தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1

14 02 2016

தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 1

டி.பி.எஸ்.ஜெயராஜ்

“ஸ்ரீலங்கா தாயே, நம் ஸ்ரீலங்கா நமோ,நமோ, நமோ, தாயே….”

இலங்கை என அறியப்பட்ட ஸ்ரீலங்கா 1948,பெப்ரவரி 4 ல் பிரித்தானியாவிடமிருந்து சுnational anthermதந்திரம் பெற்றது. அதற்கு ஆறு வருடங்களுக்குப் பின்னர் மே 21,1954 ல் சுதந்திரமடைந்த இலங்கையில் நான் பிறந்தேன். இலங்கை குடியரசாகி தனது பெயரை உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா என மே 22, 1972ல் மாற்றிக் கொண்டது. பெப்ரவரி 4, 2016 ல் ஸ்ரீலங்கா தனது சுதந்திரம் பெற்ற 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அதன் உத்தியோகபூர்வ நினைவு நிகழ்வு காலி முகத் திடலில் நடந்தேறியது. அன்றைய தினத்தின் சிறப்பம்சமாக எங்கள் நாட்டின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட்டது. 

கடந்த தசாப்தங்களில் பல உத்தியோகபூர்வ சுதந்திர தின நினைவு நிகழ்வுகள் நடைபெற்றதை நான் கண்டிருக்கிறேன். எனினும் எனது வாழ்க்கையில் முதல் தடவையாக எனது வாழ்ககையில் ஒருபோதும் நடக்க முடியாது என்று நான் எண்ணிய ஒரு காட்சியை இணையத்தின் மூலமாக கண்டதுக்கு இன்று நான் சாட்சியாக உள்ளேன். இளமை ததும்பும் ஆண்களையும் பெண்களையும் கொண்ட ஒரு பாடகர் குழுவொன்று, ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை எனது தாய்மொழியாம் தமிழ்மொழியில் களிப்புடன் பாடி வழங்கியதை நான் கண்ணாரக் கண்டும் காதாரக் கேட்டும் மகிழ்ந்தேன். அதற்கு 2 நிமிடமும் 32 செக்கனும் பிடித்தது. அந்தப் பாடகர்கள் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு விவேகானந்த கல்லூரி என்பனவற்றை சேர்ந்த மாணவ மாணவிகளாவார். அவர்கள் சுமுகமாக ஒருங்கிணைந்து பாடினார்கள். பல தசாப்தங்களுக்குப் பிறகு உத்தியோகபூர்வ அனுமதியுடன்  அரசின் சார்பாக நடத்தப்படும் சுதந்திர தின நினைவு நிகழ்வில் ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது.

நான் உணர்ச்சிபூர்வமான பரவச நிலையில் மெய்மறந்து நின்றேன். முன்பு ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் இசைக்கப் படும்போது செய்யாத ஒன்றை அப்போது நான் செய்தேன். நான் அழுதேன்! அதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை! அந்தக் காட்சியை நான் திரும்பத் திரும்ப ஓடவிட்டுப் பார்த்தேன். எனது கண்கள் பனித்தன மற்றும் கண்ணீர் எனது கன்னங்களின் வழியே உருண்டோடியது. என்னை அடக்கமாட்டாமல் சில தடவைகள் நான் தேம்பவும் செய்தேன். உணர்ச்;சி வெள்ளத்திலிருந்து என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக நான் பெரும்பாடு பட்டேன். ரூபவாகினியின் புகைப்படக் கருவி அங்கு குழுமியிருந்த பல்வேறுபட்ட பார்வையாளர்களின் பக்கமாகச் சுழன்றபோது, ஸ்ரீலங்கா மாதாவின் மிக முக்கியமான பிள்ளைகள் - அவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் - தேசிய கீதத்தின் வார்த்தைகள் தெளிவாக தமிழ் மொழியில் ஒலித்தபோது மரியாதையுடன் விறைப்பாக எழுந்து நின்றதை நான் கண்டேன். உண்மையில் அது ஒரு வரையறுக்கப்பட்ட தருணம்!

நான் பிறந்த மண் ஒரு புதிய அற்புதமான பயணத்தை நோக்கி புறப்பட்டுள்ளது என்பதை நான் உணர்ந்தேன். பிரதானமாக இன – மொழி முரண்பாடுகளால் தசாப்தங்களாக ஊக்குவிக்கப்பட்டு வந்த சுதந்திரத்துக்குப் பின்னான மோதல்களின்; பின்னர், தேசம் பெருமளவில் அதன் பன்முக தேசிய அடையாளத்தை உணர்ந்து அங்கீகரித்துள்ளது. சிங்களவர்கள் தொடர்ந்து அவர்களுக்குரிய சரியான இடத்தை தக்கவைத்து வந்த அதேவேளை, நாடு இப்போது சேர்த்தணைக்கும் பாதையில் முன்னோக்கி நடை போடுகிறது மற்றும் முன்பு தவிர்த்தவைகளை இப்போது சேர்த்துக்கொள்ள தயாராக உள்ளது. 68 வது சுதந்திர தின வைபவம் அதிகாரத்தில் புதிய பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கும் துணிச்சலான புதிய ஸ்ரீலங்காவுக்கு ஒரு நல்ல சகுனம்.

முன்னோக்கிய பெரிய பாய்ச்சல்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது சரித்திர புகழ் வாய்ந்த சந்திரனுக்கான பயணத்தின் பின்னர் சந்திரனில் தான் வைத்த முதலடி பற்றிச் சொல்லியது, மனிதனைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய அடியாக இருந்தாலும் மனித குலத்தை பொறுத்தவரை அது மாபெரும் பாய்ச்சல் என்று. அதேபோல சுதந்திர தின உத்தியோகபூர்வ வைபவத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடுவது சரியான திசையில் முன்னோக்கிய பெரும் பாய்ச்சலுக்கான மிகப் பெரும் அடையாள மதிப்பாகும். அது நீண்ட காலமாக அந்நியப் படுத்தப்பட்டு வரும் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு, தனிமைப் படுத்தலின் நின்றும் வெளியே வந்து தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இணைந்து கொள்வதற்காக விடுக்கப்படும் ஒரு சமிக்ஞை. தமிழ் மொழி அரசியலமைப்பின்படி ஒரு உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது, இப்போது அதற்கு சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியானது ஸ்ரீலங்காத் தமிழர்களால் மட்டும் பேசப்படுவதில்லை, ஆனால் இந்தியத் தமிழர்கள் மற்றும் கணிசமானளவு ஸ்ரீலங்கா முஸ்லிம்களாலும் பேசப்படுகிறது. சனத்தொகையில் கிட்டத்தட்ட 25 வீதமானவர்களால் பேசப்படும் ஒரு மொழிக்கு சுதந்திர தின நிகழ்வில் ஒரு அடையாள அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 4ல் தேசிய கீதம் தமிழில் பாடப்படப் போகிறது என்கிற அறிவிப்பு முன்னர் வெளிவந்தபோது அதை எதிர்ப்பதற்கான உரத்த ஓலங்களும் வெளிவந்திருந்தன. போலி தேசியவாதிகளின் கலவையான கும்பல் ஒன்று தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்று கடுமையான வார்த்தைகளில் கூச்சலிட்டார்கள். ஸ்ரீலங்காத் தாயே எனப் பாடுவதன் மூலம் ஈழவாதிகள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் எனச் சிலர் குற்றம் சுமத்தினார்கள். குடும்ப ஆட்சி மூலம் ஊழல் புரிந்த குடும்பத்தின் தலைவர் நாட்டின் சுதந்திரத்துக்காக முதலைக் கண்ணீர் வடித்தார். தமிழ் ஒரு உத்தியோக மொழி என்பதை வலியுறுத்தும் அரசியலமைப்பு விதிகள் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப் படுவதில்லை என்பதைக் கண்டுகொள்ளாத சிலர், அரசியலமைப்பு மீறப்படுகிறது என்று வலியுறுத்தி ஒரே இரவில் அரசியலமைப்பு சட்டவாதிகளாக மாறிவிட்டார்கள். வஞ்சகப் பூனையை போன்ற அரசியல்வாதி ஒருவர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன மீது குற்றப் பிரேரணை கொண்டு வரப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்படுவது ஸ்ரீலங்காவுக்கும் அதன் மக்களுக்கும் மிகப் பெரிய பேரிடரை கொண்டு வரலாம் என்கிற ஒரு மாயையை உருவாக்கும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் நடைபெற்று வந்தது. அரசாங்கத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் இந்த விடயம் தொடர்பாக இருந்த ஆழமான பிளவுகள் மற்றும் செல்வாக்குள்ள அரசியல்வாதிகளினால் காட்டப்பட்ட ஆக்ரோஷமான விரோதங்கள் காரணமாக அரசாங்கம் இந்த விடயத்தை கைவிட்டு விடலாம் என நான் நினைத்திருந்தேன். மகிழ்ச்சியான முறையில் எனது அச்சம் பொய்யானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் “ஸ்ரீலங்கா மாதாவை” தமிழில் பாடுவதை சாத்தியமாக்கிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்த போதிலும் சரியான விடயத்தை செய்து காட்டிய அவர்களது அரசியல் துணிவிற்கு நான் தலை வணங்குகிறேன்.

தேசிய கீதத்தை தமிழில் பாடிய இந்த விடயம் காரணமாக எனது பரவச உணர்வு அதிகமாகியது அது நான் கடுமையாக கரிசனை காண்பிக்கும் ஒரு விடயம்.  இது எனக்கு ஒரு பெரிய விடயமாகத் தோன்றாத எனது கடந்த கால மகிழச்சியான பழைய நினைவுகளை எண்ணி நான் ஏக்கப் பெருமூச்சு விட்டேன். கொள்ளுப்பிட்டி புனித தோமஸ் கல்லூரி ஆரம்ப பாடசாலையில், ரி.ஆர். பேரின்பநாயகம் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் (1959 -64) நான் ஒரு மாணவனாக இருந்தேன், தவணை முடிவுகளில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் இறுதியில் நாங்கள் தேசிய கீதம் பாடுவது வழக்கம். அங்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் என பல்லினத்தையும் மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை உடைய, கொழும்பு செட்டி, பரத, சிந்தி, போரா, பார்சி, மலயாளி,மற்றும் தெலுங்கு மாணவர்களும் கல்வி பயின்று வந்தார்கள்( கண்டியின் கடைசி அரசனின் தலைமுறையில் வந்த அவரது கொள்ளுப் பேரனில் ஒருவரும் அந்த மாணவர்களில் ஒருவர்)

உயிரோட்டமுள்ள  சந்தப் பாடல்

எங்களுக்கு வழங்கப்படும் ரோணியோ இயந்திரத்தில் அச்சுப் பதிவு செய்யப்பட்ட தாளில் தேசிய கீதத்தின் வார்த்தைகள் சிங்களம்,தமிழ்,மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிங்களப் பதிப்பு என்று அச்சிடப் பட்டிருக்கும். எங்களுக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடலாம் என்ற சுதந்திரம் இருந்தது, ஆனால் பெரும் பாலும் எங்களில் எல்லோருக்குமே ஆங்கிலத்தில் சரளமான புலமை இருந்ததால் நாங்கள் ஆங்கில எழுத்துக்களில் இருந்த சிங்கள வார்த்தைகளைப் பாடுவதையே தெரிவு செய்வோம். ஒரு தமிழன் என்கிற வகையில் அப்போது அதன் அர்த்தம்; எனக்கு முற்றாகப் புரிந்ததாக நான் நினைக்கவில்லை ஆனால் அந்த ஆரம்ப பள்ளிக்கால பருவ வயதில் அது எனக்கு ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. அந்த வார்த்தைகளுக்கு ஒரு சங்கீத நாதம் இருந்தது மற்றும் அந்த நாதம் உயிரோட்டமானதாகவும் மற்றும் சந்தம் உள்ளதாகவும் இருந்தது.

நான் எனது பதின்ம வயதுகளின் மத்தியில் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்த பின்புதான் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை கேட்க ஆரம்பித்தேன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒன்றிரண்டு முஸ்லிம் மற்றும் மலயாள இனத்தவர்களை தவிர மற்ற அனைவரும் முற்றிலும் தமிழர்களே. இந்த நேரத்தில் இனத்தின் அடிப்படையில் ஒருவர் நன்கு அரசியல்மயப் படுத்தப்பட்டிருப்பார். இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்கள் என்கிற வகையில் எங்களுக்கு அரசியல் ரீதியாக அதிக அறிவு இருந்தது. தவிரவும் 20ம் நூற்றாண்டின் எழுபதுகளின் ஆரம்ப காலம் தரப்படுத்தல் காலகட்டமாக இருந்தபடியால் அது தமிழ் மாணவர்கள் மத்தியில் அதிக எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.அப்போது “தமிழ் ஈழ” உணர்வு எங்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கவில்லை, ஆனால் நாங்கள் பாரபட்சம் பற்றி கடுமையாக உணர்ந்ததுடன் மற்றும் இன அடக்குமுறையையும் பற்றி உணர்ந்திருந்தோம்.

எனினும் எனது தாய்மொழியான தமிழில் தேசிய கீதம் பாடும்போதோ அல்லது கேட்கும்போதோ அதை நான் உண்மையாகவே உணர்ந்துள்ளேன் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அதில் என்ன உள்ளது என்பதையும் நான் புரிந்து கொண்டிருந்தேன். அரசியல் ரீதியாக தேசிய கீதத்தின் வார்த்தைகள் இலங்கைத் தாயையும் மற்றும் நாட்டின் நற்பண்புகளையும் பற்றி உள்ளதே தவிர எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் பற்றி அல்ல என்பதால் அதன் உள்ளடக்கம்; ஆட்சேபணைக்கு உரியதல்ல எனபதை நான் கண்டுகொண்டேன். எனினும் தேசிய கீதத்தை தமிழ்மொழி மூலம் நான் சிறப்பாக அறிந்து கொண்டபோதிலும், அது சிங்களத்தில் பாடப்படுவதையே நான் கேட்க விரும்பினேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் ஏனெனில் அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கும் இனிய நாதத்தை கசிந்துருகி வெளித்தள்ளுகின்றன. இந்த தனிப்பட்ட கருத்தை தவிர, தேசிய கீதத்தை எனது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பாடப்படுவதை விட்டுக் கொடுக்கவோ அல்லது நேசத்துக்குரிய அந்த உரிமை மறுக்கப்படுவதை அனுமதிக்கவோ நான் தயாரில்லை.

இனமோதல் விரிவடைந்ததுடன் எல்லா விடயமும் முற்றாக மாறிவிட்டன மற்றும் சிங்கள, தமிழ் சமூகங்கள் தனித்தனியாக பிளவுபட்டன. குரோதங்கள் பெருகிய நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழில் தேசிய கீதம் பாடும் நடைமுறை படிப்படியாக குறைவடைந்தது. 1956க்கு முன்பு அநேகமாக யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா பெரிய பாடசாலைகளிலும் சிங்கள ஆசிரியர்கள்; (அவர்களில் அநேகர் பௌத்த பிக்குகள்) மாணவர்களுக்கு சிங்களம் போதிப்பதற்காக இருந்தார்கள். தமிழ் மொழியை நீக்கி சிங்களம் மட்டுமே ஒரே அரச கரும மொழியாக திணிக்கப் பட்டதிலிருந்து இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல தமிழ் பகுதி பாடசாலைகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவதும் நடப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்த நடைமுறை தென் பகுதியில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் ஓரளவு தூரத்துக்கு எதிரொலித்தது என்றாலும், தீவின் பல பகுதிகளிலும் உள்ள அநேகமான தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தமிழ் மூலம் தேசிய கீதம் பாடும் வழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது.

இனமோதல் புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்த சூழ்நிலையில், தேசிய கீதம் பாடும் நடைமுறை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் அரசியலில் வழக்கமில்லாத ஒன்றாகி விட்டது. இலங்கைத் தமிழரசுக்கட்சி(ஐ.ரி.ஏ.கே) மற்றும் பின் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி(ரி.யு.எல்.எப்) என்பனவற்றின் அரசியல் காலகட்டத்தில் மாற்றீடாக “தமிழ் அரசு” தேசிய கீதங்கள் அரசியல் கூட்டங்களில் பாடப்படும் ஒரு சூழ்நிலை உருவானது. குறைந்தது மூன்று வித்தியாசமான  பாடல்கள் அப்போது பயன்படுத்தப் பட்டன.

(தொடரும்)