05 06 2014

கர்ப்பிணிகளை பாதிக்கும் பாஸ்ட் புட் உணவு

கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருக்கும் போது தான் நிறைய உணவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படும். குறிப்பாக சிற்றுண்டிகளில் விற்கப்படும் பாஸ்ட் புட் (fast food) உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆரோக்கியமற்றதாகும். மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணாமல் இருப்பதே சிறந்ததாகும். அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது. பாஸ்ட் புட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளதால் பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதோடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Read more ...
0106 2014

கொழுப்பை கரைக்கும் கொள்ளு 

கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செ ய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு. புரதம் நிறைந்த ஒரு தானியம் கொள்ளு. நமது உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரி பார்க்கவும் புரதம் மிக அவசியம்

Read more ...
27 05 2014

 உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்

எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

* ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

Read more ...
22 05 2014 

நொறுக்குத்தீனி சாப்பிடுங்கள் மன அழுத்தத்தை குறையுங்கள்

இன்றைய நவீன உலகத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுகின்றோம். இதனால் நமது உடல் வலிமை குறைந்து பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது. ஆகவே, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மனவலிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது எல்லோர் வாழ்விலும் மன அழுத்தம் என்பது அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. மனஅழுத்தம் ஒரு நோயாகவே மாறி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்சனைகளை உருவாக்குகின்றது. இந்த நோய்க்கு காரணமாக இருப்பது அதிக வேலைப்பளு, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து இல்லா உணவு பழக்கவழக்கங்கள் தான். இதுவே அதிக மன அழுத்தம், மன மற்றும் உடல் வலுக்குறைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறாக, மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் பெரிதான பிரச்சனையாக மாறி வருகின்றது. அதனால் இதனை தவிர்த்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நொறுக்கு தீனி.

Read more ...
15 05 2014 

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில வழிகள்

கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு தன் வயிற்றில் உள்ள குழந்தை பெண்ணா ஆணா என்று தெரிந்து கொள்ள ஆவளாக இருப்பார்கள்.

அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில வழிகள் மூலம் தெரிந்து கொள்வார்கள். உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்

Read more ...
12 05 2014 

மார்பக புற்றுநோயை அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்து

கொழுப்பு சத்தின் பொதுவான ஒரு பக்க விளைவாக புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதாக அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

குறிப்பாக மார்பகப் புற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கு கொழுப்புசத்து குறைவான ஸ்டேடின்ஸ் போன்ற மருந்து வகைகள் உதவக்கூடும் என்று இவர்கள் சமீபத்தில் வெளிவந்துள்ள மருத்துவப் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

Read more ...
10 05 2014

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம் 

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம். எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது.

Read more ...
07 05 2014

வாய் துர்நாற்றத்தை போக்க சில வழிகள்

நிறைய மருந்து மாத்திரைகளை உண்ணும் நீரிழிவு நோயாளிகளின் வாய் அதிகம் நாறும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் வாய் நாறும். பற்சொத்தை இருந்தாலும் வாய் நாறும். மலச்சிக்கலும் பற்களில் பிரச்சினைகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் வாய் நாற்றம் அகன்று விடும். வெந்தயத் தேநீர் கூடுதலாக உடல் நாற்றத்தையும் அகற்றும். நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த மருந்தாகவும் வெந்தயத் தேநீர் திகழுகின்றது. வெந்தயத் தூளை காலையில் வெறும் வயிற்றில் உண்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். நன்கு கழுவிய இரு கரட்டுகளை கடித்துச் சாப்பிட்டால் உமிழ் நீர் நன்கு ஊறி வாய் நாற்றம் அகலும்.

Read more ...

 28 04 2014

வெந்நீரின் மகிமை

தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெந்நீரில் உள்ள பயன்கனை அறிந்திருக்கின்றோமா?

1. அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் உணவுகள் மற்றும் இனிப்புப்பண்டங்கள் உண்ட பின் சிலருக்கு ஒருவாறு நெஞ்சு எரிச்சல் இருந்தக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் வெந்நீரை பருகினால் நெஞ்சு எரிச்சல் போய்விடுவதோடு மற்றும் உணவும் செரித்துவிடும்.

2. காலையிலேயே வெந்நீர் அருந்தினால் மலப்பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்.

Read more ...
25 04 2014

இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச் சுவையும் உண்டு. நன்கு சமிபாடடையக் கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப் படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகின்றது்காய்

அண்மைய ஆய்வுகள் வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளன. பல்வேறு வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க உணவு என்று நிரூபித்துள்ளார்கள். பொதுவாகவே காரம் மிகுந்த உணவை உட்கொண்டால் வெள்ளரிக்காய் சாப்பிடுவது மிக நல்லது.

Read more ...