் அவதியுறுகிறான்? என்று சில பெற்றோர்கள் புலம்புவதை கேட்டிருக்கலாம். அலுவலகத்தில் பணிபுரியும் சிலரோ தங்களின் நினைவுத்திறன் குறைந்து வரு வதை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து மீள்வது எப்படி? என தெரி யாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் நோக்கிலும், அனைவரும் தங்களின் செயல்பாட்டில் அதிக கவனத்துடன் இயங்கி வெற்றியைப் பெறவும், மூளையின் செயல்பாடு முக்கியமாகிறது. மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான ஓக்ஸிஜன் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக் காததால் தான் இத்தகைய பாதிப்பு ஏற் படுகிறது.

Read more ...