23 05 2015

அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பதால் மார்பு புற்றுநோய் அபாயம் 

அள­வுக்­க­தி­க­மாக சிவப்பு இறைச்­சியை உண்­பது மார்பு புற்­றுநோய் ஏற்­படும் அபா­யத்தை சிறிது அதி­க­ரிப் ­ப­தாக அமெ­ரிக்க ஆய்­வொன்று கூறு­கி­றது. இளம் பெண்­க­ளுக்கு மார்பு புற்­றுநோய் ஏற்­படும் அபா­யத்தை குறைப்­ப­தற்கு சிவப்பு இறைச்­சிக்கு பதி­லாக பட்­டா­ணிகள், அவரை வகைகள், முட்­டைகள், கடலை, மீன் என்­ப­வற்றை உண்­பதன் மூலம் குறைக்க முடியும் என போஸ்டன் நக­ரி­லுள்ள ஹவார்ட் பொது சுகா­தார பாட­சா­லையை சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூறு­கின்­றனர்.

Read more ...
14 05 2015

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

“இவள் சரி­யான வேலைக் கள்ளி. கோப்­பைகள் கழு­வு­கிற வேலை தன்ரை தலை­யிலை விழுந்­து­விடும் என்று மெல்ல மெல்லச் சாப்­பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்­புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறு­பு­றுத்தாள்.

“இவ­வோடை டின்னர் சாப்­பிடப் போனால் கடைக்­காரன் பூட்டப் போறன் என்று அவ­ச­ரப்­ப­டுத்தி எழுப்­பி­னால் தான் எழும்­புவாள்” என்று நக்கல் அடித்­தவர் “வாய் நோகாமல் சாப்­பிட்டு ஸ்டைல் காட்­டுவா” என நீட்டி முடித்தார். மற்­ற­வர்கள் தவ­றெனக் காரணம் காட்டிப் பேசி­னாலும் நக்கல் அடித்­தாலும் சிலரால் தமது பழக்­கத்தை மாற்ற முடி­யாது. இருந்த­போதும், சில பழக்­கங்கள் நன்­மையும் தரலாம். மெது­வாக உண்­ப­வர்­களில் பலர் மெல்­லிய உடல் வாகி­ன­ராக இருக்­கி­றார்கள்.

Read more ...
06 05 2015

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

Read more ...
29 04 2015 

சளி இருமலுக்கு இயற்கை மருத்துவம்

மிளகையும் வெல்­லத்­தையும் வெறும் வயிற்றில் உட்­கொண்டால் இருமல், நீர்க்­கோவை ஆகி­யவை குண­மாகும். சீர­கத்­தையும் கற்­கண்­டையும் மென்று தின்றால் இருமல் குண­மாகும். நான்கு மிள­கையும், இரு கிராம்­பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்­றி­லையில் மடித்து மென்று விழுங்­கினால் இருமல் குண­மாகும். நான்கு வால் மிளகைச் சிறி­த­ளவு புழுங்­க­ல­ரி­சி­யுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பரு­கினால் இருமல் குண­மாகும்

தூய்­மை­யான அரு­கம்­புல்லை எடுத்து நன்­றாக மென்று பற்­களில் வலி­யுள்ள பகு­தியில் ஒதுக்­கினால் பல்­வலி உடனே குண­மாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழு­வதும் தட­வ ­வேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக் ­கொப்­பளித்தால் பற்­களில் உள்ள கிரு­மிகள் அழியும். தேங்காய் எண்­ணெயை நாள்­தோறும் பல­முறை உதட்டில் தட­வினால் உதடு வெடிப்பு, உதட்டு புண், தோல் உரிதல் ஆகி­யன குண­மாகும்.

Read more ...
18 04 2015

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் கொத்தமல்லி 

நாம் அன்­றாடம் சமை­யலில் பாவிக்கும் பொருட்­களில் கொத்­த­மல்­லியும் ஒன்­றாகும். உண­வுக்கு மட்­டு­மல்ல நோய்க்கு மருந்­தா­கவும் இது விளங்­கு­கி­றது. கொத்­த­மல்லி விதை­யையும் கொத்­த­மல்லி இலை­யையும் பசை­யாக அரைத்து எடுத்து மேல்­பூச்­சாக பூசும் போது தோல் நோய்க்கு சிறந்த மருந்­தாக விளங்­கு­கின்­றது. தோல் சுருக்­கத்தை நீக்கி பள­ப­ளப்­பாக்­கின்­றது. கண்­களில் ஏற்­படும் இரத்த அழுத்­தத்தை குறைக்கக் கூடி­யது. கரு­வ­ளையம் சுருக்­கங்­க­ளுக்கு கண் வட்­டத்­திற்கு கீழே பூசி சிறிது நேரத்தின் பின் கழு­வினால் நல்­லது . வயிற்­று­வலி அஜீ­ர­ணத்தை குறைக்கும். ஈர­லுக்கு பலத்தை தரும். சிறி­யவர் முதல் பெரி­யவர் வரை பயன்­ப­டுத்­தலாம். சீனாவில் அம்மை வருத்­தத்­திற்கு கொத்­த­மல்லி இலையை பயன்­ப­டுத்­து­கின்­றார்கள்.

Read more ...
10 04 2015

புற்றுநோயை வராமல் தடுக்கும் பூண்டு

பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான். பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் பூண்டுடில் உள்ளது.

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

Read more ...
20 01 2015

எப்­போ­துமே ஆரோக்­கி­யமாக இருக்க வேண்­டுமா? இதோ தண்ணீர் மருத்­துவம்

இத்­த­கைய தண்­ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வரு­வதால் நம்மை தாக்கும் பல நோய்­களில் இருந்து விடு­ப­டலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி. இதை கடை­பி­டிக்கும் ஜப்­பா­னிய மக்கள் எப்­போதும் சுறு­சு­றுப்­புடன் ஆரோக்­கி­ய­மாக இருக்­கின்­றனர். இதை பற்­றிய நன்­மை­களை தெரிந்து கொள்­ளலாம்.

செரி­மா­னத்­திற்கு உதவும்

காலையில் வெறும் வயிற்றில் வெது­வெ­துப்­பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்­ட­பாலிக் விகி­த­மா­னது 24 சத­வீதம் அதி­க­ரிக்கும். இதனால் உண்ணும் உண­வா­னது விரைவில் செரி­மா­ன­ம­டைந்­து­விடும்.

Read more ...
01 07 2014

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது.

கொய்யா கோடைக்­கா­லங்­களில் தான் அப­ரி­மி­த­மாக விளையும். தற்­போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு­வதும் உற்­பத்தி செய்­யப்­பட்டு விற்­ப­னைக்கு வரு­கி­றது. கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தின் மருத்­துவப் பயனும் ஒன்­றுதான். கொய்­யாக்­க­னியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்­மி­ய­மாக இருக்கும். இதில் அதி­க­ளவு விட்­டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்­ளன. குறிப்­பாக நெல்­லிக்­க­னிக்கு அடுத்த நிலையில் விட்­டமின் சி சத்து கொண்ட பழம் கொய்­யாதான்.

Read more ...
20 06 2014

மாணவர்களுக்கு மனநலம் முக்கியம்' 

உடல் மன ஆன்மீக ரீதியான ஒட்டு மொத்த வளர்ச்சியையும் தெரிந்து கொள்வதையும் உள்ளடக்கியதே உண்மையான கல்வி. இன்று கல்வி என்பதன் வரையறை மாறி வெறும் புத்தக அளவிலே இருக்கிறது. உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை இன்றைய கல்வி கற்றுக் கொடுப்பது கிடையாது. இது சின்ன வயதிலிருந்தே மாணவர்களுக்குப் பெரிய குறையாக அவர்களுடன் இணைந்தே வளர்ந்து வருகிறது. குழந்தைக்காகப் பணம் ஒதுக்க முடிந்த பெற்றோர்களால் அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. அயராமல் உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள். யாருக்காக உழைக்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். குழந்தைகளுக்காகக் கட்டாயம் நேரம் ஒதுக்கி, அவர்களின் மீது கவனம் கொள்ள வேண்டும் என்று எங்களிடம் வரும் ஒவ்வொரு பெற்றோர்களிடமும், இந்த ஆலோசனையைக் கூறுகின்றோம்.

Read more ...
15 06 2014

நீரிழிவு உள்ளவர்கள் உருழைக்கிழங்கு சாப்பிடலாமா? 

உலகில் மிக அதி­க­மாகப் பயி­ரி­டப்­படும் உணவு வகை­களில் உருளைக் கிழங்கு முன்­ன­ணியில் நிற்­கி­றது. பரு­வ­கால வேறு­பா­டு­களைக் கடந்து வருடம் பூராவும் உல­கெங்கும் விற்­ப­னைக்குக் கிடைக்­கி­றது. இதற்குக் காரணம் எல்லாத் திசை­க­ளிலும் இது விளை­விக்­கப்­ப­டு­வதே ஆகும்.

தாவர வர்க்­கத்தில் இது தக்­காளி, கத்­தரி, மிளகு போன்­ற­வற்றின் இனத்தைச் சேர்ந்­தது. சரி­யான பரு­வத்தில் இதை கிண்டி அறு­வடை செய்­யாது விட்டால் அது வளர்ந்து பூத்துக் காய்த்து தக்­காளி போன்ற ஒரு பழத்தைத் தரும். அவ்­வாறு பூத்துக் காய்ப்­ப­தற்கு தேவை­யான சக்­தியை வழங்­கு­வ­தற்­காக தனது கிழங்கில் சேர்த்து வைக்­கி­றது. ஆனால் நாம் கிழங்கு நல்ல பரு­வத்தில் இருக்­கும்­போது கிண்டி எடுப்­பதால் அதன் வாழ்க்கைச் சக்­கரம் பூர்த்­தி­ய­டை­வதைத் தடுக்­கிறோம்.

Read more ...
08 06 2014

நீரிழிவு- இரத்தத்தில் சீனியின் அளவு குறைதல் 

"அம்மா ஒரே தூக்கமா இருக்கிறா. கூப்பிட்டால் எழும்புறா இல்லை. ஒருக்கால் போய்ப் பாருங்கோ" மகன் சொன்னார். அவர் பேசியது லண்டனில் இருந்து. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்ற வாரம்தான் அம்மா வீடு திரும்பியிருந்தார். வீட்டில் கூட இருந்த மகள் அவசர அலுவலாக ஊருக்குப் போய்விட்டா.

பராமரிப்பு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தாதிப் பெண்தான் பராமரிக்கிறாள். மற்ற மகள் சற்றுத் தள்ளி வேறு வீட்டில் இருக்கிறா. ஒரு நாளுக்கு இரண்டு தடவைகள் வந்து பார்த்து ஆக வேண்டியவற்றைச் செய்து திரும்புவா. பார்த்தவுடனேயே அது சாதாரண தூக்கம் அல்ல எனப் புரிந்தது. மயக்கநிலை. இரத்த குளுக்கோசைப் பார்த்தபோது அது 40 ல் நின்றது. Hypoglycemia என்போம். இரத்தத்தில் சீனியின் அளவு சாதாரண அளவிலும் குறைவது என அர்த்தமாகும். மற்றொரு ஐயாவின் நிலை முற்றும் மாறானது. அண்மையில்தான் நீரிழிவு எனக் கணடறிந்திருந்தோம். 'நீங்கள் தந்த குளிசைப் போட்டால் எனக்கு களைக்குது. இரத்தத்திலை சீனி குறைஞ்சபடியால்தான் தலைச் சுத்து வரும் என்று நண்பர் சொன்னர். நான் தலைச்சுத்து வந்தவுடன் சீனியைப் போடுறன்.'

Read more ...