19 03 2018 சுயமரியாதை - 7 இடங்கை - வலங்கை பெரியாருக்கு முன்பும் கடவுள் மறுப்புக் கோட்பாடுகள் இருந்துள்ளன என்றாலும், அவற்றிற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு என்பதைப் பார்த்தோம். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது ஜாதி மறுப்பையும், சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதையும் பார்த்தோம். ஆனால் ஜாதி மறுப்பும் கூடப் பெரியாரிடமிருந்துதான் தொடங்கிற்று என்று சொல்ல முடியாது. அவருக்கு முன்பும் அது குறித்த செய்திகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்திலேயே வருணப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொருளதிகாரம், மரபியலில் உள்ள பல நூற்பாக்கள் வருணம் பற்றிப் பேசுகின்றன. "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க் குரிய" என்னும் நூற்பா தொடங்கிப் பல நூற்பாக்களில் அரசன், வைசியன், உழுதூண் மக்கள் போன்ற சொற்களைக் காண முடிகிறது. இவையெல்லாம் இடைச் செருகல் என்று கூறும் தமிழ் அறிஞர்கள்…
21 05 2018 சுயமரியாதை - 16 அன்பிற்கும் உண்டோ....? பகுத்தறிவு என்றாலே கடவுள் மறுப்பு மட்டும்தான் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்து விட்ட காரணத்தினால்தான், அவ்விதமான கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்ப்பு நாட்டில் உள்ளது. கடவுள் பக்தி என்பது வெறும் நம்பிக்கை மட்டுமன்று, அதற்குள் ஒரு விதமான அச்ச உணர்வும் கலந்திருக்கிறது அதனாலேதான் அதற்குப் பயபக்தி என்றே பெயர். கடவுளை நிந்தித்தால் அல்லது மறுத்தால் கூட தங்களுக்கு ஏதும் ஆகிவிடும் என்ற அச்சம் வெகு மக்களிடையே விரவிக் கிடக்கிறது. கடவுளை நம்புதல் எளிமையானதாகவும், ஆறுதல் தருவதாகவும் உள்ளது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது, எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான் என்பன போன்ற நம்பிக்கைகள், நமக்கு வசதியாக உள்ளன. யாரும் எதையும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள், நாம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது கடினமாக…
12 02 2018 சுயமரியாதை - 2 கடவுளும் பெரியாரும் தஞ்சை, தருமபுரி ஆகிய ஊர்களில் அன்று எழுப்பப்பட்டிருந்த பெரியார் சிலைகளின் அடிபீடத்தில் கடவுள் மறுப்புத் தொடர்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றை எதிர்த்தும், அந்த வரிகளை நீக்க வேண்டும் என்று கோரியும் முன்னாள் துணை மேயர் டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பக்திமான்கள் நம்பிக்கையையும், உணர்வுகளையும் அவ்வரிகள் காயப்படுத்துவதாகத் தன் மனுவில் கூறியிருந்தார். அந்த வழக்கு, நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. தில்லி உயர்நீதி மன்றத்திலிருந்து 1967 நவம்பரில்தான் நீதிபதி இஸ்மாயில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். 1979 வரை நீதிபதியாகவும், 1979-81இல் தலைமை நீதிபதியாகவும் அவர் பொறுப்பு வகித்தார். வழக்கு மூன்றாண்டுகள் நடைபெற்றது. இறுதியாக, 11.10.1973 அன்று தீர்ப்பு சொல்லப்பட்டது. "மனுதாரர் குறிப்பிட்டிருப்பது போல அந்த வாசகங்கள் பொது…
16 04 2018 சுயமரியாதை - 11 பற்றி எரியும் நெருப்பு! இருவேறு மதங்களுக்குள்தான் மோதல் நடைபெறும் என்றில்லை. ஒரே மதத்திற்குள்ளேயே கடும் போர்கள் வரலாற்றில் நடைபெற்றுள்ளன., நடைபெற்றுக் கொண்டும் உள்ளன. சிலுவைப் போர், சன்னி-ஷியா மோதல்கள், சைவ-வைணவச் சண்டைகள் என்று பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இன்றும் கூட குஜராத்தில் நாம் காணும் தலித் எழுச்சி, ஒரே இந்து மதத்துக்குள்ளேயே நடக்கும் பெரும் யுத்தம்தானே! குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், உனா என்னும் இடத்தில்தான் சென்ற மாதம் 11 ஆம் தேதி,இறந்த மாட்டுத் தோலை உரித்தார்கள் என்ற குற்றம் சாற்றி, நான்கு இளைஞரகளைச் சங்கிலியால் கட்டி வைத்து, இரும்புக் கம்பிகளால் "கோ ரக்ஷன் சமிதி" (பசுப் பாதுகாப்புக்கு குழு) அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்தார்கள். அடித்தவர்கள், அடிபட்டவர்கள் இருவருமே இந்து மதத்தினர்தாமே! இந்து மதத்தில், மதத்தை விட,…
26 02 2018 சுயமரியாதை - 4 சமூக நீதியும் கடவுள் மறுப்பும் பெரியாரின் கடவுள் மறுப்பே, சமூக நீதியின் அடிப்படையில் எழுந்ததுதான் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு! வைணவ மரபுகளைக் கடுமையாகப் பின்பற்றிய ஒரு வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் குடும்ப நடவடிக்கைகளே ஓர் எதிர்க் கருத்தை அவரிடம் தோற்றுவித்தன. அதனால், யார் ஒருவருடைய நூலையும் படிக்காமல், தன் சுயசிந்தனையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவாளராக உருப்பெற்றார். என்றாலும் பகுத்தறிவு அடிப்படையில் தோன்றிய கடவுள் மறுப்புக் கோட்பாட்டைச் சாதி எதிர்ப்பு, சமூக நீதி என்னும் தளங்களிலேதான் நிலைநிறுத்தினார். 1919 இல் காங்கிரசில் சேர்ந்த அவர், 1925 இறுதியில் அக்கட்சியை விட்டு விலகினார். காங்கிரஸ் கட்சி கடவுள் மறுப்பை ஏற்கவில்லை என்று கூறி அவர் அக்கட்சியை விட்டு விலகவில்லை. சமூக நீதிக்கு வழிவகுக்கும் பாதைகளில் ஒன்றான இட…