24 09 2018 தமிழை உயர்த்திப்பிடித்த தந்தை பெரியார் ! பாடப் புத்தகக் கமிட்டியில் உள்ளவர்கள் தமிழர்களுக்கு மான உணர்ச்சி, நாட்டு உணர்ச்சி, இன உணர்ச்சி இருக்குமானால் இராமாயண, மகாபாரதக் கதைகளைச் சரித்திரத்தில் சேர்க்கச் சம்மதிப்பார்களா?பண்டிதர்கள், உபாத்தியாயர்கள் இவற்றை நாம் சொல்லும் போது நம்மீது பாய்கிறார்களே தவிர, தமிழர்களுக்கு இழிவு தரக் கூடிய, நமக்குத் தொடர்பில்லாத, நமது முற்போக்கைத் தடுக்கக் கூடிய, பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை கற்பிப்பது குறித்து கவலைப்படுவதில்லை. இனியாவது தமிழ்ப் பண்டிதர்கள் இதில் கவனம் செலுத்த மாநாடு கூட்டி, இவற்றைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தமிழிலே, தமிழ்மொழி இலக்கியத்திலே, தமிழர் நல்வாழ்விலே, தமிழர் தன்மானத்திலே, தமிழர் தனி ஆட்சியிலே கவலையுள்ள நம் செல்வர்களுக்கு (கல்வி நிலையம் நடத்துகின்றவர்களுக்கு) இந்தக் காரியமெல்லாம் முக்கிய கடமையல்லவா என்று கேட்கிறோம்.நிலைகுலைந்த தமிழ் மக்களைத் தட்டி எழுப்பி, உணர்ச்சி…
22 03 2019 நஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல் "இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் எல்லாக் கட்சிகளையும்போல பிஜேபியும் போட்டியிடுகிறது என்று நினைத்தால் அது பெரும் தவறு. இந்திய மக்கள் பிஜேபியை ஒரு கட்சியாக நினைக்க வேண்டாம், அதுவொரு பாசிச அமைப்பு." -- பொருளாதார அறிஞர்.அமர்த்தியா சென். "மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவில் இப்படியொரு ஏமாற்றுக்காரர் இதுவரை பிரதமர் ஆனதே கிடையாது. என் இறுதிநாளில் நிற்கிறேன். அவர் மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து போராடுவேன்." -- மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பிஜேபி முன்னாள் சட்டத் துறை அமைச்சர். இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் பல ஆண்டுகாலம் முரணாக இருந்த பல கட்சிகள் இன்று பாசிச எதிர்ப்பு என்ற ஒரு…
01 09 2018 மானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம் இந்திய அரசியல்வாதிகளில் கலைஞர் அளவிற்கு முற்போக்காக செயல்பட்டவர்களை நம்மால் பார்க்க முடியாது. தேர்தல் அரசியல் வரம்பிற்குள் நின்று என்ன செய்ய முடியுமோ, அதை முடிந்தவரை செய்ய முயற்சித்தவர் கலைஞர். அண்ணாவிற்கு அடுத்து பெரும் அறிவுஜீவியாய் அனைத்தைப் பற்றியும் அறிவு கொண்டவராய் இருந்தார் கலைஞர். சாதியைப் பற்றியும், பார்ப்பன மேலாதிக்கத்தைப் பற்றியும், இந்திய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. அனைத்து மக்களும் சாதி பேதமின்றி ஒரே இடத்தில் வாழ, பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கினார். தமிழகமெங்கும் ஏறக்குறைய 237 சமத்துவபுரங்களை உருவாக்கி அதில் தலித்துகள் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 25 சதவீதமும், மற்ற வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் 1970 டிசம்பர்…
09 09 2018 பாசிச பாஜக ஒழிக! பிஜேபியால் தமிழ்நாட்டுக்கு இன்று சோபியா என்ற ஆளுமை கிடைத்திருக்கின்றார். ஒருவேளை அந்த விமானத்தில் தமிழிசை வரவில்லை என்றால், இப்படி ஒரு வீரமிக்க, துணிவுமிக்க, தன்மானமும், சுயமரியாதையும் உள்ள தமிழ்ப் பெண் தமிழ்நாட்டில் இருப்பதே தெரியாமல் போயிருக்கும். ஒட்டுமொத்த இந்தியாவைப் பிடித்த பெரும் தரித்திரமாய், பீடையாய் பாஜக‌ மாறியிருக்கின்றது. அந்தக் கட்சியை சேர்ந்தவர்களையோ, அதற்கு ஆதரவாய் இருப்பவர்களையோ பார்த்தாலே மக்கள் இயல்பாகவே பெரும் கோபமடைகின்றார்கள். தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் அழித்து தங்களைச் சாகடிக்க வந்த குற்றக் கும்பலாக பாஜகவை மக்கள் கருதுகின்றார்கள். அதன் வெளிப்பாடுதான் விமானம் என்று கூட பார்க்காமல் சோபியாவை ஆத்திரப்பட வைத்திருக்கின்றது. அவரது கோபம் தமிழிசை என்ற தனி ஒரு பெண்ணைச் சார்ந்தது கிடையாது. அவர் சார்ந்து இருக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்ற தரம்கெட்ட கும்பலின் மீதான…
06 11 2018 யார் தமிழர்? இன அடையாளத்திற்கான வரையறை என்ன? யார் தமிழர் என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது. இனத்துக்கான வரையறையை பலர் பல்வேறு விதமாக வைக்கிறார்கள். ஓர் இனக்குழுமம் என்றால் என்ன என்று ஒரு சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.வரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களை அறிவியலாளர்கள் ஆராய்ந்து, அவர்கள் எது போன்ற வரையறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கற்று, அதிலிருந்து பொதுவான காரணிகளை எடுத்து இனக்குழுக்கான வரையறையை உருவாக்குகிறார்கள். இந்த வரையறை வரலாற்றில் தோன்றிய இனக்குழுக்களுக்கு பொதுவாக பொருந்துவதால், அவ்வரையறை அக்குழுக்களின் வளர்ச்சிக்கும் தற்காப்புக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அக்குழுக்கள் எப்பொழுதோ அழிந்திருக்கும். சமூகவியலை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான மேக்சு வேபர் (Max Weber) அவர்கள் ஓர் இனக்குழுமத்துக்கு வைத்த வரையறையை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது சமூகவியலாளர்களின் பொதுவான கருத்து.…