வளர்ந்து செல்லும் அனுமானங்கள் காரணமாக நம்பக தன்மையினை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது

thinakkural/lk 25 04 2014

வளர்ந்து செல்லும் அனுமானங்கள் காரணமாக நம்பக தன்மையினை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது  

மூன்த தசாப்தங்களாக நடந்த யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தனி நாட்டுக்கான பிரசாரங்களை புதுப்பிப்பதற்காக சதி செய்து வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் பொலிஸ்காரர் ஒருவரை சுட்டுக்காலில் காயம் ஏற்படுத்தியதனைத் தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று புலி உறுப்பினர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்ததனைத் தொடர்ந்து இவ்வெச்சரிக்கை வந்துள்ளது.

இவ்வாறான புரட்சி நடவடிக்கைகள் இன்றைய சூழலில் கைகூடாதவை என்று அவர்களுக்கு தெரிந்திருந்த போதிலும் உள்ளூர் மக்கள் மத்தியில் சிறிய குழுக்களாகவும் சர்வதேச ரீதியாகவும் இவ்வாறான நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் என்றும் சில முக்கிய நபர்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வந்ததாகவும் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனர். வெல்லவே முடியாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சமாதானம் இவ்வளவு விரைவில் இழக்க வேண்டி வரலாம் என்பது கவலைக்கிடமானதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் காலம் பற்றி சர்வதேச புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னர் அதுவும் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பான ஒரு வன்முறை சம்பவம் முதல் முதலாக இடம்பெற்றிருப்பது தற் சம்பவமாகவும் இருக்கலாம். இருந்தபோதிலும் பாதுகாப்பினை மையமாகக் கொண்ட ஆட்சி அணுகுமுறை கொண்ட அரசாங்கத்திற்கு அத்தகைய அணுகுமுறையை நியாயப்படுத்த இம்மாற்றங்கள் வாய்ப்பாகிவிட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப ஒரு சர்வதேச புலனாய்வுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க மறுப்புத் தெரிவித்து வருகிறது. அதேநேரத்தில் அது வெளிநாடுகளில் வசிக்கும் ஆறு தமிழர் நிறுவனங்களையும் 424 தனிப்பட்டவர்களையும் அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் எனக் காரணம் கூறி தடை செய்துள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது வட மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சிவில் சமூகக் குழுக்களும் சர்வதேச புலனாலோசனைக்கு ஆதரவாக அறிக்கைகளை விடுத்திருந்தனர். இதற்கு இலங்கை அரசாங்கம் முற்றிலும் எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருந்தது. இவ்வாறான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் காரணமாக இக்குழுக்கள் மத்தியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுகின்றன. பொறுப்புக் கூறுவது தொடர்பிலும் மனித உரிமைகள் பிரச்சினை தொடர்பிலும் அரசாங்கம் பின்பற்றும் அணுகுமுறைக்கு எதிராக சிவில் சமூகத்தை செயற்படுத்துவதோ அல்லது கிளர்ச்சி செய்வதோ நடைமுறையில் தற்போது இல்லாது ஒழிந்ததாகவே காணப்படுகிறது.

வட பகுதியிலிருந்து வரும் செய்திகளிலிருந்து அங்கே இராணுவத்தின் பங்கு முன்னரை விட அதிகரித்திருப்பதாகவும் சிவில் சமூக நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் எதுவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரியவருகின்றது. இறுதியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் முன்னர் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் பரந்தளவில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த களத்தில் முற்றாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் மக்கள் வாழ்வில் பெரும் பங்களிக்கும் வகையில் இராணுவம் அழைக்கப்பட்டிருப்பது பெரும் துயரமானதாகும். வட பகுதியில் நிலைமை மிகவும் மோசமாயிருப்பதனை நேரில் கண்டு வரலாம் என எண்ணி அங்கு போன போது, அங்கே வெளியிடங்களுக்கு என்னை அழைத்துச் செல்ல பங்காளி நிறுவனத்தைச் சேர்ந்த எவரும் தயாராக இல்லை. அது அவர்களை இராணுவத்தினரிடம் காட்டிக் கொடுப்பதாகிவிடும் என அச்சத்துடன் இருக்கின்றனர்

நிலவும் ஐயுறுவாதம்

வடக்கில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் மத்தியில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுவது பற்றியும் கடந்த வாரம் வடக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றியும் பெருமளவுக்கு சந்தேகமே நிலவுகிறது. சுடப்பட்ட மூவரையும் இராணுவம் சூழ்ந்து கொண்டதன் பின்னரே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் புலிகளின் புனருத்தாரணம் பற்றி பெருமளவு தகவல்களைப் பெற்றிருக்க முடியும். அவர்கள் என்ன நோக்கத்திற்கு செயற்படுகிறார்கள் என்பது பற்றிப் போதிய தகவல்களும் அரசாங்கத்தின் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரிய வந்திருக்கும். வழக்கமாக பாதுகாப்புத் தரப்பில் இவ்வாறான குற்றவாளிகளைப் பிடித்து தகவல் பெறுவது முன்னுரிமையாக இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ மயமாக்கலை விஸ்தரிப்பதிலேயே தனித்து தனது கவனத்தை அரசாங்கம் செலுத்துவதால் அரசாங்கம் மீதான ஐயுறுதலை நியாயப்படுத்தும் கருத்துகள் வலுப்படுத்தப்படுகின்றன. அத்துடன் அரசாங்கம் அரசியல் தீர்வினை வழங்க தவறியுள்ளமையும் இவ்வாறான ஐயங்களை நியாயப்படுத்த வாய்ப்பாக உள்ளது.

இராணுவத் தரப்பின் நடவடிக்கைகள் வழக்கமாக எப்போதும் ஒளிவு மறைவின்மை இல்லாததாக இருப்பதால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் ஐயுறவுகள் ஏற்பட்டுள்ளன. ஒரு புறத்தில் ஒளிவு மறைவின்மை இல்லாது காணப்படுவதும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதிருப்பதுமே இப்போது நடைபெறுவன யாவும் நாடகமே என்றும் அரசாங்கம் தனது அரசியல் நிலைமையினை உதாரணமாக வீழ்ந்து செல்லும் அரசியல் செல்வாக்கு போன்றவற்றை காப்பாற்றிக்கொள்ளவும் செய்கின்ற முயற்சிகளாக அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக் கூறுபவர்களால் சிந்திக்கவும் சித்திரிக்கவும் இப்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை போதிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறான ஐயங்களைத் தீர்த்து தனது உண்மை எண்ணங்களைக் காட்ட அரசாங்கத்திற்கு எஞ்சியுள்ள ஒரே வழி அரசியல் தீர்வு நோக்கி முன்னோக்கி செயற்படுவதாகும். இன முரண்பாடுகளைத் தீர்ப்பது என்பது கடினமான காரியம் என நீண்டகாலமாக அரசியல் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும் பேரம் பேசி தீர்வுகளை எட்டிய நிலைவரங்களுடன் ஒப்பிடுகையில் இராணுவத்தின் மூலம் முற்றாக ஒரு தரப்பால் வெற்றியடைந்த நிலைமைகளில் தான் நிலைவரம் ஒப்பளவில் ஸ்திரமாகியுள்ளது.

இராணுவ வெற்றியின் பின்னர் யுத்தத்தினைக் கொண்டு வந்த பிரச்சினைக்கான ஆணி வேரை கண்டறிந்து அதற்காக ஆவன செய்வதே சமாதானத்தினை திடப்படுத்துவதற்கான அத்தியாவசிய ஆக்கக் கூறாகும். மிதவாத சிந்தனையுள்ள பெரும்பாலான மக்களிடையே இவ்வாறான புரிந்துணர்வும் விவேகமும் காணப்படுகின்றன. அவர்களிடம் பிரச்சினைக்கான ஆணி வேரை கலைய இது பற்றிய புரிந்துணர்வும் நிலவுகின்றது. ஆனால் அரசியல் தலைமைத்துவங்களிடம் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசியல் மேதகைமை சார்ந்த குtச்tஞுண்ட்ச்ண டூடிடுஞு) எண்ணங்களுடன் இவ்வாறான விவேகம் இல்லாதிருப்பதே பிரதான பிரச்சினையாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தால் கணிசமான எண்ணிக்கையானவர்கள் புலிகளது வன்முனைக் கருத்தியலை ஏற்றுக் கொண்டு தமது எண்ணிங்களில் அதனை இருத்தியும் வரலாம். அவர்கள் அதனை வெளிப்படையாக ஆதரித்துப் பேசாது இருக்கலாம். அனைத்து சமூகங்களிலும் உள்ள மிதவாதிகளால் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் தீர்வு ஏற்படாதும் அதன் நிரூபண ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படாதும் போகுமேயானால் உயர்ந்தளவில் இராணுவத்தினது பிரசன்னத்தைப் பேணி வருவதற்காக நியாயப்படுத்லும் தொடர்ந்தும் இருந்து வரும்.

சோர்வினை படிப்படியாக மறையச் செய்தல்

அரசியல் ரீதியாக பக்கஞ்சாராததும் ஜனநாயக மற்றும் சமூக கலாசாரங்களை உள்ளடக்கியதுமான ஒரு ஆட்சி முறை உருவாக்கப்படாது இருப்பதே எந்தவொரு சமூகத்தையும் இன, சமய ரீதியாக தீவிரமானதாக மாற்றிவிடுவதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வேறுபட்ட இனங்களையும் சமயங்களையும் உள்ளடக்கிய மக்கள் குழுவினருக்கு இலங்கை அரசாங்கம் பாதுகாப்பளிக்க தவறியுள்ளதால் அக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயற்படாதிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் முஸ்லிம்களும் பௌத்தர்களும் இணைந்து ஒரு ஊடக மாநாட்டை நடத்திய போது தாக்குதலுக்குட்பட்டமை கவலைக்குரியதும் எதிர்மறையற்றதுமான செயலாகும். கடந்த மாதத்தில் நல்லிணக்கத்திற்கான வாய்ப்பு இலங்கையில் பெரும் எதிர்மறை விளைவுகளை சந்தித்துள்ளது. இலங்கையின் யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதி பற்றிய சர்வதேச விசாரணையை நிர்ப்பந்திக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேறிய காலத்தின் பின்னர் உள்ளூரிலும் சர்வதேச நாடுகளிலும் முரண்பாடுகள் பெருமளவுக்கு உயர்ந்துள்ளன. சர்வதேச விளைவுகள் எதுவகையிலும் கவனத்திற் கொள்ளாது உதாசீனம் செய்து விட்டு நாட்டில் கள நிலையில் அரசாங்கத்திற்கு சவாலாக ஏற்படும் எதனையும் எதிர்கொள்ள அரசாங்கத்தினால் முடியும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இருந்தபோதிலும் முரண்பாட்டிற்கு வழி வகுத்த வெறுப்பு, அச்சம், கவலை ஆகிய மனக் குறைகளை ஒரு சமூகத்திடம் அதனை மீண்டும் ஏற்படுத்துவதற்கு உண்மையான நல்லிணக்கம் ஏற்படாமை காரணமாவதுடன் அதனைத் தொடர்ந்து மீண்டும் முரண்பாட்டை தோற்றுவிப்பதற்காக அப்பிரிவினரை புண்படுத்தும் விளைவினையும் ஏற்படுத்தலாம். தனது எதிர்மறையான சொந்த நடவடிக்கைகள் காரணமாகவும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாது போவதன் காரணமாகவும் இருப்பதோடு அரசாங்கமானது மனித உரிமைகள் மீறல் தொடர்பில் கவனம் செலுத்தி பொறுப்புக் கூறாதிருப்பதன் மூலமும் தற்போது நல்லிணக்கத்திற்காக நாட்டில் நிலைமைகளை உருவாக்காது இருப்பதனாலும் சர்வதேச சமூகத்தினால் அது குற்றஞ் சாட்டப்படுவதனை மற்றவர்கள் நம்மைவிட வாய்ப்புகளுக்கு இடமளித்து வருகின்றது.

சர்வதேச ரீதியாக என்ன நடைபெறுகிறது என்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. இருந்த போதிலும் நாட்டினுள் நடைபெறுவது இலங்கை அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டிலும் உள்ள ஒரு விடயமாகும். வன்முறை சார்ந்த முரண்பாடுகள் இடம்பெறும் நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க பெரும்பாலும் இராணுவம் நன்கு ஸ்தாபிக்கப்பட்டு விழிப்பு நிலையில் வைக்கப்படுகின்றது. ஆனால் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி விட்டால் இராணுவத்திற்கான தேவை குறைந்து விடும். இலங்கை அரசாங்கம் இப்போது ஒரு பொறியினுள் சிக்கியுள்ளது. ஆட்சியில் இராணுவத்தின் பங்கு பெரிதாகும் போது அவ்வாட்சியின் மீது நம்பிக்கையீனமும் அதிகரிப்புக்குள்ளாகிறது. இது மென்மேலும் வளருகிறது. அப்போது ஆட்சியில் இராணுவத்தின் பங்கு அதிகரித்து விடுகின்றது.

அரசாங்கம் அரசியல் தீர்வை முன்வைக்கத் தவறுவதனால் அரசாங்கம் ஒரு வலிமையான இராணுவத்தைக் கட்டியெழுப்ப விரும்புகின்றது. அது அதன் மூலம் ஆணையிடும் அதிகாரத்தை பெற்றுக் கொள்கின்றது. அது சரியாகவோ அல்லது தவறானதாகவோ கூட இருக்கலாம். ஆனால் ஜனநாயக சமூகத்தினைக் கட்டியெழுப்பி இன முரண்பாட்டைத் தீர்க்க தவறுவதாகவே அரசாங்கத்தின் மீது மக்கள் குற்றஞ்சாட்டுவர். எனவே பரஸ்பரமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியல் தீர்வு நோக்கி அரசாங்கம் முன்னோக்கி செயற்படுவதன் வாயிலாகவே உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் உள்ள மிதவாத பிரிவினர் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையினை பாதுகாத்துக் கொள்ள முடியும். -