தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3

21 02 2016

தமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3  

டி.பி.எஸ்.ஜெயராஜ்

உத்தியோகபூர்வ தமிழ் பதிப்பு

ஜூன் 24,1954ல் சேர் ஜோண் கொத்தலாவலயின் அமைச்சரவை தேசிய கீதத்தின் மnational antherm1ெட்டினையும் மற்றும் அது பாடப்படும் முறையினையும் முறைப்படி உறதிப்படுத்தியது. அந்த நாளில் நமோ நமோ மாதா பாடலின் பதிப்புரிமையை அரசாங்கம் முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக ரூபா 2,500 கொடுப்பனவாக செலுத்தப்பட்டது. அப்போது எச்எம்வி இசைத்தட்டுகளின் முகவராக இருந்த மதிப்பு வாய்ந்த கார்கில்ஸ் நிறுவனத்திடம் தேசிய கீதத்தின் இசைத்தட்டுகளை உருவாக்குவதற்கான கட்டளை வழங்கப்பட்டது. தேசிய கீதத்தின் தமிழ் பதிப்பைக் கொண்ட தட்டு ஒன்றும் உருவாக்கப்பட்டது. தமிழ் தேசிய கீதத்தின் மெட்டு மற்றும் இசை என்பன ஆனந்த சமரக்கோனின் சிங்களப் பதிப்பில் உள்ளது போலவே இருந்த அதேவேளை தமிழ் வார்த்தைகள் பண்டிதமணி நல்லதம்பி அவர்களால் எழுதப்பட்டிருந்தது, இதை சங்கரி மற்றும் மீனா என்கிற இரண்டு பெண் பாடகிகள் பாடியிருந்தனர். உத்தியோகபூர்வ தமிழ் பதிப்பு இலங்கை வானொலியில் முதலில் ஒலிபரப்பானது 1955 பெப்ரவரி 4ல்.

1956ல் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா சிங்கள தேசியவாத அலைகளின் உச்சத்தில் பிரதம மந்திரியாக பதவியேற்றார்.; “அப்பே ஆண்டுவ” (எங்கள் அரசாங்கம்) என புகழப்பட்ட புதிய அரசாங்கம் விரைவிலேயே தொடர்ச்சியான பல பிரச்சினைகளையும் மற்றும் கஷ்டங்களையும் விரைவிலேயே சந்திக்க நேர்ந்தது. அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வகுப்புவாத வன்முறை மற்றும் வெள்ளம், தீ மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களை அரசு எதிர்கொள்ள நேரிட்டது. இதற்கு பலிகடா ஆக்குவதற்காக ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த சில குறிப்பிட்ட சக்திகள் ( ஒருவேளை சொந்த நலன்களை கருத்தில் கொண்டவர்கள்) தேசிய கீதத்தின் மீது பாய்ந்தன. பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் யாவற்றுக்கும் காரணகர்த்தா என மூட நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது பகுத்தறிவற்ற வேகமுள்ளவர்கள் “நமோ நமோ மாதா”வை தனியாக்கி அதன்மீது பழி சுமத்தினார்கள். நமோ நமோ மாதாவுக்கு எதிராக ஒரு நச்சுப் பிரச்சாரம் கிளப்பப்பட்டது.

அதன்மீது சுமத்தப்பட்ட குற்றம், நமோ நமோ மாதாவில் உள்ள குறியீடுகள் அதிர்ஷ்டமற்றவை மற்றும் அவைதான் நாட்டின் தீமைகளுக்கும் மற்றும் துரதிருஷ்டங்களுக்கும் காரணம் என்பதாகும். அதன் ஆரம்ப எழுத்தாகிய “ந” என்பது தீமை அல்லது அழிவை ஏற்படுத்துவது என்று விளக்கப் பட்டது. அசுபமான “கனக” அல்லது “கன” தேசிய கீதத்தின் அரம்பத்தில் வருவது நாட்டுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. “கன” என்பது பாடலின் முதல் மூன்று அசைகளில் இடம்பெற்றுள்ளது – எவ்வாறு நெடிய மற்றும் குறுகிய அசைகள் இடம் பெறலாம். தேசிய கீதத்தின் ஆரம்பச் சொற்கள் “ந – மோ – ந” அதாவது குறுகிய – நெடிய – குறுகிய  என்று அமைந்துள்ளதால் பாடல் ஒரு துரதிருஷ்டமான “கன” எனக் கூறப்பட்டது.

செப்டம்பர் 1959ல் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டார். 1960 மார்ச்சில் நடைபெற்ற தேர்தல்கள் ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைய வகை செய்தது. டட்லி சேனநாயக்காவின் குறுகிய ஆயுள் கொண்ட சிறுபான்மை அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது. புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஜூலை 1960 தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. பண்டாரநாயக்காவின் விதவை ஸ்ரீமாவோ பிரதம மந்திரியானார். புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் “நமோ நமோ மாதாவுக்கு” எதிராக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. பொது நிர்வாக மற்றும் கலாச்சார அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்கா இந்தப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து, நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தேசிய கீதம்தான் காரணமா என்பதை தீர்மானிப்பதற்கு நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்தார். அந்தக் குழு “நமோ நமோ மாதா” எனும் சொற்கள் “ஸ்ரீலங்கா மாதா” என மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அனந்த சமரக்கோன் இதை கடுமையாக எதிர்த்ததுடன் உத்தேச மாற்றத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் அரசாங்கம்  முன்னோக்கிச் சென்று ஒருதலைப் பட்சமாக தேசிய கீதத்தில் “நமோ நமோ மாதா” என்பதற்குப் பதிலாக “ஸ்ரீலங்கா மாதா” என பெப்ரவரி 1961ல் மாற்றம் செய்தது. அதற்காக ஆனந்த சமரக்கோனின் ஒப்புதல் பெறப்படவில்லை. தேசிய கீதத்தின் பதிப்புரிமை இப்போது அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு விட்டதால் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுப்பதற்கு கவிஞரால் சட்ட நிவாரணம் எதையும் தேட முடியவில்லை.

அரவணைத்துச் செல்லும் போக்கு

தேசிய கீதத்தின் சிங்களப் பதிப்பு கொழும்பில் நடைபெற்ற ஏராளமான உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் மற்றும் பெரும்பான்மை சிங்கள மாகாணங்களிலும் பாடப்பட்ட அதேவேளை, தமிழ் பதிப்பு தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களிலும் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலைகளிலும் பாடப்பட்டு வந்தது. 1956ல் சிங்களம் மட்டுமே தனி அரச கரும மொழியாக மாற்றப்பட்டு தமிழுக்கு எந்தவித உத்தியோகபூர்வ அந்தஸ்தும் வழங்கப்படாத போதிலும்கூட இந்த அரவணைத்துச் செல்லும் போக்கு காண்பிக்கப் பட்டது. 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது, ஆனால் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து வழங்கப்படவில்லை. அதே அரசியலமைப்பின் ஏழாவது பிரிவின் கீழ் சிங்களத்தில் உள்ள தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப் பட்டது. எனினும் தமிழ் மொழிபெயர்ப்புக்கும் அரசியலமைப்பின் ஏழாவது பிரிவிலுள்ள மூன்றாவது அட்டவணைப்படி அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்க வர்த்தமானி மற்றும் அதேபோல, 1978 அரசியலமைப்பின் தமிழில் பிரசுரிக்கப்பட்ட பிரதிகளில் தேசிய கீதத்தின் தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

1987ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின்படி சிங்களத்துடன் சேர்ந்து தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றம் பெற்றது. 1988ல் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 16வது திருத்தத்தின்படி தமிழ் ஒரு அரச கரும மொழியாக நிருவாக மற்றும் சட்ட கோளங்களிலும் மேலும் விரிவாக்கம் பெற்றது. இதன்படி ஒரு உத்தியோகபூர்வ மொழியாக தமிழ் ஏற்றம் பெற்றுள்ளதினால் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுவதற்குரிய கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது.

2009ல் யுத்தம் முடிவடைந்ததுடன் தமிழ் மக்கள் திரும்பவும் மெதுவாக தேசிய நீரோட்டத்தில் இணைய ஆரம்பித்தார்கள். இப்போது தமிழ், அரசியலமைப்பு ரீதியாக ஒரு உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளதினால் அவர்கள் திரும்பி இணைவதை கொண்டாடுவதற்கு அவர்களின் தாய்மொழியான தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தவிர வேறு சிறந்த வழி என்ன இருக்கிறது? அவர்களின் நாட்டை ஒரு தாயாக நினைத்து வாழ்த்திப் பாடுவதற்கு அவர்கள் எண்ணியும் உணாந்தும் செயற்படும் அவர்களின் சொந்த மொழியை பயன்படுத்துவது முக்கியமானது அல்லவா? அவர்களுக்கு அறிவு, உண்மை, பலம், மற்றும் உள் நம்பிக்கை, என்பனவற்றை வழங்கியதுடன் மேலும் தெய்வீக ஒளியையும் மற்றும் புலனறிவாற்றல் மிக்க இருப்பையும் வழங்கியுள்ள ஸ்ரீலங்காத் தாய்க்கு நன்றி செலுத்த வேண்டியது சிறப்பானது அல்லவா? மனவேறுபாடு மற்றும் புண்பட்ட நிலையிலுள்ள மக்கள், தவறான விருப்பம், வெறுப்பு, மற்றும் கலகங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டிப் பாடுவதும் மற்றும் திரும்பவும் ஒரு பலமான தேசமாக எல்லோரும் அன்பினால் பிணைக்கப்பட்டு முன்னோக்கி அணிவகுத்துச் செல்வதற்கு வேண்டிப் பாடுவதும் 

மிகவும் அர்த்தமுள்ள national antherm-1ஒரு செயற்பாடு அல்லவா?

 

அத்தகைய ஒரு சூழ்நிலையில், 2010ல் ராஜபக்ஸ ஆட்சியினால் தேசிய கீதத்தை தமிழில் பயன்படுத்துவதற்கு எதிராக ஒரு திடீர் தாக்குதலை மேற்கொண்டதைக் காணும்போது உண்மையில் மிகவும் கவலை ஏற்படுகிறது. அரசாங்கத்தின் ஒரு பகுதியினரால் தேசிய கீதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பை ஒழிப்பதற்காக கடுமையான நகர்வுகள் மேற்கொண்டதுடன் மற்றும் தேசிய கீதம் உத்தியோகபூர்வமாக சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்கிற விதியும் திணிக்கப்பட்டது. இது தொடர்பாக விவாதிப்பதற்கு 2010 டிசம்பர் 8ல் அரசாங்கத்தால் ஒரு அமைச்சரவைப் பத்திரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

அமைச்சரவைப் பத்திரம்

 

அதேவேளை தவறாக அறிவுறுத்தப்பட்ட விமல் வீரவன்ச அமைச்சரவையில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று தெரிவித்தார், ஓரளவு விஷய ஞ}னமுள்ள வாசுதேவ நாணயக்கார அதைக் கடுமையாக ஆட்சேபித்தார். இந்த யோசனைக்கு எதிராக பல அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அமைச்சரவையின் மனநிலை மாற்றமடைந்தது. தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நீக்கும் தீhமானம் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது என்பது விரைவிலேயே வெளிப்படையாகத் தெரிந்தது. இது தொடர்பாக அமைச்சரவை முக்கியஸ்தர்களுக்கு உள்ளேயே ஆழமான பிளவுகள் ஏற்பட்டிருப்பது தெளிவானது. நிலமையை சரியாக அளவிட்ட அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமைச்சரவை பத்திரம் பற்றிய முடிவு பிறிதொரு தினத்துக்கு காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து இதுபற்றிய விவாதம் மற்றும் கலந்துரையாடல் என்பனவற்றுக்கு ஒரு முடிவுகட்டினார். இறுதி தீர்மானம் மேற்கொள்ளப் படுவதற்கு முன்னர் தீவிரமான தகவலறிந்த விவாதம் ஒன்று அவசியம் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்கிடையில் இதுகாறும் உள்ள நிலை வழக்கம் போலத் தொடரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அதன்பின் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் தேசிய கீதம் தமிழில் பாடப்படக்கூடாது என்கிற உத்தரவுகள் அமைதியாகப் பிறப்பிக்கப் பட்டன. அதற்காக உத்தியோகபூர்வ ஆணைகள் எதுவும் இல்லை, ஆனால் உத்தியோகபூர்வமற்ற அறிவுறுத்தல்களின் விளைவாக தமிழ் தேசிய கீதம் உத்தியோகபூர்வமாக மௌனமாக்கப்பட்டது. வாசுதேவ நாணயக்காரவினாலோ அல்லது டக்ளஸ் தேவானந்தாவினாலோ இதைத் தடுக்க முடியவில்லை. ராஜபக்ஸ ஆட்சி தமிழ் தேசிய கீதத்தை சட்டபூர்வமாக தடை செய்யவில்லை ஆனால் நாளாந்த விவகாரங்களில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுக்கும் வகையில் பார்த்துக் கொண்டது. இந்த உபாயம் இதுகாறும் உள்ள நிலயை வெளிப்படையாக பின்பற்றுவது போல இருந்தாலும் களத்தில் தேசிய கீதம் தமிழில் பாடும் நடைமுறை விலக்கப்பட்டது. எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அரசியலமைப்பு விதிகள் அப்படியே உள்ளன என்று சொல்லப்பட்டது. அதன்படி தேசிய கீதம் பாடுவது நிலவி வரும் ஒரு உரிமை அது நீக்கப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. எனினும் அதிகாரத்தில் உள்ளவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தியோகப் பற்றற்ற ஒரு உத்தரவு பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள் போன்றவற்றில் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால், தமிழில் தேசிய கீதம் பாடுவதை அது அதைரியப் படுத்தியது. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள ஆயுதப் படையினர் தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடுப்பது அவர்களின் கடமை என்று பணிக்கப் பட்டார்கள்.

 

விரைவிலேயே அந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்ட தமிழர்கள், தமிழில் தேசிய கீதம் பாடும் முயற்சியை கைவிட்டார்கள். பாடசாலைப் பிள்ளகள் தமிழில் எழுதப்பட்ட சிங்கள வார்த்தகளப் பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். விமல் வீரவன்ஸ போன்றவர்கள் தமிழர்கள் சிங்களத்தில்தான் பாடவேண்டும் தமிழில் அல்ல என்று சொல்லுமளவிற்கு சென்றார்கள். அதன்படி தமிழில் தேசிய கீதம் பாடுவது ஒருபுறத்தில் கட்டாயமாக ஒடுக்கப்பட்ட அதேவேளை மறுபுறத்தில் தமிழில் தேசிய கீதம் பாடும் உரிமை இன்னும் எஞ்சியுள்ளது என்று போலியாக வலியுறுத்தப் பட்டது. அத்தகைய முக்கியமான காலகட்டத்தில் அரசியல் ரீதியாக இப்படியான தொலை நோக்கற்ற நடவடிக்கைள் மேற்கொள்ளப் பட்டது ஒரு வகையில் நம்ப முயாத ஒன்று. பல தசாப்தங்களாக இடம்பெற்ற பிரிவினைவாத மோதல் காரணமாக தனிமைப்படுத்தப் பட்டிருந்த தமிழ் மக்கள் ஐக்கி நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில்  மீளவும் இணைவதற்காக மௌ;ள மௌ;ளப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தேசிய கீதத்தை அவர்களின் தாய்மொழியில் பாடும் உரிமையும் மறுக்கப்படுவது ஒரு அடையாள அர்த்தத்தில் சக்தியான ஒரு அடியைக் கொடுப்பது போலுள்ளது.

 

வெற்றிக்களிப்பின் சின்னம்

 

இந்த மறுதலிப்பு நடவடிக்கைக்கு எல்.ரீ.ரீ.ஈ மீது சுமத்தப்பட்ட இராணுவத் தோல்வியினைத் தொடர்ந்து வேறு ஒரு அலட்சியபாவ மனோநிலையிலான சித்தாந்தம் காரணமாக இருக்கலாம். அது ஒரு வகையில் வெற்றியின் சின்னத்தை அர்த்தப்படுத்துவதாகவும் இருக்கலாம். தமிழர்கள் வெற்றி கொள்ளப்பட்ட மக்களாகக் கருதப்பட்டு மற்றும் தேசிய கீதத்தை வெற்றியாளரின் மொழியில் பாடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். இத்தகைய ஆழ்ந்த சிந்தனையின் காரணமாக வெளிப்படும் இந்த நகர்வில் ஒரு குரூரமான வஞ்சனை உள்ளது. தமிழுக்கு உத்தியோகபூர்வ அரசியலமைப்பு அந்தஸ்து இல்லாதபோதும் கடந்த காலத்தில் தேசிய கீதத்தை பாடி மகிழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளாவது இருந்தது. இப்போது 13வது மற்றும் 16வது அரசியலமைப்பு திருத்தங்களின் உதவியினால் தமிழுக்கு உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. வருத்தப்படும் வகையில் தமிழ் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்டதின் பின்னரும் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை மறுக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

போரில் ஈட்டப்படும் இராணுவ வெற்றி தானாகவே நியாயமான ஐக்கியத்தை நிறுவி விடாது. பிரிவினைவாதத்துக்கு எதிரான நீண்ட ஆனால் வெற்றிகரமான யுத்தத்துக்கு பின்னான உடனடிப் பணியாக நாடு எதிர்நோக்குவது போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தி ஒன்றுபட்ட தேசத்தை மேலும் வலுப்படுத்துவதே. ஒரு காலத்தில் தேசிய நல்லிணக்கம் மற்றும் இன ஐக்கிய நகர்வுகள் என்பன முக்கியமாகக் கருதப்பட்டன, ஏற்கனவே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு ஏற்றதாக நிலவிய ஏற்பாடுகளின் மீது கை வைத்து தமிழர்களை மேலும் விரக்தி நிலைக்கு தள்ளி விடுவதற்கான திட்டங்கள் இப்போது தீட்டப்படுகிறது.

 

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு உள்ள தற்போதைய நிலையை தொடர்வதற்கு அனுமதிப்பதற்கான முக்கியமான அழுத்தம் நிறைந்த மற்றொரு காரணமும் உள்ளது. தேசிய கீதத்தை தமிழில் பாட விரும்பும் தமிழர்கள் பிரிவினை வாதிகளோ அல்லது தீவிரவாதிகளோ இல்லை. பிரிவினைவாதிகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான புலம்பெயர்ந்தவர்கள் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என விரும்புகிறார்கள் என்று பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த முட்டாள்தனமான வலியுறுத்தல் உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியுள்ளது. ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதையே விரும்புகிறார்கள் ஏனெனில் அவர்கள் ஸ்ரீலங்காவுக்கு சொந்தமானவர்களாகவும் மற்றும் ஸ்ரீலங்காவுடன் அடையாளப் படுத்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இது அவர்கள் கேட்கும் ஒரு புதிய உரிமையல்ல ஆனால் முன்பு இருந்ததின் தொடர்ச்சியைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். சிங்களத்தில் தேசிய கீதத்துக்கு பெருமையான இடத்தை வழங்கும் அதேவேளை அவர்கள் அதை தமது தாய்மொழியில் எப்போதாவது எங்கெல்லாம் சாத்தியமாகிறதோ அல்லது பொருத்தமாகிறதோ அங்கு பாடவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

 

தூதுவர்கள், கல்வியாளர்கள், ஊடக மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் போன்ற நடுநிலையான வெளிநாட்டவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இன கலகங்களால் கிழிந்து துண்டாகி மற்றும் இப்போது இன ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் பாதையில் நடைபோடும் ஒரு மண்ணில்தான் இது நடக்கிறதா என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. ஏன் இத்தகைய சகிப்புத் தன்மையற்ற போக்கு! மேலும் விவேகமும் மற்றும் நல்லறிவும் உள்ள எந்த ஒரு நாட்டிலும் ஒரு பிரச்சினையாக கருதப்படாத ஒரு விடயத்துக்கு ஏன் இத்தகைய விகாரமான பதிலளிப்பு? ஆனால் இவை அனைத்தும் நடப்பது நான் பிறந்து வளர்ந்த ஸ்ரீலங்கா என அழைக்கப்படும் ஒரு அழகிய நாட்டில்தான். இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்டு பின்னர் ஆசியாவின் அதிசயமாக மாறிய ஒரு நாட்டில் இப்படியான பல விடயங்கள் நடப்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். அது முரணிலைகள் உள்ள ஒரு நாடு. நடிகரும் அரசியல்வாதியுமான காமினி பொன்சேகா அடிக்டி கூறும் விளக்கமான “மூன்றாம் தர அரசியல்” என்பதுதான் ஸ்ரீலங்காவிற்கு மரணத்தையும் மற்றும் அழிவையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

 

பகுத்தறிவற்ற அரசியல்

 

இனப் பிளவின் இரு பக்கத்திலுமுள்ள அரசியல்வாதிகள் நேரத்துக்கு நேரம் பகுத்தறிவற்ற அரசியலைப் பின்தொடர்வது மூலமாக வாக்காளர்களின் மூல உணர்வுகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். இந்த அரசியல் சக்திகள் தொடர்ந்து தழைத்தோங்கி வளர்கின்றன, ஏனென்றால் அனத்து வகையான ஸ்ரீலங்கா மக்களும் காலத்துக்கு காலம் தெளிவுபடுத்தி வருவது, தேர்தல்களில் உணர்ச்சிபூர்வமான வெற்றுக் கோஷங்கள் மற்றும் மலிவான அரசியல் வித்தைகள் ஊடாக அவர்களுக்கு எளிதில் ஆவேசமூட்டிவிடலாம் என்று. இதன்படி அது ஒரு பரஸ்பர சார்புள்ள ஒரு தீய வட்டம் அங்கு அவர்களுக்கு தகுதியான தலைவர்களைப் பெறுவதற்காக மக்கள் தொடர்ந்து செயற்படுகிறார்கள்.

 

மொத்தக் குழப்பங்கள் மற்றும் முழுத் துன்பங்களுக்குள் ஸ்ரீலங்கா அமிழ்ந்து விடாமல் அதைத் தடுப்பது அதன் தலைவர்களில் சிலர் மற்றும் மக்கள் ஆகியோர் முழுச் சேதமும் ஏற்பட்டு விடாதபடிக்கு சில நேரங்களில் சரியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் மற்றும் சிலவற்றை தவிர்த்தும் விடும் திறனைக் கொண்டிருப்பதுதான். இன்னும் அதிகமாகச் சொன்னால் இந்த சரியான நடவடிக்கைகள்  ஜனநாயக முறைகளின்படி இயற்றப்பட்டவை. ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் குறைவாக இருக்கலாம் ஆனால் இருப்பினும் அடிப்படையில் அது ஜனநாயக நாடாக மீந்திருப்பதையிட்டு நாடு பெருமையடைய முடியும். ஒரு தொகுதி வீணர்கள் மற்றொரு தொகுதியினரால் மாற்றீடு செய்யப் படுகிறார்கள் ஆனால் இவையனைத்தும் நடைபெறுவது ஜனநாயகத் தேர்தல் மூலமாகத்தான். வாக்களிப்பதன் ஊடாக சர்வாதிகாரப் போக்குகள் தடுக்கப் படுகின்றன. தீவின் அரசியல் அடிவாரத்தை இருண்ட மேகங்கள் மூடும்போது, இவைதான் நம்பிக்கை ஏற்படுத்தும் வெள்ளி ஒளிக் கீற்றுகளாக ஒளி கொடுக்கின்றன.

 

அத்தகைய ஒரு வெள்ளி ஒளிக் கீற்றுத்தான் கடந்தவாரம் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழில் பாடி நமது கண்களுக்கு காட்சி தந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கா ஆகியோரின் தலைமையின் கீழான புதிய பகிர்ந்தளிப்பு, முந்தைய ராஜபக்ஸ ஆட்சியின் கீழ் இழைக்கப்பட்ட சில தவறுகளை திருத்துவதற்கு துணிவுடன் முயற்சிக்கிறது. 68வது சுதந்திரதின நினைவுக் கொண்டாட்டங்கள் உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்ததுடன் மற்றும் நம்பிக்கைக்கான முன்னறிவிப்பாகவும் உள்ளது. அது விளக்குவது மைத்திரி, ரணில், சந்திரிகா ஆகியோரின் முக்கூட்டணி இன நீதி, இன ஒற்றுமை, மற்றும் தேசிய நல்லிணக்கம் என்ற சாலையில் மெதுவாக ஆனால் நிதானமாக முன்னேறிச் செல்கிறது என்பதை. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திர தினத்தன்று நடைபெற்ற நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழில் பாடியது, தமிழ் பேசும் மக்களுக்கு, அவர்களும் மற்றும் அவர்களின் மொழியும்  பரிணாமம் அடைந்து வரும் ஸ்ரீலங்காவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்கிற வலுவான ஒரு அடையாளச் செய்தியைத் தெரிவிக்கிறது. இது ஐக்கியமான பிளவுபடாத ஸ்ரீலங்காவில் சமத்துவத்துடன் வாழ விரும்பும் அனைத்து தமிழர்களையும் மிக, மிக, மிக மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்