06 12 2018

நாடாளுமன்றக் கலகத்தின் பின்னனி!!

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நகர்­வு­கள் கன­கச்­சி­த­மாக நகர்த்­தப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கை­யில் நாடா­ளு­மன்­றம் – அதி உயர் சபை என்று சொல்லப்­ப­டு­கின்­றது. அங்கு நடக்­கின்ற கூத்­துக்­க­ளைப் பார்க்­கின்­ற­போது, பட்­ட­வர்த்­த­ன­மா­கத் தெரி­வது இழி­நி­லையே. நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யிட்ட அர­சி­தழ் மீதான தீர்ப்பு டிசெம்­பர் 7ஆம் திக­தி­யன்று வெளி­வ­ர­வுள்­ளது. அன்­றைய தினத்­துக்கு முன்­னர் இடம்­பெ­றும் நாடா­ளு­மன்ற அமர்­வு­கள் அனைத்­தும் மகிந்த அணி­யி­ன­ரால் குழப்­பப்­ப­டும் என்­பது திண்­ணம். இலங்கை அர­சி­யல் போக்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சடு­தி­யாக மாற்­ற­ம­டைந்­தது. அந்த மாற்­றம் எந்­தத் திசை­யில் பய­ணிக்­கின்­ற­தென்றே தெரி­யாது தடு­மா­றிக் கொண்­டி­ருக்­கின்­றது.

மைத்­தி­ரி­யின் முடி­வுக்­கு பின்­னால் ஒளிந்­தி­ருந்த விட­யம்

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைப் பதவி நீக்­கும் முடிவை எடுத்­த­து­டன் மகிந்­த­வைத் தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் மகிந்த தரப்­புக்­குப் பெரும்­பான்மை இல்லை என்று தெரிந்­தும் அவர் அந்த முடிவை எடுத்­த­மைக்­குப் பின்­னால் சில விட­யங்­கள் ஒளிந்­தி­ருந்­தன. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் உறுப்­பி­னர் ரவி கரு­ணா­நா­யக்கா, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளான எஸ்.பி.திசா­நா­யக்கா மற்­றும் திலங்க சும­தி­பா­ல­வி­டம் சில விட­யங்­க­ளைப் பகிர்ந்­தி­ருக்­கின்­றார். மகிந்த தலை­மை­யில் ஆட்சி அமைக்­கு­மா­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லி­ருந்து தன்­னு­டன் 20 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்சி தாவு­வார்­கள் என்­றும் கூறி­யி­ருக்­கின் றார். இந்­தக் கதையை, மைத்­தி­ரி­யி­டம் ஒப்­பு­வித்­தார் எஸ்.பி.திசா­நா­யக்கா. இத­னை­ய­டுத்து அவ­சர அவ­ச­ர­மாக ஆட்சி மாற்­றம் நடந்­தது. ரவி கரு­ணா­நா­யக்கா புதிய அர­சில் தனக்கு நிதி அமைச்சு வேண்­டும் என்று அடம்­பி­டித்­தி­ருக்­கின்­றார். இங்­கே­தான் சிக்­கல் எழுந்­தது. அதற்கு இணங்குவதற்கு மைத்­திரி மறுத்­து­விட்­டார். வேறு­வ­ழி­யின்றி ரவி மீண்­டும் ஐ.தே.க. வின் கோட்­டைக்­குள் சென்­று­விட்­டார்.

பேரம் பேசு­தல்­கள் தோல்­வி­யில் முடிந்ததும் மகிந்­த­வின் கோரிக்­கையை நிறை­வேற்­றி­னார் மைத்­திரி

இதன் பின்­னர், பசில் ராஜ­பக்ச கள­மி­றக்­கப்­பட்­டுக் குதி­ரைப் பேரம்­பே­சல்­கள் அரங்­கே ­றின. நினைத்­த அ­ள­வுக்கு, ஐ.தே.கவி­னரை மகிந்த தரப்­பால் விலைக்கு வாங்க முடி­ய­ வில்லை. பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக் கொள்­வது என்­பது குதி­ரைக் கொம்­பா­கி­விட்­டது. இந்­தப் பேரம்­பே­சல்­கள் படிந்து வரு­வ­தற்கே, மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடா­ளு­மன்ற அமர்வை ஒத்­தி­வைத்­தி­ருந்­தார். ஒரு கட்­டத்­தில், மகிந்த தரப்­பால் பெரும்­பான்மை நிரூ­பிப்­பது முடி­யாது என்­றா­கிய நிலை­யில், நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­துப் பொதுத் தேர்­த­லுக்கு அறி­விப்பு விடுத்­தார். மகிந்த தரப்­பும் இதைத்­தான் எதிர்­பார்த்­தி­ருந்­தது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் அவர்­க­ளுக்­குக் கிடைத்த உற்­சா­கம், இனி­வ­ரும் தேர்­தல்­க­ளி­லும் கிடைக்­கும். அதை நோக்கி நகர்­வதை அவர்­க­ளும் விரும்­பி­ யி­ருந்­தார்­கள். மகிந்­த­வின் கோரிக்­கைக்­குச் செவி­சாய்த்த மைத்­திரி அத­னைச் செய்­தார். அர­ச­மைப்­புக்கு முர­ணாக நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­ட­தாக உயர் நீதி­மன்­றில், மைத்­தி­ரி­யின் அர­சி­தழ் அறி­விப்­புக்கு எதி­ராக அடிப்­படை உரி­மை­மீ­றல் வழக்­கு­கள் பதி­வா­கின. உயர் நீதி­மன்­றத்­தில் மூன்று நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட ஆயம் விசா­ர­ணையை முன்­னெ­டுத்­தது. மைத்­தி­ரி­யின் அர­சி­தழ் அறி­விப்­புக்கு இடைக்­கா­லக் கட்­டளை பிறப்­பித்­தது. டிசெம்­பர் 7ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­ப­டும் என்­றும் கூறி­யது.

நாடாளு­மன்­றில் குழப்­பம் மைத்­திரி 

மகிந்த தரப்பு இதனை எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. ஒத்­தி­வைக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றம் கடந்த 14ஆம் திகதி கூடி­யது. மகிந்­த­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டது. மகிந்த தரப்பு நாடா­ளு­மன்­றத்­தில் கூச்­சல் குழப்­பம் விளை­வித்­தது. ஆனா­லும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­வே­றி­ய­தா­கச் சபா­நா­ய­கர் அறி­வித்­தார். மைத்­தி­ரி­பால சிறி­சேனவோ அதை ஏற்­றுக் கொள்­ளப் போவ­தில்லை என்று அறி­வித்­தார். மறு­நாள் நாடா­ளு­மன்­றம் கூடி­ய­தும், மகிந்­தவை தலைமை அமைச்­சர் என்று அறி­விக்க மறுத்த சபா­நா­ய­கர் அவரை உரை­யாற்ற அனு­ம­தித்­தார். அவ­ரது உரைக்கு, ஐ.தே.க. நம்­பிக்கை வாக்­கெ­டுப்­பைக் கோரி­யது. மகிந்த அணி­யி­னர் உடனே களே­ப­ரத்தை ஆரம்­பித்­த­னர். அடி­தடி வரை­யில் சென்ற நாடா­ளு­மன்ற அமர்வு குழப்­பத்­தில் முடிந்­தது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யில் உள்ள கட்­சித் தலை­வர்­க­ளும், ஜே.வி.பி., கூட்­ட­மைப்­புத் தலை­வர்­க­ளும் மைத்­தி­ரி­யு­டன் கடந்த வியா­ழக் கிழமை இரவு 2 மணி நேரம் சந்­திப்பு நடத்­தி­னார்­கள். அந்­தச் சந்­திப்பு சுமு­க­மான சந்­திப்­பாக இருக்­க­வில்லை. ஆனா­லும், நாடா­ளு­மன்­றத்­தில் புதன்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் முத­லா­வது பந்தி, அர­ச­மைப்பை மீறி மகிந்­தவை தலைமை அமைச்­ச­ராக நிய­மித்­த­தைத் தவறு என்று சுட்­டிக்­காட்­டும் பந்­தியை நீக்­கி­விட்டு, மகிந்த அரசு மீது நம்­பிக்­கை­யில்லை என்­பதை முன்­வைத்து வாக்­கெ­டுப்பு நடத்­து­மாறு மைத்­திரி தெரி­வித்தார். ஒவ்­வொரு உறுப்­பி­னர்­க­ளா­கப் பெயர் கூறி வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டும் என்று அறி­வித்­துள்­ளார். இதன்­போது சபா­நா­ய­கர் கரு ெஜய­சூ­ரிய, மகிந்த அணி­யி­னர் குழப்­பங்­கள் விளை­வித்­தால் என்ன செய்­வது என்று வின­வி­யுள்­ளார். அவர்­க­ளைத் தான் கட்­டுப்­ப­டுத்­து­வ­ார் என்று மைத்­திரி கூறி­யுள்­ளார்.

மைத்­தி­ரி­யின் நிரா­க­ரிப்­புக்­கள்

மைத்­திரி கூறி­ய­தற்கு அமை­வா­கப் புதி­ய­தொரு நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் வெள்­ளிக்­கி­ழமை கொண்­டு­வ­ரப்­பட இருந்­தது. நாடா­ளு­மன்ற அமர்வு பி.ப. 1.30 இக்கு ஆரம்­ப­மா­கும் என்று கூறப்­பட்ட நிலை­யில், பி.ப. ஒரு மணிக்கே சபைக்­குள் நுழைந்த மகிந்த அணியி­னர் சபா­நா­ய­க­ரின் இருக்­கை­யைக் கைப்­பற்­றி­னர். சபா­நா­ய­கர் பி.ப. 2.15 மணிக்கு பொலிஸ் பாது­காப்­பு­டன் வருகை தந்­தார். மீண்­டும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, உரி­ய­மு­றை­யில் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தெரி­வித்து அதை­யும் நிரா­க­ரித்தார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தான் கூறி­யது சரி என்­ப­தை­யும், தனது நட­வ­டிக்கை நியா­ய­மா­னது என்­ப­தை­யும் காண்­பிப்­ப­தற்கு, நாடா­ளு­மன்­றத்­தில் நடக்­கும் முழு அத்­து­மீ­றல்­க­ளை­யும் அனு­ம­தித்­துக் கொண்­டி­ருக்­கின்­றார். கட்­சித் தலை­வர்­க­ளின் ஆசீர்­வா­தம் இன்றி அதா­வது மகிந்த– மைத்­திரி ஒத்­து­ழைப்பு இன்றி அல்­லது அவர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் இவ்­வ­ளவு அகோ­ரத் தாண்­ட­வம் ஆடி­யி­ருக்க மாட்­டார்­கள்.

மைத்­தி­ரி­யின் காய் நகர்த்­தல்­கள்

நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­ததை மைத்­திரி நியா­யப்­ப­டுத்தி ஆற்­றிய உரை­யில், நாடா­ளு­மன்­றம் கூடி­னால் அங்கு குரு­திக் களே­ப­ரம் ஏற்­ப­டும். உயி­ரி­ழப்­புக்­கூடச் சம்­ப­விக்­க­லாம். அத­னால் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­தேன் என்று கூறி­யி­ருந்­தார். இந்­தக் கூற்றை மெய்­பிக்­கவோ என்­னவோ, மைத்­திரி காய்­களை நகர்த்­து­கிறார் போன்றே தெரி­கின்­றது. நாடா­ளு­மன்­றத்­தைக் கலைப்­ப­தன் ஊடாக மாத்­தி­ரமே, ரணிலோ அல்­லது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னரோ ஆட்­சிக்கு வரு­வ­தைத் தடுக்க முடி­யும். மைத்­திரி -– மகிந்த கூட்டு நீடிப்­ப­தற்கு, ஆட்சி அதி­கா­ரத்தைத் தொடர்­வ­தற்கு இதுவே வழி. நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்­கில் இடைக்­கா­லக் கட்­டளை வழங்­கப்­பட்­டுள்­ளது. அது தமக்­குச் சாத­க­மில்­லா­மல் கிடைத்­தமை மகிந்த -– மைத்­திரி கூட்டை வருத்­தத்­தில் ஆழ்த்­தி­யுள்­ளது. மூன்று நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட ஆயத்­தின் முன்­பா­கவே இடைக்­கா­லக் கட்­டளை வழங்­கப்­பட்­ட­தால், முழு நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட ஆயத்­தின் முன்­பாக வழக்கை விசா­ரித்து தீர்ப்பு வழங்­கு­மாறு மகிந்த அணி­யைச் சேர்ந்­த­வர்­கள் உயர் நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­துள்­ள­னர். இத­னூ­டாக, மைத்­திரி நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்து வெளி­யிட்ட அர­சி­தழ் அறி­விப்­புச் சரி­யா­னது என்ற தீர்ப்பை நோக்கி நகர முடி­யும் என்று மகிந்த – மைத்­திரி தரப்பு நம்­பு­கின்­றது. மைத்­தி­ரி­யின் அர­சி­தழ் அறி­விப்புக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்த மூத்த சட்­டத்­த­ரணி ஒரு­வர் கூட, தீர்ப்பு அப்­படி அமை­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் இருப்­ப­தாக எதிர்­வு­கூ­றி­யுள்­ளார். எனவே டிசெம்­பர் 7 ஆம் திகதி, நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்­டது சரி­யா­னது என்ற தீர்ப்பு வரும் வரை­யில், நாடா­ளு­மன்ற அமர்வு நடக்­கக் கூடாது என்­ப­தில் மைத்­திரி -– மகிந்த தரப்பு மிக மிகக் கவ­ன­மாக உள்­ளது. அதற்­கி­டை­யில் எத்­தனை தடவைகள் எந்த வாச­கங்­க­ளைப் பயன்­ப­டுத்தி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­றி­னா­லும் அதனை மைத்­திரி ஏற்­றுக் கொள்­ளப் போவ­தில்லை. நாடா­ளு­மன்ற அமர்வை இனிக் கூட்­டி­னால், இது­வரை நடந்­ததை விட மிக மோச­மாக நடப்­ப­தற்கே வாய்ப்­புக்­கள் அதி­கம்.

டிசம்­பர் 7வரை குழப்­பங்­கள் தொட­ர­லாம்

எப்­பா­டு­பட்­டா­வது டிசெம்­பர் 7ஆம் திகதி வரை­யில் நாடா­ளு­மன்­றத்­தைக் குழப்பி, இழுத்­த­டித்­துச் செல்­வ­தற்கு மைத்­திரி–மகிந்த கூட்டு முடிவு செய்து விட்­டது. அதற்­காகத் தமது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எந்­த­ளவு எல்லை வரை­யில் சென்­றா­லும் அவர்­கள் கவ­லைப்­ப­டப் போவ­து­மில்லை, கட்­டுப்­ப­டுத்­தப் போவ­து­மில்லை. டிசெம்­பர் 7ஆம் திகதி தீர்ப்பு தமக்­குச் சாத­க­மா­கக் கிடைக்­கக் கூடும் என்ற நம்­பிக்­கை­யில் மைத்­திரி–மகிந்த தரப்பு, இந்­தக் காய் நகர்த்­தல்­களை திட்­ட­மிட்டு, துல்­லி­ய­மாக மேற்­கொள்­கின்­றது. மைத்­திரி – – மகிந்த ஆட்­சி­யில்­தான் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடத்­தப்­பட்­டால், நாடா­ளு­மன்­றத்­தில் கடந்த இரண்டு தினங்­க­ளும் நடந்த சம்­ப­வங்­கள் தேர்­த­லி­லும் நடக்­கும். ஜன­நா­ய­கம் சாக­டிக்­கப்­பட்டு அதி­தீ­விர சர்­வா­தி­கா­ரத்­துக்­குள் நாடு செல்­லும்.  newuthyan.com nov18 2018

Published in Tamil