08 02 2016

தூக்கமின்மையால் ஏற்படும் அபாயம்

உணவு, உடை, இடம் இந்த மூன்றுக்கும் இணையாக அடுத்து ஓர் மனிதனுக்கு மிகவும் அவசியமானது நல்ல உறக்கம் ஆகும். நன்கு உழைத்தால் நல்ல உறக்கம் வரும் என்பார்கள். ஆனால், இன்று கணினி முன் அமர்ந்து நாள் முழுக்கு உழைத்தால் கடும் நோய்கள் தான் வருகின்றன. எனவே, நாம் நமது வாழ்வியல் முறை மற்றும் வேலை முறையை சரியாக பின்பற்ற வேண்டும். இல்லையேல் உடல்நிலை குறைபாடுகள் ஏற்படும்.

Read more ...
05 02 2016

நாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள் 

நாம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிட வேண்டும். சிவப்பரிசி - இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தரும். மீன் - நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஒக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஒக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும். வாழைப்பழம் - தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.

Read more ...
01 02 2016

எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி ? 

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் எடை அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, கொழுப்பு நிறைந்த உணவு, போதிய உடல் உழைப்பு இன்மை, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றன இதற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் எடையைக் குறைப்பது எப்படி ?

Read more ...
25 01 2016

நீரிழிவுவை தடுக்கும் வயகரா : புதிய ஆய்வில்

மலட்டுத் தன்மையை நீக்கி ஆண்மையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் வயகரா மாத்திரையானது தற்போது நீரிழிவு நோயையும் தடுக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில், 42 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியில் சிறப்பாக பங்காற்றியது தெரியவந்துள்ளது.

Read more ...
22 01 2016

ஆஸ்துமாவை அழிக்கும் வைன் : மருத்துவ ஆய்வு

ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. 12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர்.

Read more ...
18 01 2016

மாரடைப்பை தடுக்கும் கிவி 

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில், உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகளில், மருத்துவ பெட்டகம் என்று கிவி பழத்தைப் போற்றுகின்றனர். எம்முடைய நாட்டில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய் யப்படும் இந்த பழம் தற்போது மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது. கிவியா? அப்படியென்றால்? அதன் மருத்துவ குணம் என்ன? என அறிய ஆவலாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கவும்.

Read more ...

13 01 2016

உடல் பருமனை குறைக்க எ‌ளிய வழிகள்...!

 தினமும் எளிதான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தினமும் 2 இலிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் பட்டினிக் கிடத்தல், கூல் ட்ரிங்ஸ் மற்றும் அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும். இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-4) இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

Read more ...
11 01 2016

கவனம் : கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம்

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 70 000 இற்கும் மேற்பட்ட மாதவிடாய்க் காலத்தைக் கடந்த பெண்களிடம் நடத்திய ஆய்வில் கார்போஹைட்ரேட் அதிகம் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவற்றை உண்பவர்களின் இரத்த சர்க்கரை அளவு உயர்வதாக கண்டுபிடித்துள்ளனர்.

Read more ...
02 07 2015

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பாலே சிறந்தது 

புதி­தாகப் பிறக்கும் குழந்­தை­யொன்றின் வளர்ச்­சிப்­ப­டி­களில் தாய்ப்பால் ஊட்­டு­வது இன்­றி­ய­மை­யாத முக்­கி­யத்­து­வத்தைப் பெறு­கின்­றது . அதே­வேளை, தாய்ப்பால் ஊட்டும் பெண்­க­ளுக்கு மார்ப்புப் புற்­றுநோய் ஏற்­படும் அபாயம் 42 வீதத்தால் குறை­வாகும் என புதிய அறி­வியல் ஆராய்ச்­சி­களின் ஊடாகத் தெரி­ய­வந்­துள்­ளது.

அதற்­க­மைய தாய்ப்பால் ஊட்­டு­வதன் முக்­கி­யத்­துவம் பற்­றியும் அதனை மென்­மேலும் ஊக்­கு­விக்­கவும் பல்­வேறு நிகழ்ச்­சித்­திட்­டங்கள் சுகா­தார அமைச்­சி­னாலும் சுகா­தார கல்­விப்­ப­ணி­ய­கத்­தாலும் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வாறு பார்க்­கின்ற போது அண்­மையில் "தாய்ப்பால் ஊட்­டுவோம் வாழ்வை வெல்வோம்" என்ற தொனிப்­பொ­ருளில் ஊட­க­வி­ய­லாளர் கருத்­த­ரங்­கொன்று சுகா­தா­ரக் ­கல்­விப் ­ப­ணி­ய­கத்தில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் விசேட மருத்­துவ நிபு­ணர்கள் கலந்­து­கொண்டு உரை­யாற்­றினர். அதன்­போது அங்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டக் கருத்­துக்கள் பதி­வு­செய்­யப்­ப­டு­கின்­றன.

Read more ...
20 06 2015 

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எலுமிச்சை

ஆண்டு முழு­வதும் கிடைக்கும் பழம் எலு­மிச்சை. உண­வா­கவும், மருந்­தா­கவும் மட்­டு­மின்றி மங்­கள பொரு­ளா­கவும் எலு­மிச்சை திகழ்­கி­றது. உலகம் முழு­வதும் எலு­மிச்­சையின் மருத்­துவ பண்­பு­களை அறிந்து அதி­க­ளவில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். சாத்­துக்­குடி, ஓரஞ்சு, நாரங்காய் ஆகி­ய­வையும் எலு­மிச்சை இனத்தை சேர்ந்­த­வையே. இதன் இலை­களில் தைலச்­சு­ரப்­பிகள் உள்­ளன. 3ஆவது ஆண்டில் பலன் தரும் எலு­மிச்சை 30 முதல் 50 ஆண்­டுகள் வரை மகசூல் தரும். செழிப்­பான பூமி என்றால் 100 ஆண்­டுகள் வரை நீடித்து வாழும்

நல்ல நில­மாக இருந்தால் ஒரு மரம் ஆண்­டிற்கு 2ஆயிரம் பழங்கள் வரை கொடுக்கும். இப்­பழம் ஊறு­கா­யா­கவும், களைப்பை உட­ன­டி­யாக நீக்கி புத்­து­ணர்ச்சி தரும் பழச்­சா­றா­கவும் பயன்­ப­டு­கி­றது. இது­த­விர மங்­கள பொரு­ளா­கவும், திருஷ்டி பரி­கா­ர­மா­கவும் பயன்­படும் எலு­மிச்­சையை சிலர் மாந்­தி­ரீ­கத்­திற்கும் பயன்­ப­டுத்­து­கின்­றனர். பெரி­ய­வர்­களை மரி­யாதை செய்­யவும் இப்­பழம் வழங்­கப்­ப­டு­வ­துடன், தெய்­வங்­க­ளுக்கு மாலை­யா­கவும் அணி­விக்­கப்­ப­டு­கி­றது. எலு­மிச்சை பழத்தின் சத்­துக்கள்

Read more ...
12 06 2015

நீரிழிவு நோயும் அதன் வகைகளும்

நம் உடல் திசுக்களால் ஆனவை. உடலின் உள்ளே உள்ள திசுக்கள் நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கின்றன. அந்தத் திசுக்கள் இயங்கத் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பிரித்து வழங்குவதற்கு, ‘இன்சுலின்’ உதவுகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது, நம் உடலில் உள்ள கணையமே. இது, நமது வயிற்றின் பின் பகுதியில் உள்ளது. சில பல காரணிகளால் இன்சுலினின் அளவு குறையும்போது, திசுக்கள், தமக்குத் தேவையான குளுக்கோஸைப் பெற்றுக்கொள்ள முடியாததால், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது.

Read more ...