28 03 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (04)

( ஆர். ராம்)

குறித்த நீதி­மன்­றத்­திற்கு நீதி­ப­தி­களை தவி­ரவும் அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணத்­துவம் வாய்ந்­த­வர்களை குறித்த அந்த நீதி­மன்­றத்தின் நீதி­ப­தி­க­ளாக ஐந்து வரு­ட­கா­லத்­திற்கு மாத்­திரம் உள்­ள­டக்­கி­ய­தாக ஏற்­பா­டு­களை செய்­வது சிறந்­த­தாகும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் உயர் நீதி­மன்­றத்தின் மீயுயர் தன்மை இழக்­கப்­ப­டு­கின்­ற­தல்­லவா? 

பதில்:- ஆம். மீயுயர் தன்மை சிறிது வலு­வி­ழக்­கப்­படும். ஆனாலும் தற்­போ­தி­ருக்­கின்ற நீதி­மன்­றக்­கட்­ட­மைப்பின் பிர­காரம் உயர்­நீ­தி­மன்­றமே உயர்ந்­தது. அர­சி­ய­ல­மைப்பு பற்­றிய பொருள்­கோ­ட­லுக்­கான அவ­சியம் ஏற்­பட்டால் அதனை சீர் செய்யும் நீதி­மன்ற நியா­யா­திக்கம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­றத்­திற்கு மட்­டுமே இருக்கும். ஆரம்­பத்தில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் தொடர்பில் முன்­மொ­ழி­கின்­ற­போது நீதி­ப­திகள் கூட விரும்­பி­யி­ருக்­கவில்லை. இருப்­பினும் அது தொடர்­பாக உப­கு­ழுவில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள். ஆகவே இந்த முன்­மொ­ழிவு நடை­மு­றைக்கு வரு­கின்­ற­போது ஏனைய நாடு­களின் அனு­ப­வங்­க­ளையும் கருத்­திற்­கொண்டே நடை­மு­றைப்­ப­டுத்­துவோம்.

கேள்வி:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்­கான அதி­காரம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது ஜனா­தி­பதி பதவி வெறு­மனே கௌர­வப்­ப­த­வி­யா­கி­வி­டுமே?
பதில்:-ஆம்.பெய­ர­ள­வி­லேயே ஜனா­தி­பதி என்­கின்ற நிலைமை தான் ஏற்­படும். எமது நாட்டில் 1978ஆம் ஆண்டு வரையில் இருந்த நிலை­மை­க்கே மீண்டும் செல்­வ­தா­க இருக்கும். வர­லாற்றை எடுத்­துப்­பார்க்­கையில் நிறை­ வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யா­னது இந்த நாட்டில் எதேச்சா­தி­கா­ரத்­திற்கு தான் வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது. முத­லா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யான ஜே.ஆர்.ஜெய­வர்த்தன முதல் இறு­தி­யாக மஹிந்த ராஜ­பக் ஷ வரையில் அதி­கார துஷ்­பி­ர­யோ­கத்தை தான் மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதில் விதி­வி­லக்­காக சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவை சொல்ல முடியும்.

அதன் பிர­காரம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­பட்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­றக்­கூ­டிய நாட்டின் தலைவர் இருக்­க­வேண்­டு­மென்­பதே பலரின் கருத்­தா­கின்­றது. அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், எமக்­குள்ள பிர­தான பிரச்­சினை மாகாண ஆளு­நர்களின் அதி­கா­ரங்கள். தற்­போது இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் மக்­களால் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­படும் ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினால் அவர் தன்­னு­டைய முக­வ­ராக உள்ள மாகாண ஆளு­நர்­க­ளுக்கு அதி­க­ள­வான அதி­கா­ரங்­களை வழங்க முடியும் என 13ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு வழங்­கப்­பட்ட பொருள்­கோ­டலில் நீதி­மன்றம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆகவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை நீக்­கப்­ப­டு­கின்­ற­போது மாகாண ஆளு­நர்­க­ளுக்­கான அதி­காரம் நீக்­கப்­ப­டு­வ­தற்கும் வழி­யேற்­படும். மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆளு­நர்கள் பெய­ர­ள­விலே இருப்­ப­தோடு மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளி­டத்தில் தான் மாகாண நிறை­வேற்று அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு செய்­கின்­ற­போது தான் அதி­கா­ரங்கள் மக்கள் கையிலே பகி­ரப்­பட்­ட­தாக இருக்கும்.

கேள்வி:மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை உறுதி செய்­வ­தற்­காக செய்­யப்­பட்­டுள்ள முன்­மொ­ழி­வு­களின் பிர­காரம் அர­சியல் பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ரி­டத்தில்(மாகாண முத­ல­மைச்­ச­ரி­டத்தில்) பொலிஸ் தரப்பை கையாளும் அதி­காரம் நேர­டி­யாக கைய­ளிக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவது திருத் தம் செய்­யப்­பட்­ட­போது இருந்த நிலைமை 17ஆவது திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்ட பின்னர் மாறி­யி­ருந்­தது. பொலி­ஸாரின் சுயா­தீன தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. 18ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் 19ஆம் திருத்­தத்தின் ஊடாக மீண்டும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் பிரிவு சுயா­தீ­ன­மாக இயங்க வேண்­டு­மென்­பது நாடு பூரா­கவும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில் மாகா­ணத்தில் பொலிஸ் அதி­கா­ரத்தை கொடுக்­கின்­ற­போது அங்கே அர­சியல் தலை­யீ­டுகள் ஏற்­ப­டு­வதை யாரும் விரும்­பாத விடயம்.

மத்­தியில் எவ்­வாறு சுயா­தீன பொலிஸ் ஆணைக்­குழு செயற்­ப­டு­கின்­றதோ அதே­போன்று மாகாண பொலிஸ் ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கும் சுயா­தீன தன்மை வழங்­கப்­பட்டு அதன் கீழே தான் பொலிஸ் தரப்பும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முன்­மொ­ழிவே உப­கு­ழுவால் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இது 13ஆவது சரத் தில் காணப்­ப­டா­ததும் அதே­நேரம் பொலிஸின் சுயா­தீ­னத்­தையும் உறு­தி­செய்வது புதிய விடய­மா­கின்­றது.

கேள்வி:-காணி அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­டு­வது குறித்து எவ்­வா­றான முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­றது?
பதில்:- காணி அதி­கா­ரங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை நேர­டி­யாக வழி­ந­டத்தல் குழுவே கையா­ளு­கின்­றது. அது குறித்து ஆரா­யப்­பட்­டுள்­ள­போதும் இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை. 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யாரால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நகல் வரை­பொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது.

அந்த வரைபில் எவ்­வாறு காணி அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு பகி­ரப்­ப­டலாம் என்­பது கூறப்­பட்­டுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் சர்வ கட்­சி­களின் திஸ்ஸ விதா­ரண அறிக்­கை­யிலும் காணி அதி­கா­ரங்கள் பற்றி அறிக்கை உண்டு. ஆகவே அவற்­றை­யொட்­டி­ய­தா­கவே காணி அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­டு­வ­தற்­கான இறுதி வடிவம் அமையும் என்ற நம்­பிக்கை உள்­ளது. குறிப்­பாக மாகா­ணத்தின் அனு­ம­தி­யின்றி காணி­களை மத்தி எவ­ருக்கும் வழங்­கலாம் என்ற தற்­போ­துள்ள முறைமை நிச்­ச­ய­மாக தடுக்­கப்­படும்.

கேள்வி:- மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் இடையில் அதி­கார எல்லை தொடர்­பாக குழப்­பங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மா­க­வி­ருக்கும் ஒத்­தி­சைவு பட்­டியல் நீக்­கப்­ப­டுமா?
பதில்:- ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­பட­ வேண்டும் என்­பதே அனை­வ­ரி­னதும் ஏகோ­பித்த நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. குறிப்­பாக பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல கூட தனது அறிக்­கையில் ஒத்­தி­சை­வுப்­பட்­டியல் நீக்­கப்­ப­ட­வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இருப்­பினும் அந்த அறிக்­கையை அவர் மீளப்­பெற்­று­விட்டார். சந்­தி­ரி­காவின் வரைவு, திஸ்ஸ விதா­ரண அறிக்கை, தற்­போ­தைய உப­கு­ழுக்­களின் பரிந்­துரை அறிக்­கைகள் என எதிலும் ஒத்­தி­சைவு பட்­டியல் பற்றி குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

தேசிய கொள்கை என்­பது அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு தடங்­க­லான விட­ய­மாக உள்ளது என்பதை எமது அனு­ப­வத்தில் கண்­டி­ருக்­கின்றோம். இருப்­பினும் சில விட­யங்­களில் தேசிய கொள்கை அவ­சி­ய­மா­கின்­றது. தேசிய கொள்­கை­யா­னது துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் கூட அத்­தி­யா­வ­சி­ய­மாக இருக்­கின்­றது. ஜேர்மனி போன்ற நாடு­களில் ஒத்­தி­சைவு பட்­டி­யலில் இருக்­கின்ற விட­யங்கள் தொடர்­பாகத் தான் தேசியக் கொள்கை இயற்­றப்­பட முடியும் என்­றொரு ஒழுங்கு முறைமை உள்­ளது.
அவ்­வா­றான சில தேவைப்­பா­டு­க­ளுக்­காக ஒரு ஒத்­தி­சைவு பட்­டி­யலை ஏற்­ப­டுத்­தினால் அது பாத­க­மில்லை என்ற சிந்­த­னை­ களும் உள்­ளன. ஆகவே ஒத்­தி­சைவு பட்­டியல் முழு­மை­யாக நீக்­கப்­ப­டுமா இல்­லையா என்­பதை தற்­போது கூற­மு­டி­யாது. ஆனால் ஒத்­தி­சைவு பட்­டியல் உரு­வாக்­கப்­ப­டு­மாக இருந்தால் நாடு பூரா­கவும் தேசிய கொள்கை ஒன்று காணப்­ப­ட­வேண்டும் என்ற அவ­சியம் காணப்­படும் பட்­சத்­தி­லேயே அதனை இணைத்­துக்­கொள்­வ­தற்கு இணங்­குவோம்.

கேள்வி:- ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண்­ப­தற்கு த.தே.கூ இணங்­கி­விட்­டதா? ஒற்­றை­யாட்சி சொற்­பதம் புதிய சாச­னத்­திலும் இருக்­குமா?
பதில்:- ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மை­ப்பு இணங்கி விட்­ட­தாக சில அமைச்­சர்கள் கூறி­ய­போது அதனை உடனடியாக நாம் மறுத்­தி­ருக்­கின்றோம். அதன் பின்னர் அந்த அமைச்­சர்கள் இல்லை நீங்கள் எவ்­வாறு இணங்­கி­னீர்கள் என வாதி­டவும் இல்லை. நிரூ­பிக்­கவும் இல்லை. வழி­ந­டத்தல் குழுவில் ஒற்­றை­யாட்சி விடயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதன்­போது பிர­த­மரே தான் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­னவர் எனக் கூறி­யி­ருக்­கின்றார். பிர­த­மரின் அவ்­வா­றான கூற்றை முன்­வைப்­ப­தற்­கான கார­ணங்கள் வேறாக இருக்­கின்­றன.

ஒற்­றை­யாட்சி முறைமை உள்ள நாடொன்றில் சாதா­ரண சட்­ட­மொன்­றி­னா­லேயே நாட்டை பிரித்­துக்­கொ­டுக்க முடியும். கூட்­டாட்­சியால் அவ்­வாறு முடி­யாது என­பதே பிர­த­மரின் கூற்­றுக்­கான கார­ண­மாகும். நாட்டை பிள­வு­ப­டுத்தும் ஒற்­றை­யாட்­சி­யையா நீடிக்க வேண்­டு­மென கோரு­கின்­றீர்கள் எனவும் பிர­தமர் வழி­ந­டத்தல் குழுவில் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். இதே ­க­ருத்­தையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதும் பிர­தமர் கூறி­யி­ருந்தார்.

அச்­ச­ம­யத்தில் எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர், நீங்கள் ஒற்­றை­யாட்­சியை எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு. நாங்கள் எதிர்ப்­ப­தற்­கான காரணம் வேறு எனச் சுட்­டிக்­காட்­டினார். அச்­ச­ம­யத்தில் பிர­தமர், நீங்கள் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும், நான் என்ன கார­ணத்­திற்­காக எதிர்த்­தாலும் நாங்கள் ஒற்­றை­யாட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் என்று பதி­ல­ளித்­தி­ருந்தார். இவ்­வா­றி­ருக்­கையில் ஒற்­றை­யாட்சி என்ற சொற்­பி­ர­யோகம் குறித்து நாங்கள் தீர்க்­க­மாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்றோம். ஏனென்றால் சிங்­கள மக்கள் மத்­தியில் இது­வ­ரையில் நடத்­தப்­பட்ட பல்­வேறு கருத்து அறியும் செயல்­வ­டி­வங்­களில் பெரும்­பான்­மை­யா­னவர்கள் ஒற்­றை­யாட்சி இருக்­க­வேண்டும் என்று கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

அவர்களிடத்தில் நீங்கள் எதற்­காக ஒற்­றை­யாட்­சியை எதிர்க்­கின்­றீர்கள் எனக் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­ற­போது, நாடு பிரி­வ­டைந்­து­விடும் என்­பதால் தான் அவ்­வாறு கூறு­கின்றோம் எனவும் அந்த மக்கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். சிங்­கள மொழியில் ஒற்­றை­யாட்சி என்­ப­தற்கு 'ஏக்­கிய ரஜய' என்ற சொல்லே பயன் படுத்தப்படுகிறது. அந்த சொல் ஆட்சி முறையைக் குறிக்கும் சொற்­பி­ர­யோகம் அல்ல. அது நாடு ஒன்­றாக இருக்­கின்­றது என்­பதைக் குறிக்கும் சொற்­பி­ர­யோ­க­மாகும்.

virakesari.lk 01 03 2017

Published in Tamil
18 03 2017

போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன?

காரை துர்க்கா

இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அந்த வகையில், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 ஆசனங்களையும் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 ஆசனங்களையும் 2010 ஆம் ஆண்டில் 14 இடங்களையும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 16 இடங்களையும் கைப்பற்றியது. அமோக வெற்றி வாகை சூடியது. 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விலகிக் கொண்டது. தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOTE) இணைந்து கொண்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே. கூ) பல சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. த .தே. கூ உடையப் போகின்றதா? த. தே கூட்டமைப்புக்குள் பிளவு என்றெல்லாம் நாளாந்தம் பத்திரிகைச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. த. தே. கூ உருவாக்கம் பெற்ற நாள் முதலே அரசியல் கட்சியாக அதன் பதிவு, சின்னம் எனப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவைகள் தீர்க்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டு விட்டன. தேர்தல் வேளையில் கட்சி ரீதியான ஆசன பங்கீட்டிலும் தமிழரசுக் கட்சி செல்வாக்கு செலுத்துகின்றது; தனது கட்சி அங்கத்தவர்களை அதிகப் படியாக நியமிக்கின்றது என்ற கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வருவதுண்டு.

உண்மையில், நான்கு கட்சிகள் ஒரு குடையின் கீழ் வந்து ஒன்றினைந்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கமே கூட்டமைப்பு உருவாக்கிய அன்று தொட்டு இன்று வரை, நிலவுவதால் பிரச்சினைகளும் பிடுங்குப்பாடுகளும் பஞ்சமில்லாமல் நிலவுகின்றன. த.தே.கூ என்பது வெறுமனே ஓர் அரசியல் செய்யும் கட்சி அல்ல; மாறாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களால், தமிழ் தேசியத்தால் ஆணை வழங்கப்பட்ட அமைப்பு. ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழுவதற்கான தமது உரிமைகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு தமிழ் மக்களால் தமிழ்க் கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்தகைய பெரும் பொறுப்பு வாய்ந்த அமைப்பிடம் ‘நீ பெரிதா, நான் பெரிதா’ என்ற பொறாமைக்குணம் சற்றேனும் எழக் கூடாது. தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதி, நிலையான தீர்வு வேண்டும்.

மேலும், “2016 ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு எட்டப்படும் என இரா. சம்பந்தன் கூறி வந்தார். ஆகவே, அது வரை நாம் பொறுமை காத்தோம். அது நடைபெறவில்லை. ஆதலால் சம்பந்தனும் ஏமாந்து, தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார்; ஏமாற்றி விட்டார்கள்” எனச் சுரேஸ் பிரேமசந்திரன் கூறி வருகிறார். எனவே, இவ்விடத்தில் சம்பந்தன், எந்தத் தகவல் அல்லது தரவு அடிப்படையில் இவ்விதம் கூறினார்? 70 வருட இனப் பிணக்கை, ஒரு வருடத்துக்குள் தீர்க்கப்பட்டுவிடும் என எழுந்தமானமாகக் கூற முடியுமா? போன்ற வினாக்கள் எழுவது நிச்சயமே. அதுவும் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் பற்றி நன்கு அறிந்திருந்தும் இவ்வாறான உறுதியற்ற வாக்குறுதிகளை வழங்கலாமா? ஆகவே, 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேளையில், தமிழ் மக்களது வாக்குகளை வேட்டையாடவே இவ்வாறு கூறியதாக ஏன் இப்போது தமிழ் மக்கள் கருதக் கூடாது. வடக்கு, கிழக்கு இணைப்பு, தமிழரின் இறைமை, சுயநிர்னயம், சமஸ்டி என எல்லா கோசங்களும் தேர்தல் மேடையில் முழங்கியது. அது தற்போதும் உயிர்ப்புடன் தமிழர் இதயங்களில் உள்ள வேளை அரசியல் தலைவர்கள் அது தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் உள்ளனர் என தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், 20.02.2017 இல் கொழும்பில் த.தே.கூ முக்கியஸ்தர்களை, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெயசங்கர் சந்தித்திருந்தார். அப் பேச்சுவார்த்தையின் நடுவே ஒரு கட்டத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தொடர்பில் முன்னுரிமை வரிசை என்ன? என கேட்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் அனைவரும் ஒருமித்து வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் குரல் கொடுக்கவில்லை. ஆகவே, அங்கு முன் ஆயத்தம் இன்றி, தங்களுக்குள் கலந்துரையாடல் இன்றி, கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றியமை தெரிகின்றது. அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, த.தே. கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார் என வடக்கு, கிழக்கு சார்ந்த கூட்டமைப்பு அரசியல்வாதிகளே கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அந்த நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டால், அதன் எதிரிகளுக்குத்தான் கொண்டாட்டம்.

எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதை பேரினவாத அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது; சகிக்காது என்பது எமது பட்டறிவு. ஆகவே, சிறுகருத்து வேறுபாடுகளுக்கும் இடமின்றி விவேகமாகவும் வினைத்திறன் மிக்க விளைச்சலை தரக்கூடிய அரசியலை செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என தமிழர் அரசியல் ஆற்றுவோர் அறிந்திருக்க வேண்டும். அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் விடுதலைக்காக போராடிய வேளை, தமிழ் மக்களுக்குள் தோற்றுவிக்கப்பட்ட பிளவுகள், அந்தப் போராட்டங்களை வெற்றியை நோக்கி நகர்த்தவிடாமல் பின்னாவேயே பிடித்து இழுத்து விழுத்தி விட்டன. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாதவாறு நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்து, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு கோரி நடத்திய போராட்டங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. சிறுவர், பெண்கள், முதியோர் என அனைவரும் பனி, வெய்யில், மழை என எதனையும் பொருட்படுத்தாமல், ஒற்றுமையுடன் போராடி, குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்கள். நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் நண்பர் அல்லது உறவினரைச் சென்று நலம் விசாரிப்பது போல அமைப்புகளும் அரசியல்வாதிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் சுகநலம் விசாரிப்பதற்குச் சென்றுவருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் வெறுங்கையுடன் செல்லாது சில உணவுப் பொருடகள், உணவுப் பொதிகள் மற்றும் சில பொருட்களை வழங்குகின்றனர். சில மணித்துளிகள் அவர்களுடன் உரையாடுகின்றனர்; போராடும் மக்களுடன் நின்று புகைப்படங்களை எடுத்து பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் பிரசாரப்படுத்துகின்றனர். மீண்டும் தங்கள் சொகுசு வாகனங்களில் வீடு திரும்புகின்றனர். அங்கு போராட்டத்தில் பங்குபற்றும் மக்கள் கூட இவ்வாறாகத் தங்களுடன் வந்து வீணாக நேரத்தை விரையமாக்காது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுமாறுதான் கோரி நிற்கின்றனர். அடுத்து, தமிழ் மக்கள் பேரவை (த .ம. பே) ஒரு மக்கள் அமைப்பே அன்றி ஓர் அரசியல் கட்சி இல்லை. அத்துடன் அதற்கான ஏற்பாடுகளும் இல்லை என அதிலுள்ள கட்சி சாரா முக்கியஸ்தர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர்.

ஆனால், கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியோர் த. ம. பேரவையை கட்சி என்பது போலவே கருதி தமது கருத்துக்களைக் கூறி வருவது போல காட்சி அளிக்கின்றது. மேலும், மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், தமது கட்சியின் பங்களிப்பே அதில் உயர்வாக இருந்ததாகவும் தமது கட்சிச் செயலாளர் கஜேந்திரன் இரு மாதங்களுக்கு முன்பே கிழக்குக்குச் சென்று மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறியமை ஆரோக்கிய கருத்துப் பகர்வாகத் தெரியவில்லை. எழுக தமிழில் தமது கட்சியை முன்னிலைப் படுத்துவது மக்கள் முன்னணிக்கு முக்கிய தேவையா என தோன்றுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சி கிளிநொச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ், தேர்தல் தொகுதியில் ஆகக் குறைந்தது இரு (02) ஆசனங்களை கைப்பற்றும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி நம்பி இருந்தது. ஏன் தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்தது. ஆனால், நடந்ததோ ஐக்கிய தேசிய கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுக்கு அடுத்த படியாக வெறும் 15000 வாக்குகளைப் பெற்று ஆசனம் எதனையும் தனதாக்கவில்லை. இவர்களால் கூட்டமைப்பின் வாக்குகளும் சிதறின. ஆகவே கூட்டிக்கழித்து பார்க்கும் போது அடுத்த தேர்தல் வெற்றியை நோக்கி இவர்கள் காய் நகர்த்துகின்றார்களா? என எண்ண தோன்றுகின்றது.

மேலும், 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி? தமிழ் மக்களுக்கு உருப்படியாக குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அதனையிட்டுத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும், புதிய தலைமை வரவேண்டும் என கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் இவர்களுடன் ஆனந்தசங்கரியும் சேர்ந்து எதிர்ப்புக் கோசமிடுவது, ‘நித்திரை வரவில்லை என்பதற்காக தலையனையை மாற்றும் வேலை’யாகும். தமிழர் தலைமை மாறினால் அல்லது மாற்றப்பட்டால் பேரினவாத அரசாங்கம் யாவற்றையும் தருமா? கள நிலவரம் மாறுமா? வட்டுக்கோட்டை தீர்மானத்தை (1977) மேற்கொண்ட வேளை பிழையான தலைவர்களால் எடுத்த சரியான தீர்மானம் என கூறப்பட்டது. ஆகவே தற்போதைய முக்கிய கட்டத்தில் கூட்டமைப்பை உடைப்பது உடைக்க எத்தனிப்பது சரியான தலைவர்களால் எடுத்த சரியான முடிவா? பிழையான தலைவர்களால் எடுத்த பிழையான முடிவா?

ஏனெனில், சுரேஸ் பிரேமச்சந்திரன் தாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதாகவும் அதனால் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கிய பொறுப்பு சம்பந்தனை சாரும் எனவும் காட்டமான கருத்தாடலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கஜேந்திரகுமார் தேசியம் தாயகம் சுயநிர்னயம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் புளொட் என்பன தம்முடன் இணையலாம் என்றும் சுரேஸ் அவர்கள் இரு தோணியில் கால் வைத்துக் கொண்டு நிற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமையானது என்ன விதத்திலாவது கூட்டமைப்பை குலைக்க வேண்டும் என எண்ணுவது போல உள்ளது. ஆகவே, மீண்டும் தமிழர் நலன் என்ற தலைப்பின் கீழ் அனைவரும் அவரவர் தனிப்பட்ட ‘ஈகோ’ களைந்து ஒன்றுபட வேண்டும். ‘அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு’. அதுவே வடக்கு, கிழக்கு மக்களது பேரவா; அதுவே நிரந்தர, நீடித்த அரசியல் தீர இவ்விடத்தில் சராசரி தமிழ் பொது மகன் இவ்வாறாக எண்ணுகின்றான். ஆதாவது, ஓயாத யுத்தத்தால் முற்றாக முடமான வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் ஓர் அண்ணளவாக பத்துப் பேரைத் தலைவர்களாகக் கொண்ட தமிழ் தலைவர்கள் ஒரு புள்ளியில் ஒன்றுபட முடியாது என்றால் எவ்வாறு முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு கடும் போக்கு சிங்கள ஆட்சியாரையும் அரவணைத்துத் தமிழ் மக்களது இனப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்போகின்றனர்?   -

tamilmirror.lk  07 03 2017

 

Published in Tamil
08 03 2017

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (03)

புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்­திற்­காக அர­சி­ய­ல­மைப்புச் சபையால் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­த­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பின் விட­ய­தா­னங்கள், விட்­டுக்­கொ­டுப்­பற்ற மன­நி­லையில் உள்ள தென்­னி­லங்கை தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு புதிய சாச­னத்­தி­னூ­டாக கிடைக்­குமா என இயல்பாக எழுகின்ற வினாக்கள், பொதுமக்களின் சந்தேகங்கள் தொடர் பில் கருத்துக்களை பதிவு செய்தார்.

கேள்வி: -அர­சி­ய­ல­மைப்பு பணிகள் இடம்­பெற்று வரும் இத்­த­ரு­ணத்தில் புதிய அர­சிய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றதா? தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் மேற் ­கொள்­ளப்­ப­டு­கின்­றதா?
பதில்:- இந்த ஆண்டு ஜன­வரி மாதம் 9ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக செயற்­ப­டு­வது தொடர்­பான தீர்­மா­னத்தின் பிர­காரம் இந்த நாட்­டுக்கு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரை­பொன்றை வரை­யப்­ப­ட­வேண்­டு­மென்றே கூறப்­பட்­டுள்­ளது. ஆகவே அது தொடர்­பான சந்­தே­கங்கள் யாருக்கும் இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.
அத்­தோடு முழு­மை­யான அர­சி­ய­ல­மைப்பு வரைபு வரை­யப்­பட்­டதன் பின்னர் பாரா­ளு­மன்­ற­த்தில் மூன்­றிலி­ரண்டு பெரும்­பான்மை கிடைத்தால் அந்த வரைபு அமைச்­ச­ர­வைக்கு அனுப்­பப்­படும். அமைச்­ச­ரவை சாதா­ர­ண­மாக சட்ட­மொன்றை இயற்­று­வ­தற்­கான படி­மு­றை­களை கையாண்டு அதனை வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்கும். அதன்
பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லிரண்டு பெரும்­பான்மை கிடைக்­கப்­பெற்­றதை­ய­டுத்து மக்­களின் அனு­ம­திக்­காக பொது­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­ப­டு­மென அத்­தீர்­மா­னத்தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

கேள்வி:- தற்போ­தைய சூழலில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் எந்த மட்­டத்தில் உள்­ளது?
பதில்:- அர­சி­ய­ல­மைப்பு பேரவை ஸ்தாபிக்­கப்­பட்டு வழி­ந­டத்தல் குழு­வொன்றை நிய­மித்­தது. வழி­ந­டத்தும் குழு தான் அர­சி­ய­லமைப்பு வரைபை உரு­வாக்கி அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. வழி­ந­டத்தல் குழு­வா­னது 12விட­யங்­களை ஆரம்­பத்­தி­லேயே அடை­யாளம் கண்டு கொண்­டது. அதில் அடிப்­படை உரி­மைகள், நீதித்­துறை, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிதி, பொதுச் சேவை, மத்­திய அர­சாங்­கத்­துக்கும் - மாகாண சபை­க­ளுக்கும் இடை­யி­லான உறவு ஆகிய ஆறு விட­யங்­களை அடை­யாளம் கண்டு அவற்றை ஆறு உப­கு­ழுக்­க­ளிடத்தில் பாரப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அந்த உப­கு­ழுக்கள் அறிக்­கை­களை சமர்­ப்பித்­துள்­ளன. எஞ்­சி­யுள்ள ஆறு விட­யங்கள் தொடர்­பா­கவும் வழி­ந­டத்தும் குழு தானா­கவே பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு அவை நிறை­வ­டைந்த பின்னர் இடைக்­கால அறிக்­கை­யொ­ன்றை சமர்ப்­பிப்­ப­தாக இருந்­தது. டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வதாக இருந்­தாலும் கூட சில கட்­சி­களின் வேண்­டு­கோளுக்கிணங்க தற்­போது தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
எனினும் எதிர்வரும் ஜன­வரி மாதம் 9ஆம், 10ஆம் திகதிகளில் விவா­தங்கள் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக அந்த அறிக்­கைகள் வெளியி­டப்­ப­டு­மென நாம் நம்­பு­கின்றோம். அனைத்து விட­யங்­களும் பேசப்­பட்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டு­விட்­ட­தாக கூற­மு­டி­யாது. சில முக்­கி­ய­மான விட­யங்கள் சம்­பந்­த­மாக தீர்­மா­னங்கள் இது­வ­ரையில் மேற்கொள் ளப்படாதிருக்கின்ற­போதும் அவ்­வி­ட­யங் கள் சம்­பந்­த­மாக நீண்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டி­ரு­கின்­றது.
அந்த பேச்­சுக்­களின் அடிப்­ப­டையில் வெவ்­வேறு தெரி­வுகள் மக்கள் முன்­பாக சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆகவே இடைக்­கால அறிக்­கையை வெளியி­டு­வ­தற்கு அனைத்து கட்­சி­களும் இணங்கும் பட்­சத்தில் எந்த மாதி­ரி­யான அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை அனை­வரும் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம் என்­பது தெரி­ய­வரும்.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வொன்றை பெற்­றுக்­கொ­டுக்கும் என எந்த அடிப்­ப­டையில் எதிர்­பார்ப்­புக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?
பதில்:- இந்த நாட்டில் உரு­வாக்­கப்­பட்ட குடி­ய­ரசு அர­சியல் யாப்­புக்கள் இரண்டும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்­களை புறந்­தள்­ளியே உரு­வாக்­கப்­பட்­டுள்ளன. இனப்­ பி­ரச்­சினை இவ்­வ­ளவு பூதா­க­ரமாக எழு­வ ­தற்கு அவைஅடிப்­ப­டையாக இருந்தன. அவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை அளிப்­ப­தையே பிர­தான இலக்­காக கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. உரு­வாக்கப்­படும் அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்காது ஏனைய விட­யங்­களை கொண்­டி­ருக்­கு­மாயின் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

கேள்வி:- உப­கு­ழுக்­களில் முரண்­பா­டான விட­யங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­ட­னவா? அவை உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­னவா?
பதில்:- அனைத்துக் கட்­சி­களும் உப­கு­ழுக்­களில் அங்கம் வகிக்கின்றன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் தங்­க­ளு­டைய மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அவை அந்­தந்த அறிக்­கையில் குறிக்­கப்­பட்­டுள்­ளன. சில உப­கு­ழுக்­களில் பொது எதி­ர­ணி­யினர் வழி­ந­டத்தல் குழு­விற்கு நேர­டி­யாக அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தாக கூறி­யி­ருந்­தனர். உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் கிடைத்­ததன் பின்னர் வழி­ந­டத்தும் குழு­வா­னது மாறு­பட்ட கருத்­துக்­களை நேர­டி­யாக அழைத்து அவர்­க­ளி­டத்தில் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­தது. அதன்­போதும் அறிக்­கை­யொன்றின் மூல­மாக தமது கருத்­துக்­களை வழங்­குவோம் எனக் கூறி­யி­ருக்­கின்ற போதும்தற்­போது வரையில் அவர்கள் அறிக்­கையை கைய­ளித்­தி­ருக்­க­வில்லை.
ஆகவே உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் அனைத்து கட்­சி­களின் கருத்­துக்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் அதே­நேரம் வழி­ந­டத்தல் குழுவில் அந்த அறிக்­கை­க­ளுக்கு எதிர்ப்­புக்கள் இல்­லாத நிலை­யிலே தான் அந்த அறிக்­கைகள் பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி:- தேர்தல் முறைமை தொடர்­பாக எவ்­வா­றான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன?
பதில்:- தேர்தல் முறை­மையை வழி­ந­டத்தும் குழுவே கையா­ளு­கின்­றது. அந்த விடயம் சம்­பந்­த­மாகத் தான் முத­லா­வ­தாக பேசப்­பட்­டது. தேர்தல் முறைமை சம்­பந்­த­மாக இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும்கூட தேர்தல்முறைமை சம்பந்தமாக உள்ள அடிப்­படைக் கொள்­கைகள் சார்பில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கோட்­பாட்­ட­ளவில் ஒரு கலப்பு தேர்தல் முறை­மைக்கு சகல அர­சியல் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன.
எந்­தெந்த விகி­தா­சா­ரத்தில் தொகுதி முறையும், பிர­தி­நி­தித்­துவ முறையும் அமை­ய­வேண்டும் என்­பதில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. அத்­தோடு இரண்­டா­வது சபையை ஸ்தாபிப்­பது தொடர்­பா­கவும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. இரண்­டா­வது சபையை ஸ்தாபித்தல் என்ற விட­யத்தில் குறிப்­பாக மாகாண சபை பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: -இரண்­டா­வது சபை­யா­னது எவ்­வாறு ஸ்தாபிக்­கப்­படும்?
பதில்:-இரண்­டா­வது சபை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது குறித்து இது­வ­ரையில் முடி­வான தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பினும் ஒவ்­வொரு மாகாண சபை­யி­லி­ருந்தும் தலா ஐவர் தெரிவு செய் ­யப்­ப­டு­வார்கள். அந்த ஐவரில் முத­ல­மைச் சர் நிச்­ச­ய­மாக இருக்க வேண்டும். அவர் உள்­ள­டங்­க­லாக மாகாண அமைச்­ச­ரவை அந்­தஸ்து இல்­லா­த­வர்­களும் இக்­கு­ழுவில் இருக்க முடியும் என சிபாரிசு செய்­யப்­பட்­ டுள்­ளது. அந்த அடிப்­ப­டையில் முத­ல­மைச் சர் உட்­பட தலா ஐவர் கொண்ட குழு­வினர் இரண்­டா­வது சபைக்கு தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.
அதனைவிட பாரா­ளு­மன்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக பத்து உறுப்­பி­னர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள் அவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டுப­வர்கள், பல்­வேறு துறை­களில் தமது திற­மை­களை காட்­டி­ய­வர்கள், கட்சி அல்­லது தேர்தல் அர­சி­ய­லுக்குள் வர விரும்­பா­த­வர்கள் ஆகி­யோரின் பங்­க­ளிப்­பையும் பெற்­றுக்­கொள்ளும் வித­மாக தெரி­வுகள் இடம்­பெ­று­வ­தற்கு சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­படும் என கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான அதி­கா­ரங்கள் அனைத்­தையும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கு­வதன் ஊடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­ட­வ­ரா­கின்­றாரே?
பதில்:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற கருத்துக்கு அனைத்துக் கட்­சி­களும் இணங்­கி­யுள்­ளன. அதன்­பி­ர­காரம் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கி­விட்டு அதற்கு மாற்­றீ­டாக உள்­ளீர்க்­கப்­ப­ட­வுள்ள முறை­மைக்­காக மூன்று யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன.
முத­லா­வ­தாக பிரித்­தா­னி­யாவில் பின்­பற்­றப்­படும் வெஸ்­மி­னிஸ்டர் முறைமை காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வ­தாக பிர­த­மரை நேர­டி­யாக மக்கள் தெரிவு செய்­கின்ற முறை காணப்­ப­டு­கின்­றது. இந்த முறை­மையை தொடர்பில் தான் அச்­ச­ம­டை­கின்­றார்கள். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட்­டாலும் அதற்கு ஈடாக பிர­தமர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை கொள்­கின்றார் என அச்சம் வெளியி­டு­கின்­றார்கள். அது நியா­ய­மா­ன­தொரு அச்­ச­ம­டையக் கூடிய விடயம். மூன்­றா­வ­தாக முழு­மை­யாக வெஸ்­மி­னிஸ்டர் முறை­மையும் இல்­லாத இடைப்­பட்ட முறை­யொன்று சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளது. ஆதா­வது பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு கட்­சியும் தங்­க­ளு­டைய கட்சி சார்பில் பிர­தமர் வேட்­பா­ளர் யார் என்­பதை அறி­விக்க வேண்டும். இம்­மு­றை­மைகள் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் விரி­வாக ஆரா­யப்­படும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்­ற­மொன்றை நிறு­வு­வ­தற்­கான சிபார்சு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் எவ்­வா­றி­ருக்­கின்­றன?
பதில்:- இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் காணப்­பட்­டி­ருக்­கின்­றது. 1972ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­பட்டு சிறப்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே இதனை சாத்­தி­ய­மற்ற விட­ய­மாக சொல்ல முடி­யாது. என்­னு­டைய தனிப்­பட்ட நிலைப்­பாட் டின் பிர­காரம், உச்ச நீதி­மன்றம் வழக்­கு­க­ளி­னு­டைய இறுதி நீதி­மன்­ற­மாக இறுதி மேன்­மு­றை­யீ­டு­களை கையா­ளு­கின்ற நீதி­மன்­ற­மாக இருக்கும். அர­சி­ய­ல­மைப்பு சம்­பந்­த­மான விட­யங்­களை, சட்ட மூலங்கள் சம்­பந்­த­மான விட­யங்­களை வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­வ­தற்கு, பொருள்­கோ­டல்­களை கொடுப்­ப­தற்கு மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் அல்­லது மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் சிக்­க­ல்கள் ஏற்­படும் பட்­சத்தில் தீர்ப்­ப­தற்­காக உயர் நீதி­மன்றம் செயற்­ப­டு­வதை விடவும் அதற்­கென விசேட நீதி­மன்றம் இருப்­பது சிறந்­தது.

(ஆர்.ராம்) virakesari.lk  01 01 2017

Published in Tamil