வடக்கும் தெற்கும் இனவாதத்தை நிராகரித்துள்ளது

24 08 2015 உபுல் ஜோசப் பெர்ணாண்டோ

 வடக்கும் தெற்கும் இனவாதத்தை நிராகரித்துள்ளது

மைத்திரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி(யு.பி.எப்.ஏ) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கmahinda_rajapaksa2014ட்சி (எஸ்.எல்.எப்.பி) என்பனவற்றின் செயலாளர்களை கடந்த வாரம் நீக்கியபோது, மகிந்த தரப்பு மைத்திரியை தூற்றியதுடன், புதிய செயலாளர்களை அந்தப் பதவிக்கு அறிமுகப்படுத்திய மைத்திரியின் முடிவு ஒரு தமிழ் வழக்கறிஞர் மூலமாகவே நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவித்திருந்தனர். முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அந்த வழக்கறிஞரின் பெயரை வெளியிடாமல் அவர் ஒரு தமிழர் என்று மட்டுமே அடையாளப் படுத்தியிருந்தார். இதன் நோக்கம் அந்த வழக்கறிஞர் மீது புலி முத்திரை குத்தி மற்றும் இனவெறியை தூண்டுவதாகவும் இருந்தது. மகிந்தவின் முழுப் பிரச்சாரமுமே, ரணில் தேர்தலில் வெற்றி பெற்றால் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறும் என்பதை முன்னேற்றும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.

ரணில் வெற்றி பெற்றால் அவர் நாட்டை புலிகளுக்கு விற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்(ரி.என்.ஏ) நெருக்கமாக வேலை செய்வார் என்கிற செய்தியை பரப்புவதைத் தவிர, பயனுள்ள வேறு எதையும் மகிந்தவின் மேடையில் கேட்க முடியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில்கூட மகிந்த இதே பல்லவியைத்தான் பாடினார். அந்த தேர்தலில் அவரது கட்சியினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி மகிந்த வெளியிட்ட அந்த கோரிக்கையானது, மைத்திரியும் மற்றும் ரணிலும் ரி.என்.ஏ உடன் ஒரு இரகசிய உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் மற்றும் அதை பகிரங்கப் படுத்தப்பட வேண்டும் என்பதாக இருந்தது. எனினும் மக்கள் மகிந்தவின் அந்த நடவடிக்கையை நிராகரித்ததுடன் அவரைத் தோற்கடிக்கவும் செய்தார்கள்.

மகிந்தவுடன் எழுச்சி பெறுவோம் என்கிற தொனிப் பொருளில் அவரைச் சுற்றி இயங்கிய குழுவானது, மைத்திரி தேர்தலில் தமிழ் வாக்குகளால்தான் வென்றார் என நினைத்தது. அதனால் அவர்கள் நாடு முழுவதும் சென்று கடந்த ஜனவரியில் மகிந்த பௌத்த சிங்கள வாக்குகளை வென்றார் என்று பிரச்சாரம் செய்தார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் பெற்ற வாக்குகளை வேறுபடுத்தினால், தெற்கில் பௌத்த சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மகிந்த முன்னிலை வகிக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள். வடக்கு – கிழக்குக்கு வெளியே மைத்திரி பெற்ற வாக்குகள் 5,239,051 மட்டுமே மற்றும் அங்கு மகிந்த 5,444,490 வாக்குகளைப் பெற்று 205,439 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தார்கள். அப்போது அவர்கள் மகிந்ததான் சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி எனவும் அவர்கள் அறிவித்தார்கள். பதிலுக்கு தான் தோல்வி அடையவில்லை என மகிந்தவும் அறிவிப்புச் செய்தார். இந்தப் பின்னணியில் பொதுத் தோதலில் மகிந்த சுலபமாக வெற்றி பெறுவார் என அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் கணிப்பானது, ஜனாதிபதி தேர்தலைப் போல அல்லாது, பொதுத்தேர்தலில் ரி.என்.ஏ தனியாகப் போட்டியிடும், அதனால் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) தனது வெற்றியை பௌத்த சிங்கள வாக்குகளின் அடிப்படையிலேயே பெறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும் என்பதாக இருந்தது. மகிந்தவுடன் போட்டி போடும் ரணிலை ஒரு புலிகளின் அனுதாபி என முத்திரை குத்த அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். மேலும் ரணிலின் மதிப்பானது பௌத்த சிங்கள பார்வையாளர்கள் மத்தியில் எதிர்மாறாக இருந்தது, அதனால் மகிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர்கள் நினைத்தார்கள்.

அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்குச் சார்பாகக் கிடைத்த வாக்குகளிலிருந்து ரி.என்.ஏ, ஜே.வி.பி மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு கிடைத்த வாக்குகளை கழித்து, ஐதேக வின் வாக்குத் தளத்தை கணக்கிட்டுப் பார்த்து அதன்படி மகிந்தவின் வெற்றி சர்வ நிச்சயம் என முடிவு செய்தார்கள். சமூக ஊடகங்களின் வசதிகள் உயர்ந்தபட்ச இனவாதப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டன. எல்.ரீ.ரீ.ஈ திரும்பவும் எழுச்சி பெறுகிறது என்பதை அறிவிக்கும் வகையான செய்திகளையும் அவர்கள் அதில் கட்டமைத்திருந்தார்கள். இந்தியாவில் சில எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் சயனைட் வில்லைகளுடன் கைது செய்யப்பட்ட விடயம் இந்திய அதிகாரிகளைக்கூட குழப்பியிருந்தது. அந்த வில்லைகள் புலிகளின் முத்திரைச் சின்னம் என்கிற காரணத்தால் அந்தச் சம்பவத்துக்கு மகிந்த முகாம் பரவலான விளம்பரத்தை வழங்கியிருந்தது. இந்தியாவின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியையும், இந்தியாவின் பிகே நிறுவனங்கள், அரசியல்வாதிகள், மற்றும் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கி அத்தகைய ஒரு மூலோபாயத்தை திட்டமிட்டிருக்கலாம் என்பதை ஒரு சாத்தியமற்ற பணியாக கருதமுடியாது.

ராஜபக்ஸவுக்கு சார்பான ஒரு சோதிடர் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி, இந்தியாவில் நடந்த அந்த சம்பவம் தொடர்பாக கணித்துக் கூறியது, ரணில் ஆட்சிக்கு வந்தால் எல்.ரீ.ரீ.ஈ மறுமலர்ச்சி பெற்று நாட்டில் இரத்தவெள்ளம் ஓடும் என்று. இந்த திட்டங்கள் யாவும் இனவாதத்தை தூண்டி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக முன்வைக்கப்பட்ட திட்டங்களாகும். அத்தகைய உத்திகளையும் மற்றும் திட்டங்களையும் சிங்கள பௌத்த பொதுமக்கள் திங்களன்று நடந்த தேர்தல்களில் தோற்கடித்துள்ளார்கள். அதிகமாகப் பேசப்பட்ட 5.8 மில்லியன் வாக்குத் தளத்தை மகிந்த இழந்துவிட்டார் மகிந்த குருநாகல்லில் போட்டியிடுவதை தெரிவு செய்தது எதனாலென்றால், இராணுவத்தில் இணைந்துள்ள அநேகம் வீரர்களின் குடும்பங்கள் அந்த மாவட்டதில் வசிக்கிறார்கள் என்கிற காரணத்தால்தான். அதன் நோக்கம் யுத்த வெற்றியை விற்று இனவாதத்தை தூண்டலாம் என்பதுதான். முடிவில் நடந்தது, ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளையே அவரால் வெற்றி கொள்ள முடிந்ததுதான். மேலும் யு.பி.எப்.ஏ 2010 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதை விட இந்த தேர்தலில் இரண்டு ஆசனங்களை குறைவாகவே பெற்றுள்ளது. ஐதேகவின் இளைய பாராளுமன்ற உறப்பினர் அகில விராஜ் காரியவாசம் குருநாகலில் மகிந்தவின் ஆசன எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் வெற்றியீட்டியுள்ளார்.

2005ல் ரணில் தோற்கடிக்கப்பட்டது தெற்கில் மகிந்த தலைமையில் வழிநடத்தப்பட்ட தேசப்பற்று இராணுவம் மற்றும் வடக்கில் பிரபாகரனால் பரப்பப்பட்ட இனவாதத்தினாலுமே. அதற்கு முரண்பாடாக தெற்கிலுள்ள பௌத்த சிங்கள மக்கள் மகிந்தவின்; கொள்கையையும் மற்றும் வடக்கிலுள்ள தமிழர்கள் எல்.ரீ.ரீ.ஈ சார்பான கட்சிகளையும் மற்றும் கஜேந்திரகுமாரின் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தோற்கடித்துள்ளார்கள். வடபகுதி மக்களும் கூட இனவாதத்தை நிராகரித்துள்ளார்கள். அதுதான் கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்கள் வெளிப்படுத்திய செய்தி. இந்த இரண்டு பிரதேசங்களிலும் 2005ல் இடைவிடாது பிரச்சாரம் பண்ணப்பட்ட இனவாதம் 2015ல் தோற்கடிக்கப்பட்டது. அது நல்லதை நோக்கிய ஒரு அதிரடித் திருப்பம்.