நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ரமபோசவின் வருகை உந்துசக்தி

09 07 2014

 நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ரமபோசவின் வருகை உந்துசக்தி

தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோஷ தனது உத்தி யோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார். கடந்த திங்களன்று (07.07.2014) இலங்கை வந்தடைந்த அவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதேநேரம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கொழும்பில் சந்தி த்ததன் பின்பு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து நேரில் நிலைமைகளைப் பார்வையிட்டார். வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதன் பின்னர் மேற் கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் சிறில் ரமபோஷவுக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே சிறில் ரமபோஷ தலைமையிலான உயர் மட்ட இராஜதந்திரிகள் குழு இலங் கைக்கு வருகை தந்திருந்தது. இலங்கையும் தென்னாபிரிக்காவும் மிகவும் நட்பு நாடுகள். ‘இனஒதுக்கல்’ (திparthலீiனீ) கொள்கைக்கு எதிராக நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (தினிவி) போராடியபோது இலங்கை அதற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வந்துள்ளது. நெல்சன் மண்டேலாவுடன் சேர்ந்து இன ஒதுக்கல் எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்தான் இந்த சிறில் ரமபோஷ என்பவர். இவருக்கு நீண்டகால போராட்ட அனுபவம் உண்டு. இனங்களு க்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் முதிர்ந்த அனுபவம் பெற்றவராக ரமபோஷ திகழ்கிறார்.

பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடந்த போது ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்னாபிரிக்க ஜனாதி பதியிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். “நல்லிணக்க செயற்பாடு. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தென்னாபிரி க்காவுக்கு இருக்கும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்” என தெரிவித்திருந்தார். இந்த வேண்டு கோளையடுத்து இலங்கையின் அமைச்சர்கள் மட்ட உயர் குழுவொன்றை தென்னாபிரிக்கா அழைத்திருந்தது. இதற்க மைய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையி லான உயர்மட்டக் குழு தென்னாபிரிக்கா சென்று திரும்பியது. இந்த பரஸ்பர நல்லெண்ண விஜயத்தின் வெளிப்பாடாகவே ரம போஷ தலைமையிலான இராஜதந்திரிகளின் வருகையைப் பார்க்க முடிகிறது.

இவரின் வருகையை வைத்து சில அரசியல் கட்சிகள் வெவ் வேறு முடிச்சுகள் போட்டு விமர்சனம் செய்தாலும் “இலங் கையில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்கா முழுமையாக உதவும்” என சிறில் ரம போஷ அறிவித்திருக்கிறார். உண்மையில் இலங்கையைப் பொறுத்தவரைக்கும், சவால்க ளுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்த நாடுகளின் அனுபவங்களில் இருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ளவே விரும்புகிறது. “தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு எந்தவொரு நாட்டை யும் முன்மாதிரியாகக் கொள்ளப் போவதில்லை” என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

தென்னாபிரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றைக் கொண்டுவர இருப்பதாக சில அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றன. இது தேவையற்ற சந்தேகமென்பதை அரசியற் கட்சிகள் மனதிற்கொள்ள வெண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தனது கொள்கைகளில் ஒருபோதும் விட்டுக்கொடுப்புகளு டன் செயற்படுவதேயில்லை. சிறில் ரமபோஷவின் நல்லெண்ண விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு களை மேலும் பலப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பல்லின சமூகங்கள் வாழும் நமது நாட்டில் ஒவ்வாரு சமூகத்தினதும் கலை, கலாசாரங்களை மதிக்கின்ற வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டுமென்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது. உலக நாடுகளில் பல்வேறு அனு பவங்களைப் பெற்று அவற்றை நமது நாட்டுக்கு ஏற்ப வடிவமைத்து அமுல்படுத்துவதுதான் அரசின் குறிக்கோள். எடுத்ததற்கெல்லாம் வெளிநாடுகளை நம்பியோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் மட்டத்தில் தீர்வு முயற்சியை முன் னெடுப்பதுதான் உண்மையான விமோசனப்பாதை. ஆகவே ரமபோஷவின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவும் முயற்சி உள்நாட்டு தீர்வுக்கு உந்துசக்தியாக அமையும்.

thinakaran.lk 09 07 214