புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)
புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)
( ஆர். ராம்)தமிழ் மொழியில் ஒற்றை ஆட்சி எனக் கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு இடத்திலே குவிக்கப்பட்டிருப்பவை அதாவது ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) என்ற சொற்பிரயோகத்திற்கு ஒவ்வான சொல்லாகவே காணப்படுகின்றது.ஏக்கிய ரஜய என்பதன் அர்த்தத்தின் பிரகாரம் அதனை பயன்படுத்துவதில் எமக்கு எதிர்ப்பிருக்கமுடியாது. ஆனால் தமிழில் ஒற்றையாட்சி எனவும்இ ஆங்கிலத்தில் யுனிற்றரி (unitary) எனவும் பயன்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடு.இருப்பினும் ஏக்கிய ரஜய என்பதன் உண்மையான அர்த்தத்திற்கு அப்பால் 1972ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரைக்கும் ரnவையசல ளவயவந என்பதற்கு இணையாக அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதன் காரணத்தால் அச்சொற்பதத்தின் வரைவிலக்கணமும் அதற்கருகிலேயே சொல்லப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
அதாவது ஏகிய ரஜய என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதால் அதன் அர்த்தம் ஒரு பிரிக்க முடியாத நாட்டை குறிப்பதாக இருக்கும் என்பது உறுப்புரையில் கூறப்பட வேண்டும். ஆட்சி முறை பற்றி கூறுவதாக அச்சொற்பதம் இருக்கக்கூடாது. ஆட்சிமுறை என்பது ஒற்றையாட்சி என வரக்கூடாது என்பதே என்பதே எமது நிலைப்பாடு.ஆனால் சொற்பிரயோகத்தால் மட்டும் அதனை அடைந்துவிடமுடியாது. ஓஸ்ரியா நாட்டின் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என கூறப்பட்டிருந்தாலும் அங்கு சமஷ்டி ஆட்சியே நடைபெறுகின்றது. ஸ்பெயினில் ஒற்றையாட்சி என எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் சமஷ்டி ஆட்சிமுறையே நடைபெறுகின்றது.ஆகவே வெறுமனே பெயர்ப் பலகையைப்போட்டுவிட்டு திருப்தி அடைய முடியாது. உள்ளடக்கம் சரியாக அமையவேண்டும். அதற்காக உபயோகிக்கப்படும் சொற்பிரயோகங்களில் நாம் கவனம் செலுத்தாமலில்லை. விசேடமாக உள்ளடக்கப்படும் சொற்பிரயோகங்கள் குறித்து நீதிமன்றங்கள் பொருள்கோடல் செய்யும்போது ஒற்றையாட்சி முறை என நியாயாதிக்கம் செய்யாத வகையிலேயே அமையவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றோம்.
கேள்வி:- சமஷ்டி தீர்வை முன்வைத்து ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சொற்பதத்தை புதிய அரசியலமைப்பில் நேரடியாக பயன்படுத்துமாறு அழுத்தமளிக்கின்றதா?
பதில்:- சமஷ்டி என்ற சொற்பதத்தை பிரயோகிக்க வேண்டும் என்று நாங்கள் அழுத்தமளிக்கவில்லை. நாம் தற்போது எடுத்துக்கொண்டது திடீர் நிலைப்பாடு அல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே நான் பகிரங்கமாக கூறியிருந்திருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் கஜேந்திரகுமாருடன் நடைபெற்ற விவாதமொன்றிலும் பெயர்ப்பலகைகளால் மட்டும் நம்பிக்கை வைக்கவில்லை. உள்ளடக்கம் சரியாக இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றேன்.
சமஷ்டி என்பதில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. ஓரு விடயம் சம்பந்தமாக மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அந்த விடயம் சம்பந்தமாக மத்தி அதற்கு பின்னர் தலையிடக்கூடாது. அவ்வாறு கொடுக்கப்பட்ட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்தி தானாகவே திரும்பி பெற்றுக்கொள்ளாதவாறு இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களும் காணப்படுமாயின் அது சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறையே. இந்த இரண்டு முக்கிய அம்சங்களும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுவதுதான் எமது பிரதான நோக்கமாகவுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப் பலகையை மட்டும் எழுதி ஒட்டப்படவேண் டும் என்பது நோக்கமல்ல.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பயணத்தில் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா?
பதில்:- இந்தப் பயணத்தில் சாத்தியமாகும். ஆனால் உடனடியாக சாத்தியமாகாது. இந்த வருடத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாகவிருந்தால் உடனடியாக வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகாது. அதற்கான சாத்தியக் கூறுகளும் அரிதாகவே உள்ளது என்பது தான் உண்மையான எனது பதிலாகும்.
அதற்கு காரணம் முஸ்லிம்களின் நிலைப்பாடு அதற்கு எதிராக இருக்கின்றது. முஸ்லிம் மக்கள் எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் நாம் சரியாக அணுகவேண்டும். அவ்வாறு சரியாக அணுகும் பட்சத்திலேயே தான் சிறிது காலம் தள்ளியேனும் வடக்குஇ கிழக்கு இணைப்பு சாத்தியமாகும்.
ஆகவே நாம் முஸ்லிம்களின் கருத்தை நிராகரித்து வடக்குஇ கிழக்கு இணைக்கப்படவேண்டும் என முரண்டு பிடிப்போமாகவிருந்தால் தமிழ்இ முஸ்லிம் உறவு மேலும் விரிசலடைந்து விடும்.
போர்க்கால சூழலில் தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்பட்டமையால் தான் தற்போது வடக்குஇ கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமாகாதுள்ளது. ஆகையினால் யாரையும் குறை கூறிக்கொண்டிருக்காது அடுத்து எவ்வாறு நகரமுடியும் என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
வடக்குஇ கிழக்கு இணைப்பு குறித்து முஸ்லிம் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். அவர்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதுஇ இணைப்புக்கு எதிரானது அல்ல. ஆனால் முஸ்லிம் மக்களுக்கு காணப்படும் பலவிதமான பயங்கள்இ சந்தேகங்களின் அடிப்படையில் உடனடியாக இணங்க மறுக்கின்றார்கள்.
ஆகவே குறைந்த காலத்தினுள் வடக்கு, கிழக்கு இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வைத்துக்கொண்டு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்இ முஸ்லிம் உறவு பாதிக்கப்படாத நிலையிருந்த 1987ஆம் ஆண்டில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது கூட ஒரு வருடத்தினுள் கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் அங்கீகாரம் இல்லாது அதனை சாத்தியப்படுத்த முடியாது.
தமிழ்இ முஸ்லிம் உறவை சீர்செய்யும் நோக்கில் தான் கிழக்கு மாகாண சபையில் எமக்கு பதினொரு உறுப்பினர்கள் இருந்தபோதும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டாட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றோம். இவை எல்லாம் இழந்து விட்ட நம்பிக்கையை மீளப்பெறுவதற்கான சில வழிமுறைகள். ஆகவே இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதும் வடக்குஇ கிழக்கு உடனடியாக வந்துவிடும் என்று பொய்கூறுவதற்கு நான் விரும்பவில்லை.
கேள்வி:- வடக்குஇ கிழக்கு இணைந்திருக்கின்ற பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கரையோர நிர்வாக அலகொன்று உருவாக்கப்பட்டு வழங்கப்படவேண்டும் என்பதை தந்தை செல்வா உட்பட அனைத்து தமிழ்த் தலைவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த நிலைப்பாட்டிலிந்து நீங்கள் விலகி நிற்கின்றீர்களா?
பதில்:- நாங்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகளும் மாறவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் உடன்பாடுகள் எட்டப்பட்டன. அந்த உடன்பாடுகளை நாம் தற்போதும் ஏற்றுக்கொள்கின்றதாக காணப்படுகின்றது.
இருப்பினும் சிலர் தற்போது இணைப்பு இல்லாத நிலையில் அதனைப் பற்றி ஏன் பேசவேண்டும் எனக் கருதுகின்றார்கள். எவ்வாறாயினும் வடக்குஇ கிழக்கு இணைக்கப்படுகின்றபோது தனியான முஸ்லிம் அலகு வழங்கப்படுவதை எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான இணக்கம் தெரிவிப்போம். இருப்பினும் அதற்கான உடனடிச் சூழல் இல்லை.
கேள்வி:- தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக திம்பு முதல் ஒஸ்லோ வரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்று காணப்பட்டது. தற்போது உள்ளகஇ சர்வதேச அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்கும்இ கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடிப்பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியமா? தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?
பதில்:- தற்போது அனைத்துக் கட்சியினரும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளை வழிநடத்தல் குழுவில் நடத்துகின்றோம். இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் பகிரங்கமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சில சமயங்களில் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களுடன் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். அவ்வாறான பேச்சுக்கள் தான் இடம்பெறுகின்றன. அதனைவிடுத்து அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான நேரடியான பேச்சொன்று ஆரம்பிக்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் மூன்றாவது தரப்பு இருக்கின்றது என்ற தேவை இல்லாத நிலையில் தான் இருக்கின்றோம். ஏனென்றால் நேரடியாகவே நாம் ஒருவரோடு ஒருவர் பகிரங்கமாக பேசக்கூடிய சூழல் இருக்கின்றது.
சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களுக்கு எவ்வாறான விடயங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது நன்கு தெரிந்தவிடயம். அதேநேரம் நாம் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். அவர்கள் அரசாங் கத்துடனும் பேசுகின்றனர்.
ஆகவே வெளிநாட்டுத்தலையீடு அர
சாங்கஇ கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் இருக்கின்றது என்று சிங்கள மக்களுக்கு பயம் காட்ட வேண்டிய தேவை தற்போதைக்கு
இல்லை. எங்களுக்குள்ளே பேசித் தீர்க்க கூடிய நிலைமை இருக்கின்றது என்பது தான் சிறப்பு. ஆனால் சர்வதேசத்தின் முழுமையான ஈடுபாடும் இப்பணிகளில் இருக்கின்றது.
(முற்றும்) virakesari'lk 09 01 2017