23 07 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 119) ஜே. ஆரின் அதிகார விளையாட்டு ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று பிரபலமாக விளிப்பதற்குப் பின்னால், நிறைய நியாயங்கள் இருக்கின்றன. முற்றுமுழுதான அதிகாரத்தை அடைவதற்கு, ஜே.ஆர் செய்த காய்நகர்த்தல்கள் ‘மாக்கியாவலி’யின் இளவரசனை ஒத்தவை. தன்னுடைய அதிகாரத்தைப் பலப்படுத்துகிற அதேவேளை, எதிரியின் பலத்தைச் சிதைக்கும் கைங்கரியத்தை, ஜே.ஆர் சிறப்பாகவே கையாண்டார். ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் களையப்பட்டு, அரசியல் அஞ்ஞாதவாசத்துக்குள் தள்ளப்பட்டிருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிறிமாவின் வாரிசுகளான அநுர - சந்திரிக்கா இடையே எழுந்த அதிகாரப் போட்டியை, தனக்குச் சாதகமாக்கிய ஜே.ஆர், பின்னணியில் அநுர குழுவை ஆதரித்ததன் வாயிலாக, ஏற்கெனவே அரசியல் தோல்வியில் உழன்று கொண்டிருந்த சுதந்திரக் கட்சியை…
28 06 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 67) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமானது, பயங்கரவாதத்தோடு தொடர்புடையவர்களென நிர்வாகத்துறை கருதும் நபர்கள் மீது, அரசாங்கத்தின் இரும்புக்கரம் பாயத்தக்கவாறு நிர்வாகத்துறையின்பால் அதீத அதிகாரத்தைக் குவித்தது. இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிக் கருத்தரைக்கும் போது, ‘இலங்கை: அதிகரிக்கும் பிழைகளின் சோகம் (ஆங்கிலம்)’ என்ற தனது நூலில் ‘சட்டவாட்சியின் கீழ் இயங்கும் எந்தவொரு சுதந்திர, ஜனநாயக நாட்டிலும் அமுலிலுள்ள எந்தச் சட்டமும் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு ஒப்பான அதிகாரங்களைக் கொண்டமையவில்லை. எந்தவொரு நாகரீக நாட்டிலும் குறித்த…
16 05 2017 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-62) 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) ‘இலங்கைப்பிரஜை’1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை நீண்டகால இழுபறிக்குட்பட்டிருந்தது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் “குதிரைப் பேரத்தில்” சிக்கி இழுபறிப்பட்ட இந்திய வம்சாவளி மக்களில், இந்தியாவுக்குத் திரும்பிச்செல்லத் தீர்மானிக்காது, இலங்கையில் இருக்கத் தீர்மானித்தவர்களில், இலங்கை அரசாங்கத்தால் பதிவுசெய்யப்பட்டவர்கள் “பதிவுசெய்யப்பட்ட பிரஜைகள்” என்று வகைப்படுத்தலின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இந்த நடைமுறை, “பரம்பரைக் குடிமக்கள்”, “பதிவுசெய்யப்பட்ட குடிமக்கள்” என்ற இருவகைப்பட்ட செயற்கைப் பிரிவினையை இலங்கையில் உண்டாக்கியிருந்தது. 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பின் 26ஆம் சரத்து இந்த செயற்கைப் பிரிவினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவந்தது.…
11 05 2018 தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 109) ஜே.ஆரின் அச்சம் ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரப் பதவிகளிலுள்ளவர்கள், இலங்கையின் அரசமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் விசுவாசமாகவும், பிரிவினைக்கு, ஆதரவாகவோ, துணைபோகவோ மாட்டோம் என்று, சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டியதாயிற்று. அவ்வாறு இல்லையெனில், அவர்கள் பதவிகளை இழக்கும் நிலையும், குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய நிலையும், ஆறாவது திருத்தத்தின் விளைவாக உருவாகியிருந்தது. ஆறாவது திருத்தத்தின் பின்னரான, தமது நிலைப்பாடு பற்றியும், எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றியும் கலந்துரையாடித் தீர்மானிப்பதற்காக, ஆறாவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு இரண்டு தினங்களில், அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் 16 பேரைக் கொண்ட நாடாளுமன்றக்…
15 02 2017 தமிழ் மக்களின்அபிலாஷைகள் என்ன? பகுதி - 51 - 1978ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: வெற்றியை நோக்கி ஜே.ஆர் என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தோல்விகளின் காரணம் என்ன என்று தேடிய ஜே.ஆர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த டட்லி சேனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன பதவியேற்றதிலிருந்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வந்தார். 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த படுதோல்வியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பெரும்பொறுப்பு ஜே.ஆரிடமிருந்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வி வெட்கக்கேடானதொரு தோல்வியாகும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அரசியலில்…