சமரசமும் இந்தியாவின் பங்களிப்பும்

thinakural.lk 21 12 2013

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலைமை பற்றி நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இதனை 2009 இல் ஏற்பட்டிருந்த அதி சிறந்த நிலைமையுடன் ஒத்துப்பார்க்கின்றேன். அப்போது எமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியில் எமக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிரான முக்கிய தடைக்கல்லாக இந்தியா அமைந்திருந்தது. இந்த தூரநோக்கை உலக நாடுகள் முழுவதுமே ஆதரித்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு அமையவில்லை. இது ஒரு மிகவும் விரும்பத்தக்க உலகமுமல்ல , நாடுகள் இயற்கையாகவே தமது பற்றுறுதிகளை மாற்றாத நாடுகளும் அல்ல. அதிர்ஷ்டவசமாக அந்தக் கட்டிடத்தில் இந்தியாவின் பற்றுறுதி எம்முடையதுடன் முழுமையாக ஒத்துப் போவதாக இருந்ததுடன், வெளிநாட்டு நிதி மூலம் எமது இரு நாடுகளிலும் பயங்கரவாதம் பல உயிர்களைக் காவு கொண்டிருந்தது. நாம் இரு நாடுகளுக்கும் மிக உயர்ந்த நற்பண்பினை நன்நோக்கங்களோடு பயங்கரவாதத்துக்கு எதிகாரப் போராடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் எமது நாடுகளிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற நாம் பகிர்ந்து கொண்ட நோக்கும் மற்றுமொரு பொறுப்புடன் சேர்ந்து சென்று கொண்டிருந்தது. அதுதான் இலங்கையில் பல் இனத் தோற்றங்களை ஏற்படுத்துவதை ஊக்கப்படுத்துவதாகும். இது மற்றுமொரு குண தர்ம நோக்கம் ஆகும். ஆனால் அதற்கு ஒரு செய்முறைப் பக்கமும் இருந்தது. அதாவது சகல தமிழ் மக்களையும் இலங்கையின் அரசியல் நீரோட்டத்தில் ஈடுபடுத்தி இனிமேல் பயங்கரவாதத்தில் அவர்கள் குதிப்பதை குறைப்பதாகும். கவலைக்கிடமாக இலங்கை சமரசப்படிமுறையை அது தேவைப்படுத்தும் பொறுப்புடன் பின்பற்றத் தவறிவிட்டது. இதன் அவசரத்தை நாம் இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவற்றை முறியடிக்க முயல வேண்டும். இந்தப் படிமுறையின் போது இந்தியா குறிப்பிடத்தக்க பாத்திரத்தை ஏற்று அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

முதலாவது காரணம் குழம்பிய சிந்தை அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் எடுப்பவர்கள் இந்த இடத்தில் ஒரேயொரு தீர்மானம் எடுத்தவரான பொருளாதார அமைச்சர். அவர் முரண்பாட்டால் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்தவர்களை கட்புலன் அபிவிருத்திகளின் மூலம் அப்பகுதி மக்கள் இந்தக் கட்புலன் அபிவிருத்திகளில் சேர்ந்துகொண்டால் அதனால் சமரசத்தை ஊக்குவிப்பர் என்று அவர் சிந்தித்தார். ஆனால் அவரின் சிந்தனை தவறானது , சில துறையினருக்கு நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களை முன்னெடுக்கப்படும் போது திட்டமிடும் கட்டத்தில் நன்மை பெறவுள்ளோருடனும் உயர் தொழிலாளர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஆனால் , சமாதானமாக இதனையும் கூற வேண்டும். கிழக்கில் இந்த வியூகம் மிகக் கூடிய வரையில் வெற்றியளித்துள்ளது. இலங்கையில் சிந்தனை கொள்கலன்கள் இல்லா கொள்கை , திட்ட அமுலாக்கல் அமைச்சை இல்லாதொழித்தமை இவற்றுடன் சேர்த்து மனித உரிமைகள் அமைச்சும் இல்லாதொழிக்கப்பட்டமையும் வெறும் சக்தியால் நிரப்பப்பட முடியாத ஒரு வெறுமையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தவறு இந்தியா எப்போதும் மற்றைய நாடுகளுடனான தொடர்புகளை குறிப்பாக வெளிநாட்டு உதவித் திட்டங்களை அரசாங்கத்துக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்புகளை வைத்திருக்க முயன்று வந்துள்ள போதும் இது ஒரு தவறாகும். அது சிந்தனையாளர்களுடன் வலுவாகக் கலந்து கொண்டிருக்க வேண்டும். அது கொள்கைக் கல்வி நிறுவனத்துடன் மிகச் சிறந்த தொடர்புகளை வைத்துள்ளது என நான் நம்புகின்றேன். இந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு முறையான பொருளாதாரக் கொள்கையை வகுப்பதற்கு தன்னால் ஆன முயற்சிகளைச் செய்துள்ளது. ஆனால் அந்த முயற்சியில் அது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் வெற்றியடைந்தது. ஆனால் அது உத்தியோகபூர்வமற்ற முறையிலாவது அரசியல் சிந்தனையாளர்களுடன் கலந்து கொண்டு மனித வள வியூகம் ஒன்றை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கலாம். அதில் கலந்துரையாடல் வழிமுறைகளையும் உள்ளடக்கியிருக்கலாம்.

இங்கே தான் இந்து லங்கா பவுண்டேஷன் போன்ற நிறுவனங்கள் மேலும் கூடிய பங்களிப்பைச் செய்யலாம். ஆனால் , அது நவீன மயப்படுத்தப்பட்டு விளங்கக் கூடிய நிகழ்ச்சிநிரலுடன் செயற்பட வேண்டும். அரசாங்கத்தால் இதனைச் செய்ய முடியாவிட்டால் இந்திய உயர் ஆணையகம் தனது சொந்த சிந்தனைத் தாங்கியை உருவாக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் சமரசம்பற்றி பல தூதரகங்கள் பல வியூகங்களை சிபார்சு செய்திருந்த நிலையில் , நான் அதனை முன்மொழிந்திருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசாங்கங்களுடன் அல்லது தனிப்பட்டவர்களுடன் இரகசியமாகச் செயற்பட வேண்டும் என்ற பிற்போக்கான இந்தியத் தூதரக இராஜதந்திர விரும்பியிருக்கப்படக் கூடியதான ஒழுங்கான தலையீடுகளைத் தடுத்து விட்டன.

சமரசப் படிமுறையின் தோல்விக்கான மற்றைய காரணம் தன்னம்பிக்கை இன்மை ஆகும். ஸ்ரீ லங்கா ஜனாதிபதிக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இணை அறிக்கையில் எடுப்பதாக வாக்குறுதி செய்யப்பட்ட நடவடிக்கைகளை விரைவாக இலங்கை செயற்படுத்தியிருக்க வேண்டும் என நான் நம்பினாலும் அரம்பத்திலிருந்தே நியாயமற்ற துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படும் தன்மை காணப்பட்டது. உயர் தொழில் ஆற்றுப் பக்குவமும் சர்வதேசத்தின் சிந்தனை பற்றிய உணர்வும் இன்றி அவதிப்பட , சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய குரு நிறுவனங்களான வெளியுறவு அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஆகியவற்றில் முழுமையான மறுப்புகள் காணப்பட்டன. ஆனால் நாங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அல்லாத , ஆனால் உயர் தொழில் தன்மையை அனுசரித்த நிறுவனங்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டிருக்க வேண்டும்.

ஏ.ஜி.யின் கண்டிப்பு

சிவிலியன்களின் இறப்பு எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகளைக் கூறிய என்னை முன்னாள் அட்டோர்னி ஜெனரல் கடிந்து கொண்டபோது என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் . இது நடந்தது 2009 நடுப்பகுதியில் நடைபெற்ற செவ்வி ஒன்றின் போதாகும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்னுடன் கோபமாக உள்ளார் என்றும் நான் ஏன் அப்படிக் கூறினேன் என அவர் தன்னிடம் கேட்டார் என்றும் அவர் கூறினார். எனது பதில் அது உண்மையானது என்பதாகும். அவர்ஆச்சரியமுற்றார். அதனை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரின் பதிலானது குறிப்பிடத்தக்கது. நான் கூறியதைச் சாட்டாக வைத்துக் கொண்ட மற்றையவர்கள் செயற்படுவர் என்று அவர் கூறினார். அப்போதே நான் உணர்ந்து கொண்டேன். மிக உன்னதமாக வழக்கறிஞர் பதவியிலுள்ளவர் கூட மூடி மறைத்தலை பாதுகாப்பு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்பதை போரின்போது நடைபெற்ற சில குற்றங்களை எம்மால் சமாளிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுவென நான் எண்ணுகின்றேன். அந்தப் போரை நாம் பிற்கால யுத்தங்களிலும் பார்க்க கண்ணியமான முறையில் நடத்தியிருக்கிறோம். அதிகாரத்திலுள்ளவர்கள் இப்போது புரிவது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. நாம் இப்போது இயங்கினால் எம்மை மேலும் தள்ளுவார்கள் எனச்சிலர் நம்புவதாக தெரிகிறது.

அது பிழை என நான் சிந்திக்கையில் எமது மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை குறிப்பாக கற்றுக் கொண்ட பாடங்களினதும் சமரச ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்கவும் வேண்டியுள்ள நிலையில் , ஏன் இந்த மூடு மந்திரம் என என்னால் உணர முடிகிறது. அந்த கற்றுக் கொண்ட பாடங்கள் அறிக்கைக்கு ஐக்கிய மாநிலங்கள் அளித்தபதிலும் அறிக்கையில் சம்பந்தப்பட்ட பலரும் காட்டிய ஆர்வமும் மேலும் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அவர்களது முனைப்பைக் காட்டியது. இந்த விடயத்தில் இந்தியா குறிப்பிட்ட ஒரு பாத்திரமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். ஆனால் அது இப்போது சாத்தியம் இல்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது மாத்திரமே தேவைப்படுவது என்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்பியிருந்தாலும் மேலதிக கோரிக்கைகளை கொண்டு வருவதற்கு எதிரான ஆதரவு வலுத்திருக்கும். அத்தகைய ஒரு புரிந்துணர்வு 2012 முற்பகுதியில் ஏற்பட்டிருக்குமாயின் ஜெனீவாவில் மார்ச்சில் ஏற்பட்ட மரணப்பொறி ஏற்பட்டிருக்காது என நான் நினைக்கின்றேன்.

அந்த மரணப் பொறி ஏற்பட்டதற்கான காரணம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபார்சுகள் பிரசுரமாகி அதன் பின்னர் கணிசமாக அமுல்படுத்தாததேயாகும். அந்த தவறு மன்னிக்கமுடியா ஒன்று ஆகும். இதனைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியில் நாம் முன்னோக்கியிருக்கும் மூன்றாவது பிரச்சினை , அதாவது ஜனாதிபதியை சுற்றியிருந்தவர்களில் பலர் அவரின் பற்றுறுதிகளில் நாட்டம் காட்டவில்லை. நாட்டின் நன்மையில் அவர்கள் எவ்வாறு நாட்டம் காட்டுவர்? அவர்கள் தத்தமது பேராசைகளை தொடர்ந்தனர். இவை செல்வாக்குகாரர்களுடன் தொடர்புபட்ட பழைய ரோமானிய வாடிக்கைகாரரைப் போல் அதனைச் செய்கின்றனர். அதனால் ஜனாதிபதியின் விருப்பங்கள் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படுகின்றன. இதனால் நடவடிக்கைத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டவர்கள் அதனைத் தயாரிக்கவில்லை. இதேபோல் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் இடைக்காலச் சிபார்சுகள் கூட அமுல்படுத்தப்படவில்லை. ஆனால் சில வேலைகள் நடந்தன. அவற்றை அறிக்கையில் வேண்டும் எனப் பொறுப்பாயிருந்தவர்கள் கருதவில்லை. இவை அவற்றை வைத்துக் கொண்டு மேலும் பரவலாக பரப்புரைப்படுத்தி முன்னேற்ற வழிகளும் எது சிறந்தது என்பதைத் தீர்மானித்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் தமது பரிபூரண அதிகாரத்தைப் பாதுகாக்கப் பார்த்தனர்.

இங்கே தான் இந்தியா மேலும் ஒழுங்காக ஜனாதிபதியின் செயலாளருடன் தொடர்புகொண்டிருந்திருக்கவேண்டும் . ஏனெனில் , அவரின் கீழ் தான் இந்த கடமைகள் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. அவர் சமீப காலங்களில் செயல் திறனுடன் அப்போது இருக்கவில்லை. ஆயினும் அவருக்குச் சொந்தமான நிகழ்ச்சி நிரலும் (போராட்டக் காலத்தில் இந்தியாவுடன் சேர்ந்து நடவடிக்கைகளை எடுத்த அணியில் ஒரு அங்கமாக அவர் இருந்தார்) அவரை அவரின் மேற்பார்வையிலிருந்த பகுதிகளில் அவருக்கு ஆதரவு அளிக்கப்பட்டிருந்தால் அது காரிய சாத்தியமாயிருந்திருக்கக் கூடும். இதனை இப்போதாவது ஜனாதிபதி விசேட காரியப்படைகளின் மூலமாக கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தும் வேலையை பாரமளிக்கலாம். செயலாளர் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம் அவை ஒரு மாவட்ட அமைச்சர் மூலம் உறுதிப்படுத்த முடியும். இதனால் அதன் உத்தியோகத்தர்கள் இப்போது அதிகாரம் இன்றி அல்லாடுவதை தடுக்கலாம்.

எஸ்.எப். பூதம் திகிலூட்டுகிறது

இது உபயோகமாயிருக்கையில் அரசாங்கத்தின் தோல்விக்கான நான்காவது காரணம் சரியாக முறியடிக்கப்படாவிடின் இப்போது கூட தாங்க முடியாத வலுவாக அமையலாம். இதை நான் சரத் குணசேகர பூதம் என விபரிக்க விரும்புகின்றேன். 2009 இல் அரசாங்கம் தனது உறுதியான வாக்குகளுக்குக் கூட மற்றவர்களுடன் போராடியே பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டதைத் காண்டவுடன் , அது ஊழலுடன் தனது பிணைப்பை நீத்திக் கொண்டது. குற்றவாளிகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. பொன்சேகா \"பொய்யன்\' என்ற குற்றத்துக்குப் பதிலான \"துரோகி\' என்ற குற்றச்சாட்டு ஒழிப்பதற்கு ஏதோ உள்ளதைக் காட்டியது. அதனிலும் மோசமாக அது அரசாங்கம் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை சிரமம் ஆக்கியுள்ளது. ஏனெனில் அது \"தேசத்துரோக\' குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கும். துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக பின்பற்றுவதாகத் தெரிகிறது. இது வலைப்பின்னலில் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவுக்கு எதிரான நிகழ்ச்சி உருவத்தில் கொண்டு வந்துள்ளது. இது ஜனாதிபதியின் அதிகாரம் எவ்வாறு பதவியிறக்கம் செய்யப்படக் கூடும் என்பதில் அதிர்ச்சியூட்டும் உதாரணம் ஆகும்.

இது இந்த நாட்டை எவ்வாறு அழிக்கலாம் என்பதைக் காட்டும் ஒரு அணுகுமுறையாகும். இது போரின் போது சிறப்பாக கடமையாற்றிய இராணுவ அதிகாரிகளை அழிக்கும் ஒரு அணுகுமுறை அதுவாகும். அந்த அதிகாரிகள் போரின் பின்னர் எத்தகைய மனிதாபிமான ரீதியில் கடமை புரிந்துள்ளனர். அவர்கள் இடம்பெயர்ந்தவர்களை அகதி முகாம்களில் நீண்ட காலத்திற்கு வைத்திருந்து அவர்களை பராமரித்துள்ளனர். எமது அதிகாரிகளினுள் மிகச் சிறந்த ஒருவருக்கு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அவுஸ்திரேலியாவினால். அந்த நாடு சிநேகித நாடாக எமது அரசாங்கத்தால் கருதப்படுகிறது. இது நாங்கள் உண்மைக்கு எவ்வாறு நடந்து கொள்கின்றோம் எனக் காட்டுகிறது. ஆனால் , அதேநேரம் இந்த உண்மைகள் எத்தகைய வகைகளில் மோசமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய அரசாங்கம் 2009 இல் அறிந்திருந்தவாறு இது எத்தகைய நியாயமற்றதாக இருந்தது? வேடிக்கை என்னவென்றால் அப்போது போர்க்குற்றங்கள் பற்றி ஆட்சேபித்த பல நாடுகள் அரசாங்கம் மாறுவதைக் கண்டபோது இதற்கெல்லாம் பொறுப்பாக விரும்புபவர் டொலர்களை தமது பாக்கெட்டுகளில் திணித்துக் கொண்டிருந்தாலும் அவரை \"வீரர்\' எனக் கொண்டாடின.

இந்தியா நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவலாம்

இந்தியா , இலங்கை இராணுவத்துக்கு அதனது நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு உதவ முடியும். ஆனால் அது அதன் இராணுவ விதிகளின் படி அமைய வேண்டும். அது இலங்கை இராணுவத்துக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது கடினம் ஆகியுள்ளது.ஏனெனில் இந்திய இராணுவ வீரர்கள் இப்போது சிவிலியன் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இது என்னை ஐந்தாவதும் இறுதியானதுமான காரணத்துக்கு கொண்டு வருகிறது. இது ஆகக் கூடிய முக்கிய காரணமாக கூட அமையலாம். அது நடுத்தர தமிழ் மக்களுடன் சிறந்த தொடர்பாடல்களை வைத்திருக்கத் தவறியுள்ளது. இங்குதான் இந்தியா தனது சிறந்த பங்களிப்பை செய்திருக்க முடியும். அதன் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம். தமிழர்களிடையே பிற நாடுகளுடன் தொடர்புள்ள இலங்கை அரசியல் கட்சிகளை உப கண்டத்தில் தமது உறவுகளை வியாபிக்காது மேலைய நாடுகளுடன் தொடர்புபடுத்தியிருக்கலாம். தெற்காசியாவின் எதிர்காலம் பலமான பணக்காரரான இந்தியாவை தேடுகின்றன. அத்துடன் , சிறந்த அயலவர்களைத் தமக்கருகே கோருகின்றன. இதனை விடுத்து தற்காலிக நன்மைகளைக் கோருவது சகலருக்கும் தீமைபயக்கும்.

 எதுவித அகவையும் காணாத போது பொறுமையை போதிப்பது எனது எண்ணமல்ல. ஆனால் இலங்கைக்கு நம்பிக்கையூட்டும் ஆதரவும் அதன் இராணுவத்துக்கு போர்க்காலத்தில் ஆதரவு தரக்கூடிய செய்தியும் வந்து கொண்டிருக்கின்றன என நான் நம்புகின்றேன்.ஆனால் இது ஓரளவுக்கு குறைந்த அளவில் வலுவான தளபாடங்களுடன் ஆலோசனை வழங்குவதற்கு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படவுள்ளது. தமிழ் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக துன்பப்பட்டனர். நாங்கள் மேலதிகமாக முரண்பாட்டுக்கான விதைகளை விதைக்க விரும்பவில்லை. இவை இலங்கையிலோ இந்தியாவிலோ விதைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. இதன் கருத்து என்னவென்றால் நாம் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு எண்ணியதையும் செல்வதையும் எமது எல்லா மக்களுக்கும் உறுதி செய்வோம் என்பதே. - 

More in this category: மறுபக்கம் »