28 08 2018 சாமியார் என்ற கவசத்துள் சதிவேலைகள்! சரச லீலைகள்! சாமியார்கள் என்றாலே அவர்கள், “நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவில் அன்பு காட்டி’’ ஏமாற்றுகிறவர்கள் என்றே பொருள். இதில் போலிச் சாமியார், நல்ல சாமியார் என்பதெல்லாம் அறியாமை! எல்லாம் போலிகள்தான். மாட்டிக்கொண்ட சாமியார், மாட்டிக்கொள்ளாத கெட்டிக்கார சாமியார் என்று வேண்டுமானால் சொல்லலாம். “காவிக்குள் ஒடுங்கிய  காம ஆமைகள்!காலத்தை எதிர்நோக்கும் கபட ஊமைகள்!வாய்ப்பிற்காய் வாலசைக்கும் மோப்ப நாய்கள்!வளைக்காமல் சொன்னால் வக்கிர நோய்கள்!’’என்று சாமியார்கள் பற்றியும், “மன்மத பீடம் மடமையின் கிடங்கு!விட்டில் பெண்களை விருந்தாய் அருந்தும் விசித்திர விடுதி!உள்ள அழுக்கை தப்பினை மறைக்க தவவேடம் புனையும் ஒப்பனைக் கூடம்’’ என்று சாமியார்களின் மடங்கள் பற்றியும் நான் எழுதிய கவிதைத் தொகுப்பில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். அவை இனறைக்கும் முழுதும் பொருந்துவதை நீங்கள் அறியலாம். சாமியார்கள் உருவான காலந்தொட்டே அவர்களின் மோசடிகளும், காமலீலைகளும் உருவாகிவிட்டன. ஆனால், இக்காலத்தில் அவை உச்சத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாக மதவாத…
27 09 2018 நான் யார்? பெரியார் என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன். (‘விடுதலை’, 9.3.1956) * எனக்குச் சுயநலமில்லை என்று கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும் சுயநலமும் எல்லையற்றன. திராவிடர் சமுதாய நலனையே என் சொந்த நலமாக எண்ணி இருக்கிறேன். அந்தச் சுயநலத்திற்காகவே நான் உழைக்கிறேன். (‘விடுதலை’, 15.1.1955) * எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்து சரி என்றுபட்டபடி நடவுங்கள் என்பதேயாகும். (‘குடிஅரசு’ 24.11.1940) * நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக்…
02 10 2018 மனிதப் பற்றாளர் தந்தை பெரியார்! ஜாதி ஒழிப்புப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் - தாழ்த்தப்பட்டோர் - உயர்ஜாதிக்காரர்கள் என்ற பிறவி பேதத்தை ஒழிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டார் என்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடிஅரசு’ இதழில் பதிவாகியுள்ள ஒரு நிகழ்வு இது.திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கிராமம் மங்கலம். 30.7.1947 அன்று காலை 9 மணிக்கு மங்கலம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்பு: கே.எஸ்.ராமச்சந்திரன்   தலைமை: தோழர் அருணாசல அய்யர் மணியம்மையார், என்.வி.நடராஜன் ஆகியோர் உரைக்குப் பின் தந்தை பெரியார் அவர்கள் ‘சமுதாய இழிவும் பார்ப்பனியமும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர் பெரியார் அவர்களை நோக்கி, “பார்ப்பனர் நம்மை மதிக்காததிருக்கும்போது நம் இனத்தவரைத் தலைவராகக் கூட்டத்திற்கு வைக்காமல் ஓர் ஆரியரை நியமித்தது ஏன்?’’ என்று கேட்டார்.பெரியார்…
12 08 2018 சீர்திருத்தச் சிந்தனையாளர் வடலூர்ப் பெரியார் யார் இந்த வடலூரார்?ஈரோட்டுப் பெரியார் என்றால் அனைவரும் அறிவர். ஏன் பெரியார் என்றாலே அது 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற மானிடப் பற்றாளர் தந்தை பெரியார் அவர்களையே குறிக்கும். அதேபோல், வடலூர்ப் பெரியார் என்பவர் யார்? வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தாம் அவர். வள்ளலார் என்றாலே போதும்! அனைவரும் அறிவர். பெரியாரோடு வள்ளலாரை ஒப்பிடலாமா? வடலூர்ப் பெரியார் என்று வள்ளலாரையும் தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது ஏன்? அப்படிக் கூறலாமா? கூறுவது சரியா? கூறலாம்; சரிதான் என்பதை அவரது திருவருட்பா ஆறாம் திருமுறைப் பாடல்கள் வழி அறிந்து கொள்ளலாம். சிந்தனை செய், மனமே!  நாம் இப்போது, வள்ளலாரின் அருட்பாக்களைத் தள்ளிவைத்து விட்டு அவரது எழுத்து, பேச்சு இவற்றின் அடிப்படையிலும் வடலூரார் பெரியார் கருத்தை ஒட்டிப் பேசியவர்; எழுதியவர் என்று…
26 07 2018 சமூக சீர்திருத்தவாதி வள்ளலார் அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூர் என்கின்ற கிராமத்தில் இராமய்யாப் பிள்ளை சின்னம்மையார் ஆகியோருக்குப் பிறந்தார். குழந்தையாக இருக்கும்போதே இவரின் தந்தை இறந்தார், இவரின் தாயார் சென்னை அருகே அமைந்துள்ள பொன்னேரியில் குடியேறினார்.சென்னையில் ஏழுகிணறு பகுதியில் எண்.39, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் தனது அண்ணன் சபாபதி குடியிருந்த வீட்டின் மாடியில் இராமலிங்கம் பிள்ளை கல்வி கற்கத் தொடங்கினார். ஆனால் கல்வியில் நாட்டமில்லை. முருகக் கடவுளை வணங்குவதிலேயே காலத்தைக் கழித்தார். சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். அப்பாடல்களே திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.இராமலிங்கரின் அண்ணன் சபாபதியும் அண்ணியும் மூத்த சகோதரியின் மகள் தனக்கோட்டியை இராமலிங்கருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.…