புதிய ஸ்ரீலங்காவில் அரசியல் தீர்வு கூட்டாட்சி அடிப்படையில் பாகம் - 2

08 01 2016

புதிய ஸ்ரீலங்காவில் அரசியல் தீர்வு கூட்டாட்சி அடிப்படையில் பாகம் - 2 டி.பி.எஸ்.ஜெயராஜ்

ஒவ்வொரு நாடும் தனது தனித்துவமான ஒழுங்குகளைக் கொண்டுள்ளது

ஆகவே கூட்டாட்சி யோசனை என்பதை கூட்டாட்சி அல்லது பாதி கூட்டாட்சி நflagsாடு என்கிற வகைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திவிட முடியாது என்பதை காணக்கூடியதாக உள்ளது. கூட்டாட்சி யோசனை என்பது பல நாடுகளின் அரசியலுக்குள் ஊடுருவியிருக்கும் சுதந்திரமான இலட்சியம். அதற்கு தனியான கோட்பாடு இங்கு இல்லை. ஒவ்வொரு நாடும் தனது தேவைக்கு ஏற்ற விதத்தில் அதன் தனித்துவமான பாணியில் ஒழுங்குகளைச் செய்துள்ளது. நிருவாக வசதிகளுக்கு அப்பால் அரசாங்கத்தின் சிறந்த சேவைகளை குடிமக்களுக்கு வழங்குவது கட்டாயத் தேவையாகும், மேலும் இந்த நாடுகள் மக்களின் பன்முகத் தன்மை, பிராந்திய வகைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள், வரலாற்று மற்றும் புவியல் அவசியங்கள் போன்றவற்றையும் ஆட்சிமுறைகளை கணடுபிடிக்கும் அளவுகோல்களாக கணக்கிட்டுள்ளன. முக்கிய அங்கமான மக்களின் அபிலாசைகளை மறைக்கும் எந்தக் கடுமையான சமய மரபும் அங்கு இல்லை.

கூட்டாட்சி யோசனை சமீப காலங்களில் புதிய முக்கியத்துவம் மற்றும் அது தொடர்பான வீரியம் என்பனவற்றை பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கனடா, கிங்ஸ்ரனிலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் அரசாங்கங்களுக்கு இடையேயான உறவுகள் சம்பந்தமான நிறுவனத்தை சேர்ந்த றொனால்ட் வாற்ஸ், “கூட்டாட்சி முறைகளை ஒப்பு நோக்குதல்” எனும் நூலை எழுதியுள்ளார். அதிலிருந்து பெறப்பட்ட இந்த பகுதி உலகத்தின் போக்கை விளக்குகிறது – “போக்கு வரத்தின் நவீன முன்னேற்றங்கள், சமூக தொடர்பாடல்கள், தொழில்நுட்பம், மற்றும் தொழிற்சாலை அமைப்புகள் என்பன பெரிய அரசியல் அமைப்புகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் அதே சமயத்தில் சிறியவைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன.  பெரிய அரசியல் பிரிவுகளின் மீதான அழுத்தம் இன்று அதிகம் மேற்கத்தைய மற்றும் மேற்கு அல்லாத சமூகங்களில், முன்னேற்றத்துக்கான ஆவல், வாழ்க்கைத் தரத்தின் உயர்ச்சி, மற்றும் உலக அரங்கின் செல்வாக்கு என்பன பகிரப்பட்ட இலக்குகள் காரணமாக உருவாகியுள்ளது மற்றும் உலகின் வளர்ந்துவரும் விழிப்புணர்வுகளின் காரணமாக, அதைச் சார்ந்துள்ள காலத்தில் அதன் முன்னேற்றமான தொழில்நுட்பம் சாத்தியமான பாரிய பேரழிவு மற்றும் பாரிய ஆக்கங்கள் ஆகிய இரண்டையும் ஏற்படுத்துகின்றன”. 

“சிறிய சுயாட்சி அரசியல் அலகுகளுக்கான ஆவல் எழுந்திருப்பது, அரசாங்கம் தனிப்பட்ட பிரஜைகளிடம் கூடுதல் பொறுப்புடன் நடப்பதுடன் மற்றும் ஆரம்ப பிரிவு இணைப்புகளான - மொழியியல் மற்றும் கலாச்சார பிணைப்புகள், சமயத் தொடர்புகள், வரலாற்று மரபுகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் - அவை சுய நிர்ணயத்துக்கு ஏங்கும் ஒரு சமூகத்தின் அடையாள உணர்வுகளுக்கான  தனித்துவமான அடிப்படையை வழங்குகிறது – என்பனவற்றை தனது விருப்பமாக வெளிப்படுத்தும் போதுதான். இந்த இரட்டை அழுத்தங்கள் வழங்கப்படும் போது, இன்னும் இன்னும் அதிகமான மக்கள் ஒருவகை கூட்டாட்சி வடிவத்தை காண வருவார்கள், அத்தகைய கூட்டாட்சி, சமகால உலகின் பல் தேசிய யதார்த்தத்தின் தோராயமான நெருங்கிய நிறுவனங்களை அனுமதிப்பதற்காக அவற்றின் தனித்துவமான பிராந்தியங்களை பராமரிப்பது தொடர்பான நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் அரசியலமைப்பு அலகுகள் மூலம் தன்னாட்சி நடவடிக்கையின் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக ஒரு பகிர்வு அரசாங்கமாக இணைந்த கூட்டாட்சி வடிவத்தை பெற்றிருக்கும்”.

றொனால்ட் வாற்ஸ் கூட்டாட்சி யோசனையின் சாராம்சத்தை இப்படித் தொகுத்துள்ளார். ஒரு பக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தேசம் கடந்த அங்கங்கள் உட்பட பெரிய அமைப்புகளை உருவாக்கும் போக்கு உள்ளது. மறுபக்கத்தில் வித்தியாசமான  உள்ளக தேசிய அபிலாசைகளைக் கொண்ட இனத் தன்மையை அங்கீகரிக்கும் தேவையும் உள்ளது. ஆகவே பிளமிஸ் மற்றும் வலோன் இனத்தவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக பெல்ஜியம் கூட்டாட்சி முறைக்குத் திரும்பிய அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் அதன் தலைநகரான புருஸல்சில் உள்ளது. யுனியன் ஜக் கொடியில் செயின்ட் ஜோர்ஜ், செயின்ட் அன்ட்றூ, செயின்ட் டேவிட் மற்றும் செயின்ட் பற்ரிக் சிலுவைகள் இருக்கலாம் ஆனால் மகிழ்ச்சியான இங்கிலாந்தானது ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என்பனவற்றுக்கு அதிகாரத்தை பரவலாக்காமல் ஒன்று சேர்ந்த ஐக்கிய இராச்சியத்தை கொண்டிருக்க முடியாது.

நவீன இலங்கை ஒரு பிரித்தானியாவின் உருவாக்கம்

ஸ்ரீலங்காவின் இன மோதல் அதன் தோற்றத்தை காலனித்துவத்தில் கொண்டுள்ளது. நவீன இலங்கை ஒரு ஸ்ரீலங்காவாக உணரப்பட்டதும் ஒரு பிரித்தானியாவின் உருவாக்கம்தான். தீவானது நிருவாக ரீதியாக ஒருங்கிணைக்கப் பட்டது ஆனால் மக்கள் இனரீதியில் பிரதிநிதித்துவத்தை வழங்கியதின் ஊடாக அரசியல் ரீதியாக பிளவடைந்தார்கள். ஒன்றுபட்டது என்பது ஆட்சி அமைப்பதற்காக பிளவுபட்டதாகச் சுரண்டப்பட்டது. போதுமானதும் மற்றும் சமத்துவமானதுமான அதிகாரப் பகிர்வு இல்லாததால் தீவானது சுதந்திரத்துக்கு முன்னான எல்லைகளில் சுதந்திரத்துக்குப் பின்னான மோதல்களால் சீர்குலைந்தது. ஸ்ரீலங்கா தமிழ் தேசியம் அடிப்படையில் அதன் தன்மையில் ஊக்கம் பெற்றது. நவீன இலங்கைத் தேசத்தின் இணை நிறுவனர்களான தமிழர்கள் தாங்கள் சிங்களவர்களுக்கு இணையானவர்களாக எண்ணினார்கள். சர்வஜன வாககுரிமை மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் என்பன அவர்களை பிரதான சிறுபான்மையினராக குறைவடையச் செய்தது. தமிழர்கள் தாங்களை இந்த தீவுக்கும் அதன் முழமைக்கும் இன்னமும் சொந்தமானவர்களாகவே எண்ணினார்கள். அதனால் சமச்சீரான பிரதிநிதித்துவம் வேண்டும் என விரும்பினார்கள் மற்றும் அதன்பின் அரசியல் மூலோபாயமான பொறுப்பான ஒத்துழைப்பை பின்பற்றினார்கள். இது தோல்வியடைந்த போதுதான் கூட்டாட்சி கோரிக்கை எழுந்தது. தமிழர்களின் சுய – கருத்து இப்போது தங்களை ஒரு பிராந்திய சிறுபான்மையாக முடிவு செய்துவிட்டது.

இங்கு அரசியல் தலைவர்கள் கூட்டாட்சியிலும் குறைவானதுக்கு விட்டுக்கொடுக்கக்கூட தயாராக இருந்தார்கள் மற்றும் அதற்கு மாற்றீடாக பிராந்திய சபைகள், மாவட்ட சபைகள் போன்றவற்றையும் தேர்வு செய்தார்கள். இறுதியாக ஆற்றொணா அழுகையுடன் பிரிவினை கோரிக்கை வந்தது மற்றும் அதன் விளைவாக ஆயுதப் போராட்டமும் வந்தது. பொருத்தமான நேரத்தில் கூட்டாட்சி முறை பின்பற்றப் பட்டிருந்தால் இன மோதல் விரிவடைந்ததின் பின்னர் ஏற்பட்ட இந்த இரத்தம் சிந்தலையும் படுகொலைகளையும் தவிர்த்திருக்கலாம். 2002ல்கூட சாத்தியமான ஒரு தீர்வாக கூட்டாட்சி முறை முன்மொழியப் பட்டது. நோர்வேயின் மத்தியஸ்தத்தில் நடந்த சமாதான செயல்முறை மிகப் பெரிய சாதனை, அதன் பலனாக கூட்டாட்சியை ஆராய ஒஸ்லோ உடன்படிக்கை ஏற்பட்டது. அதன் தகுதியோ அல்லது குறைபாடோ எதுவாக இருந்தாலும் கூட்டாட்சியை எந்த மக்கள்மீதும் திணிக்க முடியாது. சம்மதத்துக்கான அங்கம் மற்றும் பரஸ்பர ஒத்தழைப்பு என்பன எந்த ஒரு முறைமையும் வேலை செய்வதற்கு அவசியம். ஸ்ரீலங்காவானது கூட்டாட்சி அல்லது பாதி கூட்டாட்சி அல்லது பொருத்தமான அலகுகளில் அதிகாரத்தை பரவலாக்கிய ஒரு ஒற்றையாட்சி முறையாக மாறினாலும்கூட, இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவினரும் ஒரே நாடாக ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும். கூட்டாட்சி யோசனை அவசியப்படுவதற்கு இது ஒரு சிறந்த புரிந்துணர்வு.

கூட்டாட்சியை பிரேரிப்பவர்கள் வாதிடுவது அதைப் பின்பற்றுதன் மூலம் அது ஐக்கியம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பனவற்றை வலுப்படுத்தும் என்று. சுவிற்ஸலாந்து, இந்தியா, மலேசியா, பெல்ஜியம், ஜேர்மனி, ஸ்பெயின் போன்றவை  இதற்கான உதாரணங்களாக காட்சியளிக்கின்றன. ஆனால் கூட்டாட்சி கூட பிரிவினையை தடுக்கத் தவறியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. பிரிவடைந்த சோவியத் ஒன்றியம் மற்றும் யுகோஸ்லாவியா என்பன இதற்கான நன்கறிந்த உதாரணங்கள். மலேசியா – சிங்கப்பூர் மற்றும் பாகிஸ்தான் - பங்களா தேஷ்  என்பனவும் கடந்த காலத்தில் பிரிவடைந்தன, அதேபோல புதிதாக பிளவடைந்த செக் - ஸ்லோவாக்கியா, சேர்பியா மற்றும் மொன்ட்டநேக்ரோ என்பனவும்கூட கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள். கனடாவில் கூட்டாட்சியையும் மீறி கியுபெக்கில் பிரிவினைவாதம் வளர்ச்சி பெற்றது. பிரித்தானியா ஸ்கொட்லாந்துக்கும் மற்றும் வேல்சுக்கும் அதிகாரத்தை பரவலாக்கியது ஆனால் பிரிவினை அங்கும் காலூன்றியுள்ளது போலத் தெரிகிறது. நைஜிரியாவில் கூட்டாட்சியானது பியாபிரான் உள்நாட்டு போரை தடுக்கத் தவறிவிட்டது.

எனினும் இந்த நாடுகளைப் பற்றி அலசி ஆராயும் போது நுணுக்கமான பல விடயங்களை கணக்கில் எடுக்கவேண்டி உள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெளிவாவது, பிரிவினைவாத போக்குகளை முறியடிப்பதற்கான ஒரு தீர்வாக பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் என்பன விருப்பத்துடன் கூட்டாட்சி முறையை தேர்வு செய்தன. இருந்தும் பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் என்பன தொடர்ந்தும் இந்தப் பிரச்சினைகளை கொண்டுள்ளன. கியுபெக்கோயிஸ் பிரிவினைவாத கட்சியின் புதிய தலைவர் பிரிவினைவாத இறையாண்மைக்கு உதவும்படியான எந்தவித சர்வஜன வாக்கெடுப்பும் இனி வரும் காலத்தில் நடத்தப்பட மாட்டாது என அறிவித்ததைத் தொடர்ந்து கனடாவில் இந்த சமன்பாடு மாற்றமடைகிறது. கியுபெக்கின் முக்கிய கட்சிகள் யாவும் ஒன்றுபட்ட கனடாவுக்குள் அதிகளவு சுயாட்சி மற்றும் அதிகாரங்களைக் கோருகின்றன. சமீபத்தில் ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கூட்டாட்சி முறையினை பலப்படுத்தியுள்ளது. இந்தியா அதன் கூட்டுறவு மாதிரியான கூட்டாட்சி முறையினால் நடைமுறையில் மேலும் மேலும் வலுவடைகிறது. அவுஸ்திரேலியா மற்றம் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தலைகீழாக மாறியுள்ளது தெரிகிறது, அங்கு அதிகாரம் மேலும் மேலும் மையப் படுத்;தப்பட்டு வருவதால் தூய கூட்டாட்சி முறையானது அங்கு மெல்ல மெல்ல தேய்வடைந்து வருகிறது.

அனைத்து தீர்வுகளுக்கும் ஒரே அளவு பொருந்தாது

அதனால் கூட்டாட்சியானது “ஒரே அளவு எல்லாவற்றுக்கும் பொருந்துகிற” வகையான தீர்வினை வழங்காது. ஒவ்வொரு நாடும் ஆராய்ந்து பார்த்து அதன் தனிப்பட்ட தேவைக்கு உகந்ததும் மற்றும் பொருத்தமானதுமான ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டும். ஸ்ரீலங்காவும் கூட இந்த கூட்டாட்சி யோசனையை பொருத்தமான புதுமைகளுடன் ஏற்றுக் கொள்ளுவதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வதற்கு முன் அதை முற்றாகவும் தீவிரமாகவும் ஆராய வேண்டியது அவசியம். கூட்டாட்சி யோசனையானது அற்றல் மிக்கதும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதும் ஆகும். ஸ்ரீலங்காவில் உள்ள நாங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் கூட்டாட்சி யோசனையை ஆராய்ந்து பார்ப்பதுடன் அதன் நல்லது கெட்டதுகளை பகுத்தறிவதுக்கும் மற்றும் அதை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை முடிவு செய்வதற்கும் அறிவிக்கப்பட்ட விவாதங்களை நடத்த வேண்டும்.

இந்த கெட்ட வார்த்தை மூலமாக ஸ்ரீலங்காவில் வெப்பம் உருவாகியுள்ளபோதும், கூட்டாட்சி யோசனையானது கொந்தளிக்கும் உலகை கவர்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வேகமாக மாறி வரும் உலகை கூட்டாட்சி யோசனை பெருமளவு தாக்கியுள்ளது. பொப் றே யின் வார்த்தைகளில் சொன்னால், - “மீள் எழுச்சி பெற்றுள்ள கூட்டாட்சி யோசனை அதன் முக்கியத்தை பல்வேறு காரணிகளில் கொண்டுள்ளது. ஜனநாயக மதிப்புகளின் உயிர்நாடி, அடையாளம் மற்றும் மனித உரிமைகளின் அரசியலின் மறுமலாச்சி, இனப்பாகுபாடு மற்றும் அதிகாரத்துவ கம்யுனிசத்தின் இரட்டை வீழ்ச்சி, தொழில்நுட்ப புரட்சியின் தாக்கம், உலக மயமாக்கல் என்கிற வார்த்தையுடன் நமக்கு துணையாக உள்ள பொருளாதார மாற்றங்கள் ஆகிய அனைத்தும் அதில் பங்களிப்பைச் செலுத்தியுள்ளன”.

“இந்த புதுப்பித்தல், கூட்டாட்சி பாரம்பரியத்தை கொண்ட நாடுகள் அனைத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. புவியியல் நிலையானது தன்னிச்சையான ஓரினத் தன்மைக்கு வெகு அரிதாகவே ஒத்ததாக உள்ளது என்கிற எளிய உண்மையை கொண்டு நாடுகள் நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. இன, மொழி, சாதி மற்றும் மத மோதல்கள்  என்பன இன்று உலக ஒழுங்கு எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டன. 1945க்குப் பின்னான யுத்தம் பெருமளவு நாடுகளுக்கு இடையேயானதும், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கு பேரழிவு விளைவிப்பனவாகவும் உள்ளன. இனிமேல் அதில் படை வீரர்கள் மட்டும் லட்சக்கணக்கில் மடியப்போவதில்லை ஆனால் பொதுமக்களும் கூட மடியப் போகிறார்கள். ருவாண்டா முதல் கம்போடியா வரை, பால்கன் தீவுகள் முதல் கிழக்கு தீமோர் வரை நாடுகளுக்குள் போர்க்களம் தோன்றியுள்ளது அவைகளால் மைக்கல் இக்னற்றிப் கூறியுள்ளதைப் போன்ற “இரத்த சொந்தங்களின்” மோதல்களை தீர்க்க இயலவில்லை”.

இந்தப் பின்னணியில்தான் கூட்டாட்சி யோசனை மீள் எழுச்சி பெறுகிறது. உண்மையில் கூட்டாட்சிப் பிரச்சினைகள் உலகின் ஒவ்வொரு பகுதியினதும் தீவிர அரசியல் மற்றும் சட்ட விவாதங்களின் மத்தியில் உள்ளது, குறிப்பாக மோதல் தீர்வுகள் மிகவும் அவசரமாகத் தேவைப்படும் பகுதிகளில். தேசிய இறையாண்மை மடிந்துவிடவில்லை மற்றும் தேசத்தின் அல்லது நாட்டின் வயது முடிந்துவிடவல்லை. ஆனால் இவைகள் பிரத்தியேகமானவை அல்லது தெளிவாக வரையறை செய்யப்பட்டவை என்கிற கருத்து காலம் கடந்த ஒன்று. நாடுகளில் உள்ள ஆட்சி நடைமுறைகள் தவிர்க்கமுடியாதபடி உலக அரசியல் மற்றும் பொருளாதார கருத்தின் மீளாய்வுக்கு உட்பட்டவை மற்றும் மிகவும் முக்கியமாக சட்டத்தின் ஆட்சிக்கு”

ஒரு கட்சி அரசாங்கம், அடையாளக் கோரிக்கை, உள்ளுர் அதிகார வெறி, அரசாங்கத்தின் அதிகமான வெளிப்படைத் தன்மை மற்றும் திறந்த தன்மைக்கான வலியுறுத்தல் என்பனவற்றில் சரிவு ஏற்பட்டால், மற்றும் சிறியதும் மற்றும் அளவுக்கதிகம் சார்புள்ளதுடன் உலக இறையாண்மை இனியும் முழமையானது அல்ல என்று அங்கீகரிக்கப்பட்டால் அங்கு கூட்டாட்சி யோசனை முன் கொண்டுவரப்பட வேண்டும்”.அப்படியானால் இந்த கூட்டாட்சி யோசனை பற்றிய அனைத்து விடயங்களும் என்ன ஆகிறது! ஸ்ரீலங்கா அரசியலில் கூட்டாட்சி யோசனையை பற்றிய தவறான கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு அரசியல் தீர்வுக்காக காலத்தை வீணடிப்பது ஒரு ஆடம்பரமான செயல், எங்களால் அதைத் தாங்க முடியாது. குறித்துக்கொள்ள வேண்டிய முக்கிய கருத்து, எல்.ரீ.ரீ.ஈ யின் இராணுவத் தோல்வி தமிழர்களின் தேசிய பிரச்சினை தன்னிச்சையாக தீர்க்கப்படுவதில் நிச்சயமாக எதுவித விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை. எல்.ரீ.ரீ.ஈ யானது துன்பத்துக்கான ஒரு கடுமையான அறிகுறி மட்டுமே. எல்.ரீ.ரீ.ஈயினை அகற்றியது நீடித்த தீர்வாக ஆகிவிடாது.

கொளம்பட்ட கிரி, கமட்ட கெக்கிரி (கொழும்;புக்கு பால், கிராமத்துக்கு வெள்ளரி)

இப்பொழுது வேண்டியது என்னவென்றால் வெறுமே சமத்துவமான ஒரு பன்முகச் சமூகத்தின் உருவாக்கம். கூட்டாட்சி யோசனையுடன் தொடர்புபட்ட அதிகாரப் பரவல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒருகூட்டாட்சி யோசனை சமத்துவமான அதிகாரப்பகிர்வுடன் கட்டாயம் தேவை. அதிகாரம் கொழும்புடன் மட்டும் நின்று விடக்கூடாது ஆனால் அது சுற்றுப்புறங்களுக்கும் பகிரப்பட வேண்டும். “கொளம்பட்ட கிரி, கமட்ட கெக்கிரி” (கொழும்;புக்கு பால், கிராமத்துக்கு வெள்ளரி) என்கிற பழமொழியின் விலிமை மற்றும் மதிப்பு என்பனவற்றை இழக்கும்படி செய்ய வேண்டும்.

அனைத்து பிள்ளைகளும் ஒற்றுமையுடனும் மற்றும் சகோதரத்தன்மையுடனும் ஒன்றாக வாழும் ஒரு நாடாக ஸ்ரீலங்கா மீளவும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை இனம்ஃமதம் என்கிற உரிமையின் அடிப்படையிலோ அல்லது அவர்களது வரலாற்று வாழ்விடம் என்கிற பிரத்தியேக உரிமையிலோ யாரும் உயர்ந்த உரிமைகளை கோராதபடி புதிய பார்வை ஒன்று மீள் கற்பனை செய்யப்பட வேண்டும். பருத்தித்துறை முதல் தெவிநுவர வரை மற்றும் மன்னார் முதல் முல்லைத்தீவு வரை ஸ்ரீலங்கா அதன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. இனம் மற்றும் மதம், சாதி மற்றும் சமயம் என்கிற பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சொல்வதற்கும் மற்றும் செயல்படுவதற்கும் இரு கரம் நீட்டி எங்களை வரவேற்கும் துணிச்சலான புதிய லங்காஃஇலங்கை யில் இடம் இருக்க வேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

thenee.com  07 01 2016