21 06 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? 35

அரசல் வெளிநாடு சென்றிருந்த நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அவர்கள், போராட்டம் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அவரும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுவரை எந்த நூலிலும் அந்த அறிக்கை பதிவாகாததால் அதையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.

பொப்பிலி ராஜா சாஹிப் அறிக்கை

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா ஸாஹி பவர்கள் பின்வருமாறு ஒரு அறிக்கை வெளியிட்டி ருக்கிறார். “நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் சென்னை மாகாணத்தில் நடைபெறும் கட்டாய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி அபிப்பிராயம் கூறவேண்டு மென்று” பத்திரிகைப் பிரதிநிதிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் பிரச்சினையைச் சரியாக ஆராய்ந்து பாராமலும் நிலைமையை முற்றிலும் அறியாமலும் எனது கட்சிப் பிரமுகர்களைக் கலந்து ஆலோசி யாமலும் என் அபிப்பிராயத்தை வெளியிடக் கூடா தென உணர்ந்தேன். எனது கட்சி நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் கூட்டம் கூட்டுவதாக நினைக்கப்பட்ட தேதி பலருக்கு அசௌ கரியமாக இருந்ததினால் இம்மாதத்தில் வேறொரு தேதியில் கூட்டுவதென்று ஒத்தி வைக்கப்பட்டது. நான் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டிய விஷ யங்கள் எத்தனையோ இருந்தாலும் இந்தச் சந்தர்ப் பத்தில் இந்தி விஷயத்தில் என்னுடையவும் என் கட்சிப் பிரமுகர்களுடையவும் அபிப்பிராயங்களையும் மனப் பான்மையையும் தெரிவித்துவிடவேண்டியது அவசிய மென எண்ணி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

தேசிய ஒற்றுமைக்குப் பொது மொழி தேவையா?

ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு பொது பாஷை இருக்க வேண்டுமென்றும் ஒரே பொது பாஷை இருந்தால் தேசிய உணர்ச்சி விருத்தியடைந்து வலுப்பெறுமென்றும் சொல்லப்படுகிறது. தேசியத்தை வலுப்படுத்தும் அம்சங்களைப் பற்றிய தப்பெண்ணத்தினாலேயே இவ்வாறு கூறப்படுகிறது. இந்தியா ஒரு பெரிய கண்டம். ஐரோப்பாவிலிருந்து ருஷ்யாவை நீக்கிவிட்டால் இந்தியா ஐரோப்பாவுக்குச் சமமாக இருக்கும். ஐரோப்பாவிலே இரண்டு பாஷைகளும் இரண்டு சாதிகளும் உள்ள எத்தனையோ நாடுகள் இருக்கின்றன. உதாரணமாக பெல்ஜியத் தைச் சொல்லலாம். சுவிட்சர்லாந் திலே மூன்று பாஷைகளும் மூன்று ஜாதிகளும் இருக்கின்றன. இவ்வண்ணம் பல ஜாதிகளும் பல பாஷைகளும் இருப்பதினால் அத்தேசங்களில் தேசிய உணர்ச்சியில் லையென்றோ, தேசிய ஒற்றுமையில்லையென்றோ கூறிவிட முடியாது.

இந்தியாவிலே பல பாஷைகள் பேசப்படுகின்றன. இங்கிலீஷ் நீங்கலாக உள்ள பாஷைகள் எல்லாம் இந்தியாவில் தோன்றியவைகளே. எனினும் தமிழ் அல்லது தெலுங்கு பேசுகிற வர்கள் இந்தி அல்லது உருது பேசுகிறவர்களைவிட தேசிய உணர்ச்சியில் குறைந்தவர்கள் என எவரும் கூறமாட்டார்கள். நமது தேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதி களுக்குப் பிரயாணம் செய்யும் போது பல பாஷைகள் பேசுவோரை நாம் சந்திக்கிறோம். எனினும் அரசியல் விஷயங்களில் அவர்கள் எல்லாம் பொதுவாக ஒரே விதமான அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்கள். பல பாஷைகள் ஐக்கிய உணர்ச்சிக்கு முட்டுக்கட் டையாக இருக்கவில்லை. ஒவ்வொரு பாஷை பேசு வோரும் தேசிய அபிவிருத்திக்கு அவர்களாலான உதவி புரிந்தே வருகிறார்கள். பொதுமொழி வேண்டுமென்போர் நியாய புத்தியு டையவர்களானால் (அவர்களில் பலர் நியாய புத்தி யுடையவர்கள் என நம்புகிறேன்) என் வாதத்தை ஒப்புக்கொள்ளக் கூடும். எனினும் தமது கட்சிக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். ஒரு பொது இலட்சியம் அல்லது நோக்கத்திற்காக ஒரு பொது பாஷை வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள்.

இங்கிலீஷுக்கு வந்த இழுக்கென்ன?

பொது பாஷை என்பதற்குப் பதிலாக சௌகரிய பாஷை என நான் கூறவிரும்புகிறேன். ஆனால் நமக்கு இப்பொழுதும் இங்கிலீஷ் ஒரு சௌகரியமான பாஷையாகயிருக்கவில்லையா? வாஸ்தவத்தில் இங்கிலீஷ் ஒரு சர்வதேச பாஷை. வெளியுலகத்துடன் நமக்குத் தொடர்பற்றுப்போகாமல் இருக்கவேண்டுமானால் - மேனாட்டு கலாஞான அறிவை நாம் இழக்காது இருக்க வேண்டுமானால், இங்கிலீஷ் நமக்கு இன்றியமையாத பாஷையே. நமது அரசியல் சமூகக் கொள்கைகள் எல்லாம் ஆங்கில பாஷா ஞானத்தால் நமது நாட்டு நிலை மைக்குத் தக்கபடி உருப்படுத்தப்பட்டவைகளே. இந்த நன்மைகள் தேவையில்லையென வைத்துக் கொண்டாலும், இந்தியாவின் பல பகுதியாருக்குத் தெரி யாததாயிருந்தாலும் இந்திய பாஷை என்ற காரணத் தால் ஒரு இந்திய பாஷை பொதுமொழியாக இருக்க வேண்டுமென்று வைத்துக் கொண்டாலும் இந்தி எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய பாஷையாக இருக்குமா? தேசீயப் பொது பாஷையாக இருக்க வேண்டியது இந்தியா, உருதுவா என்ற பிரச்சினை இன்னும் முடிவு பெறவில்லை. அந்தப் பிரச்சினை இப்பொழுதும் விவா தத்திலேயே இருந்து வருகிறது. இந்தியை சமஸ்கிருத மயமாக்க வேண்டுமென்ற கிளர்ச்சி வலுப்பெற்று வருகிறது. அதுபோலவே உருதுவை பார்ஸிமயமாக்க வேண்டு மென்ற கிளர்ச்சியும் உரம்பெற்று வருகிறது. இந்த இரண்டு பாஷைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுள்ளது. இந்தப் பாஷைத் தகராறுகளின் சம்பந்தப்படாத நடுநிலையுடையவர்கள் இதை ஒப்புக்கொள்ளுவர். அவரசம் எதற்கு?

ஆகவே பொதுமொழி அவசியமென்று கூறுகிறவர்கள் அந்தப் பரிசீலனையை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பொதுபாஷை விஷயமாக நான் கூறிய பொது வான அபிப்பிராயங்கள் மிகவும் முக்கியமானவை. ஆகவே இந்தி பொது மொழியாக வேண்டுமென்று கூறுவோர் பொறுப்புணர்ச்சியுடையவர்களாயிருந்தால் அவ்வபிப்பிராயங்களை நன்கு கவனித்து பதிலளித் துத் தீரவேண்டும். மற்றும் இந்த மாகாணத்தை மட்டும் சம்பந்திக்கக் கூடிய சில விசேஷ அம்சங்களும் இருக்கின்றன. மாகாண சுயஆட்சி ஒரு வெறும் கனவாக இருந்து வந்த காலத்தில் நமது நாட்டு மொழிகளை சர்க்கார் சரியாக கவனிப்பதில்லையென நாம் புகார் செய்து கொண்டிருந்தோம். பொக்கிஷம் மட்டும் நம் அதிகாரத்திலிருந்தால் நாட்டுமொழி அபிவிருத்திக்காக நாம் எவ்வளவோ செய்துவிடுவோமென்றும் பெருமையடித்துக் கொண்டி ருந்தோம். மாகாண சுயஆட்சி வரும் போது நாட்டு மொழிகள் எல்லாம் புதுச்சுற்றுச் சார்புகளுக்குப் பொருத்தமாக விருத்தியடைந்து நமது தேசிய கலாபிவிர்த்திக்கு உதவி புரியுமென்றும் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

ஐயோ! கண்ராவியே!

ஆனால் நமது அபீஷ்டங்கள் (விருப்பங்கள்) எல்லாம் நிறைவேறக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக் கும் இக்காலத்திலே ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதன் மந்திரியார் அந்த அபீஷ்டங்களையெல் லாம் கொலைபுரியும் கண்ராவியை பார்க்க வேண்டி யதாக ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் மந்திரிகள் வெகு இலேசாக எண்ணுவது எனக்கு மிகவும் ஆச்சரிய மாக இருக்கிறது. காங்கிர°காரரை எதிர்ப்போரால் மட்டுமின்றி காங்கிர°காரர் மீது நல்லெண்ணமுடையவர்கள் கூறிய ஆட்சேபணைகளையாவது அவர்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா? சர்க்கார் உத்தரவு திருத்தப்படவில்லையா என மந்திரிகள் கேட்கக்கூடும். ஆனால் அது கட்டாய இந்தியைக் கண்டித்துக் கூறப்படும் ஆட்சேபணை களுக்குத் தக்க பதிலாகாது. கீழ் வகுப்புகளில் இந்தி பாடத்தில் தோல்வியடை வோரும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என முதன் மந்திரியார் கூறுகிறார். அப்படியானால் கட்டாயம் எதற்கு என்றுதான் பகுத்தறிவுடையோரெல்லாம் கேட்பார்கள். சர்க்கார் அறிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை மிகவும் சுலபமானது. நாட்டிலே ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையும் எதிர்ப்பையும் மனக் கொதிப்பையும் அடக்குவதற்கு அது ஒரு தற்கால சலுகையே.

இந்தி எதிர்ப்பாளர் ஆட்சேபணைகளுக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்திருக்கிறது. இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று காங்கிர° தீர்மானித்துவிட்டதினால் அதை எவரும் ஆட்சேபிக்கக் கூடாதென்று ஒரு காங்கிர° மந்திரி கூறுகிறார். நம்மவர்கள் இயல்பாகவும் ஐதீகப்படியும் பழமை விரும்பிகள் அல்லது பூர்வாசராப் பிரியர்கள். மதத்துக்கு அடுத்தபடியாக மக்கள் தம் தாய் மொழியை அருமையானதாகவும் புனிதமாகவும் மதிக்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயமறிய இதுவரை ஏதாவது முயற்சி செய்யப்பட்டதுண்டா? இது ஒரு அகில இந்தியப் பிரச்சினையாக இருப்பதி னால் சர்க்கார் கடைசியாக முடிவு செய்யுமுன் ஒரு சர்வமாகாண மகாநாடு கூட்டி சர்க்கார் ஏன் யோசனை செய்திருக்கக் கூடாது?

போலி சமாதானம்

கட்டாய இந்தி மானியத்துக்குச் சட்டசபையில் மெஜாரிட்டி மெம்பர்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பது ஒரு சரியான சமாதானமாகாது. காங்கிரஸ்காரரை ஆதரித்த வாக்காளர் 100க்கு 66.5 பேரும் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள். இது ஒரு கட்சிப் பிரச்சினையுமல்ல. அரசியல் பிரச்சினையுமல்ல. தாய்மொழி மதத்துக்கு அடுத்தபடியாக மக்களுக்குப் புனிதமானது. எனவே சட்டசபையிலும் வெளியிலுமுள்ள எதிரிகள் அபிப்பிராயத்தை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்யலாமா?

“ஹிந்து” அபிப்பிராயம்

1937 ஆகஸ்டு 18ந் தேதி கட்டாய இந்தியைப் பற்றி காங்கிரசை ஆதரித்துவரும் “ஹிந்து” பத்திரிகை பின்வருமாறு எழுதியிருக்கிறது. “இந்தி விஷயத்தில் அதிக ஆராய்ச்சி நடத்திய பண்டித ஜவஹர்லால் நேரு பள்ளிக்கூடங்களில் இந்தி போதனை செய்யும் விஷயமாக சமீபத்தில் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தில் பல முக்கியமான யோசனை கள் கூறியிருக்கிறார். இந்துஸ்தானி பேசாத மாகாணங் களில் செக்கண்டரி பள்ளிக்கூடங்களில் பேச்சுவழக்கு இந்துஸ்தானியைக் ((Basic Hindustani) கற்பிக்க வேண்டுமென, பண்டித ஜவஹர்லால் கூறுகிறார். அவர் கூறும் பேச்சு வழக்கு இந்தஸ்தானி பேச்சு வழக்கு இங்கிலீஷ் மாதிரி இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய பேச்சு வழக்கு இந்துஸ்தானி, இப்பொழுது வழக்கில் இல்லை. இனிமேல் தான் பேச்சு வழக்கு இந்துஸ்தானியை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

ஆகவே ஹிந்துஸ்தானி பேசாத மாகாணங்களில் தற்கால இலக்கிய இந்தியை (அதாவது பண்டிதர்களுக்கு மட்டும் புரியக்கூடிய இந்தியை) கட்டாய பாடமாக்குவது அநுபவ சாத்தியமானதல்லவென அவர் அபிப்பிராயப்படுவது நன்றாக விளங்குகிறது. பண்டித ஜவஹர்லால் கூறும் பேச்சு வழக்கு இந்துஸ்தானி உருவாகாதவரை இந்தியை தேசியப் பொது பாஷையாக்கும் முயற்சி சாத்தியமான தேயல்ல.” செக்கண்டரிப் பள்ளிக்கூடக் கீழ் வகுப்பு களில் பாடத் திட்டத்தை சுளுவாக்குவது தற்காலம் கல்வி நிபுணர்கள் வாடிக்கையாக இருந்து வருகிறது. சர்க்கார் பிறப்பித்திருக்கும் உத்தரவோ அந்த மாமூலுக்கு முரணானதாக இருக்கிறது. இரண்டு பாஷைகள் பேசப்படும் சிற்றூர், வடஆர்க்காடு நிலைமை மிகவும் பயங்கரமான தாக இருக்கிறது. இந்த இரண்டு ஜில்லாக்களிலும் மாணவர் கள் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் ஆகிய நான்கு பாஷைகள் படிக்க வேண்டியதாக இருக்கிறது. மற்றும் கல்வி பூர்த்தியாகுமுன் பள்ளிக்கூடம் விடும் பிள்ளைகள் வெகு சீக்கிரம் படித்த சொற் பப் படிப்பையும் மறந்துவிடுவதாகத் தெரிய வந்திருக்கிறது.

தாய் பாஷையில் கற்ற சொற்பக் கல்வியையே மறந்துவிடும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கற்ற சொற்ப இந்துஸ்தானி அல்லது இந்தியை பள்ளிக்கூடம் விட்டபிறகு மறவாதிருப்பார்களா? கட்டாய இந்தியை ஆதரிப்போர் சிலர் எதிரிகளின் முக்கியமான ஆட்சேபணைகளை அலட்சியம் செய்து விட்டு, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி காங்கிரஸ் எதிரிகள் சூழ்ச்சியென்றும், காங்கிரஸ் சர்க்கார் மீது பழிசுமத்தும் பொருட்டு கட்டாய இந்தியை எதிர்த்துக் கூச்சல்போடப் படுகிறதென்றும் கூறுகிறார்கள். அதனால் கட்டாய இந்திக்காரருக்கு நியாயபலம் இல்லையென்பதும், அதனாலேயே விவாதத்துக்குச் சம்பந்தமில்லாத பிற விஷயங்களைப் புகுத்தி நிலை மையைக் குழப்புகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்ச மாகிறது.

எதிர்ப்பது தப்பா?

மேலும் ஒரு முக்கியமான பிரச்சினையை முன் னிட்டு காங்கிர° சர்க்கார் நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிர° மந்திரிகளின் ஊழல்களை விளக்கி குற்ற வாளிகளாக்க எதிர்க்கட்சியார் முயல்வது எவ்வாறு தப்பாகுமெனவும் எனக்கு விளங்கவில்லை. எனினும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் எல்லா வகுப்பாரும், எல்லா அரசியல் கட்சியாரும், காங்கிர°காரரும் கூட சேர்ந்து உழைக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. இது எந்தக் கட்சியையோ, அரசியல் கொள்கை யையோ சேர்ந்த பிரச்சினையல்ல. இந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் காங்கிர° மந்திரி சபையை வீழ்த்த பகுத்தறிவுடைய எவரும் முயலவில்லையென்பதையும் தெளிவாகக் கூறிவிடுகிறேன். சட்டப்படியுள்ள பூராக்காலமும் காங்கிரஸ் மந்திரி கள் பதவியிலிருக்க வேண்டுமென்று சர்க்காரைக் கண்டிக்கிறவர்கள் விரும்புகிறார்கள். காங்கிர°காரர் பதவியேற்ற போது அடக்குமுறைச் சட்டங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும் என ஜனங்கள் நம்பினார்கள். கிரிமினல் திருத்தச் சட்டங்கள் புத்திசாலித்தன மாகத் திருத்தப்பட்டால் நாங்களும் ஆதரிக்கத் தயார்தான். எனவே மாகாண சுய ஆட்சி அமலில் இருக்கும் ஒரு மாகாணத்தில் சாத்வீகக் கிளர்ச்சி செய்வோர் மீது காங்கிரஸ்காரரால் வெறுக்கப் பட்ட கிரிமினல் திருத்தச் சட்டம் பிரயோகம் செய்யப்படுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

சிட்டுக்குருவிக்கு பீரங்கியா?

காங்கிரஸ் மந்திரிகள் சொல்வதுபோல இந்த இயக்கம் ஒரு சிறு கோஷ்டியார் இயக்கமென்றால், சிட்டுக்குருவி மீது பீரங்கிப் பிரயோகம் செய்வது நியாயமாகுமா? அசெம்பிளியில் பிரதம மந்திரியார் கூறிய வாதங்கள் பழுத்த அதிகாரவர்க்கத்தாருக்கு அதிகமாகக்களிப் பையளித்திருக்கலாம். ஆனால் இந்தியப் பொது ஜனங்களுக்கு அவை திருப்தியை அளிக்கவே இல்லை. சர்க்காரைக் கவிழ்க்கக் கிளர்ச்சி செய்வோரைத் தடுக்கவே கிரிமினல் திருத்தச் சட்டம் இயற்றப் பட்டது. நியாயமான சட்ட வரம்புக்குட்பட்ட பிரச்சாரத்தை அடக்க இயற்றப்படவில்லை. சில பத்திரிகைகள் நீங்கலாக இந்திய தேசியப் பத்திரிகைகள் எல்லாம் இந்தி எதிர்ப்பாளர்கள் மீது சென்னை சர்க்கார் கிரிமினல் திருத்தச் சட்டம் பிரயோகம் செய்து வருவதைக் கண்டித் திருக்கையில் சில ஆங்கிலோ-இந்தியப் பத்திரி கைகள் மட்டும் பிரதம மந்திரியாரின் தைரியத் தைப் பாராட்டி எழுதியிருக்கின்றன. கட்டாய இந்தி எதிர்ப்பாளரை அடக்க சர்க்கார் கடுமையான முறைகளைக் கையாளுவதினால் அவ்வியக்கம் அதிகம் வலுப்பெற்றுவிட்டது.

இந்த நிலைமையில் சர்க்காரையே சிலர் எதிர்க்கத் தொடங்கியது ஆச்சரியமல்ல. முதன் மந்திரியார் வீட்டு முன் உண்ணாவிரதமிருக்கவும், மறியல் செய்யவும்கூட துணிவுகொண்டுவிட்டார்கள். இந்தி எதிர்ப்பாளர் கையாண்டுவரும் முறைகளை காங்கிரஸ்காரர் வன்மையாகக் கண்டிப்பதைப் பார்த்து நான் திடுக்கிட்டுப் போனேன். சமய சந்தர்ப்பங்களைக் கவனிக்காமல் கண்ட விஷயங்களுக்கெல்லாம் இம்முறைகளை காங்கிரஸ் காரரே கையாண்டு வந்திருக்கிறார்கள். எனவே இப்பொழுது ஆட்சேபிப்பதற்கு அவர்களுக்கு நாக்கே இல்லை. எனது நண்பர் ஸர். பி.டி. ராஜன் ஒரு சந்தர்ப் பத்தில் கூறியதுபோல், மறியல் செய்தல், பட்டினி கிடத்தல், சிறை புகுதல் முதலியன அரசியல் மேல் சாதியாரான காங்கிரஸ்காரருக்கே உரியதெனவும் மற்றவர்கள் அந்த காங்கிரஸ்காரரின் “காபிரைட்” உரிமைகளைப் பறிமுதல் செய்யக்கூடாதென்றும் காங்கிரஸ்காரர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போல் இருக்கிறது.

பட்டினி எங்களுக்கு உடன்பாடல்ல

ஜஸ்டிஸ் கட்சியாராகிய நாங்கள் பட்டினி விரத மிருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். பட்டினி விரதமிருப்பது எங்கள் வாடிக்கையல்ல. சாத்வீக முறையில் மறியல் செய்வதைக்கூட நாங்கள் ஆதரிக்கவில்லை. முதன் மந்திரியாருக்கோ அவரது குடும்பத்தாருக்கோ தொந்தரவு கொடுப்பது நியாயமே அல்ல. எங்கள் கொள்கைப்படி, அந்த முறைகள் எவ்வளவு பயன் தரத்தக்கவைகளாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம். ஆகவே அந்த முறைகளை நிறுத்திவிட்டு தமது சக்திகளை வேறு வழிகளில் திருப்பி நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்து தேச மக்களுக்கு இந்தி எதிர்ப்பு நோக்கங்களைத் தெரி விக்க வேண்டுமென நான் இந்தி எதிர்ப்புத் தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாய்மொழி மீதுள்ள பேரபிமானத்தினால் வகுப்புத் துவேஷத்தையுண்டுபண்ணக் கூடிய எதுவும் செய்யக் கூடாதென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். நிலைமையைச் சமாளிக்க இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. நாம் உண்ணாவிரதிகளையும் மறியல் செய்வோர் களையும் கண்டிப்போமாக! மக்கள் இம்முறைகளைக் கையாளாதிருக்கும் முறையில் நாம் கண்டிக்க வேண்டும்.

முதன் மந்திரியார் கடமை

இந்நிலைமையைச் சமாளிக்கும் பரிகாரம் முதன் மந்திரியார் கையிலேயே இருக்கிறது. “கட்டாயம்” என்பதை விட்டுவிட வேண்டுமென நான் மிக்க அக் கறையுடன் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். அகில இந்திய விஷயங்களில் ஈடுபட்டு சர்க்கார் சலுகையை எதிர்பார்ப்போர் தாராளமாக இந்தியைக் கற்றுக் கொள்ளட்டும். முதன் மந்திரியார் கெட்ட எண்ணத்துடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயல்கிறார் எனக் கூறவில்லை. எத்தகைய நல்ல சீர்திருத்தமும் துப்பாக்கி முனை யைக் காட்டி அமலில் கொண்டு வரப்பட்டால் தீமையுடையதாகவே மதிக்கப்படும். ஆனால் “கட்டாய” பகுதியை நீக்குவது முதன் மந்திரியாரின் அந்தஸ்துக்குப் பாதகமுண்டு பண்ணக் கூடுமென்பதை நானறிவேன். எனினும் பொது நன்மையைக் கருதி சொந்த அந்தஸ்தைப் பெரிதாக மதிக்கவே கூடாது. கிரிமினல் திருத்தச் சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதினால் நமது மாகாணத்திலுள்ள பலதிறப்பட்ட கட்சிகளுக்கும் ஒற்றுமை உண்டாகக்கூடும். கனம் இராஜகோபாலாச்சாரியாரை நான் நன் கறிவேன். சரியான சமயத்தில் தைரிபமாக நடந்து கொள்ளும் குணம் அவரிடம் உண்டு. சென்னைக்கு வந்தது முதல் நான் பொதுஜன அபிப்பிராயமறிய முன்வந்திருக்கிறேன். கட்டாய இந்தியினால் தாய்மொழி அபிவிர்த் திக்குப் பங்கமேற்படுமென பொதுஜனங்களுக்கு அந்தரங்க சுத்தியான அச்சமிருந்து வருவதை எவருக்கும் மறுக்க முடியாது. இந்தியை இஷ்டபாடமாக்க ஏற்பாடு செய்வதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது.

முதன் மந்திரியாரிடமும் காங்கிர° கட்சியிட மும் உள்ள அபிமானத்தினாலும், காங்கிர° மந்திரிகளுக்கு வீண் தொந்தரவு உண்டாக்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தினாலுமே அதிகப் பேர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்கள். எனது வேண்டுகோள்

சென்னை மாகாண மக்களில் பெரும்பாலார் இந்தியை ஆதரிக்கவில்லையென மிக்க பொறுப் புணர்ச்சியுடன் நான் கூறுகிறேன். சரியான புள்ளிவிவரங்களும் ஆதாரங்களும் இல்லாதிருப்பதினால் கட்டாய இந்தி பக்தர்கள் எனது வாதங்களை சுளுவாக மறுக்கக்கூடும் என்பதையும் நானறிவேன். பொதுஜன நம்பிக்கைக்குப் பார்த்திரமான ஒரு பாரபட்சமற்ற கமிட்டி மூலம் சென்னை நகரத்தில் இரகசிய வாக்கெடுத்து கட்டாய இந்திப் பிரச்சினையை முடிவு செய்ய வேண்டுமென நான் இரு கட்சியா ரையும் கேட்டுக் கொள்கிறேன். வாக்காளர் தீர்ப்புக்கு இரு கட்சியாரும் கட்டுப்பட வேண்டும். ஒருவரது மதத்தையும், மனச்சாட்சியையும் பொறுத்த விஷயத்தில் இம்மாதிரி வாக்கெடுத்து முடிவு செய்வது சரியானால் பிர°தாப விஷயத்திலும் கட்டாய இந்தி விஷயத்திலும், அம்மாதிரி முறையைப் பின்பற்றுவதில் என்ன ஆட்சேபணை இருக்கக்கூடுமென எனக்கு விளங்கவில்லை. எல்லாக் கட்சியார் கருத்தும் பாமர மக்களின் நிலை மையை விருத்தி செய்யும் வேலையில் பூரணமாகச் செல்லும் பொருட்டு சமாதான பரமான - ஒழுங்கான தேச முன்னேற்ற முறைகளை நாம் கையாள வேண்டு மென்பதே நமது ஆசை. ஆகவே எனது விண்ணப்பம் அலட்சியம் செய்யப்பட மாட்டாதென நான் நம்புகிறேன் (குடிஅரசு, 18.9.1938). - தொடரும்  keetru.com  sep 2015

14 06 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 34

இராசாசியின் கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மாபெரும் கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றுவந்த வேளையில் பம்பரமாகச் சுழன்று செயல்பட்டுவந்த பெரியார், தமிழர், பெரும்படை சென்னையை வந்தடைவதையொட்டி அதை வரவேற்கவும், கடற்கரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சென்னை செல்வதற்குமுன் பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான பெரியாரின் அறிக்கை என்பதால் அதை முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.

நான் சிறை புகுந்தால்? ஈ.வெ.ரா. அறிக்கை

அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!! நான் இன்று சென்னைக்குச் செல்லுகிறேன். பார்ப் பன ஆட்சி அடக்குமுறையின் பயனாய் அநேகமாக 11-ந் தேதி கைது செய்யப்பட்டுவிடுவேன். (அன்றுதான் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் கூட உள்ளது க.ஆ) எனக்கு சுமார் மூன்று, நான்கு வாரங்களுக்கு முன்பே வாரண்டு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் என்னை சென்னைக்கு வெளியில் பிடித்தால் கிளர்ச்சி பலப்பட்டுவிடுமோ என சர்க்கார் யோசித்து நான் சென்னைக்கு வந்தவுடன் கைதியாக்கிவிட வேண்டு மென்று காத்திருக்கிறார்கள் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பே கேள்விப்பட்டேன். என்றாலும் கொஞ்ச நாள் வரையில் நான் சென்னைக்கு வருவேன் என்று சர்க் கார் காத்திருந்து பார்த்துவிட்டு அப்புறம் சென்னைக்கு வெளியில் வந்து என்னைக் கைதியாக்குவார்கள் என்று கருதி நானும் கொஞ்ச நாள் தயாராகக் காத்திருந்து பார்த்தேன். ஆனால் என்ன காரணத்தாலோ சர்க்கார் அந்தப்படி செய்யத் துணிவு கொள்ளவில்லை என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.

சர்க்கார் மனோபாவம்

சர்க்கார் தங்களுடைய அபிப்பிராயத்துக்கு மாறுபட்ட வர்கள் எவ்வித எதிர்ப்புக் கிளர்ச்சியும் செய்யக்கூடாது என்கின்ற கடுமையான மனோபாவத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கும் மீறி யாராவது ஏதாவது செய்தால் அதைக் கொடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டு எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்கின்ற துணிவு கொண்டுவிட்டார்கள் என்பதற்கும் போதுமான ருஜுவு சர்க்கார் இதுவரை பல பிரபலஸ்தர்கள் தலைவர்கள் உள்பட மூன்று மாத காலமாக சுமார் 300 பேர்கள் வரை கைதியாக்கி கடினமாகத் தண்டித்ததிலிருந்தும் மற்றும் சர்க்கார் மந்திரிகள் கடற்கரைக் கூட்டங்கள் வெளிப் பொதுக்கூட்டங்கள் காங்கிரஸ் மகாநாடு கூட்டங்கள் சட்டசபை மீட்டிங்குகள் முதலியவைகளில் பேசிய பேச்சுகளில் இருந்தும் நன்றாய் விளங்கிவிட்டதுடன் மேலும் இந்த முறைகளினால் அதாவது இப்போது சர்க்கார் கையாண்டுவரும் அடக்கு முறையினால் எதிர்ப்புக் கிளர்ச்சி நசுக்கப்படவில்லையானால் இன்னமும் கொடுமையான கடுமையான அடக்குமுறைகளை உண்டாக்கியாவது அழித்துத் தீருவது என்கின்ற முடிவுக்குச் சர்க்கார் வந்திருப்பதாகச் சொல் லிக் கொள்ளுவதிலிருந்தும் தெளிவாகிவிட்டது. இனியும் தெளிவாக வேண்டுமானால் சார்க்கார் உத்திரவை எதிர்ப்பவர்கள் மீது ராஜத்துரோக சதி (Treason) குற்றச்சாட்டுச் செய்து ஆயுள்காலம் அல்லது தூக்குத் தண்டனை வரை கையாட வேண்டும் என்று தோழர் சத்தியமூர்த்தியார் கனம் ஆச்சாரியாருக்குப் புத்தி கூறியதிலிருந்தும் அதற்கு ஏற்றமாதிரியான மந்திரிசபை நடவடிக்கைகளைக் காங்கிரஸ்காரர்கள் முழுமனதுடன் ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தும் பார்த்துக் கொள்ளலாம்.

எனது கடமை

எனவே இதுசமயம் என்னுடைய கடமை என்ன வெனில்,இந்தி கட்டாயக் கற்பிப்பை ஒழிக்கச் செய்வதற்கு முன்பு நான் வெகுகாலமாகவே சொல்லிக் கொண்டுவந்ததுபோலும், காங்கிரஸ் பார்ப்பன ஆட்சி என்றும் அது வருணாச்சிரம தர்மத்தை அமலுக்குக் கொண்டுவந்து நிலைநிறுத்துவதற்கு ஆகவே பாடுபடுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆட்சியில் மனிதன் வாழ்வதைவிடக் கொடும்புலி வாழும் காட்டுவாழ்வே மேல் என்றும் நான் கருதுவதைச் சரியென்று பொது ஜனங்கள் கருதுவதற்கு வேண்டிய ஆதரவுகளைக் காட்டிவிட வேண்டியது முக்கியமான காரியம் என்று கருதுகிறேன். ஆதலால் அதற்கு ஏற்ற காரியங்களைப் பார்ப்பன மந்திரிகள் ஆட்சியானது செய்யும்படி செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட மனமில்லை. அதற்கு ஆகவே எந்த விதத்திலும் சிறிதும் பலாத்காரம் இல்லாததும் நியாயமான மனப்பான்மை உள்ள உண்மையாளர்களின் மனம் சிறிதும் நோகாததுமான முறையில் வெகு ஜாக்கிரதையுடனே செய்யப்பட்டு வருகிற இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்கெடுத் துக் கொண்டிருக்கிறேன்.

எனது விண்ணப்பம்

மற்றும் எந்தவிதமான சட்டத்தையும் எந்த விதமான அடக்குமுறை உத்திரவையும் மீறாத முறையிலேயே இதுவரை கிளர்ச்சி நடந்து வரவும் என்னா லான துணை புரிந்தும் வந்திருக்கின்றேன் என்ப தோடு, நானோ மற்றும் இந்தி எதிர்ப்புக் கமிட்டியோ இந்தி எதிர்ப்பு சம்பந்தமான தனிப்பட்ட நபரோ கண்டிப் பாக அஹிம்சையுடனும் பலாத்காரம் இல்லாமலும் துவேஷம் மனக்கசப்பு இல்லாமலுமே பேச்சு, காரியம் முதலியவைகளில் மிக்க கவனம் செலுத்தி வந்திருக்கிறோமாதலால், இனியும் அப்படியே நடந்து வரவேண்டும் என்றும் கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்வதுடன் ஒவ்வொருவரும் அதை மன மொழி மெய்களால் கண்டிப்பாய் அனுசரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

சுயமரியாதைக்காரர் கடமை

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வார்த்தை, மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி யை ஊட்ட இதைவிட நல்ல சமயம் கிடைப்பதரிதாத லால், அவர்கள் எல்லோரும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைச் சாந்தமும் சமாதானமுமான முறையில் நடத்திக் கொடுமையான அடக்குமுறைக்கு மகிழ்ச்சி யோடு ஆளாகி, பார்ப்பன ஆட்சியின் யோக்கியதை யை வெளியாக்கிவிட வேண்டியது அவர்களது உண் மையான கடமையாகும். ஏனெனில் இப்படிச் செய்வதன் மூலம் நாம் ஏன் பார்ப்பனியம் கூடாது என்கிறோமென்பது இதன்மூலம் விளக்கப்பட்டுவிடும்.

இந்தி எதிர்ப்பு இயக்க நிலை

இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் எதிரிகளுடைய சூழ்ச்சி - விஷம - நாணயமற்ற - இழிவான பல எதிர்ப்புகளைத் தாண்டி இதுவும் ஒரு பொது ஜன இயக் கம்தான் என்று இந்தியா முழுமையும் வெளிநாடும் மதிக்கப்படத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. அன்றியும் சர்க்கார் தங்களுடைய வெறுக்கத் தகுந்த கடைசி ஆயுதத்தைப் பிரயோகப்படுத்த வேண்டிய அவசியத் திற்குக் கொண்டுவந்துவிட்டுவிட்டது. தமிழ்நாடோ, சென்னை மாகாணமோ, மாத்திரமல்லாமல் இந்தியா பூராவும் சென்னை சர்க்காரை எள்ளி நகையாட வேண்டிய நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டு விட்டது. இந்தியா பூராவிலும் உள்ள அரசியல் தலை வர்கள் பிரதான புருஷர்கள் கவனிக்கப்படத்தக்க பத்திரி கைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக இந்தி எதிர்ப்புக்குத் தலைகொடுக்க முடியாமல் சென்னை சர்க்கார் கையாளும் முறையைப் பற்றிக் கவனித்துக் கண்டிக்கும் படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது. இதுவரை காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியையும் பற்றி என்னென்ன குற்றம் குறை கூறிவந்தார்களோ அவற்றையெல்லாம் இன் றைய காங்கிரஸ் சர்க்கார் செய்து தீரவேண்டிய அவசியத்திற்கும் அப்படிச் செய்யப்பட்ட காரியங்களுக்கு அந்தக்கால ஆட்சி என்ன சமாதானம் சொல்லிற்றோ, அதே சமாதானத்தைத் தேடிக்கண்டுபிடித்துச் சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கும் கொண்டுவந்துவிட்டு விட்டது.

கவலை வேண்டாம்

ஆதலால் நமது கிளர்ச்சி பயன் கொடுக்கவில்லை என்பதாக நாம் சிறிதும் நினைக்க வேண்டியதில்லை. மற்றும் இது வெற்றி பெறுமா தோல்வியுறுமா என்ப தாகவும் நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. நம் கடமையைச் செய்கிறோமா, செய்தோமா இல் லையா என்பதேதான் நாம் இனி யோசிக்கப்படத் தக்கதாகும்.

நாம் பெற்ற வெற்றி

காங்கிரஸ் சுமார் 18 வருஷ காலமாகச் செய்து வந்த எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஒன்றிலாவது வெற்றி பெற்றது என்பதாகக் காங்கிரசே சொல்லும்படியான காரியம் ஒன்றுமே இல்லை. காங்கிரசானது எதிர்ப்பின் பேரால் சட்டம், சமாதானம், நல்ல ஆட்சி முதலியவை களுக்கு, விரோதமாகச் செய்துவந்த காரியங்களில் நாம் நூற்றிலொரு பங்குகூட இன்னம் செய்யவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து அவற்றைச் சரியான கணக்குக்காட்ட முடியாதபடி செலவு செய்தும் இலட்சக்கணக்கான பேர்கள் சிறை சென்றும் பலர் அடிபட்டும் சிலர் மடிந்தும் கூட ஒரு காரியத்திலாவது எவ்வித வெற்றியும் பெறாமல், நிபந்தனை கொடுத்து, ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தலில் ஓட்டுப்பெற மாத்திரம் பயன்பட்டது என்றால், இப்போது நாம் செய்த கிளர்ச்சிக்கும் சிறை சென்ற தொண்டர்களுக் கும், பொது ஜனங்களால் கொடுக்கப்பட்ட பணத்துக்கும் செலவிடப்பட்ட முறைக்கும் மற்றும் அனுபவித்த கஷ்ட நஷ்டத்திற்கும் இதைவிட என்ன அதிகமான வெற்றி யை எதிர்பார்க்க முடியும்?

சிறை நோக்கிச் செல்கின்றேன்

எனவே காங்கிரசின் கிளர்ச்சி, தியாகம், போர் முதலானவைகள் எல்லாம் ஓட்டுப்பெறவே ஒழிய, எதிரியிடம் காரியம் வெற்றி பெறுவதற்கு அல்ல என்பது நமக்கு பட்டாங்கமாய்த் தெரிந்துவிட்டதால் நமது எதிர்ப்பும், கிளர்ச்சியும், தியாகமும், கோரும் கோரிய வெற்றி பெறுவதற்குப் பயன்படாவிட்டாலும் பாமர மக்கள் இனிமேலாவது ஏமாறாமல், உண்மை கண்டு மனம் திரும்பவாவது பயன்பட்டால் அதுவே போதுமானதாகும். ஏதோ ஒரு வழியில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அதிகமாய்க் கஷ்டநஷ்டமில்லாமல் சாவதானமாய் சந்தோஷமாய் சுளுவில் நடத்திக் கொண்டிருக்க இந்த சர்க்கார் இடம் கொடுத்துக் கொண்டிருப்பதே நமக்கு ஒரு எதிர்பாராத வெற்றி என்று கருத வேண்டும்.

இந்தி கட்டாய முறையை ஒழிக்க சர்க்கார் கண்ணியமான முறையில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நமது கிளர்ச்சியானது முறையே நடந்துகொண்டிருப்ப தால் சர்க்காரை அறியாமலேயே அந்த நமது இலட் சியம் கைகூடும் படியான நிலைமை ஏற்பட்டுவிடு மென்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதோடு பொது ஜனங்களது அபிப்பிராயமும் ஆதரவும் நமக்குச் சாதகமாய் இருக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதோடு இந்தி எதிர்ப்புக்காரரும், சுயமரியாதைக்காரரும், ஜஸ்டிஸ்காரரும், முஸ்லிம்லீக்குக்காரரும் மற்றும் காங்கிரஸ் நடப்பும், போக்கும் பிடியாதவர்களும் ஒன்றுசேர்ந்து காரியம் செய்யவும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஒரு பெரும் சாதனமாகும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு இன்று சிறை வாயிலை எதிர்நோக்கி சென்னை செல்லுகின்றேன் (குடிஅரசு 11.9.1938). - தொடரும்  keetru.com 18 12 2015

07 06 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 33

தமிழர் பெரும்படைக்கு ‘விழுப்புரத்தில்’ உற்சாகமான வரவேற்பு

ஆகத்து 22: நேற்று பகல் 1.30 மணிக்குத் தமிழர் பெரும்படை வளவனூரிலிருந்து விழுப்புரம் வந்து சேர்ந்தது. சுமார் 50 முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்களும், அன்னியூர் தமிழ்க் கழகத்தாரும் மற்றும் ஏராளமான இந்து முஸ்லிம் பெரியவர்கள் உள் ளிட்ட சுமார் 1000 பேர்கள் எதிர்கொண்டு வரவேற்று படைத்தலைவர்கட்கு மாலையிட்டு “வீழ்க இந்தி”, “வாழ்க தமிழ்” ஆகிய பேரொலியுடன் படையை அழைத்து வந்தனர். படை முன்னாள் நகர மன்றத் தலைவர் எம். கோவிந்தராசுலு நாயுடு பங்களாவில் தங்கியது. பகல் 2 மணிக்கு எம். கோவிந்தராசலு நாயுடு, எம். சண்முக உடையார் (நகர மன்ற உறுப்பினர்) எம். முத்துத்தாண்டவப் படையாட்சியார் (நகர மன்ற உறுப்பினர்) ஆகிய மூன்று தமிழ்ப் பெரியார்களும் படைக்கு இடைவேளை உணவளித்து உபசரித்தனர். பின்னர் மாலை 4.30 மணிக்குத் தண்டை விட்டுப் படைப் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து 6 மணிக்குப் பொதுக் கூட்டம் நடக்கும் இடமாகிய நகராட்சி உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்கு முன்புள்ள நவாப் தோப்பு மைதானத்திற்கு வந்துசேர்ந்தது. வழியில் முஸ்லீம் லீக் வாலிபர் சங் கத்திற்கெதிரில் அச்சங்கத்தார் படையை நிறுத்தி, தலைவர்கட்கு மாலையிட்டு படை வீரர்கட்கு கற்கண்டு வழங்கினர். முஸ்லீம் லீக் வாலிப சங்கத் தொண்டர்கள், படையை தண்டிலிருந்தே அழைத்துச் சென்றதுடன் படைக்கு முன்னாடி அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலத்தில் சுமார் 3000 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம் :

கூட்டத்திற்கு முத்துத்தாண்டவப் படையாட்சியார் தலைமை வகித்தார். 8000 பேர்களுக்கு மேல் கூட்டத்திற்கு வந்திருந்தனர். பின்னர் காஞ்சி கலியாணசுந்தரம், காஞ்சி பரவஸ்து இராசகோபாலாச்சாரியார் ஆகியோர் இந்திப் புரட்டை விளக்கிச் சொற்பொழிவாற்றினார்கள். கடைசியாக தோழர் எஸ்.ஏ. ரவூப் பேசினார். தலைவர் முடிவுரைக்குப் பிறகு தென்னார்க்காடு மாவட்ட முஸ்லீம் காரியதரிசி பண்ருட்டி கரீம் சாகிப் நன்றி கூறக் கூட்டம் இரவு 11 மணிக்கு முடிவுற்றது. இவ்வூர் பெரியார்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க படை அன்று இரவும் விழுப்புரத் திலேயே தங்கியது (விடுதலை 25.8.1938). தமிழர் பெரும்படை இந்தியை எதிர்த்துப் பரப் புரை செய்து சென்னையை நோக்கி வந்து கொண் டிருக்கும் அதேநேரத்தில் சென்னையிலும் மற்றும் மாகாணம் முழுவதும் இந்தியை எதிர்த்து ஊர்வலங் களும் பொதுக் கூட்டங்களும் நாள்தோறும் நடந்து கொண்டே இருந்தன. இந்து தியலாஜிகல் உயர் நிலைப்பள்ளி முன்பும், மாகாண முதல்வர் இராசாசி வீட்டின் முன்பும் அன்றாடம் மறியல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் : இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்த தொண்டர்களுக்கு 4 மாதம் கடுங்காவல் தண்டனை

சென்னை, ஆகத்து 25 : இன்று காலையில் தங்கசாலையிலுள்ள இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் ‘இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என்று முழங்கி இராஜபாளையம் தொண்டர் வி. அழகனும் தூத்துக் குடி எம். கிருஷ்ணசாமியும் மறியல் செய்தனர். அவர் களைக் கைது செய்து காவல் துறையினர் ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மாலை 5 மணிக்குக் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த தொண்டர்களைக் கூப்பிட்டு நீதியரசர் கள் இம்மாதிரி எல்லாம் செய்வது கூடாது என்றும்; விட்டுவிட்டால் ஊருக்குப் போய்விடுகிறீர்களா? என்றும் சார்ஜூம் தருகிறோம் என்று கூறினார். இந்தி கட்டாயப் பாடமாயிருப்பதை எடுத்துவிட்டால் போய்விடுவதாகத் தொண்டர்கள் சொன்னார்கள். நீங்கள் இம்மாதிரிச் செய்வதால் பள்ளிக்குப் பிள் ளைகள் போகாமல் இருக்கின்றார்களா? என்றும் உங் களை யார் இப்படியெல்லாம் பிடித்து அனுப்புகிறார்கள் என்றும் கேட்டார். தாங்களே பணம் செலவு செய்து கொண்டு வந்த தாகவும் இந்தி ஒழிந்தால் திரும்பிப் போய் விடுவ தாகவும் தொண்டர்கள் சொன்னார்கள்.

பின்னும் மாஜிஸ்ட்ரேட் தொண்டர்களை நோக்கி உங்களை ஈ.வி. ஆர். (ஈ.வெ.ரா.) அனுப்பினாரா அல்லது இதற்காக வேண்டி உங்கள் ஊரில்ல உள்ள பெரிய மனிதர்கள் பணம் கொடுத்து ஒன்றும் அறியாத சிறுவர்களாகிய உங்களைப் பிடித்து அனுப்பினார்களா என்றும் நீங்கள் வரலாமா என்றும் கேட்டார். நாங்களே தான் வந்தோம்; மற்றவர்கள் எங்களைச் சிறைக்கு போகும்படி பணம் கொடுக்கவும் இல்லை; மறியல் செய்யும்படி எங்களைத் தூண்டவும் இல்லை யென்று தொண்டர்கள் சொன்னார்கள். நீதிபதி தொண்டர்களைப் பார்த்து ஏன் உங்கள் ஊரில் மறியல் செய்யக்கூடாது என்றும், வீண் செலவு செய்து கொண்டு இங்கு வந்து ஏன் மறியல் செய்து வருகிறீர்கள் என்றும் கேட்டார். தொண்டர்கள் எங்கள் ஊரில் மறியல் செய்தால் சிறைக்கு அனுப்புவதும் கிடையாது; மறியல் செய்வ தைப் பார்க்க மந்திரிகளும் அங்கு இல்லையென்றனார். நீதிபதி “சிறை செல்ல வேண்டுமென்றே வரு கிறீர்களா?” என்று கேட்டார். “ஆம். இந்தி எதிர்ப்பின் கிளர்ச்சி எங்கும் தெரிய வேண்டும்” என்று தொண்டர்கள் பதில் கூறினார்கள்.

பின்னும் நீதிபதியவர்கள் தொண்டர்களை நோக்கி, “ஏன் உங்கள் ஊரிலிருந்து சட்டசபைக்கு மெம்பர் களாக வந்திருக்கும் அங்கத்தவர்களைக் கொண்டு இந்தியை ஒழிக்க ஏற்பாடுகள் செய்யக் கூடாது?” என்று கேட்டார். அவர்களுக்கு மாதம் 75 ரூபாய் கூலி கொடுத்து (அப்போதுதான் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு மாதம் 75 ரூபாய் சம்பளம் என்று ராஜாஜி அறிமுகப்படுத்தினார்) வாய்ப்பூட்டுப் போடப்பட்டு விட்டது. இந்தி ஒழிந்தால்தான் மறியல் நிற்கும் என்றதும் இரு தொண்டர்களுக்கும் தலா நாலு மாதம் சிறைத் தண்டனை (கடின காவல்) விதித்திருப்பதாகச் சொன்னார். தொண்டர்கள் முகமலர்ச்சியுடன் சிறை சென்றனர். (விடுதலை, 26.8.1938). இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான தொண் டர்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நீதிபதியே உங்களை ஈ.வி.ஆர். (ஈ.வெ.ரா.) அனுப்பி வைத்தாரா என்று கேட்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதுகெலும் பாகப் பெரியார்தான் இருக்கிறார் என்பது நீதிபதிக்கும் முதன் மந்திரி இராஜாஜிக்கும் தெரிகிறது. ஆனால் இம்மாதம் வெளிவந்த ‘தமிழர் எழுச்சி’ சூன் இதழில் அதன் ஆசிரியர் முருகு இராசாங்கம், கருவூர் ஈழத் தடிகளின் ஒரு பத்தியை மேற்கோள்காட்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் பெரியாருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எழுதுகிறார். முழு பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் செயல் அல்லவா இது?

ஆச்சாரியாருக்கு சர்தார் பட்டேல் ஆசி

கராச்சியில் பத்திரிகை நிருபர்கள் சர்தார் பட்டேலைப் பேட்டி கண்டபோது, சென்னை மாகாணத்தில் கிரிமி னல் திருத்தச் சட்டம் விநியோகம் செய்யப்படுவது பற்றிக் கேட்டார்களாம். அதற்கு சர்தார் பட்டேல் பதில் அளிக்கையில், அந்தச் சட்டத்தைக் காங்கிரஸ் வெறுத் தாலும், அந்தச் சட்டத்தில் ஆட்சேபகரமல்லாத பகுதி யைச் சென்னை சர்க்கார் பிரயோகம் செய்து வருவது குற்றமல்லவென்று திருவாய் மலர்ந்தருளினாராம். பாசிஸ்டு ஸ்தாபனமாக மாறிவரும் காங்கிரஸ் காரியக் கமிடடி மெம்பர்களில் ஒருவரான பட்டேலிடமிருந்து வேறுவிதமான பதிலை எதிர்பார்க்க முடியுமா? காந்தி யாரும் கனம் ஆச்சாரியாரின் ஹிட்லரிசத்தை ஆதரித்து “அரிஜன்” பத்திரிகையில் எழுதத்தான் போகிறார். அதை வரவேற்கத் தமிழ் மக்களே! தயாராக இருங்கள்! (விடுதலை, 26.8.1938). விடுதலை ஏட்டில் எழுதியிருந்தவாறே காந்தி அவர்களும் இராசாசியின் இந்தக் கொடூரமான அடக்கு முறைச் சட்டத்தை ஆதரித்து அரிஜன் 10.9.1938 ஏட்டில் எழுதினார்.

Let me now say a word about the two main grievances against Rajaji. There is nothing wrong in making a knowledge of Hindustani compulsory, if we are sincere in our declarations that Hindustani is or is to be the Rashtrabhasha or the common medium of expression. Latin was and probably still is compulsory in English schools. The study did not interfere with the study of English. On the contrary English was enriched by a knowledge of the noble language. The cry of “mother tongue in danger” is either ignorant or hypocritical. And where it is sincere it speaks little for the patriotism of those who will grudge our children an hour per day for Hindustani. We must break through the provincial crust if we are to reach the core of all-India nationalism. Is India one country and one nation or many countries and many nations? Those who believe that it is one country must lend Rajaji their unstinted support. If he has not the people behind him, he will lose his job. But it is strange, if the people are not behind him, that he has his great majority with him. But what if he had not the majority behind him? He must give up office but not his deepest conviction. His majority is worth nothing if it does not represent the Congress will. The Congress is wedded not to a majority; it is wedded to all that which will make this nation great and independent in the least possible time.

Mahatma Gandhi Collected Work’s, Vol (5) இதுபற்றி ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை எழுதியுள்ள அ. இராமசாமி அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம். பிற்காலத்தில் சென்னை மாநிலத்தில் இராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்று இந்தியைக் கட்டாயப் பாடமாக்கிய போதுதான் தமிழ கத்தில் இந்திக்கு - கட்டாய இந்திக்கு - எவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கிறது என்பது முதன்முதலாகத் தெரிந்தது. சுயமரியாதைக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் ஆகிய கட்சிகளெல் லாம் இதை எதிர்த்தனவென்றாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமைத் தளபதியாக விளங்கிய வர் பெரியார் ஈ.வெ. இராமசாமியே. அவரும் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொண்டர்களும் இப்போராட்டத்தில் கைதானார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டுதானிருந்தது. 1939இல் காங்கிரஸ் அமைச்சரவை பதவியிலிருந்து இறங்கிய போதுதான் இந்தப் போராட்டம் நின்றது.

இந்தி எதிர்ப்பு

இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துத் திரு.வி.க. “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார். அவரைக் காட்டிலும் இதைச் சிறந்த முறையில் கூறக் கூடியவர் கள் யார்? அவர் கூறுகிறார்:“காங்கிரஸ் ஆட்சியிலே ஹிந்தியைப் பொது மொழியாக்கும் முயற்சி விரைந்தெழுந்தது. ஒவ்வொரு மாகாணத்தில் ஒவ்வொருவிதமுறை கொள்ளப்பட்டது. நம் மாகாணத்தில் முதன் மூன்று பாரம் வரை ஹிந்தி கட்டாயப் பாடமாகச் செய்யப் பட்டது. அதுபற்றித் தமிழ்நாட்டில் பெருங் கிளர்ச்சி எழுந்தது. ஹிந்தி விருப்பப் பாடமாக்கப்பட வேண்டு மென்பதும், கட்டாயப் பாடமாக்கப்படலாகாதென்பதும் கிளர்ச்சிக்காரர் வேண்டுதல். அவ்வேண்டுகோளுக்கு அக்காலக் காங்கிரஸ் மந்திரி சபை செவிசாய்க்க வில்லை. கிளர்ச்சிக்காரருள் ஏறக்குறைய ஆயிரம் பேர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஹிந்தி பொதுமொழி என்று பேசப்பட்ட போது, அதுகுறித்து எவ்விதக் கிளர்ச்சியும் எழவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஹிந்தியைப் பொது மொழியாக்கும் முயற்சி அரும்பிய போதே அதற்கு மாறுபட்ட கிளர்ச்சி எழுந்தது. இனி இந்தியாவின் பொது மொழி எது ஆகும் என்று அறுதி யிட்டுக் கூறுதல் இயலவில்லை. இந்திய இயற்கை எதை ஏற்கிறதோ அஃதாகும்.”

காந்திஜி ஆதரவு

அப்போது இந்தியை எதிர்த்தவர்களுக்கு இந்தியை விருப்பப் பாடமாக்குவதில் எதிர்ப்பு இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் இந்தியைப் பரப்புவதற்குக் கட் டாயப் பாடமாக்குவதே சிறந்த வழி என்று கருதியது. காந்திஜியும் இதை ஆசீர்வதித்தார். அப்போது சென்னை மாநில அரசாங்கம் பத்திரிகைகளுக்கு விடுத்த ஓர் அறிக்கையில், “இந்திய தேசிய வாழ்வில் நம் மாநிலத்திற்கு உரிய இடம் கிடைக்க வேண்டுமானால், இந்தியாவில் மிக அதிகமான பேர் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அந்த மொழியில் ஓரளவு நடைமுறை ஞானம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அதனால்தான் நம் மாநில உயர்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில், இந்துஸ்தானியைப் புகுத்துவதென்று அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது” என்று கூறியது. அந்தச் சமயத்தில், “காங்கிரஸ்காரர்களே, எச்சரிக் கை!” என்று மகுடமிட்டு (10-9-1938) காந்திஜி ‘ஹரிஜ னில்’ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில், இரண்டு சிக்கல்களை அவர் தெளிவுபடுத்தியிருந்தார். “இந்துஸ்தானியைக் கட்டாயப் பாடமாக்கலாமா?” என்ற கேள்விக்கு, “இந்துஸ்தானி பொது மொழி அல்லது ராஷ்டிர பாஷை ஆக வேண்டும் என்று நாம் கூறியது உண்மையாக இருந்தால், இந்துஸ்தானியில் ஓரளவு ஞானம் பெறுவதைக் கட்டாயமாக்குவதில் தவறு எதுவும் இல்லை.

ஆங்கிலப் பள்ளிகளில் இலத்தீன் கட்டாயப் பாடமாக இருந்தது; இன்றுகூட இருக்கிறது என்று எண்ணுகிறேன். அந்தப் படிப்பு ஆங்கிலப் படிப்பைப் பாதிக்கவில்லை. அதற்கு மாறாக, அந்தப் புகழ்பெற்ற மொழியின் ஞானத்தால் ஆங்கிலத் தின் அறிவு வளம் பெற்றது” என்று கூறியிருந்தார். “தாய்மொழிக்கு ஆபத்து” என்று கூறியவர்களைக் குறித்து எழுதுகையில், “இவ்வாறு கூக்குரலிடுவது ஒன்று அறியாமையினால் ஏற்பட்டதாய் இருக்க வேண்டும் அல்லது பாசாங்காக இருக்க வேண்டும்... இந்தியா ஒரே நாடு என்று நம்புவோரெல்லோரும் ராஜாஜிக்குத் தங்களுடைய முழு ஆதரவைத் தெரி விக்க வேண்டும்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியிருந்தார். ஆயினும் இந்தத் தகராறு நீண்டகாலம் நீடித்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இரண்டாவது உலகப்போர் தொடங்கிய போது இராஜகோபாலாச்சாரி அமைச்சரவை கீழே இறங்கிவிட்டதால், ஆலோசகர்கள் உதவியுடன் நிருவா கத்தை ஏற்ற கவர்னர், முதல் நடவடிக்கைகயாகக் கட்டாயப் பாடமாய் இந்தி இருந்ததை அகற்றிவிட்டு அதை விருப்பப் பாடமாக வைத்தார். அ. இராமசாமி ‘தமிழ்நாட்டில் காந்தி’, பக்கம் 854-856 - தொடரும்..keetru.com  09 dec 2015

30 05 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 32

பல மாவட்டங்களில் தன்னார்வமாக தமிழ்த் தொண்டர் படை அமைத்து இந்தி எதிர்ப்புப் பிரச்சா ரத்தை தமிழ் உணர்வாளர்கள் தீவிரப்படுத்தி வந்தனர்.

ஓமலூர் தமிழ்த் தொண்டர் படை

இந்தப் படை 25 பேர் கொண்டதாய் தே.வெ. கதிரி செட்டியார் தலைமையில் ஓமலூர் தாலுக்காவில் மாத்திரம் இரண்டு வாரம் பிரச்சாரம் செய்து திரும்பி விடும். இந்தப் படையை அன்புடன் தாலுக்கா வாசிகள் எதிர்பார்க்கிறார்கள். இப்படைக்கு வேண்டிய சகல வசதிகளையும் பல கணவான்கள் செய்து வருகிறார்கள். இப்படைக்கு சாப்பாட்டு வசதிகள் யாருக்கும் சிரமம் கொடுக்காமல், சொந்த சமையல் செய்து கொள்ள அரிசி, பருப்பு முதலிய உணவு சாமான் வண்டியும் பின்னால் தொடர்ந்து வரும். இந்தப் படையில் சேர விருப்பமுள்ள தோழர்கள் 1-9-1938ஆம் தேதிக்குள் தங்கள் முழு விலாசத்துடன் கடிதம் அனுப்புவது நலம். இஷ்டப்பட்டவர்களைத் தான் படையில் சேர்த்துக் கொள்வார்கள். படை புறப்படும் தேதி, ஊர்கள் பின்னால் தெரிவிக்கப்படும் (விடுதலை, 20-8-1938).

திருநெல்வேலி ஜில்லா தமிழர் பெரும்படை

திருநெல்வேலியிலிருந்து தமிழர்களின் பெரும்படையொன்று இம்மாதம் இறுதிவாக்கில் புறப் பட்டு ஜில்லா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்ய சகல ஏற் பாடும் செய்யப்பட்டு வருகிறது. இப்படைக்கு திருநெல்வேலி பிரபல டாக்டர் ஆர்.வி. சொக்கலிங்கம் எம்.பி.பி.எஸ். அவர்கள் முக்கியஸ்த ராய் இருந்து ஏற்பாடு செய்கிறார். விரைவில் அதன் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என ஒரு நிருபர் எழுதுகிறார் (விடுதலை, 20-8-1938).

மதுரை ஜில்லா இந்தி எதிர்ப்புப் படை

மதுரையிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் இம் மாதம் 25ஆம் தேதி புறப்படுவதாயிருந்த இந்தி எதிர்ப் புப் படை 28ஆம் தேதி சோழவந்தானில் சர். பி.டி. ராஜன் தலைமையின்கீழ் நடைபெறப் போகிற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டை முன்னிட்டும், தலைவர்கள், தொண் டர்களுடைய சௌகரியத்தை முன்னிட்டும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று மதுரையிலிருந்து புறப்படும். படை எங்கு செல்லும் என்பதைப் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் (விடுதலை 22-08-1938).

கூடலூரில் (கடலூர் தமிழர்) பெரும் படை

திருச்சியிலிருந்து புறப்பட்டு வந்த முதன்மையான தமிழர் பெரும்படை 17-8-1938 காலை 7.30 மணிக்கு கூடலூருக்கு வந்து சேர்ந்தது. கூடலூர் டோல்கேட்டிற் கருகில் கூடலூர் தோழர்கள் கே. தெய்வசிகாமணி முதலியார், வி. சுப்பிரமணியம், கே. தண்டபாணி செட்டியார், வி.ஏ.எஸ்.கோவிந்த நாடார், டி.தேவநாதன் ஆகியோர் தலைமையில் சுமார் 400 பேர் படையை ஆரவாரத்துடன் மாலையிட்டு வரவேற்று மேளவாத் தியத்துடன் மணிக்கூண்டு வீதி, சங்கர நாயுடு வீதி, பள்ளிவாசல் வீதி, கடைவீதி, கிளைவ் துரை வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக அழைத்துவந்து நாகரத்தினம் செட்டியார் மாடிக் கட்டடத்தில் இருக்க வைத்தனர். வழிநெடுக வரவேற்பு வளைவுகளும், தோரணங் களும் ஏராளமாகக் கட்டப்பட்டிருந்தன. இடையிடையே சில காங்கிரஸ் காலிகள் செய்த விஷமத்தனம் எடுபடாமல் போயிற்று. பகல் 1 மணிக்கு உணவும், மாலை 5 மணிக்கு சிற்றுண்டிக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காந்தி பார்க்கிற்குப் படை புறப்பட்டது. படை பல முக்கியத் தெருக்களின் வழியாக ஊர்வலமாகச் செல்லும் போது, ஜின்னா சார்பாக முத்து துரை மரைக்காயர், ஒய். முகமது அமீது, ஒய். இப்ராஹீம், கே. கஜ்ஜாலி, வி. சையத் அகமது, சி. இப்ராகீம் உள்ளிட்டோர் படையை வரவேற்று மாலையிட்டு, தொண்டர்களுக்கு குளிர்பானம் வழங்கி னர். தோழர் எஸ்.வி. லிங்கம் உபசாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மாலை 6 மணிக்கு படை காந்தி பார்க்கை அடைந் ததும் ஜனாப் இஸ்மாயில் மரைக்காயர் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமாயிற்று. கூட்டத்திற்கு 3000 பேர்களுக்குமேல் வந்திருந்தனர். தலைவர் முன்னு ரைக்குப் பிறகு சேனாதிபதி கே.வி அழகர்சாமி (பட்டுக் கோட்டை அழகிரி) படையின் நோக்கத்தைப் பற்றிப் பேசினார். இடையே சில காங்கிரஸ் தொண்டர்கள் கேள்விகளைக் கேட்டனர். சேனாதிபதி தக்க பதிலளித் தார். அவர்கள் கூச்சல்போட ஆரம்பிக்கவே, பொது மக்களே அவர்களை அப்புறப்படுத்தினர். சேனாதிபதி இந்திக் கட்டாயப் பாடத்தினால் ஏற் படும் தீமை, பார்ப்பன சூழ்ச்சி, சி.ஆர். நிலைமையும் காங்கிரசும் ஆகியவைகளைப் பற்றி மிக விளக்கமாக 2 மணிநேரம் பேசினார். பின்னர் தோழர்கள் எஸ்.வி. லிங்கம், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் பேசினர். கூட்டம் இரவு 9.15 மணிக்கு முடிவுற்றது (விடுதலை, 20.8.1938). திருச்சியில் புறப்பட்டுவந்த முதன்மையான தமிழர் பெரும்படை கடலூரை முடித்துவிட்டு, அருகில் உள்ள மஞ்சக்குப்பத்திற்கு வருகை தந்தது.

மஞ்சக்குப்பத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஆகஸ்ட் 18 : நேற்று காலை 6 மணிக்கு நமது தமிழர் பெரும்படை கூடலூரை விட்டுப் புறப்பட்டு வண்டிப் பாளையத்திற்கு 7 மணிக்கு வந்து சேர்ந்தது. வண்டிப்பாளையம் பொதுமக்கள், முனிசிபல் கவுன் சிலர் வை. கந்தசாமி முதலியார் தலைமையில் படையை வரவேற்று மாலையிட்டு அவ்வூரின் நான்கு தெருக்களின் வழியாக மேளவாத்தியத்துடன் வை. ஆறுமுக முதலியார் இல்லத்திற்கு அழைத்து வந்து காலை சிற்றுண்டி அளித்தனர். அங்கிருந்து படை புறப்பட்டு திருப்பாதிரிபுலியூர் வரும்போது வழக்குரைஞர் சுவாமி தலைவருக்கு மாலையிட்டு மேளவாத்தியம் முழங்க புலிகையின் நான்கு வீதிகள் வழியாக ஊர்வலம் அழைத்துவந்து சிறப்பித்ததுடன் கெடிலம் நதியைக் கடந்து புதுப்பாளை யம் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். புதுப்பாளையத்தில் தோழர் வித்துவான் பா. ஆதிமூலம் அவர்கள் படையை வரவேற்று மாலை யிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ புதுப்பாளை யத்தின் முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக மஞ்சக்குப்பத்திற்கு அழைத்து வந்தனர்.

மஞ்சக்குப்பம்

மஞ்சக்குப்பத்திலும் வழக்கறிஞர் திருவாரூர் தோழர் விஜயராகவலு நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல். தலைமையில் ஏராளமான தமிழர்கள் படையை வர வேற்று மாலையிட்டு முக்கிய தெருக்களில் ஊர்வல மாகக் கூட்டி வந்தனர். தெருக்களின் முக்கிய இடங்களில் வரவேற்பு வளைவுகள் கட்டப்பட்டிருந்தன. படை விஜயராகவலு நாயுடு இல்லத்தினருகில் வந்தவுடன் அவரும், அவரு டைய திருமகளாரும் படையை அன்புடன் வரவேற்று உபசரித்துத் தொண்டர்களுக்கு சூடான பானம் வழங்கி சோர்வையகற்றினர். பின்னர் படை காலை 11 மணிக்கு புதுவை சின்னையா முதலியார் பங்களாவில் தங்கி யது. டி.எம். ஜம்புலிங்க முதலியார் அவர்களால் 1 மணிக்கு பகல் உணவும், மாலை 5 மணிக்கு சிற் றுண்டியும் அளிக்கப்பெற்றபின் தொண்டர்கள் அணி வகுத்து முரசொலியுடன் பொதுக் கூட்டத்திற்குப் புறப் பட்டனர்.

பொதுக் கூட்டம்

மாலை 6 மணிக்கு மஞ்சக்குப்பம் மைதானத் தில் தோழர் விஜயராகவலு நாயுடு பி.ஏ.பி.எல். தலைமையில் பொதுக்கூட்டம் கூடியது. பொதுக் கூட்டத்திற்கு சுமார் 3000 பேர் வந்திருந்தனர். புதுவையிலிருந்து தோழர்கள் பாரதிதாசன், எஸ். சிவப்பிரகாசம், எல். துரைராஜன், லகரஷ் நம்பிக்கைமரி, எம்.சுப்புராயன், என்.தங்கவேலு, லெனின் சித்தானந்தம், ரோஷ் உள்ளிட்ட சுமார் 25 பேர்களுக்கு அதிகமாக வந்து பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டனர். தலைவர் முன்னுரைக்குப் பின்னர், காஞ்சி பரவஸ்து இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் எழுந்து தமிழின் தொன்மை, பண்டைத் தமிழரின் கலை, நாகரிகம், வீரம், கற்பின் மாண்பு முதலி யவைகளைப் பற்றியும் இந்தி கட்டாயப் பாடத்தி னால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் விளக்க மாக சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார். இடையிடையே சில காங்கிரஸ்காரர்கள் கூச்சல் போட்டுக் குழப்பம் செய்தாலும் மக்கள் மிக்க அமைதியாக இருந்து சொற்பொழிவைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர், மெஸ்காப்டன் மூவலூர் இராமாமிர்தத் தம்மாள் எழுந்து, தான் முன்பு காங்கிரசிற்குச் செய்த சேவைகளைப் பற்றியும், இன்று காங்கிரசிலுள்ள தமிழர்களின் மோசமான நிலையைப் பற்றியும் விளக்கிப் பேசினார். மேலும் சில காலிகள் செய்த விஷமத்தனங்களுக்கும் கேள்விகட்கும், ஆணித்தர மான பதிலளித்ததுடன், இந்தி கட்டாயப் பாடத்தால் ஏற்படும் தீமை, ஆச்சாரியாரின் சர்வாதிகாரம், காங்கிரஸ் காரர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளின் மர்மம் ஆகியவைகளைப் பற்றி விரிவாக சுமார் ஒரு மணிநேரம் பேசினார். படையின் வழிசெலவிற்கு மஞ்சக்குப்பம் தமிழர்களின் சார்பாக ஒரு பணமுடிப்பு அளிக்கப் பெற்றது. தலைவர் முடிவுரைக்குப் பிறகு நன்றிகூறலுடன் இரவு 9 மணிக்குக் கூட்டம் இனிது முடிவுற்றது. படை இரவு மஞ்சக்குப்பத்திலேயே தங்கியது (விடுதலை 22.8.1938).

சூலூரில் இந்தி எதிர்ப்புக் கூட்டம்

இவ்வூர் பஞ்சாயத்து போர்டு ஆபீசுக்கு எதிரிலுள்ள மைதானத்தில் தோழர் சி. சிதம்பரசாமிக் கவுண்டர் அவர்கள் தலைமையில் 13.8.1938ஆம் தேதி ஒரு இந்தி எதிர்ப்புக் கூட்டம் கூடிற்று. தலைவர் முகவுரை யாக தமிழர் நாகரிகம், ஒற்றுமை ஆகியவைகளைப் பற்றிப் பேசினார். பிறகு கோவை ஜனாப் சி.எம். முகமது யூசுபு அவர்கள் தற்கால அரசியல் நிலைமை என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றினார். கடைசியில் பல தோழர்கள் கட்டாய இந்தி நுழைப்பும், தமிழர் எதிர்ப்பும் என்னும் விஷயத்தைப் பற்றி வெகு விமரிசையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தனர். தலைவர் முடிவுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது (விடுதலை 22.8.1938). (தொடரும்) keetru.com dec 2015

23 05 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 31

ஆம்பூரில் பெரியார்:

சென்ற மார்ச்சு இதழில் வடஆர்க்காடு மாவட்ட இந்தி எதிர்ப்புப் படையைப் பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி சித்தக்காடு ராமையா அவர்களிடம் ஆலோச னைகள் வழங்குவதற்காக, பெரியார் ஈ.வெ.ரா. 30-8-1938 செவ்வாய் காலை சோலையார்பேட்டைக்கு வந்து அங்கிருந்து மிட்டாதாரர் பார்த்தசாரதி அவர் களுடன் காரில் ஆம்பூர் வந்து சேர்ந்தார். வடஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புறப்படப்போகும் தொண்டர் படை விவரத்தைத் தெரிந்து அதை அனுமதிப்பதற் காகப் படையை நடத்திச் செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தோழர் சித்தக்காடு கே. ராமை யாவைச் சந்தித்து அது விஷய மாகப் பேசினார்.

தலைவர் அவர்கள் தோழர் கே. ராமையா ஜாகை முன் மோட்டாரை விட்டு இறங்கிய தும் அந்தச் சேதி விநாடி நேரத் தில் நகர் பூராவும் பரவி பத்து நிமிஷ நேரத்திற்குள் ஏராள மான பொது மக்கள் இந்து, முஸ்லீம், ஆதித்திராவிடர்கள் ஆகியவர்கள் தலைவர் அவர் களைச் சந்தித்துச் சூழ்ந்து கொண்டார்கள். ஆம்பூர் முஸ்லீம் லீக் அஞ்சு மனே முஹ்ஸினுல் இஸ்லாம், ஆதித்திராவிடர் முன்னேற்றச் சங்கத்தார் உள்ளிட்ட பொது மக்கள் “தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள்” அன்று மாலை கண்டிப்பாய்ப் பொதுக் கூட்டம் போட்டுப் பேசிவிட்டுத் தான் போகவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள், தலை வர் ராமசாமியார் என்ன சொல் லியும் பொது மக்கள் கேட்க வில்லை, இறுதியாக இரவு 8.30 மணிக்குத் தன்னை அனுப்பிட வேண்டுமென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டார்.

மாலை 5.45 மணிக்கு ஆம்பூர் நகரப் பொது மக்கள் ஏராளமாகத் தோழர் ஈ.வெ.ரா வை பேண்டு வாத்தியங்கள் முழங்க மாலை சூட்டி வரவேற்றார் கள். தோழர் சித்தக்காடு ராமையா அவர்கள் தங்கி யிருந்த இடத்திலிருந்து ஊர்வல மாகப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மகமதலி சவுக்கில் ஊர்வலம் முடிவ டைந்தது. ஊர்வலத்தில் 1000 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். ஆம்பூர் மகமதலி சவுக்கில் “அஞ்சுமனே முஹ்ஸி னுல் இஸ்லாம்” சார்பில் கூட்டப்பட்ட பொதுக் கூட்டத்திற்கு 5000-க்கும் அதிகமானோர் குழுமியிருந்தனர். ஜனாப் சி.எம். உசேன் சாயபு அவர்கள் தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு முஸ்லிம்கள் முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித் தார். பின்னர் பெரியார் அவர்கள் பேசும் போது, “தலைவர் அவர்களே! சகோதரர்களே! நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே. ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற் காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்டே நீங்கள் என்னைப் பேசிவிட்டுத்தான் போக வேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகள் இருக்கின்றன.

முடிவாகப் பேசுகையில் இந்த மாவட்டத்திலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்படுவதின் அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அப்படைக்கு முஸ்லீம்கள் வேண்டிய ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இப்படையை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் சித்தக்காடு கே. ராமையாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், கூறியதாவது : தோழர் ராமைய் யாவை எனக்கு 15 வருடங்களுக்கு அதிகமாகப் பழக்கமுண்டு. நான் காங்கிரசில் இருக்கும்போது. அவர் காங்கிரஸ்காரர். பிறகு இன்றுவரை சுயமரியா தைக்காரராகவும் இருந்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்புப் படைக்கு வேண்டிய ஆதரவைக் கொடுத்து உதவி செய்ய வேணுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விடைபெற்றுப் புறப்பட்டுச் சென்றார். பிறகு திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் உட்படப் பலர் பேசியபிறகு 10.30 மணிக்குக் கூட்டம் முடிவுற்றது” (குடிஅரசு 4-9-38).

மதுரை மாவட்ட இந்தி எதிர்ப்புப் படை :

மதுரையிலிருந்து ஜனாப் பி. அப்துல் லத்திப்கான் அவர்கள் தலைமையின்கீழ் 100 முஸ்லீம்கள் கொண்ட படை ஒன்று இந்தி எதிர்ப்புக்காக இம்மாதம் 25ஆம் தேதி புறப்பட்டுத் திண்டுக்கல் போய்ச் சேரும். திண்டுக்கல்லிலிருந்து ஜனாப் எம்.வி.ஜே. தங்கமீரான் சாகிப் அவர்கள் தலைமையின்கீழ் 100 பேர் கொண்ட தமிழர் படை புறப்படும். இவ்விரு படைகளும் ஒன்று கூடிச் சென்னை செல்லும். முஸ்லிம் படை முஸ்லிம் கொடிகளுடனும், பச்சை வண்ண உடையுடனும், தமிழ்ப் படை மூவேந்தர் கொடிதாங்கி வெள்ளை சிவப்பு உடைதரித்து அணிவகுத்துச் செல்லும். வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்தாய்விட்டது. செல்லும் வழி யும் தங்கும் இடமும் பின்னர் தெரிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 20.8.1938-க்குள் திண்டுக்கல் ஜனாப் எம்.வி.கே. தங்கமீரான் சாகிப், திண்டுக்கல் என்னும் முகவரிக்குத் தெரியப் படுத்திக் கொள்ள வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம் (குடிஅரசு 14.8.1938).

சென்னையில் இந்தி எதிர்ப்புப் போர் : நீதிபதியின் ஒழுங்கற்ற நடவடிக்கை

ஆகஸ்டு 26 : இன்று காலை 10 மணிமுதல் 10.30 மணிவரையில் பள்ளிக்கூடத்தின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான தோழர்கள் எ. அருணாசலமும், டி. குருசாமியும் பள்ளி மாணவர் களை நோக்கித் “தோழர்களே இந்த லம்பாடி பாஷை யைப் படிப்பது சரியல்ல”வென்று சொல்லித், தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! மஞ்சள் பெட்டியின் ஆட்சி ஒழிக! என்று கோஷமிட்டவர்களைப் போலீசார் கைது செய்து, ஜார்ஜ் டவுன் 2ஆவது நீதிபதி பி. மாதவராவ் முன் ஆஜர் செய்தனர். நீதிபதி தொண்டர்களை நோக்கி நீங்கள் ஏன் இம்மாதிரி செய்கிறீர்கள் என்றும், உங்களை யார் இம்மாதிரியெல்லாம் போய் மறியல் செய்யும்படிக் கூறி அனுப்பினார்கள் என்றும், அய்க் கோர்டில் சி.டி. நாயகம், அண்ணாதுரை, ஷண்முகா னந்த சாமிகள் முதலியவர்களின் வழக்குகள் நடக் கிறது என்றும், நீங்கள் பொது வழியில் நின்று கொண்டு இம்மாதிரி “இந்தி ஒழிக, தமிழ் வாழ்க” என்று கூச்சல் போட்டுப் போக்குவரத்துக்குப் பெரும் தடை செய்வதால் இனிமேல் வேறு சட்டம் போட்டு உங்களைத் தண்டிப்போம் என்றும், பணம் கொடுத் தால் ஊருக்குப் போய் விடுகிறீர்களா? என்றும், ஒன் றும் தெரியாத உங்களையெல்லாம் சிறைக்குப் போகும் படித் தூண்டிவிட்டுத் தலைவர்கள் சிலர் ஜாமீனிலும், சிலர் வெளியிலும் வராமல் இருந்து கொண்டு இப்படிச் செய்கிறார்களே, நீங்கள் ஏன் சிறை செல்ல வேண் டும் என்று கேட்டதற்கு-எங்களை யாரும் அனுப்ப வில்லை, நாங்கள் மாதம் 15, 20 ரூபாய் சம்பாதிப் பவர்கள்தான். எங்கள் கைப்பணம் செலவு செய்து வந்தோமே தவிரப் பிறர் வார்த்தையைக் கேட்டோ அல்லது அவர்களால் அனுப்பப்பட்டோ நாங்கள் வர வில்லை, எங்களை எந்தச் சட்டத்தின்கீழ் தண்டித் தாலும் சரி, தமிழரில் தமிழ்ப் பற்று உள்ள ஒவ்வொரு வரும் கட்டாய இந்தி ஒழியும் வரை மறியல் செய்தே தீருவோம். தலைவர்கள் வராமல் இருக்கமாட்டார்கள். வரும்போது வருவார்கள் என்று பதில் சொன்னார்கள். தலா நாலு மாதம் கடினக் காவல் தண்டனை விதிக் கப்பட்டது. தொண்டர்கள் சிரித்துக் கொண்டும் உற்சாகத் துடனும் சிறைக்கூடம் ஏகினர்.

முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் :

ஆகஸ்டு 27 : இன்று காலை 9 மணிமுதல் பகல் 11 மணிவரையில் முதல் மந்திரியாரின் வீட்டின் முன் மறியல் செய்த தூத்துக்குடி தொண்டர்களான கே. பழனிச்சாமியும், ஆர். மாரியப்பனும், தமிழ்மொழி வாழ்க! லம்பாடி இந்தி ஒழிக! பார்ப்பன ஆட்சி ஒழிக! ஹிட்லரிசம் ஒழிக! என்று சொல்லி மறியல் செய்து வந்த இரு தொண்டர்களையும் போலீசார் கைது செய்து எழும்பூர் முதன்மை நீதிபதி அப்பாஸ் அலி முன் ஆஜர் செய்தனர். நீதிபதி, உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டார். ஒருவர் பழக்கடையும் மற்றொருவர் சில்லறைக் கடையும் வைத்திருப்பதாய்க் கூறியதும் நீதிபதி தலா ஆறுமாதம் கடினக் காவல் போடுவோம்; கேப்பைக் களி போடுவோம்; ஊருக்குப் போகிறீர்களா என்றும், இரயில் சார்ஜ் கொடுத்தனுப்புவதாகச் சொல்லி யதற்கும் முடியாது என்றும், இந்த லாம்பாடி பாஷை யாகிய கட்டாய இந்தி ஒழிய வேண்டும்; இல்லையேல் மறுபடியும் மறியல் செய்வோம் என்றும் சொன்னார் கள். மேலும் எங்களுக்கு அரிசிச் சாப்பாடு போட வேண்டும் என்று கேட்டதற்கு, நீதிபதி முடியாது என்று கூறிக் கேப்பைக் களியும் ஆறு மாத கடினக்காவல் என்று தீர்ப்பளித்தார். தொண்டர்கள் உற்சாகமாகச் சிறை சென்றார்கள். கோர்ட்டிலிருந்த நூற்றுக்கணக் கான மக்கள் வேடிக்கை பார்ர்த்தனர். மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப்போட்ட மகிமை இதுதான் என்று சொல்லிச் சிறை சென்றனர். (குடிஅரசு 28-8-38)

சென்னை சிறையில் பல்லடம் பொன்னுசாமி உண்ணாவிரதம் :

ஆகஸ்டு 27 : இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு விசாரணைக் கைதியாக இருந்துவரும் பல்லடம் பொன்னுசாமி சிறையில் தண்டனை பெற்று வந்துள்ள இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைச் சிறை அதிகாரிகள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆட்படுத்துவதை, அவர்களை இழிவாக நடத்துவதைக் கண்டித்து, கடந்த ஒரு வாரமாக சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். அவரை ஜெயில் அதிகாரிகள் இருட்டு அறை யில் அடைத்தும், மூக்கின் வழியாகவும் உணவு செலுத்த முயன்றும் பயன் இல்லை. சூப்பிரண்டென்ட் நேரில் வந்து அவரிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்தி எதிரிப்புக் கைதிகளை சிறை அதிகாரிகள் மிகவும் மட்டரகமாக நடத்துவதால் தாம் உண்ணாவிரத மிருப்பதாகக் கூறினார். சூப்பிரண்டென்ட் சிறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரும் இந்தி எதிர்ப்புக் கைதிகளை நல்ல முறையில் மரியாதையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைக் கொண்டு வந்து காண்பித்த பின் 25.8.1938 முதல் உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் (குடிஅரசு 28.8.1938). கோவை மாவட்டத் தமிழர் படை :

கோவை மாவட்டத் தமிழர் படை

இம்மாதம் 5ஆம் தேதி ஈரோட்டிலிருந்து புறப்படுவதற்கு ஏற்பாடு கள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்படையை வெற்றிகரமாக நடத்தி, ஆங்காங்கு சொற்பொழிவாற்ற தோழர் என்.பி. காளியப்பன் அவர்கள் வந்திருப்பதுடன், திருநெல்வேலித் தோழர் எம்.கே. குப்தா அவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார். மற்றும் சென்னை தோழர் நாராயணி அம்மாள் அவர்களும் அழைக்கப்பட்டு அந்த அம்மையாரும் வர அன்புடன் இசைந்துள்ளார்கள். அந்தப்படி அவர்கள் 5ஆம் தேதிக்கு முன்னால் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.9.1938ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஈரோடு முக்கியமான தெருக்களில் படை ஊர்வலமாக வரும். 6 மணிக்குக் காரை வாய்க்கல் மைதானத்தில் படைக்கு வழியனுப்பு உபசாரக் கூட்டம் நடைபெறும் (குடிஅரசு 4.9.1938). (தொடரும்) nov 2015

16 05 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 30

இந்தி எதிர்ப்பாளர்கள் சென்னைச் சட்டசபை முற்றுகை :

15.8.1938 அன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி சரியாக மாலை 4 மணிக்கு வடசென்னைத் தமிழர் கள் “தமிழ்த் தாயை இந்தி என்ற விஷப்பாம்பு, காலைப் பிடித்து விழுங்குவதுபோல்” எழுதப்பட்ட ஒரு பெரிய படத்தை எடுத்துக் கொண்டும், இந்திக் கண்ட னப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர்வலமாகப் பீப்பிள்ஸ் பார்க்கை வந்து சேர்ந்தார்கள். 4.30 மணிக்குப் பார்க்கை விட்டு சுமார் 5000 பேர் கை யில் தமிழ்க் கொடிகளுடன் இந்திக் கண்டன முழக்கங்களை முழக் கிக் கொண்டு தோழர்கள் சாமி சண்முகானந்தா. டாக்டர் தருமாம் பாள். நாராயணி அம்மாள். மீனாம் பாள். பாவலர் பாலசுந்தரம். என்.வி. நடராசன் முதலியவர்கள் தலைமையில் புறப்பட்டனர்.

ஊர்வலம் பெரியமேடு. சிந்தாதிரிப்பேட்டை, மவுண்ட் ரோடு, சேப்பாக்கம் முதலிய வீதிகளைக் கடந்து மாலை 5.30 மணிக்கு பீச் வழியில் உள்ள சட்ட சபைக் கட்டடத்திற்குள் புக எத்தனித்தது. ஆனால் இதற்குமுன் பல இடங்களுக்கும் டெலி போன் மூலமாக அறிவிக்கப்பட்டு ஏராளமான போலீஸார் சட்டசபையைச் சுற்றிலும் சுவர் வைத்தாற்போல நின்று ஊர்வலத்தை உள்ளே நுழையவிடாமல் தடுத்துவிட்டனர். அதன்பேரில் ஊர்வலம் சட்டசபைக்கு எதிர்ப் புறத்தில் நின்றுகொண்டு சுமார் அரை மணிநேரம் வரை சலியாமல் இந்தி எதிர்ப்புக் கோஷங்களை முழக்கிற்று. ஊர்வலம் சட்டசபைக் கட்டடத்தை வந்து சேர்ந்ததும் சட்டசபை கலைந்துவிட்டது. பிரதமர் மந்திரியும், இதர மந்திரிகளும் பல மெம்பர்களும் பின் வழியே சென்றுவிட்டனர். பிறகு ஊர்வலம் அப்படியே சென்னைச் சட்ட சபைக் கட்டடத்தின் முன்னால் கடற்கரைக்குச் சென் றது. அங்குப் பொதுக்கூட்டம் கூடும் என்று தெரிவிக் காமலிருந்தும், மேடையோ, விளக்கோ, ஒலிபெருக் கியோ ஒன்றுமில்லாதிருந்தும் சுமார் 8000 மக்கள் வரை கூடிவிட்டனர்.

பொதுக்கூட்டம் : டாக்டர் தருமாம்பாள் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் கூடியது.

மந்திரிகளின் இந்தி ஆதரிப்புக் கூட்ட நடவடிக்கை களைக் கண்டித்தும், சிறை சென்ற தொண்டர்களைப் போற்றியும், ராகிக்களி கொடுப்பதையும், மொட்டையடிப்பதையும் கண்டித்தும், கட்டாய இந்தியைக் கண்டித்தும் தோழர்கள் பண்டித நாராயணி அம்மை யார், மீனாம் பாள், சுவாமி சண்முகானந்தா, பாவலர் பாலசுந்தரம், என்.வி. நடராசன், எஸ்.கே.சாமி முதலி யவர்கள் பேசினார்கள். கூட்டம் முடிந்தவு டன் கூட்டத்திலிருந்த பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாவரும் அப்படியே ஊர்வலமாகப் புறப்பட்டுச் சட்ட சபையை நோக்கி வந்தனர். ஊர்வலம் சுமார் 1ஙூ பர்லாங் தூரம் இருந்தது. 20 நிமிஷங்கள் வரை வண்டிகள் அப்படியே நின்றுவிட்டன, போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. கூட்டத்தினர் திடீரெனச் சட்டசபைக் கட்டடத்திற்குள் நுழைந்தனர். உடனே சட்டசபைக்குள்ளிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. கதவுகள் சாத்தப்பட்டன. போலீசார் மீண்டும் வந்து அடக்கி அனுப்பினார்கள். கூட்டம் வெகு ஆவேசத்துடன் திரும்பி, பைகிராப்ட்ஸ் ரோடு வழியாக வந்துகொண்டிருக்கையில் போலீஸ் கமிஷனர் மேற்படி ஊர்வலத் தலைவரைக் கண்டு ஊர்வலத்தைக் கலைத்துவிட்டால் நலமென்று கூறவே அதன்படி ஊர்வலம் இராயப்பேட்டையில் கலைந்து விட்டது. பிறகு அந்தந்த டிவிஷன் வாசிகள் அப்படி அப்படியே பிரிந்து அவரவரர்கள் டிவிஷனுக்கு ஊர்வல மாகச் சென்றனர் (விடுதலை 16.8.1938). தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வருவதைப் போலவே மற்ற மாவட்டங்களிலிருந்தும் தமிழர் படை புறப்பட்டு, சென்னையில் ஒன்றாக இணையும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வடஆர்க்காடு மாவட்ட தமிழ்க் காப்புப் படையை அமைப்பதற்குச் சித்தக்காடு ராமையா அவர்களைப் பொறுப்பாளராகப் பெரியார் நியமித்திருந்தார். அப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராமையா அவர்கள் வடஆர்க்காடு மாவட்டத்தில் படை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

வடஆர்க்காடு மாவட்ட தமிழ்ப் பாதுகாப்புப் படை :

வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படை என்ற தலைப்பில் விடுதலையில் அவருடைய அறிக்கை வெளிவந்தது. இப்படை செப்டம்பர் முதல் வாரத்தில் திருப்பத்தூரிலிருந்து புறப்படும். படையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தோழர்கள் 24.8.1938 புதன் கிழமைக்குள் விண்ணப்பம் அனுப்பிட வேண்டும். தங்கள் விண்ணப்பத்தில் வயது, படிப்பு போன்றவை குறிப்பிடுவது நல்லது. பொதுவாகப் படையில் கலந்து கொள்ளும் தோழர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந் திருந்தால் போதுமானது.

க. ராமையா (சித்தக்காடு)

வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படை திருப்பத்தூர், வடஆர்க்காடு மாவட்டம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப் பைப் பார்த்து படையில் சேர பலர் முன்வந்தனர். ஆம்பூர் பெரியார் வே.ஆ. கோதண்டபாணி முதலியார் அவர்கள் படைத் தலைவராக இருக்க ஒப்புக்கொண் டார். அதுகுறித்துச் சித்தக்காடு க. ராமையா தெரிவிப்பதாவது : நமது வடஆர்க்காடு மாவட்டத் தமிழ்ப் பாதுகாப்புப் படைக்குப் பெரியார் கோதண்டபாணி முதலியார் அவர் கள் தலைமை வகித்து நடத்தி வர ஒப்புக்கொண்டு இன்று கடிதம் எழுதிவிட்டார். தோழர் முதலியார் அவர்களை வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு வயது 70 ஆகிறது.

ஜஸ்டிஸ் கட்சி சென்னை மாகாணத்தில் ஆரம்பித்த தினத்திலிருந்து இன்றுவரை பெரியார் அக்கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிட வேண்டியிருக்கிறது. சர். பிட்டி. தியாகராயர், டி.எம். நாயர் போன்ற ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபகர்களுக்கு இந்த பக்கத்துக்கு வலது கை போன்றவர் இப்பெரியார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். படையைத் திரட்டி நடத் தப்படுவதனால் சென்னை கொண்டு சேர்க்கும் வரை ஜாக்கிரதையாகவும், பொறுப்புடனும் போக வேண்டு மென்றும் இதனால் இயக்கத்துக்குக் கெட்ட பேர் உண்டாகும்படி நடத்தப்படக்கூடாதென்றும் எச்சரிக்கை செய்து எமது தமிழ் நாட்டுத் தனிப்பெரும் தலைவர் ஈ.வெ.ரா. கடிதம் எழுதி இருந்தார்கள். அவர்களு டைய கடிதத்தினால் நான் அடைந்த பொறுப்பின் பயம் ஆம்பூர் பெரியார் ஒப்புக்கொண்ட நிமிஷமே நீங்கி விட்டது (விடுதலை 16.8.1938) என்று சித்தக்காடு ராமையா எழுதியதிலிருந்தே தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கத்தினரும் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களும்தான் இந்த இந்தி எதிர்ப்புப் போராட் டத்தை முழுவீச்சில் நடத்தி சென்றார்கள் என்பது விளங்கும், (தொடரும்) oct 2015

09 05 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 29

வடநாட்டு மில் துணிகளைப் பகிஷ்கரிக்க வேண் டும் சென்னைக் கூட்டத்தில் தீர்மானம் :

தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு 101 பேர்கள் கால்நடையாக பல்வேறு பகுதிகளில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவரும் வேலையில் சென் னையில் பல பகுதிகளில் அன்றாடம் மறியலும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வந்தன. 11.08.1938 அன்று சென்னைப் புதுப்பேட்டையில் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தலைமையில் ஒரு பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் மூவாயிரம் பேர் கலந்து கொண்டனர். அது சமயம் வடநாட்டு இந்தியை கட்டாயமாகப் புகுத்துவதை ஆதரிக்கும் வடநாட்டு மில் முதலாளிகளின் துணிகளை அறவே தென்னாட்டு மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்று கடலூர் எம்.என்.முத்து குமாரசாமி பாவலர் அவர்கள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். இத்தீர்மானத்தைத் தோழர் சாமிநாதன் ஆதரித்துப்பேச, தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. பிறகு தோழர்கள் நித்தியானந்த அடிகள் திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் ஆகியவர்கள் சிலர் குறிப்பிட்ட பத்திரிக்கைகளை (இந்தியை ஆதரிக்கும்) பகிஷ்கரிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் வடநாட்டுத் தலைவர்களான ராஜேந்திர பிரசாத், ஜமன்லால் பஜாஜ், சுபாஷ் சந்திரபோஸ் முதலியவர்களுக்கு கறுப்பு கொடி பிடித்து நமது வெறுப்பைத் தெரிவிக்கவேண்டம் என்றும் பேசினர். தலைவர் முடிவுரைக்குப் பின் கூட்டம் கலைந்தது. (விடுதலை : 17-1-1938)

முதல் மந்திரி வீட்டு முன் மறியல்

முதல் மந்திரி வீட்டின் முன் மறியல் செய்த தொண்டர்களான நாமக்கல் எஸ்.வி.கோவிந்தசாமி படையாச்சியையும், ராஜபாளையம் எஸ்.சீனிவாச செட்டியாரையும் மதுரை எஸ்.லக்ஷ்மண நாயுடுவையும் போலீசார் கைது செய்து பிரதம நீதிபதி அபாஸ்அலி முன் ஆஜர் செய்தனர். வழக்கம் போல் நீதிபதி தொண்டர்களைக் கேள்விகள் கேட்டார். தோழர் நாமக்கல் கோவிந்தசாமி படையாச்சி பதிலளிக்கையில் தாம் ஒரு உபாத்தியார் என்றும் தனது சொந்தப் பணத்தைக் கொண்டே டிக்கட் வாங்கி சென்னைக்கு மறியல் செய்ததாகவும் தனக்கு ஒருவரும் டிக்கட் வாங்க பணம் கொடுக்க வில்லையென்றும், ஒருவரும் மறியல் செய்ய தூண்டவில்லை யென்றும், இங்கிலீசும் தமிழும் படித்தவர்களுக்கே வேலை கிடைக்காத நிலைமையிருக் கையில் இந்தி எதற்கு என்றும் குறிப்பிட்டார். மேலும் தனக்கு களி வேண்டாமென்றும் அரிசி உணவே அளிக்க உத்தரவிடவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். நீதிபதி கொடுக்க முடியதென கூற தான் உண்ணாவிரதமிருப்பதாகச் சென்னார்.

நீதிபதி : முன் எவனோ 86 நாள் பட்டினி இருந்தானே அப்படியா? கோவிந்தசாமி : அவன் காங்கிரஸ் கையாள். கடைசியாக நீதிபதி அவர்களுக்கு 6 மாதம் கடின காவல் தண்டனையும் ராகிக்களியும் என்று தீர்ப்புக் கூறினார். (விடுதலை : 12-8-38).

தமிழர் பெரும்படை : சிதம்பரத்தில் அமோக மான வரவேற்பு, 4 மைலுக்கு ஊர்வலம் பொதுக் கூட்டத்தில் 5000 பேர் விஜயம்.

12-08-2013 மாலை 7 மணிக்கு படைவைதீஸ் வரன் கோவிலிருந்து சீர்காழி வந்து சேர்ந்தது. சீர்காழி தமிழன்பர்கள் வரவேற்று பொதுக்கூட்டத் திற்குப் படையை அழைத்துக் சென்றனர். சுமார் 1000 பொதுமக்கள் கூடியிருந்தனர். கூட்டத்திற்கு தமிழன் பரும் மிராசுதாருமான தோழர் சொக்கலிங்கம் செட்டியார் தலைமை வகித்தார். தோழர்கள் பரவஸ்து ஏ.ஜெ.கோபாலச்சாரியர் அவர்களும் கே.வி.அழகர்சாமி அவர்களும் தமிழர் படையின் நோக்கத்தையும், கட்டாய இந்தியின் நுழைவையும் பற்றி சுமர் 1ஙூ மணிநேரம் பேசினார்கள். பின் தலைவர் நன்றி கூறியதும் இரவு உணவிற்கு தோழர் சொக்கலிங்கம் செட்டியார் இல்லத்திற்குச் சென்று உணவு அருந்தி இன்று காலை (13.08.1938) ஆனிக்கான் சத்திரம் அதாவது சோழநாட்டின் எல்லை முடிவாகும் கொள்ளிடக் கரைக்கு இன்று காலை படைவந்து சேர்ந்தது. இது வரையில் படையானது சுமார் 140 மைல்கள் நடந்தும் 37 பொதுக்கூட்டம் வரை நடத்தியும் இன்று சோழ நாட்டின் எல்லையாகிய கொள்ளிடம் நதியை தோனி மூலம் கடந்து இன்று மாலை 5 மணிக்கு தொண்டை நாடாகிய வல்லம் படுகையைடைந்தது.

தொண்டர்கள் தோனியில் ஏறி, கொடிபிடித்து முரசொலியுடனும், கொம்பு நாதத்துடனும் தோனிப் பாட்டுப்பாடிக் கொண்டு குதூகலமாயிருந்தது. தோழர்கள் “திருச்சி இல்லாமைப் பிடித்தோம், தஞ்சையையும் கைப்பற்றி னோம், இப்போது தென்ஆற்காடு ஜில்லாவில் நுழைந்து விட்டோம், வெற்றி நமதே” என்று கூறிச் சென்றது வெகு பொருத்தமாயிருந்தது. தென்ஆற்காடு எல்லையான வல்லம் படுகையிலே சிதம்பரத்திலிருந்து 4 மைல் வந்து சிதம்பரம் பொது மக்களும் சிரம்பரம் தமிழர் புதுவாழ்வினர் குழுவினரும், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களும் புவனகிரி பிரமணரல்லாத தமிழ் கழகத்தாரும் சுமார் 500 பேர் வந்து படையை வரவேற்று மாலையிட்டு சிதம்பரத்திற்குப் படையை அழைத்து வந்தார்கள். வழியிலிருந்த அம்மாபேட்டை கிராமத்தார் ரோட்டில் நீர் தெளித்து தோரணங்கட்டி தெருவை அலங்கரித்திருந்தனர். வழிநெடுகத் தோரணங்களும், வரவேற்கும் போர்டு களும் கணக்கின்றி கட்டப்பட்டிருந்தன. சிதம்பரம் முனிசிபல் எல்லையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர்கள் கூடி வரவேற்றனர். ‘தமிழ்வாழ்க’ என்ற பேரொலியுடன் முரசொலி முழங்க படை நகருக்குள் பிரவேசித்தது. வழிநெடுகத் தமிழன்பர்களும், பிரமுகர் களும் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மாலையிட்டு வரவேற்றனர். கடைத்தெருவில் பல வியாபாரி களும் வெள்ளி வியாபாரம் ஜனாப் ஏ.கே.காஜிஉசேன் சாயபு அவர்களும் தமிழர் படைத்தலைவர்களுக்கும் தனித்தனியே மாலையிட்டு அழைத்துச் சென்றார்கள்.

சில இடங்களில் காங்கிரஸ்காரர்கள் ஜப்பான் கறுப்பு கடிதாசிகளால் கறுப்புத் தோரணம் கட்டியிருந்தார்கள். இப்படிச் செய்தவர்களை பொதுமக்கள் கடுமையாக திட்டினார்கள். பின்னர் படையை கடைத்தெரு லால்கான் பள்ளி வாசல் முன்பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தபடி அழைத்து போனார்கள். சுமார் 5000 பேர் வரை பொதுமக்கள் கூடி இருந்தார்கள். ராவ்சாகி குமாரசாமிப் பிள்ளைத் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது. படையின் சேனாதிபதி பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி “தமிழ்மொழிக்கு வந்துள்ள ஆபத்தை பற்றியும், இந்தியை ஆச்சாரியார் கட்டாயப்பாடமாக நுழைக்கும் சூழ்ச்சியைக் கண்டித்தும், பண்டைய தமிழர் நிலை இன்றைய தமிழர் நிலை என்பது பற்றியும், சமஸ்கிருதத்தின் சாயலான இந்தியைப் புகுத்தி, இறந்து விட்ட மந்திரி சபையினர் புதுப்பிக்கிறார்கள் என்றும் விரிவாக சுமார் 1ஙூ மணிநேரம் வீரமுழக்கவிட்டார்.

குறிப்பாகக் கருப்புக் காகிதத் தோரணங்கட்டியவர் வெட்கி தலையும் குனியும்படியாக அழகிரியின் பேச்சு அமைந்திருந்தது. (விடுதலை : 17-8-38) தொடரும். kketro.com oct 2015

 

02 05 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 28

கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து புறப்பட்டு தமிழ் மக்களிடையே மாபெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வந்த அதேகாலத்தில் சென்னையில் இந்தியை எதிர்த்து மறியல் கிளர்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருந்தன. இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் சிறைக்கு அஞ்சாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறையேகி வந்தனர். அந்த வரிசையில் மறைமலை அடிகளாரின் மகன் மறை திருநாவுக்கரசு அவர்களுக்கு 8.8.1938 அன்று ஆறு மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மறை திருநாவுக்கரசு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு வருமாறு :

“தாங்கள் ஜூன் 27-ஆம் அயனாவரத்திலும், ஜூலை 2-ஆம் தேதி கோடம்பாக்கத்திலும் பேசுகையில் பொது ஜனங்களை முதன் மந்திரி வீட்டு முன்னும், இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்பட்டிருக்கும் பள்ளிக்கூடத்தின் முன்னும் மறியல் செய்யும்படி தூண்டியிருக்கிறீர்கள். அதனால் தாங்கள் கிரிமினல் திருத்தச் சட்டம் 7ஆவது செக்ஷன் படியும் இ.பி.கோ. 117ஆவது செக்ஷன் படியும் குற்றம் செய்தவராகிறீர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு செக்ஷன்களுக்கு தலா ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 6 மாதச் சிறைத் தண்டனையாக மாறியது” (விடுதலை 9-8-1938). மறை திருநாவுக்கரசு அவர்களின் தமிழாசிரியர் பணியும் இதனால் பறிபோனது. மறை திருநாவுக்கரசு மீது சென்னை நகர சபை கமிஷனர் நடவடிக்கை. சென்னை, நுங்கம்பாக்கம் கார்ப்பரேஷன் உயர் நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக இருந்துவரும் எதிர்ப்புக் கிளர்ச்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்து வருவதைக் துண்டு பிரசுரங்களின் மூலமாக வும், பத்திரிகைகளின் மூலமாக வும் கமிஷனர் அறிந்து, சர்க் காரை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருவதற்குக் காரணம் காட்ட வேண்டுமெனக் கேட்டதற்கு, மறை திருநாவுக்கரசு அளித்த பதிலில் தம்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க யாது காரணமும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். ஆனால், கமிஷனர் அவரது பதிலில் திருப்தி அடையாமல், இந்தி எதிர்ப்பில் கலந்துகொள் ளக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு மறை திருநாவுக்கரசு தாம் இந்தி எதிர்ப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாதென்று பதில் அளித்த தோடு சிறைக்குச் செல்லவும் தயாராயிருப்பதாகவும் தெரிவித்துவிட்டார். அதன் பேரில் கமிஷனர் மறை திருநாவுக்கரசு மீது கீழ்வரும் குற்றங்களைச் சாட்டி வேலையினின்றும் நீக்கிவிட்டார். செக்கண்டரி பள்ளிக்கூடங்களில் “இந்துஸ்தானி” யை கட்டாயப் பாடமாகப் புகுத்தியிருக்கும் சர்க்கார் செய்கையைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசி யிருக்கிறார். முனிசிபல் சிப்பந்திகள் ஒழுங்குமுறை விதியை மீறிவிட்டார். மாணவர்களுக்குச் சர்க்கார் மீது வெறுப்பு உண்டாகும் வகையில் தூண்டியிருக்கிறார்.

அவருடைய இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் பள்ளிக்கூடத்தின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படும் எனத் தெரிகிறது. 29-6-1938-ஆம் தேதி பிரதம மந்திரி அவரது பள்ளிக்கூடத்துக்கு விஜயம் செய்திருந்த போது, மந்திரி வெளியேறுவதற்குள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுப் புறப்பட்டு பக்கத்தில் கூடியிருந்த கூட்டத்திற்குச் சென்று சர்க்கார் இந்தி நுழைப்பு உத்தரவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். அவரது சமாதானமும் திருப்திகரமாக இல்லை. மேலே கூறப்பட்ட காரியத்துக்காகவே அவர் போலீ சாராலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய போக்கு மேற்படி பள்ளிக்கூடத்தின் சர்க்கார் அங்கீகாரத் தை இரத்து செய்ய நேரிடும் என அறிந்து மேலே கூறப்பட்ட காரணங்களாலும் அவரை வேலையினின் றும் நீக்கிவிடுகிறேன் என்று உத்தரவிட்டார் ஆணையர்.

சென்னையில் மாபெரும் கட்டாய இந்தி எதிர்ப்பு ஊர்வலம்

சென்னை பொத்துநாயக்கன் பேட்டையில் கட்டாய இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. இவ் ஊர்வலம் சென்னை சிவஞானம் பார்க்கிலிருந்து 6-8-1938 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டது. கட்டாய இந்தி வேண்டாமென்னும் கருத்துகள் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான அட்டைகளைக் கையிலேந்தி ஊர்வலத்தில் தாய்மார்களும் பெரியோர்களும் சென்ற னர். ஏராளமான விளக்குகளின் பிரகாசத்தின் இடையே மக்கள் அணிவகுத்துச் சென்றனர். பல்லாயிரக்கணக் கான தாய்மார்களும், பெரியோர்களும், மாணவர்களும், வாலிபர்களும் கலந்து கொண்டனர். சென்னை திருவொற்றியூரிலிருந்து ஓர் பிரம்மாண்டமான தாய் மார் ஊர்வலம் புறப்பட்டு வந்து இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் தோழர்கள் டாக்டர் தருமாம்பிகை அம்மையார், அ. நாராயணி அம்மையார், காந்தா பாய், ஜலஜாட்சி அம்மையார் முதலியோர் இடையி டையே இந்தி எதிர்ப்புப் பாடல் பாடினார்கள். தோழர் கள் மீனாம்பாள், டி.வி. முருகேசம், என்.வி. நடராஜன், மறைதிருநாவுக்கரசு, எஸ்.கே. சாமி, வ.ச. தேவசுந்தரன், சுவாமி நித்தியானந்தா, சுவாமி சண்முகானந்தா முதலியோர் இடையிடையே சொற்பொழிவாற்றி னார்கள். இவ் ஊர்வலம் பெத்துநாயக்கன்பேட்டை, சௌகார் பேட்டை, சைனா பஜார் ரோடு, யானைக்கவுனி, தண்ணீர்த் தொட்டி டிவிஷன் ஆகிய இடங்களுக்கெல் லாம் சென்று இரவு 11 மணிக்குச் சென்னை சிவ ஞானம் பார்க்கை அடைந்தது. அங்கு சுவாமி சண்முகானந்தா நீண்ட சொற்பொழிவாற்றனார். பின்னர் ஊர்வலம் பல பிரிவாகப் பிரிந்து தமிழ் வாழ்க! கட்டாயா இந்தி ஒழிக! எனக் கூறிக் கொண்டே சென்றது.

இது சென்னை சரித்திரத்திலேயே பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடி “இரவு ஊர்வலம்” சென்றது இதுதான் முதல் தடவை என்று எங்கு பார்த்தாலும் மக்கள் பேசிக் கொண்டனர் (விடுதலை 9-8-1938). அதே காலக்கட்டத்தில் பிரதம மந்திரி இராஜாஜி எங்கு சென்றாலும் அங்கு கறுப்புக் கொடி காட்டப் பட்டது. 28-7-1938 அன்று ஈரோடு சென்ற இராஜா ஜிக்குத் தங்கள் வெறுப்பைக் காட்டும் விதமாக ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் காவல் துறை யின் தடியடிக்கும் அஞ்சாமல் கைகளில் கறுப்புக் கொடி களுடன் நிற்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம். எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் அல்லது அறிஞர்களாக இருந்தாலும் இந்திக்கு ஆதரவாக பேசினால் இந்தி எதிர்ப்புப் போராளிகள் அவர்களுக்கு உடனடியாக தக்க விடை அளிப்பதில் தவறுவதே இல்லை.

இந்தி என்று ‘சோசியல் ரிபார்மர்’ என்ற இதழிலே கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையைக் கண்டித்து 10.8.1938 விடுதலை நாளேட்டில் முதல் பக்கத்தி லேயே கொட்டை எழுத்துகளில் சுபாஸ் சந்திரபோஸ் பிதற்றல் என்று தலைப்பிட்டுக் கடுமையான கண்டனத் தைத் தெரிவித்திருந்தனர். அதேபோல் வித்துவான் தெ.பொ.மீ. (தி.பி. மீனாட்சிசுந்தரனார்) சென்னை வண்ணாரப்பேட்டை யில் ஒரு பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் கட்டாய இந்தியை ஆதரித்து பேசி இருந்தார். அவரு டைய பேச்சைக் கண்டித்து காஞ்சி பரவஸ்து இராஜ கோபாலச்சாரியார் விடுதலையில் (13-8-1938) அன்று கண்டித்து எழுதினார்.

வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னை வண்ணாரப் பேட்டை அரசியல் கூட்டத்தில் தலைமையுரையாக ஆற்றிய சொற்பொழிவை அனைவரும் படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அந்தச் சொற்பொழிவு “சுதேச மித்திரன்” பத்திரிகையிலும் மற்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. அதில் நம்முடைய நண்பர், கட்டாய இந்தியை அரசியலார் புகத்துவதினால் நாம் அதை வரவேற்க வேண்டுமென்றும், தவிரவும், கனம் பிரதம மந்திரி அவர்கள் அதற்குக் காரணமாக இருப்பதி னாலும் (அவரும் ஓர் பெருந்தமிழராதலாலும்) தமிழ் மொழிக்கு யாதொரு கெடுதலும் நேரிடாதாகையாலும், இத்தகைய நவீன கல்வி முறையை ஆட்சேபிப்பது நலமல்லவென்றும், மந்திரியாருடைய மனப்போக்கை ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது மந்திரி சபையின் மாட்டு அவர் கொண்டி ருக்கும் அன்பே காரணமாக இருக்கலாம். ஆனால் வேறு யாராவது (முதல் மந்திரி தவிர) கட்டாய இந்தி யைக் கொண்டுவந்திருந்தால் நமது நண்பர், தோழர் மீனாட்சிசுந்தரனார் உடனே அதை எதிர்ப்பதுமல் லாமல், இந்தி எதிர்ப்பாளருடன் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார். இதுதான் மிகவும் விசித்தரமாகத் தோன்று கிறது. உண்மையில் நண்பர் கட்டாய இந்தியால் தமி ழுக்கு ஊறு நேரிடுமானால், ஏன் இந்தி எதிர்ப்பாள ருடன் சேரக்கூடாது. கட்டாயப் பாடமாக இந்தியைப் புகுத்தினால், அதனால் தீங்குவரும் என்று உணர்ந்த இவர் அது கனம் பிரதம மந்திரி புகத்தினால் என்ன? கனம் டாக்டர் சுப்பராயன் புகுத்தினால் என்ன? அவர் மனம் அப்படி இல்லை. பிரதம மந்திரி பெரிய தமிழர்; அதனால் தமிழுக்குக் கெடுதல் இல்லை. வேறு யாரா னாலும் (டாக்டர் சுப்பராயன் அல்லது தமிழ்நாட்டில் பெரும் தமிழரென கருதப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யரானாலும் சரிதான்) கட்டாயப் பாடமாக இந்தியைக் கொண்டு வந்தால் இந்தியை எதிர்த்தே தீருவதாகக் கூறுகிறார். அன்பர்களே இதை நன்றாய் கவனிக்க வேண்டும். எனது நண்பர் இப்பொழுது கட்டாய இந்தியை எதிர்க்காத காரணம், அவர் வெளியிட்ட படியே கனம் பிரதம மந்திரி மாட்டு அவர் கொண்டுள்ள அன்புதான் காரணமாகிறது. வேறு யார் கொண்டு வந்தாலும் தமிழ் கெடும் என்று உணர்ந்த நண்பர், தோழர் இராசகோபாலாச்சாரி கொண்டு வந்தால் கெடாது என்று தாம் நினைப்பதுமல்லாமல், பிறருக்குப் போதிப்பது இவர் கொண்டுள்ள மனப்பான் மையையும் தற்கால அரசியல் விசித்திரத்தையும் உணர்த்துகிறதல்லவா. (தொடரும்) keetru.com jan 2015

25 04 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 27
சிந்தனையாளன்

தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யில் புறப்பட்டது. தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் வழி அனுப்பு விழா திருச்சி டவுன் ஹாலில் நடைபெற்றது. விழா முடிவுற்று தமிழர் பெரும்படை வீரர்கள் 101 பேரும் வரிசையாக அணிவகுத்துச் செல்லும் காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்

தமிழர் பெரும்படை புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக 31.7.1938இல் சென்னை கடற்கரையில் இந்தியை எதிர்த்து அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சர். பி.டி. ராசன் (பொன்னம்பலம் தியாகராசன்) தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கே.எம். பாலசுப்பிரமணியம், சர்.கே.வி. ரெட்டி நாயுடு, எ.பி. பாத்ரோ, முத்தையா முதலியார், என். நடராஜன், சாமி சண்முகானந்தா, சாரங்கபாணி, மறை. திருநாவுக்கரசு நாராயணி அம்மாள், சுவாமி நித்தியானந்த மீனாம்பாள் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அக்கூட்டத்தில் உரையாற்றிய கே.எம். பாலசுப்பிர மணியம் பேசும்போது “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் சம்பந்தம் வைத்ததால் இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் சிறைக்கு அனுப்பப்பட்டு விடுவேன். அதே குற்றத்திற்காகச் சந்நியாசிகள் உட்பட பல பேர் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். தலைவரும் சிறைக்கு அனுப்பப்படலாம்” என்று பேசினார். கே.எம். பால சுப்பிரமணியம் மேடையில் கூறியவாறே அவருக்கு 6.8.1938-இல் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கே.எம். பாலசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையிலடைக்கப்பட்டபோது 8.8.1938 விடுதலையில் கே.எம். பாலு என்ற தலைப்பில் அவரைப் பற்றி மிகச் சிறந்த தலையங்கம் எழுதப்பட்டது.

“பாலு-பாலு-பாலு-ஆம் தென்னாட்டுப் பெருங்குடி மக்களான தமிழர்களின் இரு கண்மணியென விளங்கிய பாலு - பா-லு என்ற இரண்டு எழுத்துகளால் தமிழர்கள் அருமைப் பெயர் சூட்டியழைக்கும் நமது பாலு சென்ற ஆகஸ்டு 6ஆம் தேதி சனியன்று சிறைபுகுந்து விட்டார் - ஏன்? நம் அருமைத் தமிழ் அன்னையை இந்திச் சிறையிலிருந்து மீட்க நம் தாயைச் சிறை மீட்கும் முயற்சியில் முதல் முதல் சிறைபுகும் பாக்கியம் பெற்ற தோழர் பாலு இந்தி எதிர்ப்புக் காரியக் கமிட்டி மெம்பர்களில் மிகவும் அதிர்ஷ்டமுடையவரேயாவார். தமிழர் முன்னேற்றத்தில் அதிதீவிர ஆர்வங் கொண்ட இளைஞர்களில் தோழர் கே.எம். பாலு தலைசிறந்தவர். எல்லாத் துறைகளிலும் தமிழர் மிக்க கீழ்நிலையில் இருந்து வருவதையும் எங்கணும் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருப்பதையும் கண்ட தோழர் பாலு மிக்க மனம் நொந்து தமிழ் விடுதலைக்குப் போராட தம் வாழ்நாளை அர்ப்பணம் செய்துகொண்டார். ஒரு முதல் தர வழக்கறிஞராவதற்கு இன்றிய மையாத பண்புகள் எல்லாம் நிரம்ப அமைந்திருந்தும் அவர் வக்கீல் தொழிலில் தமது பூரண கவனத்தையும் செலுத்தவில்லை. அவர் பொது வாழ்வில் ஈடுபட்டதும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக உழைத்தார்.

திருச்சிராப்பள்ளி தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தலைவரிடமிருந்து அவர் ஆற்றியத் தொண்டு அபாரமானது. சமூகச் சீர்திருத்தவாதியான அவர் சுயமரியாதை இயக்கத்திலும் ஈடுபட்டு வெகு மும்முர மாக உழைத்தார். அவர் தலைமை வகித்து நடத்திய சுயமரியாதை மாநாடுகள் பலப்பல; சீர்திருத்த மாநாடு களும் அநந்தம். தமிழிலும் இங்கிலீஷிலும் கடல்மடை திறந்ததுபோல் நாவன்மையுடையவர். நாவன்மையு டையோர் எழுத்து வன்மையில்லாராயிருப்பதும், எழுத்து வன்மையுடையோர் நாவன்மையில்லாதாரா யிருப்பதும் சாதாரண உலக வழக்கு. ஆனால், நமது பாலு இதற்குப் புறநடை என்றே சொல்ல வேண்டும். இங்கிலீஷிலும் தமிழிலும் மேடையேறிப் பேசும் ஆற்றல் பெற்றிருந்ததுடன் இங்கிலீஷிலும் தமிழிலும் வெகு அழகாகவும் பொருளமைதியுடனும் எழுதும் திறமையும் பெற்றிருந்தார். அவர் மேட்டுக்குடியில் பிறந்த ஒரு சீரியராயிருந் தும் சாமானிய இளைஞரைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆடம்பரம் என்பது கடுகத்தனையும் அவரிடம் கிடையாது.

தோழர் பாலுவைப் போன்றோர் பலர் மேலும் முன்வரவேண்டும் என்பதே நமது ஆசை தமிழ்நாட்டிலே குறைந்தபட்சம் பத்து பாலுக்களாவது தோன்றினால் தான் பார்ப்பனத் தொல்லை ஒழியும். ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்கள் தோன்றிய பிறகு தரைமட்டம் அடங்கிக் கிடந்த பார்ப்பனீயம் காங்கிரஸ் ஆட்சி தோன்றியது முதல் முன்னிலும் பன் மடங்கு தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. சென்னை யிலே பார்ப்பனீயப் பேய் ஆடும் கூத்து சகிக்க முடியாத தாயிருக்கிறது. பாலுவைப் போல் நாவன்மையும் எழுத்து வன்மையும் உடையவர்கள் முன்வந்து இடைவிடாது உழைத்தால்தான் இந்த பார்ப்பனீயக் கொடுமை ஒழியும். ஆகவே தோழர் பாலுவைப் பின் பற்றி மேலும் பல தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டுமென விரும்புகிறோம். பாலு வாழ்க! பாலு பிறந்த குடி வாழ்க! தமிழ் வாழ்க! தமிழகம் வாழ்க!” என்று விடுதலை ஏடு தலையங்கம் எழுதியிருந்தது. தலையங்கத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இங்கு எடுத்துக்காட்டியுள்ளேன். இதுபோல்இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பலர் முகமலர்ச்சியுடன் சிறைச் சென்றனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்காக உயர்நீதி மன்றத்தில் வழக்காடியவர் நீதிக்கட்சியின் முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் ஆவார். அவர் ‘கிரிமினல் திருத்தச் சட்டம் சென்னை மாகாணத்தில் அமலில் இல்லாத போது அந்தச் சட்டத்தின்படி இந்தி எதிர்ப்பு போராட்டக்காரர்களைக் கைது செய்வது சட்டப்படி சரியல்ல’ என்று தன் வாதங்களை முன்வைத்தார். ஆனால் நீதிபதிகள் அதைப் பொருட்படுத்தாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கினர். காங்கிரசார் இந்திக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அனைத்துக் கட்சி இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்ற 31.7.1938-க்கு அடுத்த நாள் 01.8.1938 அன்று சென்னைக் கடற்கரையில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்தி ஆதரவுக் கூட்டம் என்ற பெயரில் நடத்தாமல், காங்கிரஸ் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் நடத்தினர்.

அவர்கள் கூட்டத்திற்கு வந்த மொத்த மக்கள் தொகை வெறும் 320 பேர்தான். பெண்கள் ஒருவர் கூட இல்லை. கூட்டத்தில் சரமாரியான கேள்விகள் கேட்கப்பட்டதால், தலைவர் முத்துரங்க முதலியார் பாதியிலே எழுந்து சென்றுவிட்டார். கூட்டத்தில் இருந்த வர்களில் 250 பேர் கல்லூரியில் படித்துக் கொண் டிருந்த பார்ப்பனப் பிள்ளைகள் ஆவர் (விடுதலை 3.8.1938). இதற்கு நேர்மாறாக இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். (குடிஅரசு 7-8-38) தொடரும் ketru.com dec 2014

18 04 2018

திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 26
வாலாசா வல்லவன்

தமிழகர்களை உணர்வு பிழம்புகளாக மாற்றிய தமிழர் பெரும்படை

தமிழர் பெரும்படை ஆகசுட்டு 1 அன்று திருச்சி யிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. படை யில் கலந்து கொள்வோருக்குக் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழர் பெரும்படைக்கான அமைச்சர் மணவை ரெ. திருமலைசாமி தொண்டர்கள் அனுசரிக்க வேண்டியவைகளை (நிபந்தனைகளை) 29.7.1938 விடுதலை ஏட்டில் அறிவித்தார். அவை யாவன :

1. அவசியமான (எளிய) ஆடை முதலியன அவர்களே கொண்டுவர வேண்டும். குறிப்பு : அதிகமான துணிகள் கொண்டுவரப்படாது. இடுப்பில் ஒரு வேஷ்டி, உடம்பில் ஒரு சொக்காய், தோளில் போட்டுக் கொள்ளவும் தலையில் கட்டிக் கொள்ளவும் இலாயக்குள்ளதான ஒரு வஸ்திரம் ஆக 3 உருப்படிகளுக்கு மேல் ஒரே காலத்தில் ஒரு தொண்டர் மீது இருக்கக்கூடாது. அதேபோல மற்றொரு ஜதை அதாவது 3 உருப்படிகள் மட்டும் கையிருப்பில் இருக்க வேண்டும். சொக்காய்க்குள் பனியன் உபயோகப் படுத்திக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை.

2. கட்டாயமாக லங்கோடு கட்டிவர வேண்டும். மொத்தம் 2 லங்கோடுகள் கொண்டு வரலாம்.

3. பாதரட்சை அணிந்து வரவேண்டும். துணிக் குடையும் கொண்டுவரலாம்.

4. புகையிலை, பொடி, பீடி, சிகரெட்டு, சுருட்டு முதலியவை உபயோகிக்கும் கெட்ட பழக்கம் எதுவும் இருக்கக்கூடாது.

5. ஒவ்வொருவருக்கும் சிறு (சிவப்பு) ரெட்டுப்பை ஒன்று கொடுக்கப்படும். அதில் அவரவர் சாமான்களை வைத்து எடுத்து வரவேண்டும். படுக்கை கிடைக்காத விடங்களில் அந்தப் பையைத் தலையணையாகவும், மேல் வஸ்திரத்தை விரிப்பாகவும் உபயோகித்துக் கொள்ள வேண்டும்.

6. ஒரு நீண்ட மூங்கில் கழி கொடுக்கப்படும். அதன் உச்சியில் கொடி கட்டிக் கொள்ள வேண்டும். கையிலுள்ள சிவப்புரெட்டுப் பையை கழியில் கோர்த்து தோளில் போட்டுக் கொள்ள வேண்டும்.

7. படைக்குள் பிரச்சாரக் கமிட்டி, கூட்ட ஏற்பாட்டுக் கமிட்டி, விளம்பரக் கமிட்டி, பத்திரகாசிரியக் கமிட்டி, சுகாதாரக் கமிட்டி, பண்டக சாலைக் கமிட்டி, பாதுகாப்புக் கமிட்டி, சாப்பாட்டுக் கமிட்டி, பொருளாதாரக் கமிட்டி என்ப தாகப் பல கமிட்டிகளும் அவற் றிற்குத் தனித்தனியே காப்டன் களும் தேர்ந்தெடுக்கப்படுவார் கள். சேனாதிபதி இடும் வேலை களைக் கமிட்டியைச் சேர்ந்தவர் கள் அந்தந்தக் காப்டன்கள் மூலம் முணுமுணுக்காம லும் பின்வாங்காமலும் செய்துவர வேண்டும்.

8. கிடைக்கும் ஆகாரத்தை உண்டு, திருப்தி கொள்ள வேண்டும். ஆகாரத்தில் தலைவர் - தொண்டர் என்கிற வித்தியாசம் கிடையாது.

9. படை முகாம் செய்துள்ள விடுதியை விட்டு, உற்றார் உறவினரைப் பார்க்கப் போவதென்னும் பேரால் வருவது, போவது கூடாது. தள்ளமுடியாத அவசியம் ஏற்பட்டால் தலைவரின் அனுமதி கோரி அவர் உத்திரவுப்படி நடந்துகொள்ள வேண்டும்.

10. எல்லோரும் இராணுவக் கட்டுப்பாடுகளுக் குட்பட்டு (பேச்சு-நடத்தை) சீரிய ஒழுக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.

11. அவரவர் உடைகளையும் பாத்திரங்களையும் அவரவரே சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

12. படை, போய்க் கொண்டிருக்கும் போதே காரணங் கூறாமல் எந்தத் தொண்டரையும் படையைவிட்டு விலக்கும் அதிகாரம் இராணுவ மந்திரிக்கு உண்டு.

இவ்வளவு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு தான் தமிழர் பெரும்படையில் சேர்ந்து பணியாற்ற 485 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 101 பேர் தேர்வு செய்யப்பட்டு, படை அமைக்கப்பட்டது. தமிழர் படைக்கு வழிநெடுகிலும் வரவேற்பு கொடுங்கள்; தொண்டர்களை உபசரியுங்கள்; பண முடிப்பு உதவுங்கள் என்று மணவை ரெ. திருமலைச் சாமி தமிழர்களுக்குத் தனிப்பெரும் விண்ணப்பம் விடுத்தார். (விடுதலை 30.7.1938). இப்போதைய ஏற்பாட்டின்படி படை 01.8.1938ஆம் நாள் புறப்படும். 9.9.1938இல் சென்னையை சென்றடையும். அடியிற் கண்ட தேதி காலவிவரப்படி அந்தந்த ஊர்களில் படைத் தங்கிச் செல்லும்; படைக்கு இடவசதி, உணவு வசதி செய்து கொடுத்து பொதுக் கூட்டம் கூட்டிப் படையை வரவேற்க விரும்பும் தமிழ் அன்பர்கள் அடியிற்கண்ட அட்டவணையை அனுசரித்து ஏற்பாடு செய்யக் கோருகிறேன். படையோடு கலந்து வருவோர் தொகை 101. இந்த நூற்று ஓர் பேர்களும் தங்க இடவசதியும் அடியிற் குறிப்பிட்ட 60 ஊர்களிலும் வேண்டும். சாதாரண உணவு போதும். தொண்டர்கள் உட்காருவதற்கும் உறங்குவதற்குமான உபயோகப்படக்கூடிய பெரிய ஜமக்காளம் அல்லது பாய் அல்லது சரக்குப் படுதா முதலிய ஏதாவது விரிப்பு உதவினால் நல்லது. கிடைக்காத பட்சத்தில் கவலை இல்லை.

படையின் கால வரையறை :

உதாரணம் திருச்சி டவுன் ஹால் வழி அனுப்பு உபசாரக் கூட்டம் 1-ந் தேதி இரவு 10 மணிவரை நடக்கும். அன்று இரவு தென்னூர் தோழர் பழனிச் சாமி பிள்ளை அவர்கள் பங்களாவில் தொண்டர்கள் தங்கியிருப்பார்கள். 2-ந் தேதி காலை 4.30 மணிக் கெல்லாம் புறப்பட்டு இரவு சுமார் 7 மணிக்குத் திருவளர் கோலையை அடைவார்கள். விட்டு 3-ந் தேதி காலை 5 மணிக்குப் புறப்பட்டு 3-ந் தேதி மாலை 4.30 மணிக்கு அடுத்த ஊராகிய கோயிலடிக்குப் போய்n சரும். இப்படியே அட்டவணையில் குறிப்பிட்ட ஊர்களில் படை தங்கித் தங்கிச் செல்லும் என்று வரையறைச் செய்திருந்தனர். திட்டமிட்டபடி தமிழர் பெரும்படை வழியனுப்பு உபச்சார விழா திருச்சி பொதுமக்கள் சார்பில் 01.8.1938 அன்று மாலை டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈ.வெ.ரா. அக்கூட்டத்திற்குத் தலைமைத் தாங்கினார். சுமார் 7000 பேர் அங்கு திரண்டிருந்தனர். சில பார்ப்பனர்களும், சில காங்கிரஸ்காரர்களும் கலகம் செய்ததை ஈ.வெ.ரா. தம் தலைமையுரையில் கண்டித்தார்.

பெரியாரின் தலைமையுரையின் ஒரு பகுதி வருமாறு : தோழர்களே! “

இன்றையக் கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத் துக்கு ஆக செல்லும் படையை வழியனுப்புவதற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப் பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தன மாகும். இந்தக் கூட்டத்தில் இரண்டொருவர் “காந்திக்கு ஜே” போடுவதும் “இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தைக் கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கியிராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்தச் சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத் தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலீபுல்லா சாயபு கேட்டபோது கைதூக்கிய எண்ணிக் கையிலிருந்தே இத்தொல்லைக்காரர்களின் யோக்கிய தை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரி தும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரி கிறது. இம்மாதிரி காலித்தனத்தால் இன்னும் எவ்வ ளவு நாள்களுக்கு இப்பார்ப்பனர் வெற்றிபெற முடியும்?

நாங்கள் உண்மையிலேயே இந்தியை எதிர்ப்ப வர்கள். இந்தி பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆக புகுத்தப் படுவது என்பதை இக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர் களே மெய்யாக்கி விட்டார்கள். தமிழ் மக்கள் வயிறு எரிந்து, மனம் நொந்து கிடக்கும் காலத்தில் அதுவும் பிரிந்து ஆதரவற்றுக் கிடக்கும் இந்நாளில் ஏதோ சில கூலிகள் தங்கள் வசத்தில் இருப்பதாகக் கருதி எங்கள் முயற்சிகளை இப்படி அடக்கப் பார்ப்பது தர்மமா என்று கேட்கின்றேன்.

எதிரிகள் சூழ்ச்சி :

எங்களுடைய சேதிகளைப் பொதுப் பத்திரிகை எனச் சொல்லும் பார்ப்பனப் பத்திரிகைகள் கேலி செய்து, கிண்டல் செய்து மறைத்துத் திரித்து கூறுகின்றன. சில அடியோடு அடக்கிவிடுகின்றன. எங்கள் ஒற்றுமை யைக் கலைக்க சூழ்ச்சி செய்கின்றன. மக்கள் அநீதி யாகச் சிறைப்பிடித்துக் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். எங்களுக்குள்ளாகவே துரோகிகள் கற்பிக்கப்படு கிறார்கள். கீழ்மக்களைச் சுவாதீனம் செய்து அவர்கள் மூலமாக நம் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்யப் படுகின்றது.

இந்தி எதிர்ப்பு ஜஸ்டிஸ் கட்சியின் மற்றொரு அவதாரம் என்னும்பழி சுமத்தப்படுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்குச் சட்டசபையில் உள்ள இரண்டு தலைவர்களும் பார்ப்பனத் தாசர்களாய் இருக்கும் போது இது எப்படி ஜஸ்டிஸ் கட்சி காரியமாக இருக்க முடியும். இந்தி எதிர்ப்பு பார்ப்பன துவேஷத்துக்கு ஒரு கருவி என்று சொல்லப்படுகிறது. தோழர்கள் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி, கே.நடராஜன், வி.எஸ்.சீனி வாச சாஸ்திரி, சி.வி.விஸ்வநாத சாஸ்திரி, உ.வே.சாமி நாதய்யர், பாவஸ்து ஆச்சாரியர், கே.பாஷயம் அய்யங்கார், கே.பாஷயம் அய்யங்கார், வி.பாஷ்யம் அய்யங்கார், வி.வி.சீனிவாசய்யங்கார் குன்ச்ரு, டில்லி நிர்வாகசபை வர்த்தக மெம்பர் சர்.மகம்மது யாகூப் இவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா? “சென்டினல்” “அமிர்தபஜார்” மாடர்ன் ரிவ்யூ” ‘சோஷியன் ரிபார்மா”, “லீடர்” “சர்வெண்ட் ஆப் இந்தியா” முத லாகிய பத்திரிகைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைகளா? அல்லது பம்பாயிலும், சென்னையிலும் உள்ள பிரஜா உரிமைச் சங்கங்கள் ஜஸ்டிஸ் கிளைச் சங்கங்களா? அடக்குமுறையை ஒன்று இரண்டு தடவையாவது கண்டித்து எழுதிய “சுதேசமித்திரன்” ஜஸ்டிஸ் பத்திரி கையா? இப்படியெல்லாம் இருக்க தமிழ் மக்கள் கண் களில் மண்ணைப்போட்டு அவர்களை அடிமைகொள் ளச் செய்யும் இம்மாதிரியான சூழ்ச்சியும் கொடுமையும் நியாயமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

சில்லறைச் சேஷ்டை செய்வது நியாயமா?

நாங்கள் சொல்லுவதும் செய்வதும் தப்பானால் நாளை இங்கு கூட்டம் போட்டுப் பாருங்கள், உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள். மற்றபடி பொய்யாகவாவது கூட்டத்தில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டது என்று எழுதுவதற்கு ஆகவே இங்கு விஜயம் செய்திருக்கும் சில அயோக்கிய நிருபர்களுக்குச் சேதி கொடுக்க வேண்டுமென்று கருதி சில்லறை சேஷ்டைகள் செய்வது நியாயமா என்று கேட்கிறேன்.

இன்றைய ஆட்சியில் தங்கள் அபிப்பிராயம் சொல்லக் கூடவா இடமில்லை? இந்த கூட்டத்தில் ‘காந்திக்குஜே’ ஏன் போடவேண்டும்? இவர்கள் காந்தியை யோக்கியர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா அல்லது தங்களை யாவது காந்தி சிஷயர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா? நான் பார்த்தேன் ஒருவன் மண்ணைவாரி இரைத்துக்கொண்டு “காந்திக்கு ஜே” போட்டான் முதுகில் இரண்டு அப்பளம் விழுந்தவுடன் அறுத்துவிட்ட கழுதைகள்போல் பலர் ஒட்டமெடுத்தார் கள். இந்த சமயம் நான் பயந்துவிட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ நம் ஆள்களுக்கோ பந் தோபஸ்தில்லை என்று நான் கவலைப்படவில்லை, ஆத்திரத்தோடு கை கலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும். அப்புறம் இந்தி எதிர்ப்புக்காரர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்லுவதா? எவ் வளவு கஷ்டப்பட்டுப் பலாத்காரம் ஏற்பட இருந்ததை இப்போது அடக்கவேண்டியதாயிற்று. போலீசார் கூட் டத்திற்குக் காவல் அளிக்கவேண்டியதில்லை என்றா லும் காலிகளுக்காவது காவல் அளிக்கவேண்டாமா? இன்று இவ்வூர் போலீசு தண்டோரா அடிக்கக் அனுமதி கொடுக்கவில்லை. நோட்டீசு அச்சடிக்க அச்சாபீசுகள் பயப்படுகின்றன. இந்த கிளர்ச்சிக்குப் பணம் வசூல் செய்வதைத் தடுக்கப் பல போக்கிரித்தனமான அற்பத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?

தொண்டர்களுக்குத் தண்டனையா?

தொண்டர்களைச் சிறைபிடிப்பதையும், தண்டிப்பதையும் அவர்களை நடத்துவதையும் சற்று பாருங்கள். 150 பேர்களைச் சிறைபிடித்து தண்டித்துவிட்டு இப்போது அந்தக் காரியத்துக்கு சிறைபிடிப்பது நிறுத்தப்பட்டுப் போய்விட்டது என்றால் இதுவரை பிடித்தது ஒழுங்கா, நியாயமா நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப்பற்றிக் காங்கிரஸ் காரியக்கமிட்டி “தப்பு அபிப்பிராயத்தின் மீது அக் கிளர்ச்சி நடப்பதால் அதை விளக்கக் காங்கிரஸ் தலை வருக்கு அதிகாரமளித்திருக்கிறது” என்று தீர்மானித் திருக்கிறது.

அப்படியானால் அபிப்பிராயப் பேதத்தினால் நடத் தும் காரியத்துக்கு 6ம், ஒரு வருஷம், இரண்டு வருஷம் கடின காவலா என்று கேட்கின்றேன். இதுதான் ஜன நாயகமா? இதுதான் அபிப்பிராய சுதந்திரமுள்ள பிரஜா உரிமை ஆட்சியா? நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்த அரசாங்கம் இந்தி எதிர்ப்புக் கமிட்டியைச் சட்டம் மீறுவதற்கும் ஆயிரக்கணக்கான மக்களைச் சட்டம் மீறித்தீரவேண்டுமென்று கட்டாயப்படுத்தவும் தூண்டச் செய்கிறது. இதில் சர்க்காருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்று கேட்கிறேன். அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்து போவது அவமானம் என்று மக்கள் கருதும்படி செய்கின்றது. நாம் என்ன செய்வது, கிளர்ச்சி கூட செய்யக் கூடாதா? தோழர் சத்தியமூர்த்தியார் இந்திக் கிளர்ச்சிக் காரரை ராஜத்துரோகச் சட்டப்படி வழக்குத் தொடுத்துத் தூக்கில் போடும்படி சர்க்காருக்கு யோசனை கூறு கிறார். இப்போது நடத்தும் சட்டமே கொடுங்கோலாட்சி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகவே காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அதைக் கையாளும் பார்ப்னர்கள் யோக்கியதையும் நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் என்பது ஆக விட்டுப் படைத் தொண்டர்களுக்கு ஈ.வெ.ரா. செய்த உபதேசமாவது:

தொண்டர்களுக்கு உபதேசம் :

“இப்படையை நடத்துகிறவர்கள் பொறுப்புள்ள பெரியார்கள். இவர்கள் நடத்தையில் படை வெற்றி கரமாய் முடிவுபெறும் என்றே கருதுகிறேன். ஒற்றுமை, சிக்கனம், சமரச எண்ணம் ஆகியவை தலைவர் களுக்கு வேண்டும். தொண்டர்களுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் தன்மை ஆகியவை வேண்டும்.

எதிரிகள் பல சூழ்ச்சி செய்வார்கள். சிறியதைப் பெரியதாக்கி பழிகூற பல எதிரிகள் இருக்கிறார்கள். எதிரியிடம் கூலி வாங்கிக் கொண்டு நம்மைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பல ஈனர்கள் நமக்குள்ளாகவே இருந்து குடிகெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்கத்துக்குக் கேடுவராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எவ்வளவு பழி சுமத்தினாலும் எவ்வளவு இழிவுபடுத்தினாலும் இவற் றை எவ்வளவு பேர் நம்பினாலும் நான் மாத்திரம் களைத்துப் பின்வாங்குகிறவனல்ல. எனக்கு எனது இலட்சியம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதற் காகவே உயிர் உள்ள அளவும் பாடுபட்டுத்தான் சாவேன். யார் என்ன சொன்னாலும் வெட்கப்படப் போவதில்லை. யார் என்ன மோசம் செய்தாலும் சரி, துரோகம் செய்தாலும் சரி, வாழ்நாள் முடிகிறவரை கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு காரியம் செய்கிற தென்ற முடிவில்தான் இருக்கின்றேன். ஆகவே தோழர்களே! இம்மாபெரும் இலட்சியத்திற்குத் தொண் டாற்றும் வேலையை யாவரும் தங்கள் வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டு காரியத்தைக் கெடுக்காமல் இலட்சியத்துக்கு தங்களால் கூடுமானவரை தொண் டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் தலைமை உரைக்குப் பின் தி.பொ. வேதாச்சலம் நன்றி கூறினார். தங்களால் கூடுமான வரை தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். (குடிஅரசு 7-8-38) (தொடரும்) keetru.com nov 2014

Page 4 of 6